Tamil Nadu

North Chennai

CC/85/2016

S.Jayaraman - Complainant(s)

Versus

Southern Railway - Opp.Party(s)

Party In Person

31 Aug 2017

ORDER

 

                                     வழக்கு தாக்கல் செய்த தேதி               :    04.05.2016

   ஆணையுரை வழங்கப்பட்ட தேதி:   31.08.2017

 

     மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்  சென்னை( வடக்கு), சென்னை-3

 

              முன்னிலை . திரு. கு.ஜெயபாலன், பி.எஸ்,சி., பி.எல்.,      ::     தலைவர்

                திரு.உயிர்ஒளிகண்ணன், பி,பி,ஏ.,பி.எல்.,                     ::      உறுப்பினர்-1

                                               

  நுகர்வோர் புகார் எண். 85/2016

            2017 ஆம் ஆண்டு  Mf°L திங்கள் 31 ஆம் நாள் வியாழக்கிழமை

 

 

S.Jayaraman Age – 68,

S/o Shaunmuga Nadar,

6/125, 3rd Veethi, P.M. Sami Colony,

R.S.Puram, Kovai 641 002.

                                                                                    ….. Complainant

 

..Vs..

  1. The Manager,

Public Grievances Cell,

Southern Railway, Central Railway Station,

Park Town, Chennai – 600 003.

 

2. The Manager,

Passenger Care Centre,

Southern Railway,

Central Railway Station,

Park Town Chennai – 600 003.

 

3.Senior Divisional Commercial Manager,

Southern Railway,

Central Railway Station,

Park Town, Chennai – 600 003.

 

 

                                                                                                                         .....Opposite Parties

   

 

 

    

 

புகார்  நாள்                                                  :  03.06.2016

புகார்தாரருக்காக                                       :  நேரடியாக

 

 எதிர்தரப்பினர்களுக்காக                                         :    கே, முத்தமில் ராஜா                                        

 

 

 

          இந்த முறையீடு 07.04.2014 அன்று  இம்மன்றத்தில் இறுதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, புகார்தாரருக்காக அவரே முன்னிலையாகவும், எதிர்தரப்பினர்களுக்காக கே,முத்தமில் ராஜா வழக்கறிஞர்  முன்னிலையாகியும்  இதுநாள் வரை விசாரணையில் இருந்து, வழக்கு   இருதரப்பு  வாதுரைகளைக் கேட்டும், ஆவணங்களைப் பரிசீலனை செய்தும்இன்று  இம்  மன்றம் வழங்கும்

ஆணையுரை

தலைவர் திரு.கு.ஜெயபாலன், அவர்களால் பகரப்பட்டது .

 

          இந்த மனு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 பிரிவு-12 கீழ் தாக்கல் செய்து, எதிர்மனுதாரர்களின் சேவைக் குறைபாட்டிற்காக நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

1. புகார்தாரர்  தாக்கல் செய்திருக்கும் புகாரின் சுருக்கம் பின்வருமாறு:-

 

               

                புகார்தாரர் ஜெயராமன்  சென்னையிலிருந்து கோவை Intercity Super Fast  ரயிலில் பல முறை பயணம் செய்து உள்ளார், அவ்வாறு பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் அவருக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன, பயணத்தின் போது  பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்கின்றனர், பிச்சை எடுப்பது சட்டபடி குற்றம் ஆகும், தரமில்லாத பிளாஸ்டிக் பொருள்களை எதிர்மனுதாரர்களிடம் உரிமம் பெறாமல் விற்கின்றனர், முன் பதிவு  டிக்கட் பெற்று பயணம் செய்த போதிலும் மேற்படி தொல்லைகளால் ஓய்வு எடுக்வோ, கண்ணயர்ந்து தூங்கவோ முடியவில்லை, சீசன் டிக்கட் பெற்றவர்கள்முன்பதிவு  செய்யாத பெட்டிகளிலே பயணம் செய்ய வேண்டும், ஆனால் முன்பதிவு ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளுக்கு  இடையூறு செய்கிறார்கள், மேற்படி சம்பவங்கள் சம்மந்தமாக 12,02,2010 மற்றும் 18,09,2015 தேதிகளில்  எதிர் மனுதாரர்களிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அவ்வாறு நடவடிக்கை எடுக்காததால் மேற்சொன்ன செய்கைகளால் எதிர்மனுதாரர்கள் அனைவரும் புகார்தாரருக்கு சேவை குறைபாடு செய்துள்ளனர், ஆகவே புகார்தாரர் இவ்வழக்கை தாக்கல் செய்து மேற்படி வழக்கு பதிவு மற்றும் போக்குவரத்து செலவிற்காக ரூபாய் 10,000./மும் மற்றும் சேவை குறைபாட்டிற்காகவும் மனஉளைச்சல் ஏற்படுத்திற்காக ரூபாய் 1,00,000./ இழப்பீட்டினை எதிர்மனுதாரர்கள் கொடுக்க  உத்தரவிட வேண்டும்,          

