Tamil Nadu

Cuddalore

CC/21/2014

V.Hariharan, - Complainant(s)

Versus

The Secretary, CDM Co-op Housing Union (Board), - Opp.Party(s)

R. Balasubramanian

30 Apr 2015

ORDER

வழக்கு தாக்கல் செய்த தேதி  :      19.03.2014
ஆணையுரை வழங்கப்பட்ட தேதி:  30.04.2015

மாவட்ட  நுகர்வோர் குறைதீர்  மன்றம், கடலூர்.

                முன்னிலை:   திரு.என்.கலியமூர்த்தி, பி.ஏ., பி.எல்,                      தலைவர்.
                                             திருமதி. பி. எழிலரசி, எம்.ஏ., எம்.பில், பி.எட்.,    உறுப்பினர்.

            நுகர்வோர் முறையீடு எண்.  21 / 2014


2015 ஆம் ஆண்டு  ஏப்ரல்  திங்கள் 30 -ம் நாள், வியாழக்கிழமை.

V. அரிகிருஷ்ணன்,
த/பெ. வீரமணி,
நெ.18, சரஸ்வதி நகர்,
சிதம்பரம் & அஞ்சல்,
சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம்.                                                                          .. முறையீட்டாளர்


V. அரிகிருஷ்ணன், அவர்களின் அதிகார முகவர்
திரு.ஆர்.பாலசுப்ரமணியம்,
பொதுச்செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்,
நெல்லிக்குப்பம்.
எதிர் -

செயலாளர்,
சிதம்பரம் கூட்டுறவு வீட்டு வசதி  யூனியன் ( போர்டு)
(To be read as)
சிதம்பரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிட்,
நு. 2148, முதல் தெரு,
வைஸ்யா நகர்,
சிதம்பரம்.                                                                                            .. எதிர் தரப்பினர்.
                                                                                                * * * * * * * 
                          இந்த முறையீடு 17.04.2015 அன்று  இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முறையீட்டாளருக்காக  நெல்லிக்குப்பம், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.ஆர்.பாலசுப்ரமணியம், அவர்கள் முன்னிலையாகியும், எதிர் தரப்பினருக்காக திரு.ஆர்.சங்கரராமன், வழக்கறிஞர் அவர்கள்  முன்னிலையாகியும், இதுநாள் வரை விசாரணையில் இருந்து வழக்கு ஆவணங்களைப் பரிசீலனை செய்தும்,  இரு தரப்பினர்களின்   வாதுரைகளைக் கேட்டும்,  இன்று இந்த மன்றம் வழங்கும்
ஆணையுரை.
தலைவர் திரு.என்.கலியமூர்த்தி, பி.ஏ.,பி.எல்.,அவர்களால் பகரப்பட்டது .
  நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 12ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடு.
1.   முறையீட்டாளரின் தாக்கல் செய்துள்ள முறையீட்டின்  சுருக்கம்  பின்வருமாறு. 

(i)    முறையீட்டாளர் சொந்த வீடு கட்டுவதற்காக எதிர் தரப்பினர் வீட்டு வசதி சங்கத்தில் தன் சொந்த பத்திரத்தை அடமான வைத்து கடனாக ரூ.1.50,000/-ஐ 2005ம் ஆண்டு பெற்றுள்ளார்.  இந்த கடன் குறித்து முறையீட்டாளர்  தவறாமல்  தவணை   தொகை செலுத்தி கடன் முழுவதையும் 2012ம் ஆண்டு முடித்து விட்டார்.   முறையீட்டாளர் கடன் தொகை செலுத்திய பின்பு எதிர் தரப்பினர் """"கடன் ஏதும் பாக்கியில்லை""  என்ற சான்றும் முறையீட்டாளருக்கு வழங்கியுள்ளனர்.   கடன் முழுவதும் பைசல் செய்து ஏறத்தாழ  ஒன்றரை ஆண்டுகள் ஆகியும்  முறையீட்டாளரின் அசல் பத்திரத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.   இதுகுறித்து முறையீட்டாளர், பலமுறை எதிர் தரப்பினரிடம் சென்று கேட்டபோதெல்லாம் தலைமை அலுவலகத்திலிருந்து இன்னும் வரவில்லை, வந்தவுடன் கொடுத்து விடுகிறோம் என்று கூறிவருகிறார்களே தவிர அதற்கான நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரிவிக்க எதிர் தரப்பினர் மறுக்கின்றார்.  எதிர் தரப்பினரின் இத்தகைய செயல் சேவை குறைபாடு உடையதாகும்.  எதிர் தரப்பினரின் மோசமான நடவடிக்கையினால்  முறையீட்டாளரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அசல் பத்திரம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்கிற எண்ணத்தில் தவித்து வருகின்றனர்.  

