Tamil Nadu

Namakkal

CC/33/2016

Mrs.NITHYA - Complainant(s)

Versus

Mrs.DR.MEGALA, M.B.B.S.,D.G.O - Opp.Party(s)

S.JAYARAMACHANDRAN

25 Nov 2022

ORDER

DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION
NAMAKKAL
TAMILNADU
 
Complaint Case No. CC/33/2016
( Date of Filing : 28 Nov 2016 )
 
1. Mrs.NITHYA
W/O SENTHIL KUMAR,4/211,JAINAGAR,N.KOSAVAMPATTI,NAMAKKAL
...........Complainant(s)
Versus
1. Mrs.DR.MEGALA, M.B.B.S.,D.G.O
GANGA HOSPITAL,TRICHY ROAD,NAMAKKAL 637001
............Opp.Party(s)
 
BEFORE: 
  TMT.S.TAMILSELVI.,B.A.,B.L., PRESIDENT
  THIRU P.M.MUTHUKUMAR.,M.A., MEMBER
 
PRESENT:
 
Dated : 25 Nov 2022
Final Order / Judgement

மனு கோப்பிற்கு எடுக்கப்பட்ட நாள்

27.10.2016

உத்தரவு பகிரப்பட்ட நாள்

25.11.2022

 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.

 

முன்னிலை:

திருமதி. எஸ். தமிழ்ச்செல்வி, பிஏ. பிஎல்.,  தலைவர்

திரு . பி.எம். முத்துக்குமார்எம்..,     உறுப்பினர்  I

 

 

C.C.NO. 33/2016

2022ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 25ம் நாள் வெள்ளி கிழமை

 

ஜே நித்தியா

க. பெ செந்தில்குமார் 4/211, ஜெய் நகர்

N. கொசவம்பட்டி, நாமக்கல்

 

….. முறையீட்டாளர்

/ எதிராக /

 

டாக்டர் மேகலா, M.B.B.S., DGO.,

கங்கா மருத்துவமனை,

திருச்சி ரோடு நாமக்கல் 01.

  • ….. எதிர்முறையீட்டாளர்

 

ஆய்ந்த கருத்துக் உத்தரவு பிறப்பிப்பவர்

திரு. பி.எம். முத்துக்குமார், உறுப்பினர் 1:

 

இம்முறையீட்டு 27.10.2016லிருந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு 16.08.2022 அன்று எங்கள் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தபோது, இம்முறையீட்டு மனுவில் முறையீட்டாளர்  சார்பாக எஸ்.ஜெயராமச்சந்திரன், B.A., B.L.,  முன்னிலை ஆஜராகியும்,   எதிர்முறையீட்டாளர் தரப்பின் சார்பாக D.M. செந்தில்குமார், B.A., B.L., முன்னிலை ஆகியும் மற்றும்  முறையீட்டாளர் தரப்பு & எதிர்முறையீட்டாளர் தரப்பின் வாதங்களைக்கேட்டும்,  ஆவணங்களை பரிசீலனை செய்தும் இதுநாள் வரை எங்கள் ஆய்வில் இருந்து இன்று இவ்வாணையம் பிறப்பிக்கப்படும்

உத்தரவு

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 12 இன் படி தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடு.

  1. முறையீட்டின் சுருக்கம் வருமாறு :

        முறையிட்டாளருக்கு கர்ப்பமானதிலிருந்து எதிர்முறையீட்டாளரிடம் அவரது மருத்துவமனையில் தான் சென்று ஆலோசனை பெற்று வந்து கொண்டுயிருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் முறையீட்டாளர் கடந்த 26.03.2016ஆம் தேதியில்  பிரசவ வலி ஏற்பட்டு இரவு 8:20மணிக்கு எதிர்முறையீட்டாளரின் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முறையிட்டாளரே முழுவதுமாக சோதனை செய்த எதிர்முறையீட்டாளர் எல்லா சோதனையையும் நன்றாக உள்ளது என்றும் குழந்தையின் இதயத்துடிப்பும் நன்றாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

எதிர்முறையீட்டாளர் 26.03.2011ம் தேதி அன்று இரவு 10மணிக்கு எவ்வித எச்சரிக்கை முறைகளை பின்பற்றாமல் செயற்கை முறையில் பிரசவ வலி ஏற்படுத்தினார். செயற்கை பிரசவ வலி ஏற்படுத்தினால் குழந்தையின் நிலை மாறக் கூடிய வாய்ப்பு Head Engagement ஆவதற்கு முன்னர் செயற்கை பிரசவ வலி ஏற்படுத்தினால் பிரசவம் மிகவும் கஷ்டமாகி விட வாய்ப்பு உள்ளது என்பதையும், தொப்புள் கொடியில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளாமல் செயற்கை பிரசவ வலியை எதிர்முறையீட்டாளர் தூண்டினார்.

                 மேற்படி செயற்கை பிரசவலியை ஏற்படுவதை குறித்து முறையீட்டாளரிடமும் அவர் கணவரிடமும் எதிர்மனுதாரர் தெரிவிக்கவில்லை. செயற்கை பிரசவ வலிகள் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி முறையீட்டாளரிடமும் அவரது கணவரிடமும் எதிர்முறையீட்டாளர் விளக்கமாக கூறி அவர்களின் சம்மதத்தை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த முறையிட்டில் குழந்தை பிறந்த நேரத்திற்கும் செயற்கை பிரசவ வலியை ஏற்படுத்தி இருக்கும் இடைவெளி நீண்ட இடைவெளியாக உள்ளது.

 

                   செயற்கை பிரசவலி ஏற்படுத்தியதின் காரணமாக குழந்தையின் தலை வெளிய வருவதற்கு முன்பே தொப்புள் கொடி குழந்தை சுற்றிக்கொண்டு விட்டது. எதிர்முறையீட்டாளர் மற்றும் அவரது மருத்துவச்சிகள் கவனக்குறைவால் செயற்கை பிரசவ வலி ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக இரவு 11PM மணிக்கு குழந்தை இறந்து பிறந்தது. எதிர்முறையீட்டாளர் மேற்படி செயற்கை பிரசவலியால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள தயாரான நிலையில் இருந்திருக்க வேண்டும். தொப்புள் கொடி சுற்றப்பட்டதன் காரணமாக குழந்தை இறந்து விட்டது எனவே தொப்புள் கொடி சுற்றப்பட்டது தெரிந்தவுடன் சிசேரியன் செய்து குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். எதிர்முறையீட்டாளர் தயார் நிலை இல்லாத காரணத்தால் தான் குழந்தை இறந்து பிறந்துள்ளது. எனவே இது எதிர்முறையீட்டாளரின் கவனக்குறைவு என்பது தெளிவாகிறது.

