R.Prabha filed a consumer case on 21 Oct 2022 against M/s.Tamilnadu Housing Board, Rep by. The Executive Engineer in the Ariyalur Consumer Court. The case no is RBT/CC/109/2022 and the judgment uploaded on 20 Mar 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 18-07-2017 (Chennai South)
உத்தரவு பிறப்பித்த நாள் : 21-10-2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண் (RBT CC No): 109/2022.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர், கோத்தன்குடிதோப்பில் -ல் வசிக்கும் ஆர். பிரபா -முறையீட்டாளர்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாரியம், சென்னை நகர், அடையாரில் உள்ள அதன் பெசன்ட் நகர் கோட்ட செயற்பொறியாளர் மூலம்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்காக திரு எஸ் எஸ் மாதவன் மற்றும் திரு என் வினோத், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும், எதிர் தரப்பினருக்கு திரு ஜெ. பால்ராஜ், வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 18-10-2022 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் புகார், முறையீட்டாளர் தரப்பில் சாட்சியம்-1, அவரது 14 சான்றாவணங்கள், எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம் -01 மற்றும் அவரது 03 சான்றாவணங்கள், வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து எதிர் தரப்பினர் தம்முடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள குடியிருப்பு கட்டிடத்தை ஒரு மாத காலத்திற்குள் தம்மிடம் எதிர்தரப்பினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் தாம் செலுத்திய தொகைக்கு ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை ஒப்படைக்க காலதாமதம் ஏற்பட்டதால் தாம் செலுத்திய பணத்துக்கு வட்டி வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை தராததால் ஏற்பட்ட வாடகை இழப்பாக ரூ 6,10,000/- வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்தரப்பினர் தனக்கு ரூ 1,00,000/- வழங்க வேண்டும் என்றும் இன்னும் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. எதிர் தரப்பினர் சென்னை சோழிங்கநல்லூரில் 392 அடுக்குமாடி குடியிருப்பை குறைந்த வருமான பிரிவினருக்கு கட்டும் திட்டத்தை விளம்பரம் செய்ததன் அடிப்படையில் தாம் ரூ 65 ஆயிரம் 25-01-2011 ஆம் தேதியிட்ட வரைவோலை மூலம் செலுத்தி எதிர் தரப்பினரிடம் விண்ணப்பம் செய்தேன் என்றும் தமக்கு எதிர் தரப்பினர் ஒதுக்கீடு ஆணை வழங்கினார்கள் என்றும் அதனடிப்படையில் எதிர் தரப்பினருக்கும் தமக்கும் 02-06-2011 ஆம் தேதியிட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாம் இதுவரை ரூ 10,76,540/-செலுத்தி உள்ளேன் என்றும் குடியிருப்பு கட்டிடத்தை தம்மிடம் ஒப்படைக்கும் போது செலுத்த வேண்டிய தொகை ரூ 2,67,380/- செலுத்த தயாராக இருந்து வருகிறேன் என்றும் எதிர்தரப்பினர் தமக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பு கட்டிடத்தை 12 மாத காலத்திற்குள் தமது வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் இதனை செய்து தருவதற்கு எதிர்தரப்பினர் கடமைப்பட்டவர் என்றும் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் மேற்படி ஒப்பந்தப்படி 2012ஆம் ஆண்டு மே மாதத்தில் குடியிருப்பு கட்டிடத்தை கட்டி முடித்து சுவாதீனம் வழங்க வேண்டும் என்ற நிலையில் தற்போது வரை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தம்மிடம் சுவாதீனம் வழங்கப்படவில்லை என்றும் இதுதொடர்பாக எதிர் தரப்பினரை நேரிலும் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டும்வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எதிர் தரப்பினர் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் இவ்வாறு எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும்முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. மே 2012 ஆம் ஆண்டு குடியிருப்பு கட்டிடத்தை தம்மிடம் ஒப்படைக்க ஒப்படைப்பு செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலத்திலிருந்து ஏற்பட்ட கால தாமதத்திற்கு தாம் செலுத்திய தொகைக்கு வட்டி தமக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் இவ்வாறு காலதாமதம் ஏற்பட்டதால் தமக்கு ஏற்பட்டுள்ள வாடகை இழப்பு ரூ 6,10,000/- எதிர் தரப்பினர் அளிக்க கடமைப்பட்டவர் என்றும் நமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு எதிர்தரப்பினர் பொறுப்பாவார் என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.