(ii)    எதிர் தரப்பினர் கடன்தாரரரிடமிருந்து  முழு கடன் தொகையையும், அசல் மற்றும் வட்டி இவைகளை பெறுவதற்கு எடுக்கும் முயற்சியை, தொகை முழுவதும் செலுத்திய கடன்தாரருக்கு அசல் பத்திரத்தை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமலிருந்து வருகின்றனர்.   எதிர் தரப்பினரின் இந்த அலட்சிய போக்கினால் முறையீட்டாளருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது.  இதன் காரணமாக முறையீட்டாளர் இந்த முறையீட்டினை இந்த மன்றத்தில் தாக்கல் செய்து   முறையீட்டாளர் எவ்வித கடன் பாக்கி இல்லாமல் பணம் செலுத்தி ஊடநயசயnஉந ஊநசவகைiஉயவந வாங்கி ஒன்றரை ஆண்டுகளாகியும், இந்த முறையீடு தாக்கல் செய்யும் வரையிலும் பலவித காரணங்களைக் காட்டி பத்திரத்தை தராமல் இருந்து வரும் எதிர் தரப்பினரை  அசல் பத்திரத்தை அளிக்க உத்திரவிடக்கோரியும் அசல் பத்திரத்தை அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு  பணம் செலுத்தி முடிந்த நாள் முதல் இந்த பத்திரத்தை தாக்கல் செய்யும் வரையிலும் அபராத தொகை செலுத்த வேண்டியும் அதற்கு 18ரூ வட்டி அளிக்க உத்திரவிடக் கோரியும்,  எதிர் தரப்பினரின் செய்கையினால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.25,000/- அளிக்க உத்திரவிடவேண்டியும், வழக்கு செலவிற்காக ரூ.3000/- அளிக்கக் கோரியும்  இந்த மன்றத்தை பிரார்த்திக்கின்றார். 

2. எதிர் தரப்பினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிருரையின் சுருக்கம் பின்வருமாறு
 (i)    முறையீட்டாளர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி ஒரு நுகர்வோர் அல்ல என்றும், எனவே இந்த முறையீடு இந்த மன்றத்தில் நிலைநிற்கத்தக்கதல்ல என்றும்  எதிர் தரப்பினர் கூறுகிறார்.  இப்பிரச்சினை சங்க உறுப்பினருக்கும், சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை என்பதால்  தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 90ன்படி  முறையீட்டாளர் உரிய அலுவலரிடம் தீர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.   இதுகுறித்து சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் பல மேல்முறையீட்டு தீர்ப்புகளில் இத்தகைய வழக்குகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி இந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நிலைநிற்கத்தக்கதல்ல, நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அதிகாரவரம்பு இல்லையென்றும் இது கூட்டுறவு சங்க உறுப்பினருக்கும், கூட்டுறவு சங்கத்திற்கும் ஏற்படும் பிரச்சினை என்பதால் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1983 பிரிவு 90ன்படி முடித்துக் கொள்ளவேண்டியது என்றும் கூறப்பட்டுள்ளது.  

(ii)    எனவே எதிர் தரப்பினர் தரப்பில் எந்தவித சேவை குறைபாடும் இல்லையென்றும், இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு இம்மன்றத்திற்கு அதிகாரவரம்பு இல்லையென்றும்  எதிர் தரப்பினர் கூறுகிறார்.  மேலும் இந்த வழக்கு காலவரம்பினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே இந்த முறையீடு செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று எதிர் தரப்பினர் பிரார்த்திக்கின்றார்.  

3.  முறையீட்டாளர் தரப்பில்  நிரூபண வாக்குமூலம்  தாக்கல் செய்யப்பட்டு,   அவரது தரப்பு வழக்கை நிரூபிக்க ம.சா.ஆ.1 முதல் ம.சா.ஆ.7 வரையிலான சான்றாவணங்கள் குறியிடப்பட்டது.      எதிர் தரப்பினர் தரப்பில் நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு,  அவர் தரப்பில்  எ.ம.ச.ஆ.1 சான்றாவணம் குறியிடப்பட்டது.   இரு தரப்பிலும்  எழுத்துமூலமான வாதுரைகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் ஆவணங்கள் எங்களால் பார்வையிடப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு,  தகுதியின் அடிப்படையில் எங்களால் தீர்மானிக்கப்படுகிறது.

4.   இந்த முறையீட்டில் தீர்வுக்குரிய பிரச்சினைகளாவன:

முறையீட்டாளர் முறையீட்டில் கோரிய வண்ணம் இழப்பீடு பெற அருகதையுடையவரா?

முறையீட்டாளருக்கு கிடைக்கக்கூடிய  இதர பரிகாரங்கள் என்ன? 

