Tamil Nadu

Ariyalur

RBT/CC/54/2022

R.Krishna Kumar - Complainant(s)

Versus

The Branch Head, Make my Trip India Pvt Ltd - Opp.Party(s)

Party in Person

02 Dec 2022

ORDER

Heading1
Heading2
 
Complaint Case No. RBT/CC/54/2022
 
1. R.Krishna Kumar
-
...........Complainant(s)
Versus
1. The Branch Head, Make my Trip India Pvt Ltd
-
............Opp.Party(s)
 
BEFORE: 
 HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D., PRESIDENT
 
PRESENT:
 
Dated : 02 Dec 2022
Final Order / Judgement

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 09-03-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 02-12-2022  

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம்,

அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  54/2022.

 

            சென்னை, வெங்கடாஜலபதி முதல் சந்து, இலக்கம் 17 எ- ல் வசிக்கும் ராஜ்குமார் மகன் கிருஷ்ணகுமார்                                        -முறையீட்டாளர்

 

1.         சென்னை, காதர் நவாஸ்கான் சாலை, இலக்கம் 10-ல் உள்ள கிளை தலைவர், மேக் மை ட்ரிப் பிரைவேட் லிமிடெட்,

 

2.         சென்னை, மீனம்பாக்கம், காமராஜர் உள்நாட்டு விமான நிலையம், முதலாவது முனைய புதிய கட்டிடத்தில் அலுவலகம் வைத்துள்ள கிளை தலைவர், இண்டிகோ ஏர்லைன்ஸ்            

 

3.         ஹரியானா, குர்கான், உத்தியோக் விகார், பகுதி-1, இலக்கம் 243 -ல் உள்ள தலைவர், மேக் மை ட்ரிப் பிரைவேட் லிமிடெட்          

 

4.         ஹரியானா, குர்கான், மெஹ்ராலி குர்கான்            சாலை, குளோபல் பிசினஸ் பார்க். டவர் டி, ஐந்தாவது மாடியில் உள்ள வாடிக்கையாளர் தொடர்பு தலைவர், இன்டர் குலோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ)              

 

                                                                                                - எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு அவரே முன்னிலையாகியும் முதலாம், மூன்றாம் எதிர் தரப்பினர்கள் மீது ஒருதலைப்பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு தோன்றா தரப்பினராக முடிவு செய்யப்பட்டும் இரண்டாம், நான்காம் எதிர் தரப்பினர்களுக்கு திரு பி. வி. பிரதி, வழக்கறிஞர் முன்னிலையாகியும்  இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      14-11-2022 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியமாக நிரூபண வாக்குமூலம், முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள் – 11, இரண்டாம், நான்காம் எதிர் தரப்பினரின் பதிலுரை, சாட்சியம், சான்றாவணங்கள் – 05  மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு திரும்ப கொடுக்கவேண்டிய தொகை ரூ 19,288/- ஐ எதிர் தரப்பினர்கள் தமக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ரூ 95,000/- ஐ எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

 

 

 

 

 

  • தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாம் இரண்டாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினரின் விமானத்தில் பயணிக்க முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் நிறுவனம் மூலமாக  கடந்த 03 -11 -2016 அன்று தமது வங்கியின் சேமிப்பு கணக்கின் மூலம் ரூ 55,808/- செலுத்தி முன்பதிவு செய்தேன் என்றும் இந்த முன்பதிவு திட்டப்படி 24 -12 -2016 அன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்திலும் 03-11-2011 அன்று உதயப்பூர் இருந்து மும்பை வரும் விமானத்தில் மும்பை வந்தடைந்து மீண்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது என்றும் தாம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும் தான் பயணிக்க திட்டமிட்டிருந்த காலம் என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை காலம் என்றும் அதே காலகட்டத்தில் தமது குழந்தைகளுக்கும் அவர்களது கல்வி நிறுவனத்தில் விடுமுறை காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு விடுமுறை சுற்றுலா செல்ல திட்டமிட்டு டெல்லியிலிருந்து தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் மூலம் ஏற்பாடுகளையும் செய்து இருந்ததாகவும் ஆனால் திடீரென்று ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக தமது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் 20 -12 -2016 அன்று தமது முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்யுமாறு முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன் என்றும் அதனை ஏற்று உடனடியாக ரூ. 1012/- அவர்கள் தமக்கு அனுப்பி வைத்தார்கள் என்றும் 19 -12 -2016 அன்று முதலாம் எதிர்த் தரப்பினர் தமது 20 -12 -2016 ஆம் தேதிய வழக்கறிஞர் அறிவிப்பை பெற்ற பின்பு எனது சேமிப்புக் கணக்கில் 21 -12 -2016 ஆம் தேதி செலுத்தி வைத்தார்கள் என்றும் இதன் பின்பு தாம் 11-01-2017 தேதிய வழக்கறிஞர் அறிவிப்பு ஒன்றை அனைத்து எதிர் தரப்பினர்களுக்கும் அனுப்பி செலுத்திய தொகை ரூ 55,808/-ல் மீதமுள்ள தொகை ரூ 19,288/- ஐ திருப்பி வழங்குமாறு கேட்டேன் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

 

04.       முன்பதிவை ரத்து செய்த நிலையில் இரண்டாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பு தரப்பினர்கள் எரிபொருள் கட்டணம் ரூ 400 ஒவ்வொரு பயணிக்கும் பயண சேவை கட்டணம் ரூ 150 ஒவ்வொரு பயணிக்கும் உபயோகிப்பாளர் மேம்பாட்டு கட்டணம் ரூ 668 ஒவ்வொரு பயணிக்கும் சேவைக் கட்டணம் ரூ 314 ஒவ்வொரு பயணிக்கும் வசூலிப்பது என்பதும் எவ்வித கணக்கீடும் இல்லாமல் அதிக பணத்தை பிடித்தம் செய்து கொண்டு முன்பதிவு ரத்து செய்யும்போது பணத்தை திருப்பி வழங்குவதும் தவறான ஒன்று என்றும் இவ்வாறு எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இது குறித்து வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே, தமக்கு திரும்ப கொடுக்கவேண்டிய தொகை ரூ 19,288/- ஐ எதிர்த் தரப்பினர்கள் தமக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் அவர்களின் செய்கையால் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு ரூ 95,000/- ஐ எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இன்னும் பிற பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இரண்டாம், நான்காம் எதிர்தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

06.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் இரண்டாம், நான்காம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.

 

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல 24 -12 -2016 அன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்திலும் 03-11-2011 அன்று உதயப்பூர் இருந்து மும்பை வரும் விமானத்தில் மும்பை வந்தடைந்து மீண்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் தங்கள் நிறுவன விமானத்தில் பயணிக்க முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் மூலமாக முன் பதிவு செய்திருந்தது உண்மை என்றும் முறையீட்டாளருக்கும் முதலாம் மற்றும் மூன்றாம் தரப்பினர்களுக்கும் இதில் பரிவர்த்தனை உண்டு என்றும் தங்களுக்கும் அவருக்கும் எவ்வித நேரடி பரிவர்த்தனையும் கிடையாது என்றும் இரண்டாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள்.  மேலும் தாங்கள் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் மேற்கண்ட முன்பதிவு பயணச் சீட்டுகளை ரத்து செய்யுமாறு கேட்டதில் உடனடியாக ரத்து செய்து சரியாக கணக்கீடு செய்து ரூ 36,008/-ஐ முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு அனுப்பிவைத்த விட்டோம் என்றும் முன்பதிவு ரத்து மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையையும் முறையீட்டாளர் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர தங்களிடம் அல்ல என்றும் தாங்கள் இந்த வழக்கில் தரப்பினராக சேர்க்கப்பட்டது தவறு என்றும் தாங்கள் தங்களது விமானங்களில் பயணிக்க உள்ள நிபந்தனைகளின்படியும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரக விதிகளின்படியும் முன்பதிவு ரத்து செய்யும்போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நேரடியாக பணத்தை உரிய பிடித்ததை செய்து கொண்டு வழங்குகிறோம் என்றும் வாடிக்கையாளர் முகவர் மூலமாக முன்பதிவு செய்திருந்தால் முகவரிடம் பணத்தை வழங்குகிறோம் என்றும் இந்த பிரச்சனையில் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர்கள் மூலமாக பணம் செலுத்தப்பட்டு முன் பதிவு செய்யப்பட்டதால் உரிய பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை வழங்கி விட்டோம் என்றும் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை என்றும் முறையீட்டாளர் அவருக்கும் அவரது மனைவிக்கும்  இரண்டு குழந்தைகளுக்கும் பயணச்சீட்டை முன்பதிவு செய்த நிலையில் அவர் மட்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார் இந்நிலையில் வழக்கு முழுமையான ஒன்று அல்ல என்றும் தங்களது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளதால் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் இரண்டாம், நான்காம் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

