Tamil Nadu

Ariyalur

RBT/CC/125/2022

U.Kharunya Lakshmi - Complainant(s)

Versus

The Manager, M/s.TATA Capital Ltd., - Opp.Party(s)

T.Ramachandran

20 Jan 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 22-08-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 20-01-2023  

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  125/2022.

 

            சென்னை, வியாசர்பாடி, இ எச் ரோடு, இலக்கம் 289/98 -ல் வசிக்கும் உதயகுமார் மகள் காருண்யா லட்சுமி                                        -முறையீட்டாளர்

 

1.         சென்னை, கோடம்பாக்கம், எச்டிஎஃப்சி வங்கி அருகில், அம்பேத்கர் சாலை, இலக்கம் 6 ஏ -ல் உள்ள M/S. Tata Financial Services-ன் கிளை மேலாளர்                                

2.         மும்பை, விபி காந்தி மார்க்கில் உள்ள M/S. Tata Financial Services-ன் நிர்வாக இயக்குனர்

 

3.         சென்னை, கிரீம்ஸ் சாலை, இலக்கம் 127 உள்ள பிள்ளை மோட்டார்ஸ் அதன் கிளை மேலாளர் மூலம்                                                - எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திரு.டி. ராமச்சந்திரன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம்,  இரண்டாம் எதிர்தரப்பினர்களுக்கு திரு  எம். அருணாச்சலம், வழக்கறிஞர்  முன்னிலையாகியும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு திரு. எஸ் சந்திரசேகரன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      13-01-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-01, அவரது குறியீடு செய்யப்படாத பட்டியல் ஆவணங்கள் 13, முதலாம்,  இரண்டாம் எதிர் தரப்பினர்களின் பதில் உரை, அவரது சாட்சியம்-01, சான்றாவணம் – 05,  மூன்றாம் எதிர் தரப்பினர்  பதில் உரை, அவரது சாட்சியம்-01, வாதங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட முன் தீர்ப்பு நகல்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக ரூ 50 ஆயிரம்   முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தமக்கு ரூ 50 ஆயிரம்   வழங்க வேண்டும் என்றும் எதிர்  தரப்பினர்கள் கடன் ஒப்பந்த ஆவணம் மற்றும் அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தமது இதர ஆவணங்களையும் தமக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர்கள் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தக்கது என கருதும் இதர பரிகாரங்களையும் தமக்கு அளிக்கவேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாம் கடந்த 16-10-2015 ஆம் தேதியில் மூன்றாம் எதிர் தரப்பினரை  இருசக்கர வாகன வாகனத்தை வாங்குவதற்காக அணுகினேன் என்றும் அவர் மூலமாக தமக்கு முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களிடமிருந்து   இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தமது ஐந்து புகைப்படங்கள், முகவரி ஆதாரம், பின் தேதியிட்ட ஐந்து காசோலைகள், வருமானவரி கணக்கு அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரிடம்   சமர்ப்பித்தேன் என்றும் இதனடிப்படையில் தமக்கு கடன் வழங்கப்பட்டு மூன்றாம் எதிர் தரப்பினரிடமிருந்து இருசக்கர வாகனத்தை வாங்கினேன் என்றும் அந்த வாகனத்தின் பதிவு எண் TN 05 BB 3429 என்றும் ஆனால் கடன் ஆவணம் மற்றும் தான் முதல் தொகையாக செலுத்திய ரூ 30 ஆயிரத்துக்கு ரசீது ஆகியவற்றை முதலாம் எதிர்தரப்பினர் தமக்கு வழங்கவில்லை என்றும் இதன் பின்னர் தொடர்ந்து முறையாக மாதாந்திர தவணைகளை செலுத்தி வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டின் இறுதியில் முதலாம் எதிர் தரப்பினரை அணுகி தாம் மீதமுள்ள கடன் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் இறுதி ரசீது வழங்கி கடன் முடிக்கப்பட்டது என சான்றளிக்க மாறு கோரிய போது தமக்கு பணத்தை பெற மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அவ்வாறு ஆதாரங்களை வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துவிட்டார் என்றும் இந்நிலையில் இரண்டாம் எதிர்தரப்பினர் தாம் ரூ 15,512/-செலுத்தவேண்டும் என்று அறிவிப்பு அனுப்பினார் என்றும் இதற்கு தான் பதில் அளித்து   செலுத்த வேண்டிய தொகை ரூ 12,500/-மட்டும் என தெரிவித்து தாம் கடன் பெற்ற போது அளித்த ஆவணங்களை வழங்குமாறும் அதில் தெரிவித்தேன் என்றும் மேலும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கும் சட்ட அறிவிப்பு அனுப்பினேன் என்றும் மூன்றாம் தரப்பினர் முறையான பதில் அறிவிப்பை தரவில்லை என்றும் இருந்தபோதிலும் இரண்டாம் எதிர்தரப்பினர் கூறிய பணத்தை செலுத்த முதலாம்   எதிர் தரப்பினரை அணுகியபோது கூடுதலாக தொகை கேட்டார் என்றும் இதன் பின்னர்  வரைவோலை மூலமாக ரூ 15,512/- முதலாம் மற்றும் எதிர் தரப்பினர்களின் வழக்கறிஞருக்கு அனுப்பி விட்டேன் என்றும் இவ்வாறு தாம் கடன் தொகை முழுவதையும் செலுத்தி முடித்துவிட்டேன் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்த் தரப்பினர்கள் தமக்கு கடன் ஒப்பந்தத்தில் நகலை அளிக்கவில்லை என்பதும் மாதாந்திரத் தவணைத் தொகை அட்டவணையை அளிக்கவில்லை என்பதும்   செலுத்திய தொகை களுக்கு வழங்கப்பட்ட சில ரசீதுகளில் முதலாம் எதிர் தரப்பினரின் அலுவலக முகவரி மற்றும் தேதி போன்றவை இல்லை என்பதும் ரூ 450 தண்டனை கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பதும் வழக்கறிஞர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பணத்தை செலுத்த சென்ற போது அதனை முதலாம் எதிர்தரப்பினர் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் தாம் முழு தொகையையும் செலுத்திய பின்னரும் தம்மிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை தமக்கு வழங்கவில்லை என்பதும் எதிர் தரப்பினர்கள் செய்துள்ள நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளாகும்.  முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் செய்த இத்தகைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு மூன்றாம் எதிர்தரப்பினர் இடைத்தரகராக இருந்துள்ளதால் அவரும் பொறுப்பு என்றும் இதனால் தமக்கு மன உளைச்சலும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே, முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக ரூ 50 ஆயிரம்   முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தமக்கு ரூ 50 ஆயிரம்   வழங்க வேண்டும் என்றும் எதிர்  தரப்பினர்கள் கடன் ஒப்பந்த ஆவணம் மற்றும் அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட தமது இதர ஆவணங்களையும் தமக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் எதிர்தரப்பினர்கள் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு வழங்க வேண்டும் என்றும் தக்கது என கருதும் இதர பரிகாரங்களையும் தமக்கு அளிக்கவேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

முதலாம்,  இரண்டாம் எதிர் தரப்பினர்களின் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

06.       முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தமது உரையில் தெரிவித்துள்ளார்கள்.