                    செயற்கை முறை பிரசவவலி ஏற்படுத்தியதும் காரணமாக தொப்புள் கொடி கருப்பையில் இருந்து பலமாக பிடுங்கப்பட்டதன் காரணமாக இரத்தம் 250கிராம் அளவிற்கு கருப்பையில் உறைந்து கட்டி ஆகிவிட்டது. இதனால் முறவிட்டாளருக்கு இரத்தப்போக்கு (Postpartum Haemorrhage) ஏற்படுத்தி விட்டது. எதிர்முறையீட்டாளர் முறையிட்டாரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி முறையீட்டாளரின் கணவரிடம் கையெழுத்தைப் பெற்றுள்ளார். ஆனால் எதற்கு அறுவை சிகிச்சை என்பது குறித்து எதுவும் சொல்லாமல் எதிர்முறையீட்டாளர் கையெழுத்து பெற்றுள்ளார். முறையீட்டாளரின் கருப்பையை எடுக்கத்தான் அறுவை சிகிச்சை என்று முன்பே கூறியிருந்தால் முறையீட்டாளரின் கணவர் கையெழுத்து போட்டுயிக்குமாட்டேன் என்கிறார். முறையீட்டாளருக்கு ஏற்கனவே குழந்தைகள் ஏதுமில்லை. எதிர்முறையீட்டாளரின் கவனக்குறைவால் முறையீட்டாளரின் குழந்தை இறந்து விட்டது. முறையீட்டாளரின் கருப்பை நீக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக முறையீட்டாளர் மற்றும் அவரது கணவர் எதிர்காலமே இருண்டகால மாகிவிட்டது. மேற்படி நிலைமைக்கு எதிர்முறையீட்டாளரின் கவனக்குறைவே காரணமாகும்.

இதனால் முறையீட்டாளரின் தாய்மை அடையும் நிலையே போய்விட்டது. முறையீட்டாளர் தனது நிலைமை குறித்து கடந்த 10.05.2016ஆம் தேதியில் எதிர்மனுதாரரை ரூபாய்.10,00,000/ இழப்பீடு கோரி அறிவிப்பு அனுப்பியுள்ளார்.  அறிவிப்பினை பெற்றுக் கொண்ட எதிர்முறையீட்டாளர் 23.06.2016 தேதியில் பொய்யான சங்கதிகளை கொண்டும் புரியாத மருத்துவ வார்த்தைகளை கொண்டும் பதில் அறிவிப்பு அனுப்பியுள்ளார். மேற்படி எதிர்முறையீட்டாளரின் கவனக்குறைவால் முறையீட்டாளர் மற்றும் அவரது கணவர் மிகவும் மன வேதனையை துயரம் அடைந்துள்ளதாகவும். நியாயப்படி துயரத்தை பணத்தால் ஈடு செய்ய முடியாது எனினும், எதிர்மனுதாரர் முறையீட்டாளர்க்கு ரூபாய்.10,00,000/ கொடுக்க வேண்டியது அவசியமும் நியாயமாகவும் இருக்கிறது. இல்லாவிடில் முறையிட்டாளருக்கு பெருத்த இன்னலும் ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படும்.

 

  1. எதிர்மனுதாரர் சுருக்கம் வருமாறு :

முறையீட்டாளரின் மனு சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பானதாகும். முறையீட்டாளரின் மனு சட்டத்தை தவறாக துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும். முறையீட்டாளரருக்கு உள்ள அனைத்து சங்கதிகளும்  எதிர்முறையீட்டாளர் மறுக்கிறார். முறையீட்டாளர் கருவுற்றிலிருந்து முறையாக எதிர்முறையீட்டாளரிடம் தொடர் சிகிச்சைக்கு வந்தார். அவர் 26.03.2016ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதால் இரவு 8மணிக்கு எதிர்முறையீட்டாளர் மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக சேர்ந்தார், அவரை முழுமையாக பரிசோதித்த                           எதிர்முறையீட்டாளர் முறையீட்டாளரிடம் நன்றாக இருப்பதாகவும் கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பும் நல்லபடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். முறையீட்டாளர் எதிர்முறையீட்டாளர் மருத்துவமனைக்கு 26.03.2016ல் சிகிச்சைக்கு வந்த போது அவர் நிறைமாத கற்பனையாக இருந்தார். அவருக்கு பிரசவவலி 26.03.2016ல் மாலை 3மணியிலிருந்து இருப்பதாக தெரிவித்தவுடன் அவர் கருவுற்றில் இருந்தே எதிர்முறையீட்டாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டும் இருந்துள்ளார்.

                    முறையீட்டாளர் மருத்துவமனைக்கு வந்த போது அவரை எதிர்முறையீட்டாளர் முழுமையாக பரிசோதித்துள்ளார். அப்போது அவருடைய கருப்பை பிரசவ வலியால் சுருங்கி விரிந்து கொண்டிருந்தது. Pelvic பிரிம்க்கு மேலே தலை 3/5 பகுதி தெரிந்துள்ளது. 2/5 பகுதி Pelvic பிரிம்க்குள் சென்று கொண்டிருந்தபோது அந்த சந்தர்ப்பத்தில் தலை Pelvic பிரிம்க்குள் சென்று கொண்டிருந்தது. அதாவது 3/5 என்ற நிலையில் குழந்தையின் தலை Pelvisஇன் பிரிம்க்குள் சென்றுவிட்டாலும் Engaged ஆகவில்லை என்பதை குறிப்பிடுவதாகவும். 2/5 என்ற நிலையானது குழந்தையின் தலையில் Pelvic பிரிம்க்கு மேல் இருந்துள்ளது. இதை Not Engaged என அன்றைய பரிசோதனையில் அப்போதைய குழந்தையின் தலைப்பகுதி இருந்த நிலையை பற்றி case sheetல் எதிர்முறையீட்டாளர் எழுதியுள்ளார்.  

