Tamil Nadu

Ariyalur

RBT/CC/60/2022

S.Bharathidasan - Complainant(s)

Versus

The Manager, M/s.Zulaikha Motors (P) Ltd., - Opp.Party(s)

N.Sivaraman

02 Dec 2022

ORDER

Heading1
Heading2
 
Complaint Case No. RBT/CC/60/2022
 
1. S.Bharathidasan
-
...........Complainant(s)
Versus
1. The Manager, M/s.Zulaikha Motors (P) Ltd.,
-
............Opp.Party(s)
 
BEFORE: 
 HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D., PRESIDENT
 
PRESENT:
 
Dated : 02 Dec 2022
Final Order / Judgement

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 25-04-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 02-12-2022  

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம்,

அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  60/2022.

 

            சென்னை, பொழிச்சலூர், வினாயக நகர், காமராஜர் தெரு, புதிய இலக்கம் 2/320 -ல் வசிக்கும் செல்வராஜ் மகன் பாரதிதாசன்                                                                                                                          -முறையீட்டாளர்

 

1.         சென்னை, வேளச்சேரி, வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை, இலக்கம் 398 & 398 A-ல் இருக்கும் M/s. Zulaikha Motors (P) Ltd., அதன் கிளை மேலாளர் மூலம்

 

2.         சென்னை, வேளச்சேரி, அக்ரூலி சாலையில் உள்ள மகேந்திரா டவரில் இருக்கும் ஆட்டோமோட்டிவ் டிவிஷன், M/s. மகேந்திரா & மகேந்திரா   லிமிடெட் அதன் மேலாளர் மூலம்                                   

 

3.         சென்னை ஆலந்தூர் எம் கே என் சாலை இல் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதன் மேலாளர் மூலம்                                                    - எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திரு என் சிவராமன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினர் மீது ஒருதலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு திருவாளர்கள் பிஜே ரிசிகேஷ் மற்றும் நான்கு வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு திரு கே. குமரன் முன்னிலையாகியும் வழக்கறிஞர் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      17-11-2022 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள் – 08, இரண்டாம் எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம், சான்றாவணங்கள் – 01  மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் தம்மால் வாகனத்தை வாங்குவதற்கு செலுத்தப்பட்ட ஆரம்பத் தொகை வங்கிக்கு பணம் செலுத்திய மாதாந்திர தவணை தொகைகள் மேற்கண்ட வட்டிக்கு வட்டி மேற்கண்டவற்றை மேற்கண்ட தொகைக்கு வட்டி மற்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடு, வழக்கின் செலவு தொகை  ஆகியவற்றுக்கு ரூ5,30,358/- ஐ வழங்க வேண்டும் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகையை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் செலுத்தவேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர் தரப்பினர்கள் தமக்கு அளிக்கவேண்டும் என்றும்இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்   இந்த   ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

 

 

 

 

  • தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாம் கடந்த 13-03-2016 ஆம் தேதியன்று இரண்டாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை காரை முதலாம் எதிர் தரப்பினரிடம் விலைக்கு வாங்கினேன் என்றும் இதன் விலையில் ரூ 2,58,596/- ஐ தாம் முன்பணமாக செலுத்தினேன் என்றும் மீத தொகையை மூன்றாம் எதிர்தரப்பினர் கடனாக தமக்கு வழங்கினார் என்றும் TN 85 C1107 என்ற பதிவு எண் இந்த வாகனத்துக்கு வழங்கப்பட்டது என்றும் இந்த வாகனத்தை வாங்குவதற்கு முன்பாக வாகனத்தின் காற்று தடை அமைப்பு ( break system) சிறப்பாக இருப்பதாக அறிய வந்ததால் இதனை வாங்கினேன் என்றும் இதனை வாங்கிய பின்னர் பிரேக் சிஸ்டம் சரிவர பணியாற்றாமல் குறைபாடு உடையதாக இருந்தது என்றும் இதன் காரணமாக தேவையான அளவிற்கு உபயோகப்படுத்த இயலவில்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் 5க்கும் மேற்பட்ட முறை இந்த பிரச்சினையை எடுத்துக் கூறியும் அவர்கள் நிரந்தரமாக பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் ஒருமுறை இந்த காரில் பயணிக்கும் போது பிரேக் பிடிக்காத காரணத்தால் விபத்து ஏற்பட கூடிய சூழ்நிலையில் வேகத்தை கட்டுப்படுத்தி மண் தரைக்கு சென்று காரை நிறுத்திய தாகவும் அப்போது தம்முடன் குடும்பத்தார் இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் இந்த பிரச்சனை காரணமாக தமக்கு ரூ 3,76,912/- இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்தத் தொகைக்கு வட்டி செலுத்தி உள்ளேன் என்றும் இதனால் பெருத்த மன உளைச்சலும் சிரமங்களும் இந்த வழக்கை தாக்கல் செய்ய செலவும் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு எதிர்த் தரப்பினர்கள் பொறுப்பாவார்கள் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் குறைபாடு உள்ள வாகனத்தை தமக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்றும் இது குறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பியும் அதனைப் பெற்ற பின்னரும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் மற்றும் தமக்கு திருப்தியற்றபதிலை அனுப்பியுள்ளார் என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் தம்மால் வாகனத்தை வாங்குவதற்கு செலுத்தப்பட்ட ஆரம்பத் தொகை வங்கிக்கு பணம் செலுத்திய மாதாந்திர தவணை தொகைகள் மேற்கண்ட வட்டிக்கு வட்டி மேற்கண்டவற்றை மேற்கண்ட தொகைக்கு வட்டி மற்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடு, வழக்கின் செலவு தொகை  ஆகியவற்றுக்கு ரூ5,30,358/- ஐ வழங்க வேண்டும் என்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு செலுத்த வேண்டிய தொகை தொகையை முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர் செலுத்தவேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர் தரப்பினர்கள் தமக்கு அளிக்கவேண்டும் என்றும்இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும்தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இரண்டாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

06.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முறையீட்டாளரால் விலைக்கு தமது நிறுவனத்தின் வாகனம் முதலாம் எதிர்தரப்பினர் மூலம் வாங்கப்பட்டது உண்மை என்றும் ஆனால் அவர் கூறுவது போல வாகனத்தில் எத்தகைய குறைபாடும் இல்லை என்றும் கடந்த 13-03-2016 ஆம் தேதியன்று வாகனத்தை முறையீட்டாளர் வாங்கி பெற்றுச் சென்ற பின்னர் 14-03-2016 & 16-03-2016 கடந்த ஆம் தேதிகளில் வாகனத்தில் கூடுதல் வசதிக்கான பாகங்களை இணைக்க முதலாம் எதிர் தரப்பினரின் சேவை மையத்துக்கு வாகனத்தை எடுத்து வந்தார் என்றும் வேறு எவ்வித பிரச்சனைகளும் மேற்படி நாட்களில் அந்த வாகனம் எடுத்து வரப்படவில்லை என்றும் கடந்த 16-04-2016 ஆம் தேதியன்று வாகனத்தை பொதுவான பரிசோதனைக்கு எடுத்து வந்தபோது break jam ஏற்படுவதாக அவர் தெரிவித்தது break assembly முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அந்த பகுதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கண்டறியப்பட்டு அவரிடம் வாகனம் ஒப்படைக்கப்பட்டது என்றும் மேற்படி ஒரு மாத காலத்திற்குள் 700 கிலோ மீட்டர் அவர் வாகனத்தை இயக்கி உள்ளது தெரியவந்தது என்றும் கடந்த 06-06-2016 ஆம் தேதியன்று முதலாவது இலவச சேவைக்கு முறையீட்டாளர் வாகனத்தை எடுத்து வந்து பிரேக்கில் பிரச்சனை உள்ளது என்று தெரிவித்தார் என்றும் ஆனால் எந்த ஒரு பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்றும் அதன்பின்பு 27-08-2016 ஆம் தேதியில் வாகனத்தை சேவை மையத்துக்கு எடுத்து வந்தார் என்றும் அப்போது break pedal is not releasing properly என்ற பிரச்சனை இருந்ததாக சொல்லப்பட்டு சரி செய்யப்பட்டது என்றும் அதற்காக break lever உடன் உள்ள spring புதிதாக மாற்றப்பட்டு பிரச்சினையை சரி செய்து தரப்பட்டது என்றும் இத்தகைய பிரச்சனை ஒரு சிறிய பழுது  என்றும் முற்றிலும் பிரேக் சிஸ்டம் சரி இல்லை எனக் கூறுவது தவறு என்றும் கடந்த 02-11-2016 ஆம் தேதியன்று வாகனத்தை பொதுவான பரிசோதனைக்கு எடுத்து வந்தபோது break jam சில சமயங்களில் ஏற்படுவதாக முறையீட்டாளர் தெரிவித்தார் என்றும் பரிசோதனை செய்து பார்த்தபோது அத்தகைய தீவிரமான குறைபாடு எதுவும் வாகனத்தில் இருக்கவில்லை என்றும் break oil மாற்றம் செய்யப்பட்டு வாகனம் ஒரு சோதனை செய்யப்பட்டு அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்றும் மொத்த பிரேக் சிஸ்டமும் பழுது பட்டது என்று வெறும் வார்த்தைகளால் குற்றம் சாட்டினால் போதாது என்றும் சிறிய அளவிலான பிரச்சனைகளுக்கு முழுவதுமாக வாகனத்தை மாற்றி தருவது போன்றவை தேவையில்லை என்று பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என்றும் மேற்படி வாகனம் ஆம் தேதி வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் ஒட்டப்பட்டுள்ளது என்றும் இத்தகைய சூழ்நிலையில் பிரேக் முற்றிலுமாக செயல்படுவதில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றும் ரூ 3,76,912/- எவ்வாறு முறையீட்டாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற காரணம் தெரியவில்லை என்றும் புகாரில் உள்ள பல சங்கதிகள் எவ்வித ஆதாரத்தையும் கொண்டது அல்ல என்றும் தங்கள் தரப்பில் குறைபாடுள்ள வாகனம் விற்கப்பட்டு சரிவர சேவை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் இரண்டாம் எதிர் தரப்பினர் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்.