 

 

பிரச்சினை 1 &  2:

5.  முறையீட்டாளரான அரிகிருஷ்ணன் என்பவர்  2005 ஆம் ஆண்டு இவ்வழக்கின் எதிர் தரப்பினரான சிதம்பரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திலிருந்து ரூ.1,50,000/-ம் வீடு கட்டுவதற்காக கடனாக பெற்றுள்ளார் என்பதும், அதற்காக அந்த மனை மற்றும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களை  மேற்படி கடன் சங்கத்தில் ஒப்படைப்பு செய்துள்ளார் என்பதும் இந்தக் கடனை 2012ம் ஆண்டிற்குள்  திரும்ப செலுத்தி கடன் முழுவதையும் அடைத்து விட்டார் என்பதும் இரு தரப்பினராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட அம்சம் ஆகும்.  தற்போது  நம் முன் உள்ள பிரச்சினை யாதெனில் முழு கடனும் பைசல் ஆன பின்னரும் முறையீட்டாளரால் ஒப்படைவு செய்யப்பட்ட சொத்து சம்மந்தப்பட்ட அசல் ஆவணங்களை  எதிர் தரப்பினரான செயலாளர், சிதம்பரம் வீடு கட்டும் சங்கம், திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கான தவறுக்காக அவருக்கு அபராதமும், இதனால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், இந்த வழக்கின் செலவுத்  தொகைக்கும் இழப்பீடு தரப்பட வேண்டுமா,  மேலும் அந்த ஆவணங்களின் விலை என்ன என்பது குறித்து முடிவு செய்யப்படவேண்டும் என்பதாகும்.
6.  முறையீட்டாளர் தாப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம்  ம.சா.ஆ.1ன் படி இந்த முறையீட்டாளர் எதிர் தரப்பினர் சங்கத்தில் உறுப்பினர் என்பதும், இச்சங்கத்திலிருந்து வீடு கட்டுவதற்காக அவர் பெற்ற கடன் ரூ.1,50,000/-த்தை அசல் வட்டியுடன் சேர்த்து அவர் திரும்ப செலுத்தியதற்கான கடன் பைசல் சான்று எதிர் தரப்பினர் சங்கத்தால்  இந்த முறையீட்டாளருக்கு கடன் பைசல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மேற்குறிப்பிட்ட  கடன் முழுவதும் திரும்ப செலுத்தப்பட்டு விட்டது என்பது எதிர் தரப்பினரால் ஏற்கப்படுகிறது.   இருப்பினும் இந்த அசல் ஆவணங்களை முறையீட்டாளருக்கு திரும்ப கொடுப்பதில் என்ன இடர்பாடு உள்ளது என்பதை பரிசீலிக்கையில்  இந்த ஆவணங்கள் அனைத்தும் மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில்  ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து தொகை பெறப்பட்டு தான் இந்த கிராம கூட்டுறவு சங்கங்கள், உறுப்பினர்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கியுள்ளது என்பதும் தற்போது கிராம கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் விளைவாக தொகைகள் மேற்குறிப்பிட்ட தமிழ்நாடு கூட்டுறவு  வீட்டு வசதி இணையத்தில் ஒப்படைவு செய்யப்படாததால், இந்த ஆவணங்களைத் திரும்பக் கொடுப்பதில் மேற்குறிப்பிட்ட இணைத்திற்கு இடர்பாடு உள்ளது என்பதாக எதிர் தரப்பினர் தரப்பில் தெரிவிக்கப்படும் அம்சம் ஆகும்.   இந்நிலையில்  தமிழக அரசு தலையிட்டு அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கும் தகுந்த அறிவுரை அளித்து இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்க்கச் சொல்லி கூட்டுறவு இணை மற்றும் துணை பதிவாளருக்கு  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பது எதிர் தரப்பினரால் முன் வைக்கப்படும் அம்சம் ஆகும்.  இந்நிலையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கும் (எதிர் தரப்பினர்) அதன் உறுப்பினர் (இம்முறையீட்டாளர்) இடையிலான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது  பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் அல்லது இணக்க முடிவு காணும் இணையம் ஆகியவற்றின் முன்பு தான் பரிகாரம் கோர இயலுமே தவிர, இப்பிரச்சினைகளுக்காக நேரடியாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுக முடியாது என்பதாக  விதி 69 கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1969-ஐ  மேற்கோள் காட்டி  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், புதுடெல்லி வழங்கிய தீர்ப்பு 2013 (IV) CPJ (NC) 333ல் வெளியாகியுள்ள அஞ்சனா அபிரகாம் - மனுதாரர்  மற்றும் கூத்தாட்டுக்குளம் விவசாய கூட்டுறவு சேவை சங்கம் லிமிடெட் - எதிர் மனுதாரர் வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துரைகளின் அடிப்படையில் இவ்வழக்கை இங்கு தாக்கல் செய்யவோ அல்லது  இதில்  இறுதி பரிகாரம்  இத்தீர்ப்பாயம் வழங்கவோ இயலாது என்பதாக எதிர் தரப்பினரின் கற்றறிந்த வழக்கறிஞர் தனது வாதுரையில் முன் வைத்துள்ளார்.    இதனையும் மேற்குறிப்பிட்ட மேதகு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம், புதுடெல்லி  மற்றும்  17.10.2000 அன்று தமிழ் நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை பல்வேறு தீர்ப்புகளில் கண்ட முடிவுகளையும், கருத்தில் கொண்டு ஆராய்ந்து பார்க்கையில்  கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறும் எந்த ஒரு நபரும் அதன் உறுப்பினர் என்பதும் அவ்விதம் அந்த நபர் உறுப்பினரான பின் அவருக்கும் அந்த கூட்டுறவு சங்கத்திற்கும் இடைப்பட்ட பிரச்சினைகள் எதுவெனிலும் அதுகுறித்து பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது இணக்க முடிவு காணும் இணையம் (Arbitration Tribunal) ஆகியவற்றின் முன்னிலையில் செய்து  பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்பதாக கூறப்பட்டுள்ள இறுதி முடிவுகளின் நிலை இவ்வழக்கிலும் அதே நிலை எழுவதால் இந்த முறையீட்டாளர் மேற்குறிப்பிட்ட வகையில் பரிகாரம் தேடிக் கொள்ளலாமே தவிர நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுகி எவ்வித பரிகாரம் கிடைக்கப்பெற தக்கவரல்ல என்பதாக இவ்வழக்கில் முடிவு செய்யப்பட்டு அவ்வாறே இப்பிரச்சினைகளுக்கு முறையீட்டாளருக்கு எதிராக எங்களால் தீர்வு காணப்படுகிறது. 