               அதே நேரத்தில் முறையீட்டாளர் பிறப்புறுப்பின் வழியாக பரிசோதித்த போது, Cervix என்ற கருப்பையின் வாயானது 3 சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்திருந்தது என்பதையும் Membrane உடைபடாமலும் இருந்தது. அத்துடன் இரத்த அழுத்தம் 110 /70 mm/Hg ஆகவும் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 80ஆகவும், SPO2 99% ஆகவும் இருந்துள்ளது. அத்துடன் பிறப்புறுப்பின் வழியாக முறையீட்டாளரே பரிசோதித்த போது குழந்தையின் தலைப்பகுதியானது At2 Station என்ற நிலையில் இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், Station of the head, in relation to ischial spines என்ற கணக்கிட்டானது Pelvis ன் ischial spine யை மையமாக வைத்து குழந்தையின் தலைப்பகுதி இருக்கும் நிலையை கணக்கிடப்படும் முறையாகும் என்பதே தெரிவித்துக்கொள்வதுடன், அதைப் பற்றியும் முறையீட்டாளருக்கு தெரிந்து கொண்டால் மட்டுமே, அவருடைய சந்தேகங்களை எதிர்முறையீட்டாளர் போக்க முடியும் என்பதால் எதிர்முறையீட்டாளர் அதை படங்களாகவும் மற்றும் மருத்துவ குறிப்புகளாகவும் தனது எழுத்துரை மற்றும் பிரதான சாட்சிய பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

          Spines are the most prominent bony projections felt on internal examination and the bispinous diameter is the shortest diameter of the pelvis in transverse plane being 10.5cm. The level of ischial spines (Written version See Fig. 12.21) is the halfway between the pelvic inlet and outlet. This level is known as station zero(o). the levels above and below the spines are divided into fifths to represent centimetres. The station is said to be O if the presenting part is at the level of the spines. The station is stated in minus figures, if it is above the spines (-1cm, -2cm, -3cm and -5cm) and in plus figures if it is below the spines (+1cm +2cm + 3cm +4cm and +5cm).

 

              மேற்கண்ட மருத்துவ குறிப்பில் Pelvis என்ற இடுப்பு பகுதியில் இருபக்கமுள்ள ischial spine களுக்கு இடைப்பட்ட பகுதி 10.5cmஎனவும், இந்த Inter spine space க்கு மேலே 1 முதல் 5 வரையிலான பாகங்கள் எனவும், Inter spine space ஆனது O வுக்கு கீழ்பகுதியில் +1 முதல் + 5 வரையிலான பாகங்கள் எனவும், பிரிக்கப்பட்டு பிரசவத்தின் போது குழந்தையின் தலைப்பகுதியிலிருக்கும் Station எந்த Station என்பதை நிர்ணயித்து கணக்கிடப்படுகிறது.

 

        இரவு 8.20மணிக்கு முறையீட்டாளர் எதிர்முறையீட்டாளரின் மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையின் தலைப்பகுதி Symphisis Pubis ன் கணக்குப்படி தலை Pelvis Brim க்குள் சென்றுவிட்டது என்பதையும், பிறப்புறுப்பின் வழியாக பரிசோதித்த போது தலை Inter Spine Space யின் கணக்குப்படி -2 g brim என்ற Pelvic Bone யின் உள்பகுதிக்குள்தான் இருந்தது என்பதை எதிர்முறையீட்டாளர் திட்டவட்டமாக கூறுகிறார். எதிர்முறையீட்டாளர் உள்நோயாளியாக சேர்க்கப்பட்ட போது குழந்தையின் இதயம் துடிப்பும் தாயின் உடல் நிலையும் நல்ல நிலையிலும் இருந்தது என்பது உண்மை.

 

முறையீட்டாளர் 26.03.2016 சுமார் 10மணிக்கு Artificial Rupture of Membranes என்ற பனிக்குடநீர்ப்பை உடைக்கப்பட்டது எனவும், அதன்படி முறையீட்டாளர் பிரசவ வலியை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் முறையீட்டாளர்  At 10.00Pm on 26.03.2016, You Started Artificial Rupture of Membranes in Order to Induce Labour vd கூறியுள்ளது உண்மைக்கு புறம்பானது. Artificial Rupture of Membranes என்ற பனிக்குட நீரை உடைத்துவிடும் ஒரு செய்கையானது எப்போதும் செய்யப்படுகிறது? எதற்காக செய்யப்படுகிறது? என்பதை முறையீட்டாளருக்கு அதன்படி                                  முறையீட்டாளருக்கு பிரசவவலியை ஏற்படுத்த எதிர்முறையீட்டாளர் என்பது முற்றிலும் பொய்.

 

Artificial Rupture of Membranes Medical uses என்பது நான்கு முக்கிய காரணத்துக்காக செய்யப்படுவதாகவும்

  1. பிரசவத்திற்காக கருவுற்ற தாய்மார்களின் கருப்பையில் பிரசவ வலியை ஏற்படுத்தவும்.
  2. அடுத்ததாக பிரசவ வலியுடன் உள்ள ஒரு தாய்க்கு அவருடைய பிரசவ வலியின் வீரியத்தை உயர்த்தவும் ARM செய்யப்படுகிறது எனவும்,
  3. அப்படி செய்யப்படும்போது அந்தப் பனிக்குட நீரில் உள்ள Prostaglandin ன் என்ற ஹார்மோன் ஆனது Cervix என்ற கருப்பையின் வாயின் மேல் விழும்போது அந்த வாய் விரிவதை அந்த ஹார்மோன் அதிகப்படுத்துவதுடன்,
  4. கருப்பையின் சுருங்கி விரிதலையும் அந்த ஹார்மோன் அதிகப்படுத்துவதையும் பிரசவவலியின் நேரத்தை குறைத்தும் நுரையீரல் பிரசவம் அடையாளம்.

 

Medical Uses:

There are four main reasons for performing an amniotomy:

To induce labor or augment uterine activity. This is the most common reason for an amniotomy . The amniotic fluid is rich in a hormone called prostaglandins., and the bathing of the  cervix by this fluid increases the strength and frequency of uterine contractions. Sometimes, if all of the criteria for rupture (listed below) are met, amniotomy is the least interventive way to get labor started or to make the labor more progressive and functional.

 

முறையீட்டாளர் போதிய மருத்துவம் ஞானம் இல்லாததாலேயே அவருக்கு பிரசவ வலியை துவக்கி வைக்க ARM செய்ததாக முறையீட்டாளர்        கூறியுள்ளது பொய்யாகும். முறையீட்டாளர் மருத்துவமனைக்கு வரும்போது இருந்த பிரசவ வலியை ஊக்குவிக்கதான் ARM செய்யப்பட்டது. பிரசவ வலியை உண்டாக்க ARM செய்யப்படவில்லை என்பதை எதிர்முறையீட்டாளர் கூறுகிறார். முறையீட்டாளர் ARM செய்வதற்கு முன்பு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எதிர்முறையீட்டாளர் எடுக்கவில்லை என்பது முற்றிலும் பொய்யாகும், ARM செய்வதற்கு முன் குழந்தையின் தலை unengaged ஆக இருந்ததால் குழந்தையின் தலைப்பகுதி மேலே சென்று breach கீழவர வாய்ப்பு உள்ளது எனவும் தொப்புள் கொடி வெளியே வர வாய்ப்பு உள்ளது என்பதையும் Infection என்ற நோய்க்கிருமியின் பாதிப்பும் ஏற்படும் என்பதற்காக எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் ARM செய்ததாக முறையீட்டாளர் கூறுவது முற்றிலும் பொய்யாகும்.

