வழக்கு தாக்கல் செய்த தேதி : 11.08.2011
ஆணையுரை வழங்கப்பட்ட தேதி : 21.03.2016
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
சென்னை( தெற்கு), சென்னை-3
முன்னிலை . திரு. பி.ராமலிங்கம், எம்.ஏ.எம்..எல்., :: தலைவர்
திருமதி. அமலா, எம்.ஏ,எல்.எல்.பி. :: உறுப்பினர்- 1
திரு.பால்ராஜசேகரன், ஆ.ஹ ,னு.ஆin.ஞழுனுழசுனுஐ, ஹஐஐஐ,க்ஷஊளு.,:: உறுப்பினர்-2
நுகர்வோர் புகார் எண். 3/2012
2016 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21ம் ஆம் நாள் திங்கள் கிழமை
எல் ஜெயராமன்,
த/பெ. லட்சுமணன்.,
286 பிரியா இல்லம்,
வசந்தபுரம்,
சின்னத்திருப்பதி போஸ்ட்,
சேலம் 636 008, , ..... புகார்தாரர்/முறையீட்டாளர்
.ஏள.
பொதுத்தகவல் அலுவலர் சுகூஐ ஹஉவ (1)., மேல்முறையீட்டு அலுவலர், சுகூஐ ஹஉவ (2)., நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகம், எழிலகம் வளாகம், சேப்பாக்கம், சென்னை 600 005. ,,எதிர்புகார்தாரர்/எதிர்முறையீட்டாளர்
எதிர்புகார்தாரர்கள்/எதிர்முறையீட்டாளர்கள்
புகார் நாள் : 11.08.2011
புகார்தாரருக்காக : திரு.பி.இரமேஷ்
எதிர்தரப்பினருக்காக : திரு. டி.ரவிகுமார்.
ஆணையுரை
தலைவர் திரு. பி. ராமலிங்கம், அவர்களால் பகரப்பட்டது
இந்த மனு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 பிரிவு-12 கீழ் தாக்கல் செய்து, எதிர்மனுதாரரின் சேவைக் குறைபாட்டிற்காக நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறையீட்டாளர் தாக்கல் செய்திருக்கும் புகாரின் சுருக்கம் பின்வருமாறு:-
1. முறையீட்டாளருக்கு ஓய்வூதிய பலன்கள் காலதாமதமாக வழங்கியது சம்மந்தமாக மேற்படி ஓய்வூதிய பலன்களுக்கு வட்டி வழங்கிடுமாறு சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் மூலமாக ( அரசு செயலாலர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை அவர்களை கேட்டு) 13.07.2009 மற்றும் 10.09.2009 ஆகிய தேதிகளில் இரு விண்ணப்பங்கள் அனுப்பி முறையீட்டாளர் கேட்டு இருந்தார். மேற்படி விண்ணப்பங்களை கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தன்னுடைய 30.07.2009 மற்றும் 22.09.2009 கடிதங்கள் மூலமாகவும் மற்றும் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் 02.06.2010 தேதிய கடிதத்தின் மூலமும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. மேற்கண்ட விவரங்கள் குறித்து சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர் (முதல் எதிர்தரப்பினர்) அவர்களிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 20.04.2010 தேதியில் தகவல் தர கோரி கேட்டிருந்தார். அதன்படி அவர் உரிய தகவளை 30 நாட்களுக்குள் கொடுக்காமல் இருந்ததால் 06.06.2010ம் தேதியில் அது குறித்து அவருடைய nமல்முறையீட்டு அலுவலரான கூடுதல் இயக்குநர், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகம் (2ம் எதிர்தரப்பினர்) 08.06.2010 தேதிய பதிவு தபால் மூலம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அவரும் மேற்கண்ட தகவல் அளிக்காததால் மேற்படி சட்டபிரிவு 18 (1) ன்படி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்க்கு 30.06.2010ல் புகார் மனு கொடுத்திருந்தார். அதனடிப்படையில் மேற்படி ஆணையம் தனது கடிதம் 16861/06/2010, நாள் 05.01.2011, மூலம் முறையீட்டாளர் கேட்டிருந்த உரிய தகவல்களை அளிக்கும்படி கட்டளையிடப்பட்டது. இது தவிர இது சம்மந்தமாக தனி அலுவலர் முதல் அமைச்சர் தனி பிரிவுக்கும் 08.11.2010ல் முறையீடு அனுப்பி இருக்கிறார், அதன்படி 