 

மூன்றாம் எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

08.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

09.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முறையீட்டாளரால் விலைக்கு வாங்கிய வாகனத்துக்கு தங்களால் கடன் உதவி செய்யப்பட்டது என்றும் மற்ற பிரச்சினைகள் அனைத்தும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கும் முறையீட்டாளருக்கும் உள்ளவை என்றும் அவற்றிற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் புகாரில் தங்களிடம் எவ்வித பரிகாரமும் கேட்கவில்லை என்றும் தேவையில்லாமல் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தங்களை வழக்கில் சேர்க்க ஆள்வரை (jurisdiction)  இல்லை என்றும் இன்னும் பல சங்கதிகளை கூறியும் மூன்றாம் எதிர் தரப்பினர் தமது பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்

 

10.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள்  குறைபாடுள்ள வாகனத்தை விற்பனை செய்துசேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

11.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல முறையீட்டாளர் வாங்கிய வாகனம் தங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்று இரண்டாம் தரப்பினர் ஒப்புக் கொள்ளும் நிலையில் அதில் குறைபாடு இருப்பின் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய சங்கதி ஆகும். வாகனத்தில் குறைபாடு இருப்பின் அதற்கான பொறுப்பு உற்பத்தியாளர் மட்டுமே என்பதால் முதலாம் எதிர்தரப்பினரான விற்பனையாளர் மீது எவ்வித பரிகாரங்களையும் முறையீட்டாளர் கோரமுடியாது மேலும் மூன்றாம் எதிர்தரப்பினர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் புகாரில் இல்லாத நிலையிலும் அவரிடம் எவ்வித பரிகாரமும் கேட்காத நிலையிலும் அவரை தரப்பினராக முறையீட்டாளர் இணைத்துள்ளது சரியானதல்ல. இதனால் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் மீதான புகாரை இந்த ஆணையம் தள்ளுபடி செய்வது என்று தீர்மானிக்கிறது.

 

12.       முறையீட்டாளர் புகாரில் தாம் வாங்கிய வாகனத்தில் break assembly system குறைபாடு உடையது என்று முறையீட்டாளர் குற்றம்சாட்டும் நிலையில் வாகனத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு 6 முறை வாகனம் எடுத்து வரப்பட்டபோது முதல் இரண்டு முறை வாகனத்தில் வசதிக்காக கூடுதல் பாகங்களை இணைக்க மட்டுமே வாகனம் எடுத்து வரப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. 