 

முறையீட்டாளர் 26.03.2016 இரவு 9மணிக்கு பரிசோதித்த போதும் கருப்பை நன்றாக சுருங்கி விரிந்து கொண்டிருந்ததுடன், அப்போது Unengaged ஆக குழந்தையின் தலைப்பகுதி Pelvis Brimக்குள் சென்று இருந்தவுடன் முன்பு இருந்த -2 Station என்ற நிலையிலும் Symphisis Pubis மேலிருந்து தலைப்பகுதியில் இரண்டு விரல் அளவுக்கு மட்டுமே Brim க்குள் இருந்தது என்பதை முன்பே ஆதாரத்துடன் எதிர்முறையீட்டாளர் கூறியுள்ளார். 26.03.2016 ல் இரவு 9:30மணிக்கு பரிசோதித்தபோது குழந்தையின் தலைப்பகுதியில் மேற்கண்ட அதே நிலையிலிருந்து எதிர்முறையீட்டாளர் கண்டறிந்துள்ளார். 26.03.2016ல் இரவு 10மணிக்கு முறையீட்டாளரை எதிர்முறையீட்டாளர் போது குழந்தையின் Vertex என்ற தலைப்பகுதியானது 1 Station ல்  இருந்தவுடன் Cervix ஆனது முழுமையாக மென்மையடைந்து 3cm முதல் 4சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்திருந்தது.

 

முறையீட்டாளர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டதிலிருந்து அவருக்கு சுமார் 2மணி நேரங்கள் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் தாய்க்கு நல்ல பிரசவவலி இருந்தும் எதிர்பார்த்தளவுக்கு குழந்தையின் தலைப்பகுதி இறங்காததால்  William Parkland Hospital Labor Management Protocol என்ற உலகில் உள்ள பல மகப்பேறு மருத்துவர்கள் கடைப்பிடிக்கும் Protocolகளின் படி முறையீட்டாளருக்கு ARM செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 11/2மணி நேரமாகியும் நல்ல பிரசவ வலியிருந்தும் திருப்தி தரும் வகையில் கருப்பையின் வாய் விரிவடையாததால் பிரசவத்தன்மை துரிதப்படுத்தவே ARM செய்யப்பட்டதாக எதிர்முறையீட்டாளர் கூறுகிறார். முறையீட்டாளருக்கு போதுமான ஆழமான மருத்துவ ஞானம் இல்லாததால் தான் கருப்பையில் இருந்த குழந்தை -1 Stationல் Pelvis க்குள் இருக்கும்போது அதன் Position மாற வாய்ப்பில்லை என்பது அவருக்கு தெரியாததாலும் அதேபோல Umbilical Cord என்ற தொப்புள் கொடியானது குழந்தையின் தலை Pelvis Brimக்குள் 2/5அளவுக்கு உள்ளே சென்றுவிட்ட நிலையில் Prolapse ஆகும் வாய்ப்பு மிக குறைவு என்பது தெரியாததாலும் அவற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ARM செய்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும் இதை எதிர்முறையீட்டாளர் முற்றிலும் மறுக்கிறார். எதிர்முறையீட்டாளர் மருத்துவமனையில்  Strict Aseptic Precaution ல் உரிய பாதுகாப்புடன் sterile conditionல் ARM செய்யப்பட்டு நுண்கொல்லி கிருமி மருந்து கொடுக்கப்பட்டதனால் Infection என்ற நோய்க்கிருமியின் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று  எதிர்முறையீட்டாளர் கூறுகிறார்

 

              முறையீட்டாளர் ARM செய்து முடித்து குழந்தை பிறக்கும் போது தலைப்பகுதியில் மட்டுமே வெளியிலே வந்தது என்பதையும் தொப்புள் கொடி முதலில் வெளிவரவில்லை என்பதையும் பிரசவத்தை நடத்திய எதிர்முறையீட்டாளர் நேரில் பார்த்தார். எனவே முறையீட்டாளர் பிரசவத்தின் போது ARM செய்ததால் Cord Prolapse ஏற்படவில்லை என்பதை எதிர்முறையீட்டாளர் திட்டமிட்டமாக கூறுகிறார். எதிர்முறையீட்டாளர் ARM செய்த பின் பிறந்த குழந்தையின் தலைப்பகுதி தான் முதலில் வந்தது என்பதால் முறையீட்டாளர் செய்த ARM குழந்தையின் Presenting Part மாறவில்லை என்பதையும் அதற்கு மிக மிக முக்கிய காரணம் குழந்தையின் தலை Pelvis Brim க்குள் சென்றுவிட்டதே காரணம் என்பதை எதிர்முறையிட்டார் திட்டவட்டமாக கூறுகிறார்.

 

                     முறையீட்டாளர் மருத்துவமனையில் இருந்தவரை முறையீட்டாளருக்கு எந்தவித நோய்க்கிருமியின் பாதிப்பும் இல்லை என்பதால் தான் செய்த ARM முறையீட்டாளருக்கு எந்தவித Infection ஏற்படவில்லை. முறையீட்டாளர் மருத்துவமனையில் அவருடைய சொந்த Implied Consent என்ற விருப்பத்தின்படியே பிரசவத்திற்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார் அப்படி பிரசவத்திற்காக அவருடைய சொந்த Implied Consent உடன் சேர்ந்த அவரிடமிருந்து பிரசவத்தின் போது அவருக்கு போடக்கூடிய Syntocin, Methergin ஊசிகளுக்கு சம்மதத்தையும் பிரசவத்தின் போது தலை எளிதாக வெளியே வருவதற்கான செய்யக்கூடிய Episiotomy என்ற சிறு அறுவைசிகிச்சைக்கும் எப்படி எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாங்காமல் Implied Consent ஆதாரமாகக் கொண்டு பிரசவத்தின் போதுமான மேற்கண்ட சேவைகளை செய்கிறோமோ அதே போல் தான் மனுதாரருக்கு அவருடைய Implied Consent அப்படி செய்ய செய்ததே சட்டப்படி தவறல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக முறையீட்டாளருக்கு கீழே விளக்குமாறு எதிர் முறையிட்டார் கொடுத்துள்ளார்.

