S.Ilayaraja filed a consumer case on 24 Jan 2017 against The Gerneral Manager (south), BSNL, HOE in the South Chennai Consumer Court. The case no is CC/224/2016 and the judgment uploaded on 24 Feb 2017.
Date of Filing : 28.06.2016
Date of Order : 24.01.2017
kht£l Ef®nth® FiwÔ® k‹w« - br‹id( bj‰F), br‹id-3
முன்னிலை திரு. எஸ்.பாண்டியன், B.Sc., L.L.M. தலைவர்,
திருமதி. கே.அமலா, M.A. L.L.B., உறுப்பினர் 1
திரு. பால்ராஜசேகரன், M.A ,D.Min.PGDHRDI, AIII,BCS உறுப்பினர். 2
சி.சி.224/2016
2017 M« M©L #dtç §fŸ 24-M« ehள் செவ்வாய் கிHik
எஸ். இளையராஜா,
த.பெ. சீனிவாசன்,
எண்.25 பி அர்ஜீன் பிளாட்,
எஸ்.எஸ். பிள்ளை தெரு,
கணபதிபுரம், கிழக்கு தாம்பரம்,
சென்னை 600 059. ..... Kiwp£lhs®
Vs.
பொது மேலாளர் (தெற்கு), BSNL. 40E CIPET Road, TVK, தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. .... எதிர்தரப்பினர்
முறையீட்டாளருக்காக : சீனிவாசன், அதிகாரம் பெற்ற முகவர் எதிர்தரப்பினர் : தோன்றாதரப்பினர்.
|
MizÍiu உறுப்பினர் திருமதி. கே.அமலா, mt®fshš gfu¥g£lJ .
முறையீட்டாளர் Ϫj முறையீட்டை Ef®nth® ghJfh¥ò¢ r£l«, 1986 ÃçÎ-12 ‹ Ñœ jh¡fš brŒJ, எதிர்தரப்பினரின் சேவைக்குறைபாட்டிற்காக ரூ.2,00,000 நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1. முறையீட்டாளர் தாக்கல் செய்திருக்கும் முறையீட்டின் சுருக்கம் பின்வருமாறு :- முறையீட்டாளர் எதிர்தரப்பினராகிய பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைபேசி மற்றும் அகன்ற அலைவரிசையுடன் கூடிய (Broad Band) பில் பிளான் 700 740 / BBG COMBO ULD 845 இணைப்பை பெற்று கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். மழை வெள்ளம் பாதித்த நேரத்தில் சுமார் ஒரு மாதகாலம் தொலைபேசி இணைப்பு வேலைசெய்யவில்லை. இச்சுழ்நிலையில் எதிர்தரப்பினர் 1.11.2015 முதுல் 30.11.2015 வரையிலான பில் தொகையை 30.12.2015க்குள் செலுத்துமாறு டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேற்படி பில் தொகையை 29.12.2015 ஒரு நாள் முன்னதாகவே செலுத்திவிட்டோம் ஆனால் எதிர்தரப்பினர் மேற்படி தொலைபேசி மற்றும் அகன்ற அலைவரிசையுடன் கூடிய பில் பிளான் இணைப்பு துண்டித்துவிட்டனர். 2. எனவே முறையீட்டாளர் பில் தொகை செலுத்தியத்திற்குரிய ரசீதை இணைத்து எதிர்தரப்பினருக்கு கடிதம் அனுப்பினர். அதன்பின் சில நாட்கள் கழித்து மீண்டும் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. இதற்கு இடையில் 1.12.2015 31.12.20015 காலத்திற்கான டிமாண்ட் பில்லையும் அனுப்பி விட்டார்கள். மேற்படி காலத்திற்கான பில்லையும், நவம்பர் மாதத்திற்கான பில்லையும் சேர்த்து கட்டும்படி பில் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான பில் தொகையை கட்டியபிறகும் எந்தவித முன்னறிப்புமின்றி 16.2.2016 அன்று பில் தொகை செலுத்தவில்லை என்று கூறி தொலைபேசி இணைப்பை எதிர்தரப்பினர் துண்டித்துவிட்டார்கள். எனவே எதிர்தரப்பினர் மேற்படி சேவை குறைபாடு காரணமாகவும் மன உளைச்ச்ல் ஏற்படுத்தியதின் காரணமாக புகார்தாரருக்கு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்று கேட்டு புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3. எதிர்தரப்பினருக்கு இம்மன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்ட பின்பும் அதை பெற்றுக் கொண்டு இம்மன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் 23.8.2016ல் தோன்றாதரப்பினராக்கப்பட்டுள்ளார். 4. புகார்தாரர் தரப்பில் நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு நான்கு சான்றவாணங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு அவை முறையே பு.சா.ஆ1 முதல் பு.சா.ஆ7 வரை குறியிடபட்டன. 5. இம்முறையீட்டை பொருத்தமட்டில் எழும் முக்கிய பிரச்சனையாதெனில் :- 1. புகார்தாரர் மனுவில் கோரிய வண்ணம் இழைப்பீடு பெற அருகதை உடையவரா?