2.எதிர்புகார்தாரர் தாக்கல் செய்துள்ள எதிருரையின் சுருக்கம்:- 

        ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தன்பேரில் நடப்பாண்டில் 6,200 நபர்கள் அனுமதியில்லாமல் ரயிலிலும் மற்றும் ரயில் நிலையங்களிலும் விற்பனை செய்ததற்காவும் மற்றும் 2,700 பிச்சைகாரர்களை ரயில்களிருந்து அகற்றியும் மேலும் 3,100. பிச்சைகாரர்களை ரயில் நிலையங்களிலிருந்தும் 150 பிச்சை காரர்களை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தும் மற்றும் 1050 திருநங்கையர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்,

       3. புகார்தாரர் மனுவில் கூறிவுள்ள விவரங்கள் ஆதாரமற்றவை, பிச்சைகாரர்களும்  அனுமதியில்லாத விற்பனையாளர்களும் முன்பதிவு பெட்டிகளில் பயணத்தித்தால் அவர்களை TTE உடனடியாக அந்த பெட்டியிலிருந்து வெளியேற்றிவிடுவார், புகார்தாரர் குறிப்பிட்ட தேதியிட்டு சம்பவத்தை கூறாமல் பொதுவாகவே கூறியுள்ளார், முன்பதிவு பெட்டிகளில் அனுமதியில்லாமல் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்ததும், பிச்சை எடுத்ததும், அனுமதியில்லாமல் விற்பனை செய்வதும், தவறு ஆகும், புகார்தாரர்  இவ்வழக்கினை பணபலன் வேண்டி தாக்கல் செய்துள்ளார், பொதுவாக குறிப்பிட்ட தேதி சம்பவமின்றி தாக்கல் செய்துள்ள இவ்வழக்கு நிலைக்கத்தக்கதல்ல, தள்ளுபடி செய்யதக்கது ஆகும்,

4, இவ்வழக்கில் தீர்மாளிக்க வேண்டிய ஏழு வினாக்கள்,

1.  எதிர்மனுதாரர்கள் 1 முதல் 3 புகார்தாரருக்கு சேவை குறைபாடு

   செய்துள்ளனரா?

 

2. புகார்தாரருக்கு இவ்வழக்கில் கிடைக்க கூடிய  பரிகாரங்கள்  என்ன?

5. எழுவினா  எண்.1   :- 

                மனுதாரர் வழக்கு என்பது அவர் பலமுறை சென்னையிலிருந்து கோவைக்கு ரயில் பயணம் செய்தார்  என்றும் அவ்வாறு பயணம் செய்ததற்காக 6 டிக்கட்டுகள் ம,சா,ஆ,7  தாக்கல் செய்துள்ளார் என்றும், அவ்வாறு பயணம் செய்தபோது ஏற்பட்ட இடையூறுகளால் ஒவ்வொறு முறையும் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், மேலும் முன்பதிவுசெய்த பெட்டிகளில் பிச்சை எடுப்பது சட்டபடி குற்றம் என்ற போதிலும் சிலர் பிச்சை எடுத்தனர் என்றும், அனுமதியில்லாமல் தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்களை ஓடும் ரயிலில் விற்று முன்பதிவு செய்த பயணிகள்  ஓய்வு எடுத்துக் கொள்ளவோ, சிறிது கண்யர்ந்து துங்கவோ முடியாத வகையில்  சிரமத்திற்குள்ளாயினர் என்றும்,  அதனால் அத்தகைய செயல்களை  நிறுத்த நடிவடிக்கை எடுக்காது எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளனர் என்பதாகும்,