 

Appeal Civil 1948 of 2004 , date of Judgement : 16.01.2008 . Petitioner Samira Kohli Vs Respondent : Dr. Prabha Manchanda & Anr. By B.N.Agarwal, P.P Naolekar & R.V.Raveendran Supreme Court.

 

மேற்கண்ட தீர்ப்பில் கூறியுள்ளபடி மனுதாரர் அவருடைய ஆதாரமாகக் கொண்டே ARM செய்யப்பட்டது.

 

முறையீட்டாளர் ARM செய்த பின் குழந்தை பிறப்பதற்கு அதிக காலதாமதம் ஆனதாக மனுதாரர் கூறுவது முற்றிலும் பொய்யாகும். எந்த ஆதாரமில்லாத தவறான தகவலை முறையீட்டாளர் கூறி வருகிறார் ARM செய்யப்பட்டது 26.03.2016ல் இரவு 10மணி ஆகும். அதன்பின் முறையீட்டாளர் பிரசவம் ஏற்பட்டது. 26.03.2016 இரவு 11மணியாகும் செய்யப்பட்ட 1.40மணி நேரத்துக்கெல்லாம் பிரசவம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறப்பதற்கு எந்த காலதாமதமும் ஏற்படவில்லை முறையீட்டாளர் கூறுவது போல் சுகப்பிரசவத்திலேயே குழந்தை பிறந்தது என்பது முற்றிலும் பொய்யாகும். William Obstetrics மருத்துவ நூலியிருந்து இரண்டு முதல் நான்கு மணி நேரத்துக்குள் ARM செய்யப்பட்ட பின் குழந்தை பிறப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை தக்க ஆதாரமாகும், என்பதால் ARM செய்யப்பட்ட பின் 140மணி நேரத்திற்குள் பிறந்துள்ளது என்பதை                           எதிர்முறையீட்டாளர் கூறுகிறார்.

 

முறையிட்டாளருக்கு பிரசவத்தின் போது Umbilical Cord என்ற தொப்புள் கொடியானது குழந்தையின் தலைப்பகுதி வெளியே வருவதற்கு முன்பே தொப்புள்கொடி வெளியே வந்ததால் தான் குழந்தை பிறந்தது வெளியே வந்தவுடன் எதிர்முறையிட்டாளர் உடன் பணி செய்த ஊழியர்கள் தான் ARM செய்து தான் குழந்தை பிறந்ததாகவும் இரவு 11மணிக்கு குழந்தையின் இதை துடிப்பு நன்றாக இருந்ததாகவும் முறையீட்டாளர் கூறுவது முற்றிலும் பொய்யாகும். முறையிட்டாளருக்கு ARM செய்த பின் அவரைத் தொடர்ந்து இரவு 10.15மணி, 10.30மணி, 10.45மணி, 11மணி ஆகிய நேரங்களில் எல்லாம் குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது.

 

26.03.2016 இரவு 11மணிக்கு முறையீட்டாளரை பரிசோதித்தபோது குழந்தையின் தலைப்பகுதி Enaged ஆகி இருந்தத்துடன், குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாக இருந்தது அறியப்பட்டது. பிறப்புறுப்பின் வழியாக பரிசோதித்தபோது கருப்பையின் வாய் முழுமையாக மென்மையடைந்து 6cm சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்து இருந்தது. குழந்தை தலைப்பகுதி O stationல் இருந்தது. 26.03.2011 ல் இரவு 11.15மணிக்கு பரிசோதித்த போது கருப்பை நல்ல நிலையில் சுருங்கி விரிந்து கொண்டிருந்தது மேலும் குழந்தையின் தல பகுதியும் நன்றாக இருந்தது. ARM செய்யப்பட்ட இரவு 10 மணியிலிருந்து மனுதாரருக்கு Synto IV trip போய்க்கொண்டிருந்தது. அத்துடன் Inj.Ceftriaxone - 1gn IV ஆக கொடுக்கப்பட்டது. 26.03.2016 இரவு 11:30 மணிக்கு மனுதாரரை பரிசோதித்தபோது, அவருடைய நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 106ஆகவும்,  இரத்த அழுத்தம் 100/70mm/hg அதுவும் இருந்ததுடன் பிறப்புறுப்பின் வழியாக திடீரென்று இரத்தப்போக்கு ஏற்பட்டது.

 

அந்த சமயத்தில் குழந்தையின் தலைப்பகுதி நன்றாக Pelvisக்குள் இறங்கி Head Engaged ஆக இருந்தது. அப்போது குழந்தையின் இதயத்துடிப்பை கண்டறிய முடியவில்லை. பிறப்புறுப்பின் வழியாக பரிசோதித்தபோது கருப்பையின் வாயான cervix முழுமையாக மென்மையாக இருந்ததுடன் குழந்தையின் தலைப்பகுதி station-2ல் இருந்தத்துடன் பிறப்புறுப்பின் வழியாக இரத்தப்போக்கு ஏற்பட்டு கொண்டிருந்தது. உடனடியாக முறையிட்டாளருக்கு bedside USG scan செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பு முறையீட்டாளரிடமும் அவருடைய உறவினர்கள் இடமும் குழந்தையின் இதயத்துடிப்பு இல்லை என கூறப்பட்டது.

 

