Tamil Nadu

North Chennai

CC/156/2015

A.David - Complainant(s)

Versus

sakar sales service - Opp.Party(s)

party in person

19 Sep 2017

ORDER

 

                                         வழக்கு தாக்கல் செய்த தேதி  :   05.10.2015

   ஆணையுரை வழங்கப்பட்ட தேதி: 19.09.2017

 

          மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்  சென்னை( வடக்கு), சென்னை-3

 

                      முன்னிலை . திரு. கு.ஜெயபாலன், பி.எஸ்,சி., பி.எல்.,      ::     தலைவர்

                      திரு.உயிர்ஒளிகண்ணன், பி,பி,ஏ.,பி.எல்.,                     ::      உறுப்பினர்-1

                                               

  நுகர்வோர் புகார் எண். 156/2015

                   2017 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19 ஆம் நாள் செவ்வாய் கிழமை

1,ஏ,டேவிட்(வயது) 77

த.பெஅருளப்பன்

புதிய எண் 106 பழைய எண் ¼

நெல்வயல் சாலை

பெரம்பூர் சென்னை - 11

 

2,டீ, பியூலா

க/பெ ரிச்சர்ட்

புதிய எண், 106, பழைய எண் ¼

நெல்வயல் சாலை

பெரம்பூர் சென்னை - 11

                                                                                 ….. மனுதாரர்கள்

 

/எதிர்/

    எம்,முத்துகுமார்

கக  சாகர் nršஸ் சர்வீஸ்

     பெரம்பூர் நெடுஞ்சாலை

     பெரம்பூர் சென்னை / 600 011

                                                     ,,,,,, எதிர்மனுதாரர்

 

   

 

 

    

 

புகார்  நாள்                                                  :  30,10,2015

புகார்தாரருக்காக                                       :  நேரடியாக

 

 எதிர்தரப்பினர்களுக்காக                                         :    டி,வேலு  ஜி,நாகராஜன்                                        

 

 

 

          இந்த முறையீடு 23/08/2017 அன்று  இம்மன்றத்தில் இறுதி  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, புகார்தாரருக்காக அவரே முன்னிலையாகவும், எதிர்தரப்பினர்களுக்காக டி,வேலு ஜி,நாகராஜன் வழக்கறிஞர்  முன்னிலையாகியும்  இதுநாள் வரை விசாரணையில் இருந்து, வழக்கு   இருதரப்பு  வாதுரைகளைக் கேட்டும், ஆவணங்களைப் பரிசீலனை செய்தும்இன்று  இம்  மன்றம் வழங்கும்

ஆணையுரை

தலைவர் திரு.கு.ஜெயபாலன், அவர்களால் பகரப்பட்டது .

 

          இந்த மனு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 பிரிவு-12 கீழ் தாக்கல் செய்து, எதிர்மனுதாரர்களின் சேவைக் குறைபாட்டிற்காக நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

1 புகார்தாரர்  தாக்கல் செய்திருக்கும் புகாரின் சுருக்கம் பின்வருமாறு:-

 

      முதல் மனுதாரர், இரண்டாம் மனுதாரரின் தந்தை முதல் மனுதாரருக்கு சொந்தமான ‘ROSNNI 95 ND 8893’ தையல் இயந்திரத்தினை கொண்டு இரண்டாம் மனுதாரர் தொழில் செய்து வருமானம்  ஈட்டி வாழ்க்கை நடத்தினர், அந்த தையல் இயந்திரத்தினை 07/07/2017 ,ம் தேதி எதிர் மனுதாரரிடம் சர்வீஸ் செய்வதற்காக மனுதாரர்கள் ஒப்படைத்தனர், எதிர் மனுதாரர் ரூபாய் 750/ சர்வீஸ் செலவும் ரூபாய் 5/ ஊசி செலவிற்கென  ரூபாய் 755/ நிர்ணயித்து அதே தினம் மனுதாரருக்கு  ஒரு ரசீது கொடுத்தார்,  மேலும் மனுதாரர்கள் அன்றே ரூபாய் 255/ முன்பணமாக செலுத்தினர்,