       6. எதிர்மனுதாரர் தரப்பில் தொடர்ந்து நிர்வாகம் அனுமதியில்லாமல் ஓடும் ரயிலோ (அ) நிலையங்களிலோ பிச்சை எடுப்பவர்கள், அனுமதியில்லாமல் விற்பனை செய்பவர்கள், மற்றும் தொல்லை கொடுக்கும் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து நடிவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் மேலும் மனுதாரர் எந்த தேதியில் அவருக்கு சேவை குறைபாடு ஆனது என குறிப்பிட்டு கூறவில்லை என்றும் ஆகவே இவ்வழக்கு தள்ளுபடி செய்ய தக்கது என எதிர்வாதம் செய்யப்பட்டது,

       7. மனுவில் எந்த தேதியில் பயணம் செய்தபோது மனுதாரருக்கு சேவை குறைபாடு ஏற்பட்டது என குறிப்பிட்டு கூறவில்லை, பொதுவாக பல தேதிகளில் அவர் பயணம் செய்த போது சேவை குறைபாடு ஆனது என்பது ஏற்கத்தக்கதல்ல, மனுதாரர் எழுதிய புகார்களும் அவர்களுக்கு நிர்வாகம் கொடுத்த பதிலும் ம,சா,ஆ/1 முதல் 4 ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மா,சா,/9 முதல் 15 புகைப்படங்கள் பலர் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஆனால் அந்த புகைப்படங்கள் அவரின் எந்த தேதி பயணத்தின் போது எடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லாததால் அந்த புகைப்படங்கள் நிராகரிக்கப்படுகின்றன,

       8. எதிர் உரையில் நடப்பாண்டில் எதிர் மனுதாரர்கள் நிர்வாகத்தின் கீழ் 6.200 நபர்கள் மீது அனுமதியில்லாமல் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் விற்பனை செய்ததற்காக நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் 2,700 பிச்சைகாரர்கள் ரயிலிருந்தும் மற்றும் 3,100 பிச்சைகாரர்கள் ரயில் நிலையங்களிருந்து அகற்றப்பட்டு 150 பிச்சைகாரர்கள் மறுவாழ்வு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர், 1050 திருநங்கைகள் மீது ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

       9. மனுதாரர் மேற்சொன்னபடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதிலிருந்தே, எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளார் என்பது புலானாகிறது என்று வாதிட்டார்,

       10. நடப்பாண்டில் மேற்சொன்ன நடவடிக்கை அனைத்தும் முன்பதிவு செய்த பயணிகள் இடையூறுயில்லாமல் பயணம் செய்ய எடுத்த நடவடிக்கைகள் ஆகும், அத்தகைய நடவடிக்கைகளையும் மீறி பயணிகள் பயணத்தின்போது சில இடையூறுகள் ஏற்படியிருக்கலாம், அதனை மட்டும் வைத்து எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்தனர் என எடுத்துக்கொள்ள முடியாது, முறையான நடவடிக்கை எடுத்தன் காரணமாக மேலே சொன்னபடி ஆயிரக்கணக்கானோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர், எதிர் மனுதாரர்கள் எடுத்த நடவடிக்கைளை மீறி ஓரிரு இடங்களில் பயணித்தின்போது சில இடையூறுகள் ஏற்பட்டதை மட்டும் வைத்து எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்தனர் என எடுத்துக்கொள்ள முடியாது,  எதிர்மனுதாரர்கள் முறையான நடிவடிக்கையை மேலே சொன்னபடி ஆயிரக்கணக்னோர் மீது எடுத்துள்ளதாலும், மேலும் மனுதாரர் எந்த தேதியில் பணயம் செய்த போது சேவை குறைபாடானது என குறிப்பிட்ட மனுவில் கூறாததாலும், மனுதாரருக்கு எதிர் மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்தனர் என்பதை நிருபிக்கவில்லை  என்று தீர்மானிக்கிறோம்,

