Tamil Nadu

Ariyalur

RBT/CC/80/2022

C.Manoharan - Complainant(s)

Versus

M/s.Rajeshwari Infrastructur Ltd - Opp.Party(s)

N.Jaya Kumar

02 Feb 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 16-05-2017 (Chennai South)

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 02-02-2023

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண் (RBT CC No):  80/2022.

 

01.       சென்னை, கொளத்தூர், சோமநாதபுரம், முதல் தெரு, இலக்கம் 19/46 -ல் வசித்த சி. மனோகர்( இறப்பு),

 

02.       சென்னை, கொளத்தூர், சோமநாதபுரம், முதல் தெரு, இலக்கம் 19/46 -ல் வசிக்கும் சி. மனோகர்( இறப்பு) மனைவி எம். சுதா,

 

03.       சென்னை, கொளத்தூர், சோமநாதபுரம், முதல் தெரு, இலக்கம் 19/46 -ல் வசிக்கும் சி. மனோகர்(இறப்பு) மகள் இளவர் எம். தனுஸ்ரீ,  தாயாரும் இயற்கை காப்பாளருமான இரண்டாம் முறையீட்டாளர் மூலம்.

 

04.       சென்னை, கொளத்தூர், சோமநாதபுரம், முதல் தெரு, இலக்கம் 19/46 -ல் வசிக்கும் சி. மனோகர்( இறப்பு)  மகன் இளவர் எம். அபிஷேக், தாயாரும் இயற்கை காப்பாளருமான இரண்டாம் முறையீட்டாளர் மூலம்.

                                                                                                 -முறையீட்டாளர்கள்

 

01.       சென்னை, நந்தனம், கிழக்கு சிஐடி நகர், 2வது குறுக்கு தெரு, இலக்கம் 18/23 -ல் உள்ள M/s. Rajeswari Infrastrecture Limited, அதன் நிர்வாக இயக்குனர் மூலம்                                

 

02.       சென்னை, நந்தனம், கிழக்கு சிஐடி நகர், 2வது குறுக்கு தெரு, இலக்கம் 18/23 -ல் உள்ள M/s. Rajeswari Infrastrecture Limited, அதன் நிர்வாக இயக்குனர் ஜி ராமமூர்த்தி         

 

03.       சென்னை, தியாகராயநக,ர் ஜி என் செட்டி சாலை, இலக்கம் 109 உள்ள பர்சன் பாரடைஸ் அபார்ட்மெண்ட்ஸ், இலக்கம் G-4 உள்ள M/s. Rajeswari Foundations Limited,                                                                   - எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளர்களுக்கு திரு என். ஜெயக்குமார் வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர்தரப்பினர்களுக்கு திரு ஜே, கௌதமன், வழக்கறிஞர் முன்னிலையாகியும்   இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      31-01-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-01, அவரது சான்றாவணங்கள் – 19, எதிர் தரப்பினரின் பதில் உரை, அவரது சான்றாவணங்கள் – 13,, எதிர் தரப்பினரின் சாட்சியம்-01  மற்றும் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

 

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர்கள் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர்  தரப்பினர்கள் தங்களிடம் கூடுதலாக வசூலித்த தொகை ரூ 20,967/- ஐ தங்களுக்கு திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கண்டுள்ள சொத்தை அனைத்து வசதிகளுடனும் தங்களுக்கு உடனடியாக எதிர் தரப்பினர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் கட்டுமானத்தை முடித்து சொத்தை ஒப்படைக்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடாக தங்களுக்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட வாடகை இழப்புக்கு ரூ 2 லட்சம் எதிர் தரப்பினர்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை ஆகியவற்றிற்கு இழப்பீடாக தங்களுக்கு எதிர் தரப்பினர்கள் ரூ ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்கள் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்கள்.