2. புகார்தாரருக்கு உள்ள இதர பரிகாரங்கள் என்ன?
6. எழுவினா 1 & 2 : -
புகார்தாரர் இந்த வழக்கை தனது தந்தை சீனிவாசன் அவர்களை தனது அதிகாரம் பெற்ற முகவராக நியமித்து சான்றாவணம் 1ன் படி புகார்தாரர் சார்பாக அவரது தந்தை சீனிவாசன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். 7. இந்த வழக்கின்படி புகார்தாரர் எதிர்தரப்பினரிடம் தொலைபேசி இணைப்பு மற்றும் அகலகற்றை அலைவரிசையுடன் கூடிய இணைப்பை பெற்று கடந்த 10 வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். பில் கட்டணத்தையும் மாதந்தோறும் அதில் குறிப்பிடும் தேதிக்குள் செலுத்திவருகிறார். ஆனால் புகார்தாரரின் மனகுறை யாதெனில் 1.11.2015 முதல் 30.11.2015 வரையிலான பில்தொகையை 30.12.2015க்குள் செலுத்த குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் புகார்தாரர் 29.12.2015 அன்றே செலுத்திவிட்டார் என்றும் தொலைபேசி மூலம் எதிர்தரப்பினர் தொடர்பு கொண்டு கேட்டபோதும் பில் தொகையை செலுத்திவிட்டதாக கூறியதாகவும், ஆனாலும் தொகை செலுத்தவில்லை என இணைப்பை துண்டித்துவிட்டதாகவும், எனவே 27.1.2016 அன்று எதிர்தரப்பினருக்கு கடிதம் மூலம் இதனை தெரிவித்ததாகவும் அதனை பெற்றுக்கொண்ட எதிர்தரப்பினர் சில நாட்களுக்கு பிறகே இணைப்பு கொடுத்தார்கள் என்றும் மேலும் 1.12.2015 முதல் 31.12.2015 வரையிலான பில்லில் நவம்பர் மாதத்திற்கு செலுத்திய தொகையும் சேர்த்து செலுத்தும்படி குறிப்பிட்டிருந்தார்கள் என்றும், மேலும் அந்த பில்லுக்குரிய தொகையை 5.2.2016 அன்று கட்டியபிறகும் மீண்டும் 16.2.2016 அன்று பில் தொகையை செலுத்தவில்லை என இணைப்பை துண்டித்துவிட்டார்கள். பலவாரங்களாக இணைப்பு கொடுக்கவில்லை, பொதுமேலாளருக்கு கடிதம் எழுதியபிறகு இணைப்பு கொடுத்தார்கள். ஒவ்வொரு மாதமும் தவறாமல் பில் அனுப்பி கொண்டு இருக்கிறார்கள். எனவே எதிர்தரப்பினர் சேவைகுறைபாடு செய்துள்ளதாகவும் அதனால் தன் குடும்பதினருக்கு மிகவும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதால் ரூ.2,00,000. இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 8. முறையீட்டாளரின் கூற்றுபடி 1.11.2015 முதல் 31.11.2015 வரை பில் தொகையை அவர் 29.12.2015 அன்றே கட்டிய பிறகும் இணைப்பை துண்டித்துவிட்டார்கள் என்பதற்கு ஆதாரமாக பு.சா.ஆ3 சமர்ப்பித்துள்ளார். மேலும் அந்த புகாரை எதிர்தரப்பினர் பெற்று கொண்டபின் இணைப்பு கொடுத்தார்கள் என்பதும் தெளிவாக தெரியவருகின்றது. மேலும் பு.சா.