 

 

13.       16-04-2016, 06-06-2016, 27-08-2016, 02-11-2016 ஆகிய தேதிகளில் வாகனமானது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு எடுத்து வரப்பட்ட போது சிறிய அளவிலான பிரேக் பிரச்சனை இருந்துள்ளது என்பதையும் அந்த பிரச்சனை முதலாம் எதிர் தரப்பினரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தால் சரி செய்யப்பட்டுள்ளது என்பதையும் சாட்சியம் மட்டும் சான்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.  எவ்வாறு இருப்பினும் அந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருந்து வருவதாக முறையீட்டாளர் குற்றம்சாட்டுவது உண்மை இருப்பதாகவே உணர முடிகிறது.  இருப்பினும் முறையீட்டாளர் கூறுவது போல முற்றிலும் வாகனத்தை பயன்படுத்துவதில்லை என்ற சங்கதிகள் ஏற்புடையதாக இல்லை.  வாகனத்தின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான பிரச்சனை இருப்பதற்காக வாகனத்தின் மொத்த தொகையையும் கேட்க இயலாது. அவ்வாறு இருப்பின் வாகனம் முழுமையான பரிசோதனைக்கு நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு வாகனம் முற்றிலும் உபயோகப்படுத்த இயலாத ஒன்று என்று அவர்கள் கருத்துரை அல்லது சாட்சியம் அளிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் அத்தகைய கருத்துரை அல்லது சாட்சியம் எதுவும் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை.  இந்நிலையில் மேற்படி வாகனத்தில் break assembly system-ல் சிறிய அளவிலான குறைபாடு இருந்து வந்துள்ளது என்றும் அதற்கு இரண்டாம் எதிர்தரப்பினர் பொறுப்பாவார் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 2

 

13.       இரண்டாம் எதிர் தரப்பினரால் உற்பத்தி செய்யப்பட்டு முறையீட்டாளரால் வாங்கப்பட்ட வாகனத்தில் break assembly system-ல் சிறிய அளவிலான குறைபாடு இருந்து வந்துள்ளது என்றும் அதற்கு இரண்டாம் எதிர்தரப்பினர் பொறுப்பாவார் என்றும் தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கின் தன்மையை கருதி முறையீட்டாளரின் TN 85 C1107 என்ற பதிவு எண் கொண்ட (காரின்) வாகனத்தின் உற்பத்தியாளரான இரண்டாம் எதிர்தரப்பினர் அந்த வாகனத்தில் உள்ள பிரேக் சிஸ்டத்தை (Break assembly system) முழுமையாக புதிதாக மாற்றி இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் இவ்வாறு செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கு அதற்கு உத்தரவாதம் இரண்டாம் எதிர்தரப்பினர் வழங்கவேண்டும் என்றும்  உத்திரவாத காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை இரண்டாம் எதிர்தரப்பினர் சரி செய்து தர வேண்டும் என்றும் மேலும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முறையீட்டாளருக்கு ரூ 20,000/- இரண்டாம் எதிர்தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 3

 

14.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முறையீட்டாளரின் TN 85 C1107 என்ற பதிவு எண் கொண்ட (காரின்) வாகனத்தின் உற்பத்தியாளரான இரண்டாம் எதிர்தரப்பினர் அந்த வாகனத்தில் உள்ள பிரேக் சிஸ்டத்தை (Break assembly system) முழுமையாக புதிதாக மாற்றி இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்கு அதற்கு உத்தரவாதம் இரண்டாம் எதிர்தரப்பினர் வழங்கவேண்டும். உத்திரவாத காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை இரண்டாம் எதிர்தரப்பினர் சரி செய்து தர வேண்டும். மேலும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு முறையீட்டாளருக்கு ரூ 20,000/- இரண்டாம் எதிர்தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும்.

 

02.       முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்கள் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது

03.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  02-12-2022   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

 

                                                                                    தலைவர்.    

                       

 

                                                                                    உறுப்பினர் – I

 

 

                                                                                    உறுப்பினர்-II.

 

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

25-05-2017

Airtel Secure Subscribtion copy

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

-

Insurance certificate

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

13-06-2017

Mail from first opposite party

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

19-06-2017

Acknowledgement from second opposite party

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

24-06-2017

Rejection of claim

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

27-07-2017

Application to the appeallate authority

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

28-06-2017

Rejection from appeallate authority

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

30-06-2017

 

ஜெராக்ஸ்

 

 

 

முதலாம் எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

எம.சா.ஆ.1

-

Terms and Conditions – Airtel Secure Offer

ஜெராக்ஸ்

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு சங்கர விசுவநாதன்

முதலாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி:  திருமதி அருணா

                                                                                   

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

 
 
[HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D.,]
PRESIDENT
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.