 

  • ர்கள் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

03.       காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், வண்டலூர் கிராமம், விஜய விக்னேஸ்வர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாகப்பிரிவினை செய்யப்படாத 429.84 சதுர அடி காலியிடம் தமக்கு 20-02-2013 ஆம் தேதி விற்பனை ஆவணம் மூலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் கடந்த 26-11-2012 ஆம் தேதியில் தாங்களும் முதலாம் எதிர் தரப்பினரும் மேற்படி இடத்தில் 777 சதுர அடி கட்டுமான பரப்பு கொண்ட குடியிருப்பு வீட்டை கட்டுவதற்கு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம் என்றும் அதன்படி தாங்கள் ரூ 21,69,340/- செலுத்த வேண்டும் என்றும் முதலாம் எதிர்தரப்பினர் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டுமான பணியை முடித்து வீட்டை ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற விவரங்களுடன் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் இவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட   எழுபத்தி ஐந்து நாட்களுக்குள் 90 சதவீத தொகையை தாங்கள் செலுத்தி விட்டோம் என்றும் 25-07-2014 ஆம் தேதியில் முழு தொகையும் செலுத்தப்பட்டு விட்டது என்றும் இருப்பினும் எதிர் தரப்பினர் கட்டுமான ஒப்பந்தப்படி வீட்டை கட்டி முடித்து தங்களிடம் ஒப்படைக்க வில்லை என்றும் கூடுதலாக பணம் கேட்டனர் என்றும் தாங்கள்     கூடுதலாக ரூ 20,967/-செலுத்தியுள்ளோம் என்றும் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் கட்டி முடித்து வீட்டை ஒப்படைக்காமல் எதிர்தரப்பினர்கள் இருந்து வருவதோடு கூடுதலாக பணம் கேட்டு வருவது நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கைகள் காரணமாக தங்களுக்கு பெருத்த இழப்பும் சிரமமும் ஏற்பட்டுள்ளது என்றும் இது குறித்து எதிர் தரப்பினர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் முறையீட்டாளர் தமது புகாரை தாக்கல் செய்துள்ளார்கள்.

04.       எனவே, எதிர்  தரப்பினர்கள் தங்களிடம் கூடுதலாக வசூலித்த தொகை ரூ 20,967/- ஐ தங்களுக்கு திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கண்டுள்ள சொத்தை அனைத்து வசதிகளுடனும் தங்களுக்கு உடனடியாக எதிர் தரப்பினர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் கட்டுமானத்தை முடித்து சொத்தை ஒப்படைக்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடாக தங்களுக்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட வாடகை இழப்புக்கு ரூ 2 லட்சம் எதிர் தரப்பினர்கள் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை ஆகியவற்றிற்கு இழப்பீடாக தங்களுக்கு எதிர் தரப்பினர்கள் ரூ ஒரு லட்சம் வழங்க வேண்டும்   என்றும் முறையீட்டாளர்கள் தமது புகாரில்   கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

 

எதிர்  தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

05.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர்கள் நிரூபிக்க கடமைப்பட்டவர்கள் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர்  தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.

 

06.       முறையீட்டாளர்கள்  புகாரில் தெரிவித்துள்ளபடி   கட்டுமான ஒப்பந்தம் ஏற்பட்டது உண்மை என்றும் இந்த ஒப்பந்தப்படி செலுத்தவேண்டிய தொகைகளை ஒப்பத்தில் கண்டுள்ள தவணை காலத்தில் முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவில்லை என்றும் இது குறித்து மின்னஞ்சல்கள் மூலம் தகவல் தெரிவித்தும் முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவேண்டிய மீத தொகை செலுத்தப்படவில்லை என்றும் இதன் காரணமாகவே தாங்கள் கட்டிடத்தை ஒப்படைப்பு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும்   தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் செலுத்த வேண்டிய தொகையில் தள்ளுபடி செய்து தொகை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவ்வாறு தொகை செலுத்தப்பட்டால் கட்டிடத்தை ஒப்படைப்பு செய்ய தயாராக இருப்பதாகவும் தங்கள் தரப்பில் எவ்வித நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இதனால் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பிற சங்கதிகளை தெரிவித்தும் எதிர்  தரப்பினர்கள் தமது பதிலை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

07.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்கள்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்கள்   நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு  புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்கள்   நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் எனில் முறையீட்டாளர்கள் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            3)         இம் முறையீட்டாளர்கள்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

08.       முறையீட்டாளர்கள்  புகாரில் தெரிவித்துள்ளபடி   கட்டுமான ஒப்பந்தம் ஏற்பட்டது உண்மை என்று தங்கள் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளதால் முறையீட்டாளர்கள் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