08.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்கள்   சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

11.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல 24 -12 -2016 அன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்திலும் 03-11-2011 அன்று உதயப்பூர் இருந்து மும்பை வரும் விமானத்தில் மும்பை வந்தடைந்து மீண்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் தங்கள் நிறுவன விமானத்தில் பயணிக்க முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் மூலமாக முன் பதிவு செய்திருந்தது உண்மை என்று இரண்டாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

 

 

12.       முறையீட்டாளருக்கும் முதலாம் மற்றும் மூன்றாம் தரப்பினர்களுக்கும் இதில் பரிவர்த்தனை உண்டு என்றும் தங்களுக்கும் அவருக்கும் எவ்வித நேரடி பரிவர்த்தனையும் கிடையாது என்றும் இரண்டாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளதும் மேற்படி எதிர் தரப்பினர்களின் சான்று ஆவணங்களில் உள்ள சங்கதிகளும் ஏற்புடையதாக இந்த ஆணையம் கருதுகிறது.

 

13.       மேற்படி முன் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை ரத்து செய்யுமாறு 20-12-2016 ஆம் தேதியன்று முறையீட்டாளர் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களின் இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் சென்னையிலிருந்து புதுதில்லி செல்ல முன்பதிவு செய்யப்பட்ட நான்கு நபர்களின் முன்பதிவு தொகை ரூ 27,916/-ல் ரூ 25,904/- கழித்து க்கொண்டு ரூ 1,012/- மட்டும் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு செலுத்துவதாக 20-12-2016 ஆம் தேதி அன்று தகவல் அளித்து அதனை செலுத்தியுள்ளார் என்பதையும் இதைப்போலவே உதயப்பூர் இருந்து ஊரிலிருந்து மும்பை வருவதற்கு மும்பையில் இருந்து சென்னை வருவதற்கும் முன்பு முன்பதிவு செய்யப்பட்ட நான்கு நபர்களின் முன்பதிவு தொகையில் எதுவும் செலுத்த இயலாது என்பதையும் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு தெரிவித்துள்ளார்கள் என்ற விவரங்கள் முறையீட்டாளர் தரப்பு சான்றாணங்கள் 10 மற்றும் 11 ஆகியவை மூலம் அறிய முடிகிறது.  20-12-2021 நாள் ஆம் தேதியில் தாங்கள் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் மேற்படி பயணச்சீட்டுகளை ரத்து செய்ய கேட்டபோது உடனடியாக ரத்து செய்து ரூ 36,008/-மட்டும் அவர்களுக்கு அன்றைய நாளில் திருப்பி வழங்கி விட்டோம் என்று இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இரண்டாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் ரூ 36,008/- திருப்பி வழங்கிய நிலையில் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு ரூ 1,012/- மட்டுமே திரும்ப வழங்கபடும் என தெரிவித்து அந்த தொகையை மட்டுமே வழங்கியுள்ளார்கள் என்பதை சாட்சியும் மற்றும் ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

