Tamil Nadu

Ariyalur

RBT/CC/188/2022

M/s.Sunil Ramana Rao - Complainant(s)

Versus

The Punjab National Bank - Opp.Party(s)

Sampathkumar

28 Oct 2022

ORDER

Heading1
Heading2
 
Complaint Case No. RBT/CC/188/2022
 
1. M/s.Sunil Ramana Rao
-
...........Complainant(s)
Versus
1. The Punjab National Bank
-
............Opp.Party(s)
 
BEFORE: 
 HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D., PRESIDENT
 
PRESENT:
 
Dated : 28 Oct 2022
Final Order / Judgement

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 08-11-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 28-10-2022

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம்,

அரியலூர்.

 

முன்னிலை 

திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  188/2022.

 

            சுனில் ரமணா ராவ், புதிய இலக்கம் 10, பழைய இலக்கம் 51, விஜயராகவா சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017,  அவரது அதிகாரம் பெற்ற முகவர் டி. ரவீந்திரா மூலம்

                                                                                                -முறையீட்டாளர்

 

1.         பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜி. என். செட்டி சாலை கிளை, தியாகராய நகர், சென்னை – 600 017,  அதன் மூத்த கிளை மேலாளர் மூலம்.

,

2.         பஞ்சாப் நேஷனல் வங்கி, இலக்கம் 7, பிகாய்ஜி கமா பிளேஸ், புது தில்லி – 110 607,  அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மூலம்.

 

3.         பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆய்வு மற்றும் தணிக்கை துறை, வட்டார அலுவலகம், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடி, பிஎன்பி டவர்ஸ், இலக்கம் 46-49, ராயப்பேட்டை சாலை, சென்னை – 600 014,  அதன் தலைமை கிளை மேலாளர் மூலம்.

 

                                                                                                - எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் சம்பத்குமார் மற்றும் அசோசியேட்ஸ், ஆர். ரமணி, வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், எதிர் தரப்பினர்களுக்கு திருவாளர்கள் ஆர். கிருஷ்ணகுமார், எஸ். கோகுல், வி. ஜீவன் ராம், ஒய். ஜெபினா ஜோஸ்லின், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      20-10-2022 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள் – 12, எதிர் தரப்பினகளின் பதிலுரை, எதிர் தரப்பினகளின் தரப்பு சான்றாவணங்கள் -13,  சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள் -03  மற்றும் இரு தரப்பு எழுத்துப்பூர்வ, வாய் மொழி வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் வைப்பீடு செய்த தொகைகளுக்கு அதற்காக வழங்கப்பட்ட 8 வைப்பீடு ரசீதுகளில் முதலாம் எதிர்தரப்பினர் ஒப்புக்கொண்டு குறிப்பிட்டுள்ள வட்டி விகிதத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது வைப்பீடு தொகைகளுக்கு வட்டி விகிதத்தை முதலாம் எதிர்தரப்பினர் குறைத்தது காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ 2,07,612/- ஐ இந்தப் புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 18 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 5,00,000/-  எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்   இந்த   ஆணையத்தை அணுகியுள்ளார்.

  • தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாங்கள் கௌரவமான குடும்பத்தை சார்ந்தவர்கள் என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் நீண்டகால வாடிக்கையாளர்கள் என்றும் தாங்கள் முதல் எதிர் தரப்பினரின் வங்கியில் ரூ 4 கோடிக்கும் மேல் வைப்பீடு செய்துள்ளோம் என்றும் புகாரில் தெரிவித்தபடி தமது பெயரில் 6 வைப்பீடு ரசீதுகள் மூலம் ரூ 39,01,000/-ஐ முதலாம் எதிர் தரப்பினரின் வங்கியில் வைப்பீடு தாம் செய்துள்ளேன் என்றும் இதற்கு முதலாம் எதிர்தரப்பினர் வழங்கிய வைப்பீடு ரசீதுகளில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி வழங்கப்படவேண்டிய வட்டி தொகை ரூ. 13,47,132/-  என்றும் முதலாம் எதிர் தரப்பினரால் திருத்தப்பட்ட வட்டி விகிதப்படி வட்டித் தொகை ரூ. 11,39,520/- என்றும் இதனால் தமக்கு ஏற்படும் மொத்த இழப்பு ரூ 2,07,612/- என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       தமது nephew திருமதி டி விஜயலலிதா குமாரி எதிர் தரப்பினர்களின் வங்கியில் 30 ஆண்டு காலம் பணியாற்றி தன்னிச்சை ஓய்வூதிய திட்டத்தின்படி கடந்த 2000 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர் என்றும் திருமதி டி விஜயலலிதா குமாரி அவர்களின் பெயரை இரண்டாவது விண்ணப்பதாராக சேர்த்தால் எதிர் தரப்பினர் வங்கியின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும் என்று முதலாம் எதிர்தரப்பினர் வங்கியின் மேலாளர் உறுதி அளித்ததன் அடிப்படையில் முதலாம் அவர் கேட்டுக்கொண்டதால் தாமும் தங்கள் குடும்பத்தினரும் முதலாம் எதிர்தரப்பினர் வங்கியில் வைப்பீடுகளை செய்தோம் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       தாமும் தமது குடும்பத்தினரும் முதலாம் எதிர் தரப்பினரின் வங்கியில் செய்த வைப்பீடு தொகைகளுக்கு திடீரென கடந்த செப்டம்பர் 2016 முதல் எவ்வித முன்னறிவிப்பு தராமலும்  எவ்வித காரணங்களையும் தெரிவிக்காமலும் வட்டி விகிதத்தை குறைத்து விட்டார் என்றும் இதுகுறித்து 17-10-2016, 01-11-2016, 01-12-2016, 05-12-2016, 29-12-2016 ஆம் தேதிகளில் எதிர் தரப்பினர்களுக்கு தமது தரப்பில் கடிதம் எழுதியும் 13-01-2017 ஆம் தேதியில் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும் எதிர் தரப்பினர்கள் தரப்பில் முறையான பதில் அல்லது சரியான காரணங்கள் எதுவும் வட்டிவீதம் குறைக்கப்பட்டதற்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

06.       எதிர் தரப்பினர் வங்கியின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும் என்று முதலாம் எதிர்தரப்பினர் வங்கியின் மேலாளர் உறுதி அளித்து தம்மிடம் இருந்து வைப்பு தொகைகளை பெற்று அவற்றிற்கு குறிப்பிட்ட வட்டி விகிதம் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை உறுதிசெய்து அவ்வாறு ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை தமக்கு வழங்கப்பட்ட வைப்பீடு ரசீதுகளில் குறிப்பிட்டு, ரசீதுகளை வழங்கிய பின்னர் எவ்வித முன்னறிவிப்பும் தமக்கு தராமலும் சரியான காரணங்களை தமக்கு தெரிவிக்காமலும் தன்னிச்சையாக வட்டி விகிதத்தை முதலாம் எதிர்தரப்பினர் குறைத்துள்ளது  சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையது அல்ல மற்றும் சரியான காரணமற்றது என்றும் இத்தகைய சேவை குறைபாட்டால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

07.       எனவே, தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் வைப்பீடு செய்த தொகைகளுக்கு அதற்காக வழங்கப்பட்ட வைப்பீடு ரசீதுகளில் முதலாம் எதிர்தரப்பினர் ஒப்புக்கொண்டு குறிப்பிட்டுள்ள வட்டி விகிதத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது வைப்பீடு தொகைகளுக்கு வட்டி விகிதத்தை முதலாம் எதிர்தரப்பினர் குறைத்தது காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ 2,07,612/- ஐ இந்தப் புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 18 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை காரணமாக தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 5,00,000/-  மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

08.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.

 

07.       திருமதி டி விஜயலலிதா குமாரி  எதிர்தரப்பினர்களின் வங்கியின் முன்னாள் பணியாளர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது என்றும் வங்கியின் பணியாளர்கள் அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு கூடுதல் வட்டி வழங்குவது குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அறிவுரை புத்தகத்தில் (Book of instructions) உள்ள விவரங்களும் அவருக்கு நன்கு தெரியும் என்றும் முறையீட்டாளர் சார்பில் தங்களது வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையானது திருமதி டி விஜயலலிதா குமாரிக்கு சொந்தமானது என்ற உறுதிமொழியையும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர் மற்றும் திருமதி டி விஜயலலிதா குமாரியுடன் இணைந்து செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகை ரசீதுகளில் முதலாவது நபராக திருமதி டி விஜயலலிதா குமாரி அவர்களை சேர்ப்பதற்கு குடும்ப உறுப்பினர்களிடம் சம்மத கடிதத்தையும் பணம் வந்த வழி வகை விளக்கத்தையும் சமர்ப்பிக்குமாறு அவரிடம் தங்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது என்றும் ஆனால் இவை முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இதனால் வைப்பீடு செய்யப்பட்ட தொகைகள் அவருக்கு சொந்தமானது அல்ல என்று முடிவு செய்து வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டன என்றும் வைப்பீடு தொகைக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டது முறையீட்டாளருக்கு நேரில் தெரிவிக்கப்பட்டது என்றும் வட்டி விகிதாச்சாரத்தை தாங்கள் கையாளுவது இல்லை என்றும் அவை ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி வழங்கப்படுகிறது என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் தெரிவித்துள்ளார்கள். 