09.       முறையீட்டாளர்கள் தரப்பிற்கும் முதலாம் எதிர் தரப்பினருக்கும் ஏற்பட்ட 26-11-2012 ஆம் தேதியை ஒப்பந்தப்படி 25-11-2014 ஆம் தேதிக்குள் முதலாம் எதிர் தரப்பினர் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிபந்தனைகளின் படி கட்டிடத்தை கட்டி முடித்து முறையீட்டாளர்கள்  தரப்பிற்கு ஒப்படைக்க வேண்டும் என்பதும் இதற்காக முறையீட்டாளர்கள் தரப்பில் ரூ 21,69,340/-  செலுத்தப்பட வேண்டும் என்பதும் மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அம்சமாக உள்ளது.  முறையீட்டாளர்கள் தரப்பில் மேற்படி தொகையானது எப்போது செலுத்தப்பட வேண்டும் என்ற விவரம் முறையீட்டாளர்கள்  தரப்பு முதலாவது சான்றாவணம் - கட்டுமான ஒப்பந்தத்தில் ஐந்தாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு.

On completion of

% of total cost

On Construction agreement

20%

On UDS Registration

40%

On completing first floor upto roof including finishing work

15%

On completing second floor upto roof including finishing work

10%

On completing third floor upto roof including finishing work

10%

On completion of pleastering, painting

5%

On handing over possession

Rs.10,000/-

 

10.       முறையீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை செலுத்தி விட்டதாக கூறும் நிலையில் அந்த தொகை செலுத்தப்படவில்லை என்று எதிர்த் தரப்பினர்கள் சார்பில் மறுக்கப்படவில்லை. மாறாக ஒப்பந்தத்தில் கூறியுள்ள தவணை காலத்தில் தொகையை செலுத்த படாததால் ஒப்பந்தப்படி அபராத தொகை செலுத்த வேண்டும் என்று தங்கள் பதிலுரையில் தெரிவித்துள்ளார்கள் இந்த விவரம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியதாகும்.

11.       (i)        முதலாவது தவணை என்பது கட்டுமான ஒப்பந்தம் ஏற்பட்ட தேதியாகும். அந்த நாளில் முறையீட்டாளர்கள் தரப்பில் ஒப்பந்த தொகையில்   20 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் அவர் எவ்வளவு தொகையை செலுத்தினார்? 20 சதவீத தொகையை செலுத்தவில்லை எனில் மீத தொகை எவ்வளவு? அதைச் செலுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்? அதற்கான அபராதம் எவ்வளவு?

 

(ii)        இரண்டாவது தவணை தொகை என்பது UDS Registration தேதியாகும். அந்த நாளில் முறையீட்டாளர்கள் தரப்பில் ஒப்பந்த தொகையில்   40 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் அவர் எவ்வளவு தொகையை செலுத்தினார்? 40 சதவீத தொகையை செலுத்தவில்லை எனில் மீத தொகை எவ்வளவு? அதைச் செலுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்? அதற்கான அபராதம் எவ்வளவு?

 

(iii)       மூன்றாவது தவணை   என்பது எதிர்  தரப்பினர்கள் ஒப்புக்கொண்ட வீடு உள்ள குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒப்பந்தப்படி மேற்கண்ட பணி எந்த நாளில் நிறைவு பெற்றது?.   நிறைவு பெற்ற நாளில் 15 சதவீத தொகையை முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவில்லை எனில் மீத தொகை எவ்வளவு? அதைச் செலுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்? அதற்கான அபராதம் எவ்வளவு?

 

(iv)       நான்காவது தவணை   என்பது எதிர்  தரப்பினர்கள் ஒப்புக்கொண்ட வீடு உள்ள குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒப்பந்தப்படி மேற்கண்ட பணி எந்த நாளில் நிறைவு பெற்றது?.   நிறைவு பெற்ற நாளில் 10 சதவீத தொகையை முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவில்லை எனில் மீத தொகை எவ்வளவு? அதைச் செலுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்? அதற்கான அபராதம் எவ்வளவு?

 

 

(iv)       ஐந்தாவது தவணை   என்பது எதிர்  தரப்பினர்கள் ஒப்புக்கொண்ட வீடு உள்ள குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒப்பந்தப்படி மேற்கண்ட பணி எந்த நாளில் நிறைவு பெற்றது?.   நிறைவு பெற்ற நாளில் 10 சதவீத தொகையை முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவில்லை எனில் மீத தொகை எவ்வளவு? அதைச் செலுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்? அதற்கான அபராதம் எவ்வளவு?