ஆ6ன்படி புகார்தாரர் கூற்றுபடி எதிர்தரப்பினர் தாமதக் கட்டணம் கோரியிருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 9. ஆனால் புகார்தாரர் கூறியபடி 16.2.2016 அன்று இணைப்பு துண்டிக்கப்பட்டு புகார் கொடுத்தபின் மீண்டும் எதிர்தரப்பினர் இணைப்பு கொடுத்தார்கள் என்பதற்கு புகார்தாரர் எந்த சான்றாவாணமும் இந்த மன்றத்தில் சமர்பிக்கவில்லை. மேலும் நவம்பர் 2015 மாதத்திற்காக பில் தொகையை டிசம்பர் 2015லும் எதிர்தரப்பினர் கட்டும்படி கோரியிருந்தனர் என்பது ஏற்புடையதல்ல ஏனெனில் பு.சா.ஆ6ல் டிசம்பர் 2015-க்குண்டாக மாத வாடகை தொகையைதான் கோரியிருந்தார்கள் என்று தெரிகிறது. 10. ஆயினும் புகார்தாரர் நவம்பர் 2015க்குண்டான தொலைபேசி கட்டணத்தை உரிய நேரத்தில் கட்டியபிறகும் இணைப்பை துண்டித்தார்கள் என்பதும், தேவையில்லாமல் பு.சா.ஆ6 ன்படி தாமத கட்டணம் கோரியிருந்தார்கள் என்பதும் தெள்ளதெளிவாக தெரிகிறது எனவே இதுபொருத்து எதிர்தரப்பினர் சேவைகுறைபாடு ஏற்படுத்தி புகார்தாரருக்கு மனஉளைச்சலும் ஏற்படுத்தியுள்ளார்கள் என இம்மன்றம் கருதி வினா எண்1 மற்றும் 2க்கு விடையளிக்கப்படுகிறது. முடிவாக இம்முறையீடு பகுதியாக அனுமதிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக எதிர் முறையீட்டாளர் முறையீட்டாளருக்கு சேவைகுறை பாட்டின் மூலம் ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் துன்பங்களுக்கு இழப்பீடாக ரூ.3000./ (ரூபாய் மூவாயிரம் மட்டும்) வழங்க வேண்டும் என்றும் மற்றும் செலவு தொகை ரூ.2,000./ (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) வழங்க வேண்டுமென உத்திரவிடப்படுகிறது.
மேற்படி தொகை தீப்புரை நகல் வழங்க கிடைக்கப்பட்ட ஆறு வார காலத்திற்குள் வழங்கவேண்டுமென்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் 9% வட்டி தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டுமென உத்திரவிடப்படுகிறது.
எம்மொழிதலுக்கு தட்டச்சு செய்யப்பட்டு எம்மால் திருத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு ஐனவரி திங்கள் 24ம் நாளாகிய இன்று அவை அறிய பகரப்படுகிறது.
உறுப்பினர்-1 உறுப்பினர்-2 தலைவர்
புகார்தாரர் தரப்பு சான்றாவணம். பு.சா.ஆ1 ஒப்பந்த நகல் பு.சா.ஆ2 6.12.2015 பில்லின் நகல். பு.சா.ஆ3 27.1.2016 புகார்தாரர் எதிர்தரப்பினருக்கு எழுதிய கடிதம். பு.சா.ஆ4 அஞ்சல ரசீதின் நகல். பு.சா.ஆ5 அஞ்சல ஒப்புகை அட்டை நகல். பு.சா.ஆ6 பில்லின் நகல். பு.சா.ஆ7 தொலைபேசி கட்டண ரசீதின் நகல். |
உறுப்பினர்-1 உறுப்பினர்-2 தலைவர்
|
|
|
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.