       2, மனுதாரர்கள் சர்வீஸ்  செய்வதற்காக மட்டுமே தையல் இயந்திரத்தினை ஒப்படைத்தனர், அந்த இயந்திரத்தில் எந்தப் பழுதும் இல்லை, நன்றாக இயங்கி வந்தது, 10/07/2015 ம் தேதி அன்று மனுதாரர்  எதிர்மனுதாரரிடம் தையல் இயந்திரத்தினை கேட்ட போது இன்னும் வேலை முடியவில்லை என்றும் 30.07.2015 அன்று கொடுப்பதாகவும் தெரிவித்தார், 30.07.2015 அன்று முதல் மனுதாரர் சென்றபோது, எதிர் மனுதாரர் அவரிடம் இருந்த ரசீதினை வலுக்கட்டாயமாக பெற்று, அதில் பாபின் கேஸ் இல்லை, உதிரி பாகங்களுக்காக என ரூபாய் 533/ ஆக மொத்தம் ரூபாய் 1053/ கொடுக்க வேண்டும் என தெரிவித்து அந்த ரசீதியில் தொகையை  குறிப்பிட்டார், தீய நோக்கத்துடன் தொகையை கூடுதலாக கேட்டதால் மனுதாரரால் பணம் கொடுக்க முடியவில்லை,    எதிர் மனுதாரர் தையல் இயந்திரத்தினை சர்வீஸ் செய்தும் தரவில்லை, ஆதலால் மனுதாரருக்கு தினமும் ரூபாய் 300/ வருமான இழப்பு ஏற்பட்டது, 08/08/2013 அன்று முதல் மனுதாரர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பினார், அதனை பெற்றுக்கொண்ட எதிர்மனுதாரர் பதில் ஏதும் தரவில்லை, ஆகவே எதிர் மனுதாரர் தையல் இயந்திரத்தினை  சர்வீஸ் செய்து ஒப்படைக்கவும், மேலும் அவ்வாறு ஒப்படைக்கும் காலம் வரையிலும், 10/07/2017 முதல் தினசரி வருமான இழப்பீட்டிற்காக ரூபாய் 300/ ம் மற்றும்  மன உளைச்சலுக்காக ரூபாய் 15,000/, மற்றும் இதர பரிகாரம் கேட்டும் இம்மனுவினை தாக்கல் செய்துள்ளார்,

3, எதிருரை சுருக்கம்

       எதிர்மனுதாரர், மனுதாரர்கள் 07/07/2015 அன்று தையல் இயந்திரத்தை பழுதுபார்க்வும் மற்றும் சர்வீஸ் செய்யவும் தையல் இயந்திரத்தினை கொடுத்தனர் என்பதனை ஒப்புக்கொள்கின்றார், எதிர் மனுதாரர் அவர்களிடம் தையல் இயந்திரத்தின் நிலையினை தெரிந்த பின்பு உதரிப்பாகங்கள் மாற்றுவது தொடர்பாக தெரியவரும் என   தெரிவித்ததை மனுதாரர்கள் ஒப்புக்கொண்டு ரூபாய் 255/ முன்பணம் கொடுத்தனர், இரண்டு நாட்களிள் சர்வீஸ் செய்து கொடுப்தாக எதிர்மனுதாரர் உறுதி சொல்லவில்லை,  23/07/2015 தேதி எதிர்மனுதாரர் பழுதுபார்க்க மேலும் செலவாகும் என தெரிவித்தார், 30/07/2017  அன்று இரண்டாம் மனுதாரர் நேரில் சென்று தையல் இயந்திரத்தினை மேற்பார்வை செய்து திருப்திகரமாக உள்ளதாகவும் மேலும் ரூபாய் 1053/  னினை செலுத்தி எடுத்து செல்வதாக கூறிக் சென்றார்,

       4,  இந்நிலையில் இரண்டாம் மனுதாரருடன் முதல் மனுதாரர் சேர்ந்து வந்து முதல்மனுதாரர் எதிர்மனுதாரரை தாறுமாறாக பேசி, கடையின் புகழினை கெடுக்கும் எண்ணத்துடன் நடந்துகொண்டார், இரண்டாம் மனுதாரரும் வேறு வழியின்றி முதல் மனுதாரரிடம் சேர்ந்து அவதூறு பேசினார், மனுதாரர்கள் நாள்தோறும் ரூபாய் 300/ வருமானம் ஈட்டியதாக கூறுவதினை எதிர்மனுதாரர் மறுக்கின்றார், எதிர்மனுதாரர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மனுதாரர் கோரிக்கையில்  எவ்வித நியாமும் இல்லை எனவே மனு தள்ளுபடி செய்தக்கது என கேட்டுள்ளனர்,

 

               

               

5, இவ்வழக்கில் தீர்மாåக்க வேண்டிய எழு வினாக்கள்,

1.  எதிர்மனுதாரர்கள் புகார்தாரருக்கு சேவை குறைபாடு

   செய்துள்ளனரா?

