Tamil Nadu

South Chennai

57/2012

C.Selvarathinam - Complainant(s)

Versus

S.Karunakaran - Opp.Party(s)

B.Ramesh

16 Feb 2016

ORDER

DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL FORUM,
CHENNAI (SOUTH)
 
Complaint Case No. 57/2012
 
1. C.Selvarathinam
Thandalam, Ch-122
...........Complainant(s)
Versus
1. S.Karunakaran
Teynampet, Ch-18
............Opp.Party(s)
 
BEFORE: 
  B.RAMALINGAM., MA., ML., PRESIDENT
  Dr.Paul Rajasekaran.,M.A.,D.MIN,HRDI,AIII,BCS MEMBER
  K.AMALA., M.A., L.L.B., MEMBER
 
For the Complainant:
For the Opp. Party:
ORDER

                                                                             வழக்கு தாக்கல் செய்த தேதி                   :   01.05.2012

                                      ஆணையுரை வழங்கப்பட்ட தேதி  :   16.02.2016

 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் 

சென்னை( தெற்கு), சென்னை-3

 

முன்னிலை . திரு. பி.ராமலிங்கம், எம்.ஏ.எம்..எல்.,  ::     தலைவர்                  திரு.பால்ராஜசேகரன், M.A ,D.Min.PGDHRDI, AIII,BCS.,    ::   உறுப்பினர்-2

 

நுகர்வோர் புகார் எண். 57/2012

2016 ஆம் ஆண்டு  பிப்ரவரி திங்கள்  16  ஆம் நாள் செவ்வாய்கிழமை

 

சி. செல்வரத்தினம்,

எண்.4.431, முத்தமிழ் தெரு,

மணிமேடு 83 தண்டலம்,

சென்னை 600 122,                                   .....  புகார்தாரர்/முறையீட்டாளர்     

 

.Vs.

ச.கணாகரன்,

பொது தகவல் ஆணையம்,

2, சர் தியாகராயர் சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை 600 018.                ,,எதிர்புகார்தாரர்/எதிர்முறையீட்டாளர்

 

 

 

                       எதிர்புகார்தாரர்கள்/எதிர்முறையீட்டாளர்கள்

 

புகார்  நாள்                               :    01.05.2012

புகார்தாரருக்காக              :    திரு.பி.இரமேஷ்

எதிர்தரப்பினருக்காக        :  திரு. ஜி.ஆர்.அசோஷியேசன்,

 

ஆணையுரை

தலைவர் திரு. பி. ராமலிங்கம், அவர்களால் பகரப்பட்டது

          இந்த மனு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 பிரிவு-12 கீழ் தாக்கல் செய்து,   எதிர்மனுதாரரின் சேவைக் குறைபாட்டிற்காக நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

1) புகார்தாரர்  தாக்கல் செய்திருக்கும் புகாரின் சுருக்கம் பின்வருமாறு:-

 

புகார்தாரர் எதிர்புகார்தாரரிடம் தகவல் அறியும் சட்டம் பிரிவு 6 (1)ன் படி 16.12.2011ல் தகவல்கள் கேட்டு மனு செய்தார்.  எதிர்புகார்தாரர் தகவல்கள் அளிக்கவில்லை என்பதால் புகார்தாரருக்கு ஏற்பட்ட  மன உளைச்சலுக்கும், வீண் அலைகழிப்பிற்கும் ரூ50,000/- இழப்பீடு கேட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

2) எதிர்புகார்தாரர் தாக்கல் செய்துள்ள எதிருரையின் சுருக்கம்

புகார்தாரரின் மனு சட்டப்படியும் சங்கதிகளின் படியும் நிலைநிற்கத் தக்கது அல்ல.   எதிர்புகார்தாரர் பொது தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் படி கட்டணமில்லா செயலாக்கம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ன் உட்பிரிவு 2 (o) ன் படி இப்புகார் இம்மன்றத்தில் ஆள்வரைக்குள் வராது என தனது எதிர்புகார் உரையில் குறிப்பிட்டுள்ளார்,   எனவே இப்புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

 

 

 

3)   எழுவினாக்கள்:

1.  புகார்தாரர் ஒரு நுகர்வோர் அல்ல என்பதும் இவ்வழக்கை நடத்த

  இம்மன்றத்திற்கு ஆள்வரை இல்லை என்பதும் சரியா?

2. மனுவில் கோரிய வண்ணம்  புகார்தாரர் பரிகாரம் பெற

   அருகதையுடையவரா?  

3. புகார்தாரருக்கு உள்ள இதர பரிகாரங்கள்  என்ன?