 

 

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி இருசக்கர வாகனத்தை கடன் பெற விண்ணப்பம் சமர்ப்பித்து நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பம் செய்து கடன் பெற்றது உண்மை என்றும் ஆனால் அவர் ஒப்புக் கொண்டபடி மாதாந்திர தவணை தொகையை சரிவர செலுத்தவில்லை என்றும் இத்தகைய சூழ்நிலையில் மொத்த கடன் தொகையையும் மீதமுள்ள கடன் தொகையை செலுத்துமாறு வழக்கறிஞர்   அறிவிப்பு அனுப்பப்பட்டது உண்மை என்றும் மூன்றாம் தரப்பினருக்கும் முறையீட்டாளருக்கும் உள்ள பிரச்சனைகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் முறையீட்டாளர் கடன் தொகை முழுவதையும் செலுத்திய பின்னர் அவருக்கு 24-06-2017 ஆம் தேதியில் கடன் எதுவும் இல்லை என்ற சான்றிதழ் தங்கள் தரப்பிலிருந்து   வழங்கப்பட்டு விட்டது என்றும் இவ்வாறான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அடமான ஆவணம் மற்றும் இதர ஆவணங்களை தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றிய சேவைக் குறைபாடு புரியவில்லை என்றும் முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டியது என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.

 

மூன்றாம் எதிர்தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

08.       முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

09.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி தங்களிடம் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு வந்தார் என்றும் கடன் வசதி செய்து தர முறையீட்டாளர் கேட்டுக் கொண்ட அடிப்படையில் முதலாம் எதிர் தரப்பினரிடம் தாங்கள் அவரை தொடர்புகொள்ள செய்து வைத்த அடிப்படையில் முதலாம் எதிர் தரப்பினரின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விண்ணப்பம் சமர்ப்பித்து ஆவணங்களை சமர்ப்பித்து முன் தொகை ஒன்றை செலுத்தி வைத்து முதலாம் எதிர் தரப்பினரிடம் கடன் பெற்ற நிலையில் வாகனத்திற்கான முழு தொகையையும்   தாங்கள் பெற்ற நிலையில் வாகனத்தை முறையீட்டாளருக்கு தாங்கள் வழங்கி விட்டோம் என்றும் தங்கள் தரப்பில் இந்த கடன் பிரச்சினையில் எவ்வித சேவை குறைபாடு நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றிய சேவை குறைபாடு புரியவில்லை என்றும் புகாரில் தங்கள் மீது எவ்வித பரிகாரத்தையும் கூறவில்லை என்றும்   முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்ய வேண்டியது என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் மூன்றாம் எதிர்தரப்பினர் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்.

 

10.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)  முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர் தரப்பினர்கள்   நியாயமற்ற வர்த்தக நடைமுறை, சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர் தரப்பினர்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறை, சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

 

 

 

எழு வினா எண் – 1

 

11.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களிடம் கடன் பெற்றார் என்பதும் அதன்மூலம் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் இருசக்கர வாகனம் வாங்கினார் என்பதும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகள் ஆகும். இதனால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் அவர்களின் நுகர்வோர் ஆவார்.

 

12.       முறையீட்டாளர் புகாரில் மூன்றாம் எதிர் தரப்பினர் மீது குறிப்பிடத்தக்க எவ்வித பரிகாரங்களையும் கேட்கவில்லை. மேலும், மூன்றாம் தரப்பினர் மீது கூறும் குற்றச்சாட்டுகளை   நிரூபிக்க முறையீட்டாளர் போதிய சாட்சியங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் மூன்றாம் எதிர்தரப்பினர் மீதான புகார் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

13.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களிடம் 2015 ஆகஸ்ட் மாதம் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு கடன் பெற்றுள்ளார்.  இவ்வாறு கடன் பெற்ற போது முன்பணம் தொகையாக தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் ரூ 30,000 செலுத்தினேன் என்றும் அதற்கு ரசீது தரப்படவில்லை என்றும் கடன் பெற்றபோது ஆவணம் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் முறையீட்டாளர் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.  19-04-2017 ஆம் தேதியிட்ட வழக்கறிஞர் அறிவிப்பை முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு அனுப்பி மீதமுள்ள கடன் தொகையை செலுத்துமாறு கூறும் வரை மேற்படி ஆவணங்கள் தமக்கு வழங்கப்பட வில்லை என்று குறைந்தபட்சம் ஒரு கடிதத்தை கூட முறையீட்டாளர் முதலாம் எதிர் தரப்பினருக்கு   சமர்ப்பிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.  மேலும் இங்கு கடன் ஒப்பந்தம் என்பது எதுவும் ஏற்படவில்லை என்பதையும் விண்ணப்பமும் நிபந்தனைகளும்தான் உள்ளன என்பதையும் முதலாம் மற்றும் எதிர்த் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள 3, 4ஆம் சான்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