26.03.2016ல் இரவு 11.40மணிக்கு முறையிட்டாளருக்கு குழந்தை பிறந்த போது குழந்தையுடன் சேர்ந்து Placenta என்ற நெஞ்சம் வெளியே வந்தது நஞ்சின் பின்பகுதியில் 250mg அளவுக்கு இரத்தக்கட்டியும் இருந்ததை தொடர்ந்து குழந்தை பிறப்பதற்கு முன்பே Arbuptio Placenta என்ற நிலை placenta ஏற்படும் நெஞ்சுக்கும் கற்பைக்கும் இடையில் கீழ் இரத்தம் வெளியேறி உறைந்து உள்ளது என்பதை placenta வெளிய வந்த போது எங்களால் கண்டறிய முடிந்தது குழந்தையின் தொப்புள் கொடியானது prolapse ஆகவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்வதுடன் குழந்தையின் இறப்புக்கு Arbruptio Placenta வே காரணம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதுடன், அந்த Arbruptio Placentaவுக்கு முழு முதற்க்காரணம் முறையிட்டாளருக்கு நல்ல பிரசவ வலி இருந்தும் தொப்புள் கொடியானது உரிய நீளமில்லாமல் சற்று நீளம் குறைவாக இருந்ததால் குழந்தையின் கீழே இறங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.அப்படி தடுத்துக் கொண்டிருந்த தொப்புள் கொடியின் இருக்கும் சக்திகளை Placenta வானது கருப்பையிலிருந்து பிரிந்து Arbruptio Placenta என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் . அதற்கானப்பட விளக்கத்துடன் எதிர்முறையீட்டாளர் அவரது  எழுத்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக முறையீட்டாளர் concealed என்ற பிரசவத்தின் போது வெளியே தெரியாத Arbuptio Placenta என்ற நிலை தான் முறையிட்டாளருக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்படும் போது placenta வுக்கு அடியில் கசியும் இரத்தமானது வெளியே தெரியாதபடி அப்படியே இருக்கும் எனவும் சில சமயங்களில் அந்த இரத்தமானது Amniotic fluid க்குள் சென்று விடும் எனவும், cervix வழியாக சில சமயங்களில் வெளியேறும் எனவும்  எதிர்முறையிட்டாளர் தெரிவிக்கிறார். அதற்கான  மருத்துவ ஆதாரம் மற்றும் விளக்க படத்துடன் எதிர்முறையீட்டாளர் தனது எழுத்துரையில் குறிப்பிட்டுள்ளார். முறையிட்டாளருக்கு பிரசவம் முடிந்த பின் தொடர்ந்து உதிரப்போக்கு இருந்து கொண்டே இருந்ததால் முறையீட்டாளரின் உயிரைக் காக்க உடனடியாக அவருக்கு Hysterectomy அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கருப்பை மற்றும் cervix அதுவே அகற்றப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட போது முறையிட்டாளருக்கு Abruptio Placenta வின் பாதிப்பால் Couvelaire Uterus நிலை ஏற்பட்டு Myometrium மற்றும் serous ஆகிய layerகளில் எல்லாம் ரத்தக்கசிவு இரத்தக்கட்டிகளும் இருந்தன என்பதை Biopsy Report இந்நகலை பார்வைக்கு எதிர்முறையிட்டாளர் தனது  எழுத்துரையில் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்தும் முறையிட்டாளரின் கருப்பை முழுமையாக சுருங்காமல் Flabby ஆக இருந்ததுடன்,  அதிக உதிரப்போக்கும் இருந்ததால், அந்த உதிர போக்கை தடுக்க Inj. Syto, Methergin, Prostodin, Hot pack, Misoprostal and Bimanual uterus compression கொடுத்தும் கருப்பை சுருங்காமல் உதிரப்போக்கு கொட்டியிந்தது மற்றும் 8unit whole blood, 4 unit FFP ம் கொடுக்கப்பட்டும் முதலீட்டாளருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் முறையிட்டாலருக்கு Couvelaire Uterus ஆல் Disseminated Intravascular coagulation (DIC) மற்றும் Shockஎன்ற நிலை ஏற்பட்டு பிறகு உறுப்புகள் இரத்த கசிவால் பாதிக்காமல் இருக்க அவருக்கு Hystrectomy என்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ததினால் தான்  முறையீட்டாளரை  எதிர் முறையிட்டாளரால் காப்பாற்றப்பட்டார்.

 

                   முறையீட்டாளரின் கணவரிடம் பிரசவத்திற்கு பின் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் அதை தடுக்க தேவைப்பட்டால் கருப்பை எடுக்க நேரிடும் என்று தெளிவாக கூறப்பட்டு அதற்காக மனுதாரரின் கணவரின் எழுத்துப்பூர்வமான சம்மத கடிதம் பெறப்பட்டு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை பெற்றதற்கான கடிதம் 27.03.2016இல் முறையீட்டாளரின் கணவர் எழுதிக் கொடுத்த கொடுத்துள்ளார்.

 

                   கடிதத்தின் வரிகள் கூறியது போலவே அவருடைய சம்மதம் இல்லாமல் கருப்பை நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக                                    எதிர்முறை முறையீட்டாளர் தெரிவிக்கிறார். இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லை எனவும் இதுவரை குழந்தை இல்லை எனவும் எதிர்முறையீட்டாளரின் Medical Negligence யாலும் அஜாக்கிரதையாலும் முறையீட்டாளர் தன் குழந்தையை இறந்ததாக உள்ளதாகவும் அத்துடன் அவர் இனிமேல் குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவருடைய வாழ்க்கையை இருந்து விட்டதாகவும் அதற்கு முழு காரணம் முறையீட்டாளரின் அலட்சியமும் Negligenceயும் காரணம் முறையீட்டாளர் கூறுவது பொய்யாகும்.

 

புகார் சங்கதிகள் இன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பின்வருமாறு

  1. எதிர்முறையீட்டாளகள் முறையீட்டாளருக்கு  மருத்துவ  மற்றும் இதர சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது உண்மையா?     

 

  1. முறையீட்டாளருக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன?

 

  • தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு முறையீட்டாளர் சான்றாவணங்கள் ஒன்று (Ex.A1) முதல் நான்கு (Ex.A4) குறியீடு செய்யப்பட்டுள்ளனர்.  எதிர்முறையீட்டாளர் தரப்பில் டாக்டர்.மேகலா என்பவரால் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான சான்றுகளும் கொடுத்துள்ளார்.

பிரச்சினை  எண் : 1.    

இந்த இருதரப்பு சான்றாவணங்கள், எதிர்யுரைகள், வாதுரைகள்  மற்றும் முதன்மை சாட்சிய பிரதான வாக்குமூலங்களையும் ஆய்வு செய்ததில் முறையீட்டாளர் கருத்தரித்த நாளிலிருந்து எதிர் முறையீட்டாளரின் மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தும் ஆலோசனை பெற்றுள்ளார் என்பதை எதிர் முறையீட்டாளர் தனது பிரதான வாக்குமூலத்தில் ஒப்புக்கொள்கிறார் முறையீட்டாளருக்கு பிரசவ வலி ஏற்படவே எதிர்மறை விட்டாளரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனை ஆய்வுக்கு உட்படுத்தி குழந்தையின் நாடி துடிப்பு நன்கு உள்ளது என்பதையும் உறுதி செய்து உள்ளார் என்பதை அவரது பிரதான வாக்குமூலத்தில் ஒப்புக்கொள்கிறார் அதற்கான சான்றாவனம் Ex.A1 மருத்துவ குறிப்பு கள் உறுதி செய்கிறது.

எதிர்முறையீட்டாளர் இரவு 10மணிக்கு Artificial Rupture of Membranes அதாவது செயற்கை பிரசவவலி ஏற்பட கொடுத்துள்ளார் என்பதையும் எதிர்முறையீட்டாளர் தனது மறுப்புரையில் ஒப்புக்கொள்கிறார். அதற்கான சான்றாவனம் உறுதி செய்கிறது. அதற்கு முறையீட்டாளரிடம் Implied Concern வாங்கித்தான் எதிர்முறையீட்டாளர் ARM கொடுத்துள்ளார் இதை முறையீட்டாளரின் தரப்பு மறுக்கவில்லை.