09.       முறையீட்டாளரின் கடிதங்களுக்கும் வழக்கறிஞர் அறிவிப்புக்கும் தங்கள் தரப்பில் முறையான பதில் தரப்பட்டது என்றும் இந்து கூட்டுக் குடும்பத்தின் கர்த்தா என்ற முறையில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படமாட்டாது என்றும் இதனால் முறையீட்டாளர் மூத்த குடிமகனாக இருந்தாலும் பொதுவாக மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் தான் வழங்கப்படும் என்றும் வங்கியின் பணியாளர்களுக்கு அல்லது முன்னாள் பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீத வட்டி அவர்களது வைப்பு தொகைக்கு வழங்குவது என்பது வங்கியில் விருப்ப அதிகாரம் Chapter IV, Book of Instructions (Operations)- ல் என்று கூறப்பட்டுள்ளது என்றும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் தெரிவித்துள்ளார்கள். 

 

10.       முறையீட்டாளர் தங்களது வங்கியில் வைப்பு தொகை கணக்கு தொடங்கும்போது உள்ள விண்ணப்பத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் வங்கி விதிகளுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்து கையொப்பம் செய்துள்ளார் என்றும் வங்கியின் வட்டி விகிதங்களை மாற்றுவது வங்கியின் விருப்ப அதிகாரம் என்றும் திருமதி டி விஜயலலிதா குமாரி  அவர்களுக்கு மட்டும் வங்கியின் முன்னாள் பணியாளர் என்று கூடுதலாக வட்டி வழங்கப்படும் என்றும் தவறுதலாக முறையீட்டாளருக்கு வங்கியின் முன்னாள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்பட்டு விட்டது என்றும் இவ்வாறு வழங்கப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்த முறையீட்டாளர் கடமைப்பட்டவர் என்றும் சங்கதிகளை மறைத்து தவறான பிரதிநிதித்துவம் செய்து கூடுதலாக முறையீட்டாளர் பெற்றுள்ள கூடுதல் வட்டித் தொகையை திரும்ப பெறுவதற்கு எதிர் தரப்பினர்களுக்கு உரிமை உள்ளது என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்தரப்பினர்கள் தமது உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

 

 

11.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)  முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்கள்  நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றி சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

12.       முதலாவதாக, முறையீட்டாளரின் வைப்புத் தொகைகளுக்கு ரசீது வழங்கியது, வட்டியை குறைத்தது உள்ளிட்ட நடைமுறை தொடர்பானவற்றில் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா? என்பதும் இரண்டாவதாக முறையீட்டாளர் கூறுவது போல வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டு வந்ததை எதிர் தரப்பினர்கள் குறைத்தது தவறா? சேவை குறைபாடா? என்பதும் முதலாவது எழு வினாவில் உள்ள இரண்டு பாகங்கள் ஆகும்.

 

13.       முறையீட்டாளரின் வைப்புத் தொகைகளுக்கு ரசீது வழங்கியது, வட்டியை குறைத்தது உள்ளிட்ட நடைமுறை தொடர்பானவற்றில் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?  என்று பார்க்கும் போது பின்வரும் சங்கதிகள் ஆராயப்பட வேண்டியதாக உள்ளது.