 

(vi)       ஆறாவது தவணை   என்பது எதிர்  தரப்பினர்கள் ஒப்புக்கொண்ட வீடு உள்ள குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பின் plestereing and painting பணிகள் நிறைவடைந்தவுடன் செலுத்தப்பட வேண்டியதாகும். ஒப்பந்தப்படி மேற்கண்ட பணி எந்த நாளில் நிறைவு பெற்றது?.   நிறைவு பெற்ற நாளில் 5 சதவீத தொகையை முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவில்லை எனில் மீத தொகை எவ்வளவு? அதைச் செலுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார்? அதற்கான அபராதம் எவ்வளவு?

 

            குறிப்பிட்டுள்ள தொகையானது முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தப்பட்டு விட்டது என்றும் தவணை காலத்தில் செலுத்தாத காரணத்தால் ஒப்பந்தப்படி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்  தரப்பினர்கள் பதில் கூறும் நிலையில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எதிர் தரப்பினர்களுக்கு உண்டு. ஆனால் அதனை எதிர்  தரப்பினர்கள் செய்யத் தவறி விட்டனர். இத்தகைய விவரங்களை தராமல் முறையீட்டாளர்கள் தரப்பில் காலம் கடந்து தவணைத் தொகை செலுத்தப்பட்டது என்பதால் செலுத்தவேண்டிய அபராதத் தொகை பாக்கி தொகையாக உள்ளது என்று கூறும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

12.       ஒப்பந்தத்தில் 100 சதவீத தொகை முழுவதும் ஆறு தவணைகளில் செலுத்தப்பட்ட பின்னர் சொத்தை சுவாதீனம் வழங்கும்போது ரூ 10,000/- செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளது எதிர்  தரப்பினர்கள் புரிந்துள்ள நியாயமற்ற ஒப்பந்த  வர்த்தக நடைமுறை   என இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

13.       ஒப்பந்தப்படி செலுத்தவேண்டிய தொகைகளை ஒப்பத்தில் கண்டுள்ள தவணை காலத்தில் முறையீட்டாளர்கள் தரப்பில் செலுத்தவில்லை எனில் ஒப்பந்தப்படி 36% அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளது எதிர்  தரப்பினர்கள் புரிந்துள்ள நியாயமற்ற ஒப்பந்த  வர்த்தக நடைமுறை என இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. மேலும் நிலுவைத்தொகை உள்ளது எனக் குறிப்பிட்டு எதிர் தரப்பினர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களில் (முறையீட்டாளர்கள் சான்றாவணம்) நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் வாரத்துக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

14.       முறையீட்டாளர்கள் தரப்பில் முழு தொகை செலுத்தியும் ஒப்பந்தப்படி இரண்டு ஆண்டு காலத்திற்குள் வீட்டை கட்டி முடித்து அதனை ஒப்படைப்பு முறையீட்டாளர்களிடம் தராதது எதிர்  தரப்பினர்கள் புரிந்துள்ள நியாயமற்ற வர்த்தக நடைமுறையுடன் கூடிய சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. 

 

15.       25-11-2014 ஆம் தேதிக்குள் முதலாம் எதிர் தரப்பினர் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிபந்தனைகளின்படி கட்டிடத்தை கட்டி முடித்து முறையீட்டாளர்கள்  தரப்பிற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் எட்டு ஆண்டுகள் கால தாமதம் செய்திருப்பது மிகப்பெரிய நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றும் இதனால் மிகுந்த இழப்பும் சிரமமும் முறையீட்டாளர்களுக்கு ஏற்படுவது ஈடு செய்ய இயலாதது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

எழு வினா எண் – 2

 

16.       எதிர் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையுடன் கூடிய சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் எதிர் தரப்பினர்களுக்கும் முறையீட்டாளர்களுக்கும் ஏற்பட்ட 26-11-2012 ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டடத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வார காலத்திற்குள் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளர்களுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

17.       எதிர் தரப்பினர்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறையுடன் கூடிய சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் எதிர் தரப்பினர்கள் கட்டுமானத்தை முடித்து சொத்தை ஒப்படைக்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடாக தங்களுக்கு ரூ 2 லட்சம், எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட வாடகை இழப்புக்கு ரூ 2 லட்சம்,  எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை இழப்பீடாக தங்களுக்கு எதிர் தரப்பினர்கள் ரூ ஒரு லட்சம் ஆக மொத்தம் ரூ 5 லட்சத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வார காலத்திற்குள் முறையீட்டாளர்களுக்கு எதிர்  தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் தவறினால் மேற்படி தொகை வழங்கப்படும் நாள் வரை ரூ 5 லட்சத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ நூற்றுக்கு 12 சதவீத வட்டி   சேர்த்து எதிர்த் தரப்பினர்கள் முறையீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 எழு வினா எண் – 3

 

18.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. இதர வேறு பரிகாரங்கள் எதுவும் இந்த வழக்கில் தேவைப்படுகிறது என்று ஆணையம் கருதவில்லை.