முறையிட்டாளருக்கு ARM செய்த பின் அவரைத் தொடர்ந்து இரவு 10. 15 மணி,10:30மணி, 14.15மணி, 11மணி ஆகிய நேரங்களில்  எல்லாம் குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்ததாக எதிர்முறையீட்டாளர் ஒப்புக்கொள்கிறார்.

26.03.2016 இரவு 11மணிக்கு முறையீட்டாளரை பரிசோதித்தபோது குழந்தையின் தலைப்பகுதி Enaged ஆகி இருந்தத்துடன், குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாக இருந்தது அறியப்பட்டது. பிறப்புறுப்பின் வழியாக பரிசோதித்தபோது கருப்பையின் வாய் முழுமையாக மென்மையடைந்து 6cm சென்டிமீட்டர் அளவுக்கு விரிவடைந்து இருந்தது. குழந்தை தலைப்பகுதி O station ல் இருந்தது. 26.03.2011 ல் இரவு 11.15மணிக்கு பரிசோதித்த போது கருப்பை நல்ல நிலையில் சுருங்கி விரிந்து கொண்டிருந்தது மேலும் குழந்தையின் தலைப்பகுதியும் நன்றாக இருந்தது. ARM செய்யப்பட்ட இரவு 10 மணியிலிருந்து மனுதாரருக்கு Synto IV trip போட்டுயிருந்திருக்கிறார்கள். அத்துடன் Inj.Ceftriaxone -1gn IV ஆக கொடுத்துயிருக்கிறார். 26.03.2016 இரவு 11:30மணிக்கு முறையீட்டாளரை பரிசோதித்தபோது, அவருடைய நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 106ஆகவும், இரத்த அழுத்தம் 100/70mm/hg அதுவும் இருந்ததுடன் பிறப்புறுப்பின் வழியாக திடீரென்று இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

அந்த சமயத்தில் குழந்தையின் தலைப்பகுதி நன்றாக Pelvisக்குள் இறங்கி Head Engaged ஆக இருந்தது. அப்போது குழந்தையின் இதயத்துடிப்பை கண்டறிய முடியவில்லையாம். பிறப்புறுப்பின் வழியாக பரிசோதித்தபோது கருப்பையின் வாயான cervix முழுமையாக மென்மையாக இருந்ததுடன் குழந்தையின் தலைப்பகுதி station 2ல் இருந்தத்துடன் பிறப்புறுப்பின் வழியாக இரத்தப்போக்கு ஏற்பட்டு கொண்டிருந்திருக்கிறது. உடனடியாக முறையிட்டாளருக்கு bedside USG scan செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்பு முறையீட்டாளரிடமும் அவருடைய உறவினர்கள் இடமும் குழந்தையின் இதயத்துடிப்பு இல்லை என கூறியுள்ளார்கள்.

26.03.2016ல் இரவு 11.40மணிக்கு முறையிட்டாளருக்கு குழந்தை பிறந்த போது குழந்தையுடன் சேர்ந்து Placenta என்ற நஞ்சும் வெளியே வந்து நஞ்சின் பின்பகுதியில் 250mg அளவுக்கு இரத்தக்கட்டியும் இருந்ததை தொடர்ந்து குழந்தை பிறப்பதற்கு முன்பே Arbuptio Placenta என்ற நிலை placenta ஏற்படும் நெஞ்சுக்கும் கற்பைக்கும் இடையில் கீழ் இரத்தம் வெளியேறி உறைந்து உள்ளது என்பதை placenta வெளிய வந்த போது எதிர்முறையீட்டாளர்களால் கண்டறிய முடிந்தது குழந்தையின் தொப்புள் கொடியானது prolapse ஆகவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்வதுடன் குழந்தையின் இறப்புக்கு Arbruptio Placenta வே காரணம் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதுடன், அந்த Arbruptio Placentaவுக்கு முழு முதற்க்காரணம் முறையிட்டாளருக்கு நல்ல பிரசவ வலி இருந்தும் தொப்புள் கொடியானது உரிய நீளமில்லாமல் சற்று நீளம் குறைவாக இருந்ததால் குழந்தையின் கீழே இறங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.அப்படி தடுத்துக் கொண்டிருந்த தொப்புள் கொடியின் இருக்கும் சக்திகளை Placenta வானது கருப்பையிலிருந்து பிரிந்து Arbruptio Placenta என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிறார் எதிர்முறையீட்டாளர்.

குறிப்பாக முறையீட்டாளர் concealed என்ற பிரசவத்தின் போது வெளியே தெரியாத Arbuptio Placenta என்ற நிலை தான் முறையிட்டாளருக்கு ஏற்பட்டுள்ளதாகவும். அப்படி ஒரு நிலை ஏற்படும் போது placenta வுக்கு அடியில் கசியும் இரத்தமானது வெளியே தெரியாதபடி அப்படியே இருக்கும் எனவும் சில சமயங்களில் அந்த இரத்தமானது Amniotic fluid க்குள் சென்று விடும் எனவும், cervix வழியாக சில சமயங்களில் வெளியேறும் எனவும்  எதிர்முறையிட்டாளர் தெரிவிக்கிறார். அதற்கான  மருத்துவ ஆதாரம் மற்றும் விளக்க படத்துடன் எதிர்முறையீட்டாளர் தனது எழுத்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

முறையிட்டாளருக்கு பிரசவம் முடிந்தப்பின் தொடர்ந்து உதிரப்போக்கு இருந்து கொண்டே இருந்ததால் முறையீட்டாளரின் உயிரைக்காக்க உடனடியாக அவருக்கு Hysterectomy அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கருப்பை மற்றும் Cervix அதுவே அகற்றப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட போது முறையிட்டாளருக்கு Abruptio Placentaவின் பாதிப்பால் Couvelaire Uterus நிலை ஏற்பட்டு Myometrium மற்றும் serous ஆகிய layerகளில் எல்லாம் இரத்தக்கசிவு இரத்தக்கட்டிகளும் இருந்தன என்பதை Biopsy Report இந்நகலை பார்வைக்கு எதிர்முறையிட்டாளர் தனது  எழுத்துரையில் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்தும் முறையிட்டாளரின் கருப்பை முழுமையாக சுருங்காமல் Flabby ஆக இருந்ததுடன்,  அதிக உதிரப்போக்கும் இருந்ததால், அந்த உதிர போக்கை தடுக்க Inj. Syto, Methergin, Prostodin, Hot pack, Misoprostal and Bimanual uterus compression கொடுத்தும் கருப்பை சுருங்காமல் உதிரப்போக்கு கொட்டியிந்தது மற்றும் 8unit whole blood, 4 unit FFP ம் கொடுக்கப்பட்டும் முதலீட்டாளருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் முறையிட்டாலருக்கு Couvelaire Uterus ஆல் Disseminated Intravascular coagulation (DIC) மற்றும் Shockஎன்ற நிலை ஏற்பட்டு பிறகு உறுப்புகள் இரத்த கசிவால் பாதிக்காமல் இருக்க அவருக்கு Hystrectomy என்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ததினால் தான்  முறையீட்டாளரை  எதிர்முறையிட்டாளரால்  காப்பாற்றப்பட்டார் என தெரிவிக்கிறார்.