 

 

 

14.       முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினரிடம் பணத்தை வைப்பீடு செய்யும்போது அவர் தமது குடும்ப உறுப்பினரான எதிர் தரப்பினர்கள் வங்கியின் முன்னாள் பணியாளரான திருமதி டி விஜயலலிதா குமாரி  அவர்களை இணைத்து கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தாரா என்று பார்க்கும்போது ஆம் என்று இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

 

15.       மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்குவதாக எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வைப்பீடு ரசீதுகளை வழங்கினார்கள் வழங்கினாரா? என்று பார்க்கும்போது ஆமென்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கு ஆதாரமாக முறையீட்டாளர் தரப்பில் குறியீடு செய்யப்பட்டுள்ள வைப்பீடு ரசீதுகளில் special deposit என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

15.       மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வைப்பீடு ரசீதுகளை வழங்கியபோது முறையீட்டாளர் சார்பில் தங்களது வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையானது திருமதி டி விஜயலலிதா குமாரிக்கு சொந்தமானது என்ற உறுதிமொழி வேண்டும் என்றும் கூட்டாக செய்யப்பட்ட வைப்பீடுகளில் முதலாவது பெயர் எதிர் தரப்பினர்கள் வங்கியின் முன்னாள் பணியாளரான திருமதி டி விஜயலலிதா குமாரி  இருக்க வேண்டும் என்றும் பணம் எவ்வாறு வந்தது என்ற வழிவகை தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளரிடம் தெரிவித்தாரா? என்றால் இல்லை என்று தான் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது ஏனெனில் அதற்கான எந்த ஆவணமும் எதிர் தரப்பினர்கள் சார்பில் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

 

 

 

16.       மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வைப்பீடு ரசீதுகளை வழங்கியபோது எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையிலும் சான்று ஆவணங்களிலும் குறிப்பிட்டுள்ளபடி  திருமதி டி விஜயலலிதா குமாரி  அவர்களுக்கு மட்டும் வங்கியின் முன்னாள் பணியாளர் என்று கூடுதலாக வட்டி வழங்கப்படும் என்ற விதிமுறைகள் /நெறிமுறைகள்/ வழிகாட்டுதல்கள்/ அறிவுரைகள் இருந்தனவா என்றால் ஆம் என்ற பதிலையே அறியமுடிகிறது. இவ்வாறு இருந்த நிலையிலும் மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வழங்கியுள்ளனரா?  என்ற கேள்விக்கு ஆம் என்ற பதில் கிடைக்கப் பெறுகிறது.

 

17.       வைப்பு தொகைகளை பெற்று அவற்றிற்கு குறிப்பிட்ட வட்டி விகிதம் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை உறுதிசெய்து அவ்வாறு ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை வழங்கப்பட்ட வைப்பீடு ரசீதுகளில் குறிப்பிட்டு ரசீதுகளை வழங்கிய பின்னர் எவ்வித முன்னறிவிப்பும் தராமலும் சரியான காரணங்களை தெரிவிக்காமலும் தன்னிச்சையாக வட்டி விகிதத்தை முதலாம் எதிர்தரப்பினர் குறைத்துள்ளார் என்றால் ஆம் என்ற பதிலையே அறியமுடிகிறது. ஏனெனில் வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கு முன்னதாக எவ்வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பு தக்க காரணங்களுடன் முறையீட்டாளருக்கு வழங்கப்படவில்லை.  அவ்வாறு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதனையும் எதிர் தரப்பினர்கள் இங்கு சமர்ப்பிக்கவில்லை.

 

18.       மேற்கண்ட காரணங்களினால் முறையீட்டாளரின் வைப்புத் தொகைகளுக்கு ரசீது வழங்கியது, வட்டியை குறைத்தது உள்ளிட்ட நடைமுறை தொடர்பானவற்றில் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?  என்றால் ஆம் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

19.       முறையீட்டாளர் கூறுவது போல வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டு வந்ததை எதிர் தரப்பினர்கள் குறைத்தது தவறா? சேவை குறைபாடா? என்று பார்க்கும் போது பின்வரும் சங்கதிகள் ஆராயப்பட வேண்டியதாக உள்ளது.

 

20.       கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்குவதாக எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வைப்பீடு ரசீதுகளை வழங்கினாரா? என்று பார்க்கும்போது ஆமென்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஏற்றதை ஆற்றுக (specific performance)  என்ற கோட்பாட்டை எதிர் தரப்பினர்கள் கடைப்பிடிக்க கடமைப்பட்டவர்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