 

2. புகார்தாரருக்கு இவ்வழக்கில் கிடைக்க கூடிய பரிகாரங்கள் என்ன?

6. எழுவினா  எண்.1   :- 

            07/07/2015 ம் தேதி  மனுதாரர்கள் அவர்களுக்கு சொந்தமான ‘ROSNNI 95 ND 8893’  தையல் இயந்திரத்தினை எதிர் மனுதாரரிடம் சர்வீஸ் பார்த்து கொடுக்க ஒப்படைத்தார் என்றும், அதனை எதிர்மனுதாரரும் பெற்றுக்கொண்L சர்வீஸ் செய்து கொடுப்பதற்காக Ex.A1 ரசீது கொடுத்தார் என்பதும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட சங்கதிகளாகும்,

      7, Ex.A1  ரசீதில் 07/07/2015 அன்று சர்வீஸ் தொகை ரூபாய் 750/ என்றும் ஊசி ரூபாய் 5/ எனவும் மொத்தமாக ரூபாய் 755/ என குறிபிடப்பட்டுள்ளது, அதே தினம் ரூபாய் 255/ தினை மனுதாரர்கள் முன்பணமாக செலுத்தினார்கள் என்பதினை  எதிர் மனுதாரரும் ஒப்புக்கொள்கிறார்,

      8, மனுதாரர்கள். எதிர்மனுதாரர் தையல் இயந்திரத்தை இரண்டு நாளில் சர்வீஸ் செய்து கொடுப்பதாக  சொன்னதன் பேரில்.  10/07/2015 அன்று  கேட்டதாகவும், ஆனால் எதிர்மனுதாரர் 30/07/2015 அன்று வரச்சொன்னதின் பேரில், அன்றைய தினம் சென்ற போது ரசீதினை வலுகட்டாயமாக பெற்று அதில் பாபின் கேஸ் இல்லை பார்ட்ஸ் எக்ஸ்ட்ரா என எழுதி அதற்காக ரூபாய் 553/ என எழுதி கணக்கிட்டு மொத்தமாக ரூபாய் 1053/ கொடுக்க வேண்டும் என  தெரிவித்தார் என்றும், மேலும் 07/07/2015  அன்று மொத்த தொகை கேட்காமல் பின்னிட்டு தீய நோக்குடன் மேலும் ரூபாய் 553/ கேட்டது எதிர்மனுதாரரின் முறையற்ற செயல்  மற்றும் சேவை குறைபாடாகும் என்று வாதிடப்பட்டது,

      9, எதிர்மனுதாரர் தையல் இயந்திரத்தினை பெற்ற போது  அதில் என்ன பழுதுள்ளது என அறிய முடியாதெனவும் இயந்திரத்தை பரிசோதித்த பிறகு பழுது பற்றி தெரிய வரும் என்றும்  அவ்வாறு பார்க்கையில்  உதிரி பாகங்கள் சரியில்லை என அறிந்து மேற்கொண்டு ரூபாய் 553/ கேட்கப்பட்டது என்றும் மேலும் மனுதாரர்களை தரக்குறைவாக கடையின் முன்பு பேசி அவமானப்படுத்தினர்  என்றும்  ஆதாலால் இந்த  எதிர்மனுதாரர்கள் எந்தவித சேவை குறைபாடும் செய்யவில்லை என வாதிடப்பட்டது,

      10, Ex.A1 ரசீதில் 07/07/2015 அன்று சர்வீஸ் மற்றும் ஊசி செலவிற்காக ரூபாய் 755  என எதிர்மனுதாரர் எழுதி கொடுத்துள்ளார். எதிர்மனுதாரர்/சேவை வழங்குனர் ஒரு இயந்திரத்தினை சர்வீஸ்களுக்கு எடுக்கும் போது பழுதுகள் உள்ளது பற்றி தெரியவில்லை எனில் பொருள்களை பெற்றதற்கு மட்டும் Job Sheet கொடுத்துவிட்டு பின்னர், இயந்திர ஆய்விற்கு பிறகு  தொகை பற்றி சொல்ல முடியுமென நுகர்வோருக்கு தெரிவித்திருக்க வேண்டும், அவ்வாறு செய்யாது மனுதாரர் ரூபாய் 755/ என சர்வீஸ்  மற்றும் ஊசி செலவிற்கு 07/07/2015 அன்றே நிர்ணயம் செய்து, Ex.A1 ரசீது கொடுத்தன் மூலம்  எதிர்மனுதாரர் மனுதாரரின் கோரிக்கைப்படி சர்வீஸ் மட்டும்  செய்து கொடுப்பதற்காக அந்த தொகையினை நிர்ணயித்துள்ளார் என தெரிகிறது, அவ்வாறு  சர்வீஸ் மட்டும் செய்து கொடுக்காமல் மேற்கொண்டு எக்ஸ்ட்ரா பார்ட்ஸ் என்ற பெயரில் கூடுதலாக ரூபாய் 553/ வலுக்கட்டாயமாக 30/07/2015 அன்று எழுதிக் கேட்டது எதிர் மனுதாரின் முறையற்ற தொழில் நடத்தை என்பது தெளிவாகிறது,