19.10.2010ன் மூலம் உரிய தகவல் முறையீட்டாளருக்கு அளிக்கும் படி 19.11.2010ல் நகராட்சிகளின் நிர்வாக ஆணையரின் பொது தகசல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தும் எதிர்தரப்பினர்கள் தகவல் அறியும் சட்டப்படி முறையீட்டாளர் கோரிய தகவல்கள் ஏதும் கொடுக்கவில்லை, அது எதிர்தரப்பினரின் சேவைக்குறைப்பாட்டின்பால் முறையீட்டாளர் எதிர்தரப்பினருக்கு எதிராக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ததற்கான கட்டணம் ரூ.10/ஐ திரும்ப தரக் கேட்டும், மன உளைச்சல் மற்றும் பாதிப்பு சம்மந்தமாக ரூ.25,000/ இழப்பீடு கேட்டும் மற்றும் இம்முறையீடு சம்மந்தமாக செலவு கேட்டும் பலன் கோரியுள்ளார்.
2) எதிர்புகார்தாரர் தாக்கல் செய்துள்ள எதிருரையின் சுருக்கம்
முறையீட்டாளரின் முறையீடு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இம்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது நிலைக்கதக்கது அல்ல. முறையீட்டாளர் குறிச்சி பேரூராட்சியின் செயல் அலுவலராக பணியாற்றி வந்து 31.05.1998ல் வயது முதிர்வின் காரணமாக இருந்த சூழலில் பேரூராட்சியின் நிதி இழப்பீட்டுக்கு காரணம் காட்டி அவர் மீது குற்ற சாட்டுகள் சுமத்தி பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அந்த நடிவடிக்கையில் பின் ஊரக வளர்ச்சி துறை ஆணை எண் 62, நாள் 08.09.2005ன்படி அவர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு 31.05.1998 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றதாக ஆணையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓய்வு ஊதிய தொகைகள் குறிச்சி பேரூராட்சியின் மூலமாக பல்வேறு தேதிகளில் வழங்கப்பட்டன. முறையீட்டாளர் நகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றவில்லை, அவர் குறிப்பிடுவதான மனுக்களை பேரூராட்சி துறையின் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் கோவை மூலம் அரசுக்கு அனுப்பி இருக்க வேண்டும். எனினும் இப்படி தவறான துறைமூலம் மனு கொடுக்கப்பட்டிருந்தும் அவைகள் 16.10.2010 மற்றும் 29.11.2010 தேதிகளில் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது விவரம் முறையீட்டாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் தனி பிரிவில் இருந்து வந்த கடிதத்தின்படி முறையீட்டாளருக்கு விவரங்கள் 15.10.2010ல் தெரிவிக்கப்பட்டிருந்தது. முறையீட்டாளர் 2007 முதல் சேலம் அரசு கருவூலத்தில் மூலம் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஓய்வூதிய பணிக் கொடைக்கு மட்டுமே அவர் கோரியிருந்த வட்டி சம்மந்தமாக பரிந்துறை செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு அதற்கான அரசு ஆணை எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விவரங்களுக்கு முரணான முறையீட்டு மனுவில் கண்ட புகார் விவரங்கள் சரியானது அல்ல, முறையீடு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
3. இந்த விசாரணையில் முறையீட்டாளர் தரப்பில் ஆணையுறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு பு.சா.ஆ1 முதல் பு.சா.ஆ.16 வரை குறியீடுசெய்யப்பட்டுள்ளது. எதிர்தரப்பினர் தரப்பில் ஆணையுறுதி ஆவணமோ, ஆவணங்களோ குறியீடுசெய்யப்படவில்லை,
4) எழுவினாக்கள்:
1. இந்த முறையீட்டு மனு விவரம் சம்மந்தமான புகார் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்பால்பட்ட
பிரச்சனை என்பதால் இந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிலைக்கத்தக்கதா
2. முறையீட்டாளருக்கு அவர் கோரும் பலன் கிடைக்கத்தக்கதா ?