21.       மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வைப்பீடு ரசீதுகளை வழங்கியபோது முறையீட்டாளர் சார்பில் தங்களது வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையானது திருமதி டி விஜயலலிதா குமாரிக்கு சொந்தமானது என்ற உறுதிமொழி வேண்டும் என்றும் கூட்டாக செய்யப்பட்ட வைப்பீடுகளில் முதலாவது பெயர் எதிர் தரப்பினர்கள் வங்கியின் முன்னாள் பணியாளரான திருமதி டி விஜயலலிதா குமாரி  இருக்க வேண்டும் என்றும் பணம் எவ்வாறு வந்தது என்ற வழிவகை தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளரிடம் தெரிவித்தாரா? என்றால் இல்லை. ஏனெனில் அதற்கான எந்த ஆவணமும் எதிர் தரப்பினர்கள் சார்பில் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை.  அவற்றை வைப்புத் தொகை முதலீடு செய்வதற்கு முன்பே கேட்டிருந்தால் முறையீட்டாளர் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லை என்ற நிலை உள்ளதால் ஒப்புக்கொண்டபடி வட்டி விகிதத்தை தரவேண்டியது எதிர் தரப்பினர்கள் கடமைப்பட்டவர்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

22.       மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வைப்பீடு ரசீதுகளை வழங்கியபோது எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையிலும் சான்று ஆவணங்களிலும் குறிப்பிட்டுள்ளபடி  திருமதி டி விஜயலலிதா குமாரி  அவர்களுக்கு மட்டும் வங்கியின் முன்னாள் பணியாளர் என்று கூடுதலாக வட்டி வழங்கப்படும் என்ற விதிமுறைகள் /நெறிமுறைகள்/ வழிகாட்டுதல்கள்/ அறிவுரைகள் இருந்தனவா என்றால் ஆம் என்ற பதிலையே அறியமுடிகிறது. இவ்வாறு இருந்த நிலையிலும் மேற்கண்டவாறு கூட்டாக பணத்தை வைப்பீடு செய்தபோது வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி எதிர் தரப்பினர்கள் ஒப்புக்கொண்டு வழங்கியுள்ளனரா?  என்ற கேள்விக்கு ஆம் என்ற பதில் கிடைக்கப் பெறும் நிலையில் திருமதி டி விஜயலலிதா குமாரி  அவர்களுக்கு மட்டும் முன்னாள் வங்கியின் முன்னாள் பணியாளர் என்று கூடுதலாக வட்டி வழங்கப்படும் என்றும் தவறுதலாக முறையீட்டாளருக்கு வங்கியின் முன்னாள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்பட்டு விட்டது என்றும் இவ்வாறு வழங்கப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்த முறையீட்டாளர் கடமைப்பட்டவர் என்ற எதிர் தரப்பினர்கள் வாதத்தை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் மற்றும் சான்று ஆவணங்கள் இல்லை. தவறுதலாக வட்டி விகிதம் கூடுதலாக வழங்கப்பட்டு இருப்பின் சம்பந்தப்பட்ட வங்கியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கைகளை எதிர் தரப்பினர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். வட்டியை குறைப்பது குறித்த முடிவு எடுக்கப்பட்ட செயல்முறை நடவடிக்கைகள் அல்லது அது தொடர்பான ஆவண குறிப்புகள் போன்றவற்றை எதிர் தரப்பினர்கள் தங்கள் தரப்பை நிரூபிக்க இங்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எந்தவிதமான ஆதாரங்களையும் எதிர்தரப்பினர் தாக்கல் செய்யவில்லை. மேலும் எதிர்த் தரப்பினர்கள் தரப்பில் கூறப்படும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் Book of Instructions ஆகியன இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

23.       வங்கியின் வட்டி விகிதங்களை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது தமது விருப்ப அதிகாரம் என்று எதிர்தரப்பினர் கூறும் நிலையில் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தி கூடுதலாக வட்டியை முறையீட்டாளருக்கு நிர்ணயம் செய்து வழங்கி வந்த நிலையில் இதனை தன்னிச்சையாக ரத்து செய்வது என்பது சரியானது அல்ல என்று இந்த ஆணையம் கருதுகிறது. மேற்படி ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பினருக்கு உரிமை வழங்குவது நியாயமற்ற ஒப்பந்தத்தின் ஒரு முறையாகும் ( a mode of unfair contract – section 2(46) of Consumer Protection Act, 2019).  இது சேவையில் உள்ள குறைபாடாகும்.