 

 

14.       முதலாம் எதிர் தரப்பினரிடம் தாம் 4 பின் தேதியிட்ட   காசோலைகளை கடன் பெறும்போது சமர்ப்பித்தேன் என்று முறையீட்டாளர் இரண்டாம் பக்கத்தில் புகாரில் தெரிவித்துள்ள நிலையில் அந்த காசோலையை எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டவை? காசோலை   எவ்வளவு தொகை தரப்பட்டது? பூர்த்தி செய்து தரப்பட்டதா? இல்லையா? என்பது போன்ற எந்த விவரங்களையும் புகாரில் சமர்ப்பிக்கவில்லை.  முதலாம் எதிர் தரப்பினரின் வழக்கறிஞர் அறிவிப்பு பெற்றுக்கொண்ட பின்னர் தாம் மீதமுள்ள கடன் தொகையை செலுத்த முதலாம் எதிர் தரப்பினரை அணுகினேன் என்றும் தொகையை பெற்றுக்கொண்டு கணக்கு முடிக்கப்பட்டு விட்டது என்பதற்கான ஆதாரத்தை தர மறுத்துவிட்டார் என்றும் புகாரில் கூறப்படுவதற்கு எவ்விதமான சாட்சியங்களும் முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை.

 

15.       12,13,14 ஆம் பத்திகளில் சொல்லப்பட்டுள்ள காரணங்கள் அடிப்படையிலும் முறையீட்டாளர் தமது புகாரை நிரூபிக்க போதிய சான்று ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணங்கள் அடிப்படையிலும் முறையீட்டாளரின் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள்   மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

எழு வினா எண் – 2 & 3

 

16.       முதல் எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முறையீட்டாளரின் புகார் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது

 

02.       புகாரில் உள்ள தரப்பினர்கள்அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  20-01-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

 

                                                                                    தலைவர்.    

                       

 

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                       

                                                                                    உறுப்பினர் – II

 

 

 

List of documents filed by the complainant (NOT MARKED):

S.No

Date

Description

Note

01

16-10-2014

Proof of enquiry

xerox

02

04-07-2015

Bookiing form

xerox

03

24-07-2015

Request letter

xerox

04

-

Receipts of payment

xerox

05

30-09-2017

Receipts of penal charges

xerox

06

19-04-2017

Notice of first opposite party

xerox

07

02-05-2017

Reply notice

xerox

08

02-05-2017

Reply notice

xerox

09

02-05-2017

Notice to third opposite party

xerox

10

09-05-2017

Reply notice from third opposite party

xerox

11

20-05-2017

Proof of demand

xerox

12

07-06-2017

Legal notice

xerox

13

24-06-2017

Termination letter

xerox

 

Exibits of the first and second opposite parties:

S.No

Date

Description

Note

B-1

09-11-2017

Statement of account

xerox

B-2

15-07-2021

Power of attorney

xerox

B-3

13-07-2021

Loan application of applicant

xerox

B-4

13-07-2021

Loan application of co applicant

xerox

B-5

18-07-2021

Agreement

xerox

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  இல்லை

1 & 2 ஆம் எதிர்தரப்பினர்கள் சாட்சி:  திரு கலையரசன்

3 ஆம் எதிர்தரப்பினர்  சாட்சி:             திரு கோபால் ராவ்                                  

                                                                                   

                                                                                                தலைவர்.

 

           

                                                                                                உறுப்பினர் – I

 

 

                                                                                                உறுப்பினர் – II

 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.