.

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       எதிர் தரப்பினர்களுக்கும் முறையீட்டாளர்களுக்கும் ஏற்பட்ட 26-11-2012 ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தப்படி குடியிருப்பு கட்டடத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வார காலத்திற்குள் எதிர் தரப்பினர்கள்முறையீட்டாளர்களுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும்.

 

02.       எதிர் தரப்பினர்கள் கட்டுமானத்தை முடித்து சொத்தை ஒப்படைக்க ஏற்பட்ட கால தாமதத்திற்கு இழப்பீடாக தங்களுக்கு ரூ 2 லட்சம், எதிர் தரப்பினர்களின் செய்கையால் ஏற்பட்ட வாடகை இழப்புக்கு ரூ 2 லட்சம்,  எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை இழப்பீடாக தங்களுக்கு எதிர் தரப்பினர்கள் ரூ ஒரு லட்சம் ஆக மொத்தம் ரூ 5 லட்சத்தை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 4 வார காலத்திற்குள் முறையீட்டாளர்களுக்கு எதிர்  தரப்பினர்கள் வழங்க வேண்டும். தவறினால் மேற்படி தொகை வழங்கப்படும் நாள் வரை ரூ 5 லட்சத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ நூற்றுக்கு 12 சதவீத வட்டி   சேர்த்து எதிர்த் தரப்பினர்கள் முறையீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும்.

 

03.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  02-02-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                    தலைவர்.    

 

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

முறையீட்டாளர்கள்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

26-11-2012

கட்டுமான ஒப்பந்தம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

26-11-2012

விற்பனை ஒப்பந்தம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

18-02-2013

கடன் அனுமதி கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

20-02-2013

விற்பனை ஆவணம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

09-12-2013

எதிர் தரப்பினரின் மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

27-05-2014

எதிர் தரப்பினரின் கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

25-07-2014

பணம் செலுத்திய ரசீதுகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

14-11-2014

எதிர் தரப்பினரின் மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

25-11-2014

எதிர் தரப்பினருக்கு அனுப்பிய கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

22-01-2015

எதிர் தரப்பினருக்கு அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

25-02-2015

வட்டிக்கான சான்றிதழ்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.12

30-12-2015

புகார்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.13

03-11-2015

எதிர் தரப்பினருக்கு அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.14

22-08-2016

22-08-2016 ஆம் தேதியில் நிலுவையில் உள்ள வேலைகள் விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.15

17-11-2016

வழக்கறிஞர் அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.16

18-11-2016

அஞ்சல் ஒப்புகை அட்டை மற்றும் திரும்பி வந்த அஞ்சல் உறை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.17

12-02-2016

12-02-2016ஆம் தேதியில் நிலுவையில் உள்ள வேலைகள் விவரம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.18

-

விவரக்குறிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.19

-

புகைப்படங்கள்

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

எம.சா.ஆ.1

26-11-2012

விற்பனை ஒப்பந்தம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.2

26-11-2012

கட்டுமான ஒப்பந்தம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.3

20-02-2013

விற்பனை ஆவணம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.4

27-05-2014

எதிர் தரப்பினரின் கடிதம்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.5

27-04-2011

திட்ட அனுமதி

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.6

23-07-2013

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.7

07-07-2014

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.8

16-06-2014

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.9

19-06-2014

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.10

27-06-2014

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.11

09-07-2014

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.12

27-05-2014

முறையீட்டாளருக்கு எதிர் தரப்பினர் சார்பில் அனுப்பிய மின்னஞ்சல்

ஜெராக்ஸ்

எம.சா.ஆ.13

-

கணக்கு விவரம்

ஜெராக்ஸ்

 

முறையீட்டாளர்கள்   தரப்பு  சாட்சி:  திருமதி சுதா

எதிர்தரப்பினர்கள் தரப்பு  சாட்சி: M/s. Rajeswari Infrastrecture Limited, நிர்வாக இயக்குனர்

                                                           

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.