5) வினா எண்.1 & 2 :-
இருதரப்பு வாதுரைகளும் பரிசிலிக்கப்பட்டது. முறையீட்டாளர் முறையீட்டு மனுவில் குறிப்பிடும் விவரத்தை கருத்தில் கொள்ளும் போது, முறையீட்டு மனு பிரச்சனை முறையீட்டாளர் எதிர்தரப்பினரிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கோரி எதிர்தரப்பினர்களிடம் முறையே 19.04.2010 மற்றும் 24.10.2010 தேதிகளில் அனுப்பியிருந்த ஆவணம் பு.சா.ஆ1 மற்றும் பு.சா.ஆ2 மனுக்கள் சம்மந்ததாக உரிய தகவல்கள் தரப்படவில்லை என்றும் அது அவர்களின் சேவைக்குறைப்பாட்டின் பால்பட்டது என்றும் கூறி முறையீட்டுள்ளது தெரிய வருகிறது. இது குறித்து எதிர்தரப்பினர் தரப்பில் இந்த மனு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிலைக்கத்தக்கது அல்ல என்று ஆட்சேபிக்கப்பட்டு அதற்கு ஆதரவாக """"மாண்புமிகு சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (குஹ) முதல் மேல்முறையீடு 472/2012 வழக்கில் 23.08.2012ல் பிறப்பித்த தீர்ப்புரை மற்றும் ஆர்.பி 4061/2010ல் 31.3.2011 தேதிய, டி. பாண்டுலிக்காக .. எதிர் .. வருவாய் துறை, சேவை பிரிவு, கர்நாடக அரசு என்று வழக்கில் மாண்புமிகு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்தததான தீர்ப்புரை விவரங்களின் குறிப்பிட்டுள்ளது போல், தகவல் அறிவும் சட்டத்தின் கீழ் மனு செய்து தகவல் தரப்படவில்லை என்பதாக பிரச்சனை எழப்பும் முறையீட்டாளர் நுகர்வோர் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்படும் நுகர்வோர் என்பதாக கருதப்படகூடியவர் அல்ல என்றும், மேலும் இப்படி தகவல் தரப்படாத விரவம் குறித்து முறையீட்டாளர் தகவல் அறிவும் சட்டம் பிரிவு 19ன் கீழ் மேல் முறையீடு ஆணையத்தின் முன் நடவடிக்கை எடுத்து பலன் அடைந்து கொள்ள வேண்டும் என்றும் மாறாக மேற்படி பிரச்சனை குறித்து முறையீட்டாளரின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறையீடு செய்துள்ளது நிலைக்கத்ததக்கது அல்ல என்றும், தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
6. மேற்கண்ட தீர்வு முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது முறையீட்டாளர் முறையீட்டு மனுவில் கூறும் பிரச்சனை மற்றும் விவரங்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியது ஆகவும், முறையீட்டாளர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் நுகர்வோர் என்று கருதக்கூடியவர் அல்ல என்றும், அவரின் இம்முறையீட்டு மனு நிலைக்கத்தக்கது அல்ல என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. மேலும் முறையீட்டாளர் தன் முறையீட்டு மனு விவரத்திலேயே மாநில ஆணையரிடம் மனு செய்தும், அவர் உத்திரவுபடியும் எதிர்தரப்பினர் தகவல் தரவில்லை என்பதாக மனுவில் கூறியிருந்தாலும், அப்படியான எதிர்தரப்பினருக்கு எதிரான பிரச்சனை குறித்தும் மேற்படி சட்டப்படி மாநில ஆணையரிடமே தகுந்த நடவடிக்கை எடுத்து பலன் அடைந்து கொள்ள வேண்டும்.
