புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 30-05-2022
உத்தரவு பிறப்பித்த நாள் : 16-08-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு ஏ. எஸ். ரத்தினசாமி எம். காம்., பி. எட் பி எல்., உறுப்பினர் I.
நுகர்வோர் புகார் எண் (CC No): 18/2022.
நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி அஞ்சல், குத்தகைதாரர் தோட்டத்தில் வசிக்கும் செங்கோட்டையன் மகன் விஜயகுமார், அதிகார முகவர் மூலம்
-முறையீட்டாளர்
01. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தின் வருவாய் வட்டாட்சியர்,
02. நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் - எதிர் தரப்பினர்கள்
உறுப்பினரின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
01 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, பிரிவு 35-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து புகாரில் முறையீட்டாளருக்கு தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தின் செயலாளர், திரு கா. சுப்பராயன், அதிகார முகவராக முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு திருமதி பி.சி. அர்ச்சனா, அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 18-07-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம், முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றாவணங்கள-6, எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம், சான்றாவணம்-1, மற்றும் இருதரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும் ஆணையுரை
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
02. தமக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட ஒடுவன்குறிச்சி கிராமத்தில் சர்வே எண் 30/5-ல் உள்ள நிலத்தை அளந்து அத்துக்காட்ட ரூ 800/- செலுத்தி 19-10-2020 ஆம் தேதி விண்ணப்பித்தேன் என்றும் பல மாதங்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் தமது விண்ணப்பத்தின் மீது எடுக்கப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி விண்ணப்பித்து தகவல் பெற்றதில் அளந்து அத்துக்காட்ட கூறும் மனு மீது பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அளவீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்கள் என்றும் மேலும் வரிசைப்படி நில அளவை செய்ய வேண்டி உள்ளதால் விண்ணப்பம் குறு வட்ட அளவையரிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்கள் என்றும் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பதினாறு மாதங்கள் கடந்தும் தமக்கு நிலத்தை அளந்து அத்துக்காட்டாதது சேவை குறைபாடு என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்
03. எனவே, முறையீட்டாளர் நிலத்தை உடனடியாக அளந்து அத்துக்காட்டு ஆணையிடும்படியும் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 2 லட்சத்தை எதிர்த்தரப்பினர்கள் வழங்க ஆணையிடும்படியும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டிற்கு தண்டனை இழப்பீடாக ரூ 2,00, 000/- அபராதம் விதித்து அதனை நுகர்வோர் நல நிதியில் சேர்க்க ஆணையிட வேண்டும் என்றும் மற்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ 5, 000/- தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
05. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி ஒடுவன்குறிச்சி கிராமத்தில் சர்வே எண் 30/5-ல் உள்ள நிலத்தை அளந்து அத்துக்காட்ட ரூ 800/- செலுத்தி விண்ணப்பித்தது உண்மை என்றும் முறையீட்டாளர் விண்ணப்பத்தின் மீது தங்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது என்றும் உண்மையில் கடந்த 07-12-2020 ஆம் தேதி முறையீட்டாளரின் விண்ணப்பத்தின்படி அளவீடு செய்ய சென்ற போது 30/4, 30/5 ஆகிய புல எண்கள் இடையே எவ்வித அத்து வரப்பும் இல்லை என்றும் பாதையாக பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது என்றும் வருவாய் ஆவணங்களில் நிலவியல் பாதை ஓரம் என இருந்தது என்றும் பொதுமக்கள் குடிநீர் குழாயும் இச்சொத்தில் பதிக்கப்பட்டு இருந்தது என்றும் இவற்றை எழுதி வாக்குமூலமாக முறையீட்டாளரிடம் கேட்டபோது இந்த சொத்தின் சுவாதீனம் தன்னிடம் உள்ளது என்று எழுதினால்தான் கையொப்பம் செய்வேன் என்று வாக்குமூலத்தில் அவர் கையொப்பமிட மறுத்துவிட்டார் என்றும் அந்த நேரத்தில் கணேசன் என்பவர் முறையீட்டாளருக்கும் விண்ணப்பத்தில் கண்ட சொத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஆட்சேபனை தெரிவித்தார் என்றும் விண்ணப்பம் செய்தவர்களுக்கு 90 நாட்களுக்குள் அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் வரிசைப்படியே அளவீடு செய்யப்படும் என்றும் அவ்வகையில் தான் முறையீட்டாளருக்கும் அளவீடு செய்ய சென்றோம் என்றும் சொத்தானது அளவீடு செய்து அத்து காட்டுப்பட்டு விட்டது என்றும் அவர் கூறும் ஆவணம் செய்து தராத காரணத்தினால் உண்மைக்கு புறம்பாக புகார் தாக்கல் செய்துள்ளார் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பல சங்கதிகளையும் எதிர்தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாக்கள்:
1) முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகார் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் விசாரிக்கத்தக்கதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளனரா?
3) எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா?