05. எனவே, எதிர் தரப்பினர் தம்முடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள குடியிருப்பு கட்டிடத்தை ஒரு மாத காலத்திற்குள் தம்மிடம் எதிர்தரப்பினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் தாம் செலுத்திய தொகைக்கு ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை ஒப்படைக்க காலதாமதம் ஏற்பட்டதால் தாம் செலுத்திய பணத்துக்கு வட்டி வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை தராததால் ஏற்பட்ட வாடகை இழப்பாக ரூ 6,10,000/- வழங்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்தரப்பினர் தனக்கு ரூ 1,00,000/- வழங்க வேண்டும் என்றும் இன்னும் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும்தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
06. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
07. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தங்களால் தொடங்கப்பட்டது என்றும் அவருக்கு இத்திட்டத்தில் குடியிருப்பு கட்டிடம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அவர் புகாரில் கூறியுள்ளபடி போல பணம் செலுத்தியுள்ளது உண்மை என்றும் ஆனால் சரியான காலத்தில் அவர் பணம் செலுத்தவில்லை என்றும் மாறாக காலதாமதம் செய்து பணத்தை செலுத்தியுள்ளார் என்றும் தவிர்க்க இயலாத மற்றும் இயற்கை பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் காலதாமதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் கால தாமதத்திற்கு முறையீட்டாளர் செலுத்தியுள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படமாட்டாது என்றும் ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு உள்ளது என்றும் அதனை ஒப்புக்கொண்டு முறையீட்டாளர் கையொப்பம் செய்து கொடுத்துள்ளார் என்றும் இதனால் முறையீட்டாளர் கோரும் பரிகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றும் தங்கள் தரப்பில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை என்றும் இதனால் முறையீட்டாளரின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல சங்கதிகளையும் எதிர் தரப்பினர்தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்.
08. தீர்மானிக்க வேண்டிய எழு வினா கள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
09. முறையீட்டாளருக்கும் எதிர் தரப்பினருக்கும் புகாரில் கூறியுள்ளபடி ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதை எதிர்த் தரப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார். முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி பணம் செலுத்தி உள்ளார் என்பதையும் எதிர் தரப்பினர் ஒப்புக் கொள்ளும் நிலையில் அவர் நிர்ணயம் செய்யப்பட்ட கால வரையறையில் பணம் செலுத்தவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஆனால் ஒப்பந்தப்படி அவர் பணம் செலுத்தியுள்ளார் என்பதும் காலதாமதமாக செலுத்தப்பட்ட தொகை ஏதும் இருப்பின் அதற்கு ஒப்பந்தப்படி வட்டி செலுத்தியுள்ளார் என்றும் பணத்தை செலுத்தத் தவறி உள்ளீர்கள் என்று எதிர்தரப்பினர் எவ்வித அறிவிப்பும் அனுப்பவில்லை என்றும் முடிகிறது. இந்நிலையில் எதிர் தரப்பினரின் மேற்படி குற்றச்சாட்டு உண்மை அல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
10. முறையீட்டாளருக்கு எதிர்த் தரப்பினர் ஒப்பந்தப்படி 2012 மே மாதத்தில் குடியிருப்பு கட்டிடத்தை ஒப்படைப்பு செய்ய வேண்டும். ஆனால் தற்போது வரை எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை ஒப்படைப்பு செய்யவில்லை என்பதால் எதிர்தரப்பினர் தரப்பில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க இயலாத சங்கதி ஆகும். தவிர்க்க இயலாத மற்றும் இயற்கை பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் காலதாமதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் கால தாமதத்திற்கு முறையீட்டாளர் செலுத்தியுள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படமாட்டாது என்றும் ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு உள்ளது என்றும் அதனை ஒப்புக்கொண்டு முறையீட்டாளர் கையொப்பம் செய்து கொடுத்துள்ளார் என்றும் எதிர்த் தரப்பினர் தங்கள் பதில் உரையில் கூறுவதை ஒப்புக் கொண்டாலும் அவ்வாறு ஏற்படும் கால தாமதத்திற்கு ஒரு நியாயமான கால வரையறை இருக்க வேண்டும். மாறாக அது முற்றுப்புள்ளி பெறாத ஒரு தாமதமாக இருக்கக் கூடாது. தவிர்க்க இயலாத மற்றும் இயற்கை பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட கால தாமதத்திற்கு ஓராண்டு காலம் கருணை காலமாக (grace period) எடுத்துக்கொண்டாலும் கூட அதற்குப் பின்னரும் இதே காரணத்தின் அடிப்படையில் ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை ஒப்படைப்பு செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்கமுடியாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்கள் அவரது வாதத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இதனால் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
எழு வினா எண் – 2
11. எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினருக்கும் முறையீட்டாளருக்கும் 02-06-2011 ஆம் தேதி ஏற்பட்டஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டடத்தை ரூ 2,67,380/- அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 8 வார காலத்திற்குள் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
12. எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் எதிர்த் தரப்பினர் ஒப்பந்தப்படி மே 2012 -ல் தமக்கு குடியிருப்பு கட்டடத்தை ஒப்படைக்க காரணத்தினால் தாம் செலுத்திய தொகைக்கு வட்டி தர வேண்டும் எதிர்த் தரப்பினர் வழங்கவேண்டும் என்ற முறையீட்டாளரின் கோரிக்கை ஏற்புடையதா என்பது ஆராயப்பட வேண்டியதாகும். தவிர்க்க இயலாத மற்றும் இயற்கை பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் காலதாமதத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் கால தாமதத்திற்கு முறையீட்டாளர் செலுத்தியுள்ள தொகைக்கு வட்டி வழங்கப்படமாட்டாது என்றும் ஒப்பந்தத்தில் எழுதப்பட்டு உள்ளது என்றும் அதனை ஒப்புக்கொண்டு முறையீட்டாளர் கையொப்பம் செய்து கொடுத்துள்ளார் என்றும் எதிர்த் தரப்பினர் தங்கள் பதில் உரையில் கூறுவதை ஒப்புக் கொண்டாலும் அவ்வாறு ஏற்படும் கால தாமதத்திற்கு ஒரு நியாயமான கால வரையறை இருக்க வேண்டும். மாறாக அது முற்றுப்புள்ளி பெறாத ஒரு தாமதமாக இருக்கக் கூடாது. தவிர்க்க இயலாத மற்றும் இயற்கை பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட கால தாமதத்திற்கு ஓராண்டு காலம் கருணை காலமாக (grace period) எடுத்துக்கொண்டாலும் கூட அதற்குப் பின்னரும் இதே காரணத்தின் அடிப்படையில் ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடத்தை ஒப்படைப்பு செய்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்கமுடியாது என முதலாவது வினாவில் தீர்மானிக்கப்பட்ட முடிவு இந்த கேள்விக்கும் பதிலாக அமைகிறது. இதனால் ஓராண்டு கால தாமதம் கருணை காலமாக நிர்ணயம் செய்துகொண்டு 01-06-2013 ஆம் தேதியிலிருந்து முறையீட்டாளர் செலுத்திய தொகை ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டு ஒன்றுக்கு ரூ நூற்றுக்கு 6 சதவீத வட்டி செலுத்த எதிர்தரப்பினர் கடமைப்பட்டவர் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
13. வழக்கின் தன்மையை சீர்தூக்கி ஆராய்ந்து நிலையில் முறையீட்டாளர் கூறும் வாடகை இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 2,00,000/- எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 3
14. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று ஆணையம் கருதவில்லை.
.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினருக்கும் முறையீட்டாளருக்கும் 02-06-2011 ஆம் தேதி ஏற்பட்டஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டடத்தை ரூ 2,67,380/- முறையீட்டாளரிடமிருந்து பெற்றுக் கொண்டு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 8 வார காலத்திற்குள் ஒப்படைப்பு செய்ய வேண்டும்.
02. 01-06-2013 ஆம் தேதியிலிருந்து முறையீட்டாளர் செலுத்திய தொகை ரூ 10,76,540/-க்கு ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டிடம் வழங்கப்படும் நாள் வரை ஆண்டு ஒன்றுக்கு ரூ நூற்றுக்கு 6 சதவீத வட்டி கணக்கிட்டு அந்த தொகையை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 8 வார காலத்திற்குள் ஒப்படைப்பு செய்ய வேண்டும்.
03. முறையீட்டாளர் கூறும் வாடகை இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ 2,00,000/- எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.
04. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 21-10-2022 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 25-01-2011 | Copy of Demand draft | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 15-03-2011 | Allotment order | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 24-04-2011 | Copy of Demand draft | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 06-05-2011 | Allotment letter | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 02-06-2011 | Agreement | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 03-08-2011 | Receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 13-10-2011 | Revised payment schedule | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | 02-01-2012 | Receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | 13-08-2012 | Letter on status | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.10 | 10-09-2012 | Receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.11 | 11-09-2012 | Receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.12 | 20-12-2012 | Letter | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.13 | 06-04-2017 | Legal notice | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.14 | 10-06-2017 | Acknowledment | ஜெராக்ஸ் |
எதிர் தரப்பினர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | 27-06-2017 | Authorization leter | Original |
எம.சா.ஆ.2 | 12-05-2017 | Letter from OP | Original |
எம.சா.ஆ.3 | 2-06-2012 | Letter from OP | xerox |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு ஆர். பிரபா
எதிர் தரப்பினர் தரப்பு சாட்சி: திரு பீட்டர் ராஜ்குமார்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.