4)   எழுவினா 1,2 & 3  :- 

புகார்தராரரின்  தன் மனுவில் எதிர்புகார்தாரர்களிடம் தகவல்கள் கேட்டு அளிக்காததால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், வீண் அலைகழிப்பிற்கும் ரூ.50,000/- கேட்டும், மனு தாக்கல் செய்துள்ளார்.   மேலும் எதிர்புகார்தாரர்  தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் படி கட்டணமில்லா செயலாக்கம் இப்புகார் இம்மன்றத்தின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 உட்பிரிவு 2 (0) ன் படி  ஆள்வரைக்குள் உட்படாது எனவே இப்புகாரை தள்ளுபடி செய்யவேண்டுமென தனது புகாரில் கோரியுள்ளார்.

I (2014) CPJ 444 (NC)  என்ற வழக்கின் தீர்ப்புரையில் பாரா-5ல்

 

Being aggrieved, petitioner  filed First appeal  No.472 of 2012 before the State Consumer  Disputes  Redressal Commission, Chennai, (for Short, ‘State Commission’).  The State Commission, vide its impugned  order dated 23.08.2012, dismissed the appeal  and held:

“We have perused  the materials,  and on careful consideration  of the prayer made, we are of the view that the  order passed by the District Forum is well founded.  In a similar matter in RP. No.4061/2010, date 31.03.2011, in T.Pundalika V. Revenue Department (Service Division), Government  of Karnataka, the Hon’ble National  Commission  has held that the petitioner cannot  be claimed  to be a consumer  under the Consumer  Protection Act,  and further when there is a remedy available for him to approach the appellate authority under Section  19 of RTI Act,  the prayer of the appellant  cannot be entertained.  The same  facts  are applicable  to the case  on our hand also. Under  such circumstances  the appeal  deserves  rejection”.

என்று குறிப்பிட்டு இருப்பதாலும் பாரா-8 ல்

The RTI Act is a Code in itself.  It provides  for remedies available under this Act to a person  who has been denied any information.  Since,  petitioner has  specific remedy available  to him under the RTI  Act and which he  has already availed, the present consumer complaint does  not lie under the Act.

 

என்று குறிப்பிட்டு இருப்பதாலும் புகார்தாரர் ஒரு நுகர்வோர் அல்ல என்பதாலும் புகார்தாரரின் வழக்கை நடத்த இம்மன்றத்திற்கு ஆள்வரை இல்லை என்பதாலும் புகார்தாரர் மனுவில் கோரிய வண்ணம் எந்தவித பரிகாரமும் பெற அருகதையற்றவர் என்று நாங்கள் தீர்மானித்து புகார்தாரரின் மனுவை செலவுத் தொகையின்றி தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

6)         இறுதியாக மனு செலவுத் தொகையின்றி தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

எம்மொழிதலுக்கு தட்டச்சு செய்யப்பட்டு எம்மால் திருத்தப்பட்டு, 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 16ம் நாளாகிய இன்று அவை அறிய பகரப்படுகிறது.

 

 

உறுப்பினர்-2                                                                              தலைவர்.

 

புகார்தாரர் தரப்பு சான்றாவணப்பட்டியல் :

பு.சா.அ.1  16.12.2011        புகார்தாரர் எதிர்மனுதாரருக்கு தகவல் அறியும்

                          உரிமைசட்டம் 2005ன் படி விண்ணப்பத்தின் நகல்.

 

பு.சா.ஆ2  19.12.2011              ஒப்புகை கடிதத்தின் நகல்.

பு.சா.ஆ3                  சட்ட அறிவிப்பு நகல்.

பு.சா.ஆ4                  ஓப்புகை அட்டையின் நகல்.

பு.சா.ஆ5                  தேசிய நுகர்வோர் ஆணைய தீர்ப்பின் நகல்.

பு.சா.ஆ6  23.5.2012         எதிர்புகார்தாரர் புகார்தாரருக்கு அனுப்பிய கடித நகல்.

 

எதிர்புகார்தாரர் தரப்பு சான்றாவணப்பட்டியல்

 

எ.சா.ஆ1     ..           W.P.NO.8084/2010  ஆணையுரை நகல்.

எ.சா.ஆ2     ..           DCDRF, Cuddalore in சி.சி.1/.2010 ஆணையுரை நகல்.

எ.சா.ஆ3     ..            தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புரை

                          R.P.No. 4061/.2010 நகல்.

எ.சா.ஆ4     ..            T.N.S.C.D.R.C, Chennai in R.P.No.115/2011ன் நகல். 

 

                              

 

உறுப்பினர்- 2                                                          தலைவர்.

 

 

 
 
[ B.RAMALINGAM., MA., ML.,]
PRESIDENT
 
[ Dr.Paul Rajasekaran.,M.A.,D.MIN,HRDI,AIII,BCS]
MEMBER
 
[ K.AMALA., M.A., L.L.B.,]
MEMBER

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.