4) வழக்கின் செலவு தொகை குறித்த ஆணை என்ன? இந்த புகாரில் தக்கது என கருதும் பரிகாரங்கள் எவை ?
எழு வினா எண் – 1
07. முறையீட்டாளர் புகாரில் கூறுவது போல கடந்த 19-10-2020 ஆம் தேதியில் சொத்தை அளந்து அத்துக்காட்ட ரூ 800/- செலுத்தி அந்த ரசீதுடன் விண்ணப்பித்தார் என்று எதிர் தரப்பினர்கள் தங்கள் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார்கள். முறையீட்டாளர் செலுத்திய தொகை என்பது சேவை கட்டணமா? என்பதும் புகாரில் சொல்லப்பட்டுள்ள பிரச்சனையை நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரிக்கலாமா? என்பதும் ஆய்வு செய்யப்படும் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்
08. This Commission opines that according to various Judgments by the Apex Court, the Consumer Commission has no powers to deal with Title and Mutation of Records pertaining to Revenue Authorities. The Judgement of the Honourable National Commission, reported in 2016NCJ564(NC) in the matter of K.Mohanasundaram vs K.U. Gopalakrishnan Nair the National Commission has held that complaint under Consumer Protection Act against the functioning of Revenue Department is not maintainable”. The above judgment of the Hon’ble National Commission is squarely applicable to the facts of the present case. In F.A. No.208/2018 SCDRC, Chennai, has clearly cited that issuing Patta and surveying the land would be a subject of several disputed questions either with the co-owners of the land or its neighbors. Even if the complainant has paid necessary fee for surveying and issuing Patta for the land the same will not give rise to the cause of action to bring the matter within the ambit of the relationship of Consumer and Service Provider between the complainant and the opposite party. Even if assuming the title is clear and sufficient fees are paid, when the revenue authorities have not come forward to survey the land and issue Patta the complainant has to approach the appropriate legal forum in accordance with the law applicable to it by initiating a litigation impleading the concerned Government Official as a party but not before this Consumer Commission. Further the litigation where the land dispute is involved can never be a subject matter of the Consumer Commission.
This commission opines that it was well settled by the number of decisions made by the Hon’ble Apex Court and has been reiterated by the Hon’ble Tamil Nadu State Commission that the Consumer Protection act has limited scope, in the sense it would adjudicate the disputes between the Consumers Vs Service Providers. When the statutory authorities who are performing their duties are not considered as service providers and hence no complaint could be filed against them under the Consumer Protection Act. Catena of Judgements relating to when the Statutory Authorities who are performing their duties are not considered as service providers then no complaint could be filed against them under the Consumer Protection Act. Hence, with the above observations, it is clear that this Complaint is not maintainable before the Consumer Commission and does not come within the ambit of Consumer Protection Act. Thus, Point No 1. Is answered.
இந்நிலையில் சொத்தை அளந்து அத்துக்காட்ட கேட்கும் பிரச்சனைகளை விசாரிக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
09. முதலாவது எழு வினாவிற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் புகாரில் உள்ள சொத்தை அளந்து அத்துக்காட்ட கேட்கும் பிரச்சனைகளை விசாரிக்கக் கூடாது என்றும் தீர்வு காணப்பட்ட நிலையில் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
10. எவ்வாறு இருப்பினும், முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அவர் 19-10-2020 ஆம் தேதியில் சொத்தை அளந்து அத்துக்காட்ட சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எதிர் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள முதலாவது சான்றாவ ணங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிவதால் எதிர் தரப்பினர்கள் எத்தகைய குறைபாடும் புரியவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 3 & 4
11. முதலாம் மற்றும் இரண்டாம் எழு வினாக்களை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை.
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 16-08-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 19-10-2020 | முதலாம் எதிர்த்தரப்பினருக்கு சமர்ப்பித்த விண்ணப்பம் | நகல் |
ம.சா.ஆ.2 | 19-10-2020 | பணம் செலுத்திய ரசீது | நகல் |
ம.சா.ஆ.3 | - | நில உரிமை விவரங்கள் | நகல் |
ம.சா.ஆ.4 | 19-12-2020 | தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழங்கப்பட்ட பதில் | நகல் |
ம.சா.ஆ.5 | - | புலப்பட நகல் | நகல் |
ம.சா.ஆ.6 | 07-01-2021 | வட்டாட்சியர் குறிப்பாணை | நகல் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 07-12-2020 | கிராம நிர்வாக அலுவலர் வாக்குமூலம் | உண்மை நகல் |
எம.சா.ஆ.2 | 07-12-2020 | கணேசன் என்பவரின் ஆட்சேபணை கடிதம் | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 07-12-2020 | வாக்குமூலம் | உண்மை நகல் |
எம.சா.ஆ.4 | - | செட்டில்மெண்ட் பதிவேடு | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு விஜயகுமார்
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு கார்த்திகேயன் , வட்டாட்சியர்
ஒம் /- ஒம் /-
உறுப்பினர் – I தலைவர்.