7. எனவே மேற்கண்ட தீர்வு முடிகளின் விவரப்படி முறையீட்டாளரின் இம்முறையீட்டு மனு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிலைக்கத்தக்கது அல்ல என்று முடிவு செய்து தள்ளுபடி செய்யப்தக்கது என்று முடிவு செய்கிறோம். வழக்கின் சூழல் மற்றும் தன்மையை கருத்தில் கொண்டு செலவுத் தொகையை தரப்பினர்கள் அவரவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும், இவ்வாறாக வினா எண்.1 மற்றும் 2க்கு விடை காணப்படுகிறது.
முடிவாக இந்த முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. செலவுத் தொகை ஏதும் இல்லை.
எம்மொழிதலுக்கு தட்டச்சு செய்யப்பட்டு எம்மால் திருத்தப்பட்டு, 2016 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21ம் நாளாகிய இன்று அவை அறிய பகரப்படுகிறது.
உறுப்பினர்-1 உறுப்பினர்-2 தலைவர்.
புகார்தாரர் தரப்பு சான்றாவணப்பட்டியல் :.
பு.சா.ஆ1 13.7.2009 முறையீட்டாளர் எதிர்தரப்பினருக்கு அனுப்பிய
கடித நகல்.
பு.சா.ஆ2 10.9.2009 முறையீட்டாளர் எதிர்தரப்பினருக்கு அனுப்பிய கடித நகல்.
பு.சா.ஆ3 .. அஞ்சல ரசீது நகல்.
பு.சா.ஆ4 30.7.2009 எதிர்தரப்பினர் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிய
கடித நகல்.
பு.சா.ஆ5 22.9.2009 முறையீட்டாளர் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பிய
கடித நகல்.
பு.சா.ஆ6 2.6.2010 முறையீட்டாளர் நகராட்சி நிர்வாக இயக்கநரகம், சென்னைக்கு
அனுப்பிய கடித நகல்.
பு.சா.ஆ7 19.4.2010 முறையீட்டாளர் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு தகவ்ல் ‘
கேட்டு அனுப்பிய கடித நகல்.
பு.சா.ஆ8 ஒப்புகை ரசீது நகல்.
பு.சா.ஆ9 6.6.2010 முறையீட்டாளர் மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் கூடுதல்
இயக்குநர் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சென்னைக்கு
அனுப்பிய கடித நகல்.
பு.சா.ஆ10 ஒப்புகை ரசீது நகல்.
பு.சா.ஆ11 30.6.2010 முறையீட்டாளர் மாநில தகவல் ஆணையம் காமதேனு
சிறப்பங்காடி, தேனாம்பேட்டை, சென்னைக்கு அனுப்பிய
கடித நகல்.
பு.சா.ஆ12 கூரியர் ரசீது நகல்.
பு.சா.ஆ13 5.1.2011 தமிழ்நாடு தகவல் ஆணையம், தேனாம்பேட்டை, சென்னை
முறையீட்டாளருக்கு அனுப்பிய கடித நகல்.
பு.சா.ஆ14 1.9.2010 முறையீட்டாளர் முதலமைச்சரின் தனிப்பிரிவு
தலைமை செயலகம் சென்னைகு .அனுப்பிய கடித நகல்.
பு.சா.ஆ15 8.11.2010 முறையீட்டாளர் பொதுத் தகவல் அலுவலர், முதலமைச்சரின்
தனிப்பிரிவு, தலைமைச்செயலகம், சென்னை 9க்கு அனுப்பிய
கடித நகல்.
பு.சா.ஆ16 19.11.2010 பொதுத் தகவல் அலுவலர், முதலைமைச்சரின் தனிப்பிரிவு
தலைமைச்செயலகம், சென்னை முறையீட்டாளருக்கு
அனுப்பிய கடித நகல்.
எதிர்புகார்தாரர் தரப்பு சான்றாவணப்பட்டியல்
..இல்லை.
உறுப்பினர்-1 உறுப்பினர்-2 தலைவர்