11, எழுவினா  என்:- 2

       மனுதாரர் எதிர் மனுதாரர்கள்  மீது சேவை குறைபாட்டினை நிருபிக்கவில்லையென முடிவு செய்துள்ளதால் இந்தமனு நிலைக்க தக்கதுதல்ல என்றும் தள்ளுபடி செய்ய தக்கதென முடிவு செய்கிறோம்,

 

                இறுதியாக இம்மனு செலவுத் தொகையின்றி தள்ளுபடி செய்யப்படுகிறது.

எம்மொழிதலுக்கு தட்டச்சு செய்யப்பட்டு எம்மால் திருத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 31ம் நாளாகிய இன்று அவை அறிய பகரப்படுகிறது.

                     

 

  உறுப்பினர்-1                                                          தலைவர்

 

 

 

 

 

 

 

 

 

புகார்தாரர் தரப்பு ஆவணப்பட்டியல் :

 பு.சா.ஆ.1 தேதி 12.02.2010          முதன்மை கண்காணிப்பு அதிகாரிக்கு

                                     அனுப்பட்ட படித  நகல்

 

 

 

 

 

பு.சா.ஆ.2  தேதி 25.03.2010          Public Grievance Cellகடித நகல்

பு,சா,ஆ 3 தேதி 18.09.2015         Passenger Care Centre-க்கு அனுப்பப்பட்ட

                                     கடித நகல்

 

பு,சா,ஆ,4 தேதி 04.08.2014         Public Grievances cell  /க்கு அனுப்பியுள்ள

                                    கடித நகல்

 

பு,சா,ஆ,5 தேதி 31.10.2015        ரயிலில் வேர்க்கடலை விற்ற எம்,எல்,ஏ

                                    தினமலர் செய்தி நகல்

 

பு,சா,ஆ,6 தேதி 23.02.2016        ரயில்களில் பணம் வசூலிக்கும்

                                   திருநங்கைகள் மீது புகார்  தி இந்து

                                   செய்தி நகல்

பு,சா,ஆ,7தேதி 12.11.2015

       To  05.04.2016           7-Intercity Super Fast Train Ticket Copy 

 

பு,சா,ஆ,8தேதி 12.11.2015         Intercity Super Fast  ரயில் போட்டோ

 

பு,சா,ஆ. 9 தேதி 12.11.2015       தோளில் பையுடன் வியாபாரி போட்டோ

 

பு,சா,ஆ,10தேதி 12.11.2015        பாசிமணி விற்பனை செய்யும்

                                   பெண்போட்டோ

 

பு,சா,ஆ. 11 தேதி 12.11.2015     பலவிதமான பொருட்களை விற்பனை

                                   செய்யும் ஆண் போட்டோ

 

பு,சா,ஆ, 12 தேதி 12.11.2015     பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள்

                                   விற்பனை போட்டோ

 

பு,சா,ஆ,13  தேதி12.11.2015     தொந்தரவு தாங்க முடியாத பயணியின்

                                   நிலை போட்டோ

 

பு,சா,ஆ. 14 தேதி 12.11.2015     சீசன் டிக்கெட் வைத்துக்கொண்டு

                                   முன்பதிவு பெட்டியில் பிளாஸ்டிக்

                                   பொருட்களை விற்பனை செய்யும்

                                   ஆண்.பெண் போட்டோ

 

பு,சா,ஆ 15 தேதி 12.11.2015      கழுத்தில் பையை மாட்டிக்கொண்டு

                                   பிளாஸ்டிக் கொருட்களை விற்ப்னை

                                   செய்யும் நபரின் போட்டோ

 

 

 

 

எதிர்தரப்பினர் தரப்பு ஆவணப்பட்டியல்:

                       

- ஏதுமில்லை

 

 

 

  உறுப்பினர்-1                                                    தலைவர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

        

                                                                                       

 

 

         

 

 

 

 

 

 

 

 

 

 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.