      11, மேலும் ரூபாய் 553/ றிற்கு உதிரி பாகங்கள் மாற்ற மனுதாரரின் முன் அனுமதி பெறாதது எதிர்மனுதாரரின் தவறாகும், மேலும் மாற்றப்பட்ட உதிரிபாகங்கள் எவை எனவும் குறிப்பிடப்படவில்லை, அதற்கான ஆதாரங்கள் எதிர்மனுதாரர் தாக்கல் செய்யவில்லை, ஆகவே எதிர்மனுதாரர் மனுதாரர்களுக்கு சேவைகுறைபாடு செய்துள்ளார் என தீர்மானிக்கப்படுகிறது,     

12, எழுவினா  என்:- 2

            எதிர் மனுதாரர் மனுதாரர்களுக்கு சேவை குறைபாடு செய்துள்ளார் மனுதாரரின் தையல் இயந்திரத்தினை சரியாக இயக்கும் நிலையில் சர்வீஸ் செய்து ஒருமாத காலத்திற்குள் கொடுக்க உத்திவிடுவது  சரியாக இருக்கும், எதிர் மனுதாரரின் செய்கையால் மனுதாரர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்பது ஏற்கக்கூடியது, அத்தகைய மன உளைச்சளுக்கு எதிர்மனுதாரர் மனுதாரருக்கு ரூபாய்    5.000/ கொடுக்க உத்திரவிடுவது  சரியாகும், தினசரி வருமான இழப்பீடு ஏற்பட்டதற்கான  ஆதாரம் எதுவும் இல்லாததால் அது குறித்த நிவாரணம் வழங்க இயலாது, வழக்கு செலவு குறித்து பரிகாரம் கோரததால் அது குறித்து உத்திரவு பிறப்பிக்க வேண்டியது இல்லை,

       இறுதியில் இம்மனு பகுதியாக அனுமதிக்கப்படுகிறது, எதிர்மனுதாரர் மனுதாரர்களின் ROSNNI 95 ND 8893’  தையல் இயந்திரத்தினை சர்வீஸ் செய்து சரியாக இயங்கும் நிலையில் இவ்வுத்திரவு  கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 6 வார  காலத்திற்குள், மனுதாரர்கள் செலுத்த வேண்டிய  தொகையான ரூபாய் 500/-ரினை (ரூபாய் நுறு மட்டும்)  பெற்றுக் கொண்டு ஒப்படைக்க வேண்டும் என்றும் மேலும் மன உளைச்சளுக்காக ரூபாய் 5,000/-த்தினை  (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்அதே கால அளவில் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்றும் உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது, செலவு தொகை குறித்து உத்திரவு இல்லை,

 மேற்படி இழப்பீட்டு தொகை ரூபாய் 5,000/-த்தை 6 வார காலத்திற்குள் செலுத்தாவிடில்   மேற்சொன்ன  தொகை செலுத்தும் காலம்வரை 9%  வட்டியுடன்  அளிக்க வேண்டும் உத்தரவு பகரப்படுகிறது. 

எம்மொழிதலுக்கு தட்டச்சு செய்யப்பட்டு எம்மால் திருத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19/-ம் நாளாகிய இன்று அவை அறிய பகரப்படுகிறது.

                     

 

  உறுப்பினர்-1                                                          தலைவர்

 

 

 

புகார்தாரர் தரப்பு ஆவணப்பட்டியல் :

 

 பு.சா.ஆ.1 தேதி 07.07.2015        எதிர்மனுதாரர் uÓJ    

 

 

 

 

பு.சா.ஆ.2  தேதி 08.08.2015       kDjhu® m¿é¥ò

பு,சா,ஆ 3 தேதி 10.08.2015      x¥òjš m£il                    

 

 

 

 

 

எதிர்தரப்பினர் தரப்பு ஆவணப்பட்டியல்:

                       

- ஏதுமில்லை

 

 

 

  உறுப்பினர்-1                                                    தலைவர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

        

                                                                                       

 

 

         

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.