 

24.       மேற்கண்ட காரணங்களினால் முறையீட்டாளர் கூறுவது போல வங்கியின் முன்னாள் பணியாளர்களின் வைப்புத் தொகைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வட்டி முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டு வந்ததை எதிர் தரப்பினர்கள் குறைத்தது தவறா? சேவை குறைபாடா?   என்றால் ஆம் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 2

 

25.       எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு புகாரில் அவர் கூறியுள்ளது போல முறையீட்டாளர் (1) முதலாம் எதிர் தரப்பினரிடம் வைப்பீடு செய்த தொகைகளுக்கு அதற்காக வழங்கப்பட்ட வைப்பீடு ரசீதுகளில் முதலாம் எதிர்தரப்பினர் ஒப்புக்கொண்டு குறிப்பிட்டுள்ள வட்டி விகிதத்தை முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் (2) முறையீட்டாளரின் வைப்பீடு தொகைகளுக்கு வட்டி விகிதத்தை முதலாம் எதிர்தரப்பினர் குறைத்தது காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ 2,07,612/- ஐ இந்தப் புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டியுடன் சேர்த்து முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும்  இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

26.       சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினரின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீட்டை எதிர்தரப்பினர்கள் தர வேண்டியவர் என்று இந்த தீர்மானிக்கிறது. பணத்தின் மூலம் இதனை சரி செய்ய இயலாது என்றும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய இயலாது என்றாலும் சேவை குறைபாட்டிற்கும் மன உளைச்சல்களுக்கும் ரூ 50,000/- முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 28-10-2022  தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 50,000/-  தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 3

 

27.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முதலாம் எதிர் தரப்பினரிடம் வைப்பீடு செய்த தொகைகளுக்கு அதற்காக வழங்கப்பட்ட வைப்பீடு ரசீதுகளில் முதலாம் எதிர்தரப்பினர் ஒப்புக்கொண்டு குறிப்பிட்டுள்ள வட்டி விகிதத்தை முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும்.

 

02.       முறையீட்டாளரின் வைப்பீடு தொகைகளுக்கு வட்டி விகிதத்தை முதலாம் எதிர்தரப்பினர் குறைத்தது காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ 2,07,612/- ஐ இந்தப் புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டியுடன் சேர்த்து முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும்.

 

03.       சேவை குறைபாட்டிற்கும் மன உளைச்சல்களுக்கும் ரூ 50,000/- முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 28-10-2022  தேதி முதல் ஆண்டொன்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 50,000/-  தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர்கள் வழங்க வேண்டும்

 

04.       புகாரில் உள்ள தரப்பினர்கள்அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  28-10-2022 ஆம்  நாளன்று பகரப்பட்டது.                                                 

                                                                                   

                                                                                    தலைவர்.                            

                                                                                   

 

                                                                                    உறுப்பினர் – I

                                                           

 

                                                                                    உறுப்பினர்-II.

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

24-12-2010

GPA

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

-

List of fixed deposit receipts -17

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

10-01-2016

Letter to the first opposite party from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

17-10-2016

Letter to the first opposite party from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

01-11-2016

Letter to the first opposite party from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

01-12-2016

Letter to the first opposite party from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

05-12-2016

Letter to the first opposite party from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

29-12-2016

Letter to the first opposite party from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

13-01-2017

Legal notice to the opposite parties

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

31-01-2017

Reply notice from the opposite parties

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

28-02-2017

Letter to the first opposite parties from complainant

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.12

22-03-2017

Letter to the first opposite parties from complainant

ஜெராக்ஸ்

 

எதிர் தரப்பினர்கள்    தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

29-03-2016

GPA

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

25-02-2011

Benefits of aaditional rate of interest to senior citizens

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

02-01-2012

Clarification inrespect of discreation to pay additional interest

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

02-02-2012

Clarification inrespect of discreation to pay additional interest

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

07-12-2015

Concessional rate of interes to spous of retired

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

17-10-2016

Letter of advocate

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

04-11-2016

Reduction in rate of interest

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

08-11-2016

Reply letter

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

21-11-2016

Complainant’s request

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

28-12-2016

Complainant’s request

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

12-01-2017

Complainant’s request

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.12

28-02-2017

Continuing our existing longstanding relationship with PNB

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.13

14-03-2017

Continuing our existing longstanding relationship with PNB

ஜெராக்ஸ்

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு டி. ரவீந்திரா

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சாட்சி:  திரு பசவ சீனிவாசன் ராவ்

 

                                                                                   

                                                                                    தலைவர்.

           

 

                                                                                    உறுப்பினர் – I

 

 

                                                                                    உறுப்பினர்-II.

 
 
[HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D.,]
PRESIDENT
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.