        இறுதியாக, இவ்வழக்கு இந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நிலைக்கத்தக்கதல்ல என்பதாக முடிவுற்று,  இவ்வழக்கின் முறையீட்டாளர் கோரும் பரிகாரம்  அளிக்கத்தக்கதல்ல என்பதாகவும் முடிவுற்று இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.  மேலும் இவ்வழக்கின் தன்மையையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவரவர் செலவுத் தொகையை அவரவரே ஏற்க வேண்டும் என உத்திரவிடப்படுகிறது. 
           எம்மொழிதலுக்கு தட்டச்சு செய்யப்பட்டு, எம்மால் திருத்தப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல்  திங்கள் 30 ம் நாளாகிய இன்று அவை அறிய பகரப்பட்டது.


( பி. எழிலரசி)                                                                       (என்.கலியமூர்த்தி )                                     
 உறுப்பினர்.                                                                 தலைவர். 
முறையீட்டாளர்  தரப்பு ஆவணப்பட்டியல்:

ம.சா.ஆ.1    25.10.2012     எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு கொடுத்த கடன் பைசல் சான்று                      
                                                    நகல். 

ம.சா.ஆ.2    04.06.2013    முறையீட்டாளர்,  சிதம்பரம், தமிழ்நாடு நுகர்வோர் குழுமத்தின் 
                                              செயலாளருக்கு அனுப்பிய கடித நகல். 

ம.சா.ஆ.3    07.08.2013    சிதம்பரம், தமிழ்நாடு நுகர்வோர் குழுமத்தின் செயலாளர்  எதிர் 
                                               தரப்பினருக்கு அனுப்பிய கடித நகல்.

ம.சா.ஆ.4    20.06.2013    எதிர் தரப்பினர் சிதம்பரம், தமிழ்நாடு நுகர்வோர் குழுமத்தின் 
                                              செயலாளருக்கு அனுப்பிய கடித நகல்.

ம.சா.ஆ.5    03.09.2013    முறையீட்டாளர்,  நெல்லிக்குப்பம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் 
                                              பொதுச்செயலாளருக்கு அனுப்பிய கடித நகல். 

ம.சா.ஆ.6    03.09.2013    நெல்லிக்குப்பம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளரு 
                                               எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடித நகல்.

ம.சா.ஆ.7    04.09.2013    எதிர் தரப்பினர் அறிவிப்பை பெற்றுக் கொண்டதற்கான  அஞ்சலக 
ஒப்புகை அட்டை. 

            ‘ ‘ ‘ ‘ ‘ ‘ 

எதிர் தரப்பினர் தரப்பு ஆவணப்பட்டியல்:

எ.ம.சா.ஆ.1    -        எதிர் தரப்பினர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் கடித நகல் ,                                   
                                       சுற்றறிக்கை எண்.78ன் நகல் மற்றும்   சென்னை மாநில நுகர்வோர் 
                                        குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பு நகல்         


   ( பி. எழிலரசி)                                                                    (என்.கலியமூர்த்தி )           
       உறுப்பினர்.                                                               தலைவர். 

 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.