14.       முறையீட்டாளர் 19-12-2016 அன்று எதிர் தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு தனக்கு சேர வேண்டிய தொகையை கேட்டு அனுப்பிய பின்னரே முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் ரூ 17,716/- மற்றும் ரூ 17,792/- ஆகியவற்றை 21-12-2021 ஆம் தேதியில் வழங்கியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.  மேற்படி முன் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை ரத்து செய்யுமாறு 20-12-2016 ஆம் தேதியன்று முறையீட்டாளர் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்களின் இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் சென்னையிலிருந்து புதுதில்லி செல்ல முன்பதிவு செய்யப்பட்ட நான்கு நபர்களின் முன்பதிவு தொகை ரூ 27,916/-ல் ரூ 25,904/- கழித்துக்கொண்டு ரூ 1,012/- மட்டும் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு செலுத்துவதாக தகவல் வழங்கியுள்ளது தவறானதாகும்.  இதன் மூலம் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 2

 

15.       முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் செயல்பாடுகளால் ஏற்பட்ட சிரமங்கள் அனைத்திற்கும் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்க கடமைப்பட்டவர் ஆவார். பணத்தின் மூலம் இதனை சரி செய்துவிடமுடியாது என்றாலும் கூட ரூ 50,000/- இழப்பீடு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் இந்த தொகைக்கு 02-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. 

 

 

 

எழு வினா எண் – 3

 

16.       இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று கருதவில்லை. மேலும் வழக்கின் செலவு தொகைகளை அவரவரே ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரின் செயல்பாடுகளால் ஏற்பட்ட சிரமங்கள் அனைத்திற்கும் முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு ரூ 50,000/- இழப்பீடு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த தொகைக்கு 02-12-2022 தேதி முதல் தொகை செலுத்தப்படும் தேதி வரை ரூ 100க்கு ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.

 

02.          இரண்டாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் மீதான புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது

 

03.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை. மேலும் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும்

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  02-12-2022   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                    தலைவர்.    

                       

 

                                                                                    உறுப்பினர் – I

 

 

                                                                                    உறுப்பினர்-II.

 

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

19-12-2016

எதிர் தரப்பினருக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

20-12-2016

முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு முன்பதிவை ரத்து செய்ய கொடுத்த வேண்டுகோள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

20-12-2016

முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர் கொடுத்த முன்பதிவு ரத்து விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

-

முதலாம் மற்றும் மூன்றாம் எதிர்த் தரப்பினர் கொடுத்த பயணக் கட்டண விவரங்கள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

-

முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு முன்பதிவை ரத்து உறுதி மற்றும் பணம் திருப்பி அனுப்பிய விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

11-01-2017

எதிர் தரப்பினருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது சட்ட அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

 

அஞ்சலக ஆதரவு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

 

விமான கட்டண விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

 

விமான கட்டண விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

 

பணம் திருப்பி வழங்கப்பட்ட விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

 

பணம் திருப்பி வழங்கப்பட்ட விவரம்

ஜெராக்ஸ்

 

 

 

 

இரண்டாம், நான்காம் எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

எம.சா.ஆ.1

-

இரண்டாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினரின் பதிலுரை

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.2

-

நிறுவன பதிவு சான்றிதழ்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.3

-

இன்டிகோ விமானத்தில் பயணிப்பதற்கான நிபந்தனைகள்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.4

-

ரத்து வேண்டுகோள் குறித்த புகைப்படம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.5

-

முன்பதிவு தொகுப்புரை

ஜெராக்ஸ்

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு கிருஷ்ணகுமார்

இரண்டாம், நான்காம் எதிர்தரப்பினர்கள் சாட்சி:  திரு ராகுல் குமார்

                                                                                   

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

 
 
[HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D.,]
PRESIDENT
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.