முறையீட்டாளரின் கணவரிடம் பிரசவத்திற்கு பின் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் அதை தடுக்க தேவைப்பட்டால் கருப்பை எடுக்க நேரிடும் என்று தெளிவாக கூறப்பட்டு அதற்காக மனுதாரரின் கணவரின் எழுத்துப்பூர்வமான சம்மத கடிதம் பெறப்பட்டு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை பெற்றதற்கான கடிதம் 27.03.2016 இல் முறையீட்டாளரின் கணவர் எழுதிக் கொடுத்துள்ளார். கடிதத்தின் வரிகள் கூறியது போலவே அவருடைய சம்மதம் இல்லாமல் கருப்பை நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக                                    எதிர்முறை முறையீட்டாளர் தெரிவிக்கிறார்.

எதிர்முறையீட்டாளர் முடிந்த வரை ARM செயற்கை முறையை பயன்படுத்தி முமுறையீட்டாளருக்கு சிகிச்சை கொடுத்து வந்துள்ளார் இதற்கான மருத்துவ குறிப்பு ஆதாரங்களும் மற்றும் சிகிச்சை கொடுத்த முறைகளையும் எதிர்முறையீட்டாளரின் எதிர்ப்புரை மற்றும் பிரதான வாக்கும் மூலங்களும் உறுதி செய்தாலும், இந்த புகாரில் இவ்வாணையம் மருத்துவ சிகிச்சை குறைபாடு என்பதை முழுமையாக ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இப்புகாரில் எதிர்முறையிட்டாளர் வாக்குமூலத்தின்ப்படி முறையீட்டாளர் கருவுற்ற நாளிலிருந்து எதிர்மறை விட்டாளரின் மருத்துவமனையில் தான் தொடர் சிகிச்சையும் ஆலோசனைகளையும் தடுப்பூசியும் எடுத்து உள்ளார் அதாவது ஒரு மகப்பேறு மருத்துவராக கற்பவாதையையும் அதில் உள்ள குழந்தையையும் தொடர்ந்து எதிர்முறையிட்டாளர் சிகிச்சை அளித்து வந்துள்ளதால் முறையிட்டாளரின் குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதன் நிலைகளை நன்கு எதிர்முறையிட்டாளருக்கு  தெரிந்திருக்கும்.

அதாவது 26.03.2016ம் தேதி அன்று முறையீட்டாளருக்கு ARM கொடுப்பதற்கு முன்பும் மற்றும் பின்பும் முறையீட்டாளரும் அவரது குழந்தையும் நலமாகவும் உள்ளதாக எதிர்முறையிட்டாளர் கூறியுள்ளார். அதற்கான மருத்துவ குறிப்புகள் சான்றாவணங்கள் உறுதிப்படுத்துகிறது. அப்படி இருக்கையில் இரவு 11.40மணிக்கு முறையீட்டாளர் பிறப்புறுப்பில் இருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டு உள்ளது என்றும் அதற்கு குழந்தையின் கருப்பைக்கும் இடையில் தொப்புள் கொடி நீளம் சற்று குறைவு என்று எதிர்முறையிட்டாளர் கூறுகிறார். இதற்கான போதுமான மருத்துவ சிகிச்சை முறைகளை எதிர்முறையீட்டாளர் விலக்கி உள்ளார். இங்குதான் தான் எதிர்முறையீட்டாளரின் சேவை குறைபாடாக புலப்படுகிறது. அதாவது எதிர்முறையீட்டாளரின் தொடர் சிகிச்சை எடுத்துள்ள முறையீட்டாளர், அவருக்கும் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும்  என்ன மாதிரியான சூழ்நிலை இருக்கும் என்று தெரியாது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நிலை, மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் கூடிய பிரச்சனைகள். முறையீட்டாளரை பொருத்தவரை தனக்கு எதிர்முறையீட்டாளர் முறையான சிகிச்சை கொடுத்தும், சேவை குறைபாடுயின்றி வயிற்றில் இருக்கும் குழந்தையையும் தன்னையும் முறையான சிகிச்சை கையாண்டு காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

 முறையீட்டாளர்ருக்கு மருத்துவ அறிவு கொஞ்சம் கூட இருக்கத் தேவையில்லை. ஆனால் மருத்துவராகிய எதிர்முறையீட்டாளர் சேவை வழங்கக்கூடியவர். முறையீட்டாளர் அதனால் தான் மருத்துவரை முழுமையாக நம்பித்தான் தனக்கான சேவையை பெற்றுள்ளார்.  எதிர் முறையீட்டாளரின் தொடர் சிகிச்சை முறையில் கண்காணிப்பில் இருந்துள்ள, கர்ப்பமாக உள்ள முறையீட்டாளர் மற்றும் அவரின் குழந்தையின் நிலைமை பிரச்சனைகளை பரிசோதனை செய்தும் முழு குறைபாடுகளையும் தெரிந்து கொண்டு தான் சிகிச்சை அளிக்க கூடியவர் எதிர்முறையீட்டாளர். எதிர்முறையீட்டாளர்  தொடர்ந்து குழந்தை அசைவு மற்றும் நாடித்துடிப்பை கண்காணித்து நன்றாக உள்ளதாக கூறியிருக்கிறார். முறையீட்டாளர் வேறு மருத்துவமனைக்கு சென்று அவ்வபோது சிகிச்சை பெற்று உள்ளார் அதனால் குழந்தை மற்றும் தாயின் முழு பரிசோதனை விவரமும் தனக்கு தெரியவில்லை என்று எங்கும் எதிர்முறையீட்டாளர் மறுக்கவில்லை குறிப்பிடவுவில்லை.

எதிர்முறையீட்டாளரிடம் மட்டுமே தொடர்ச்சியைச் செய்யும் தடுப்பூசியும் பரிசோதனையும் செய்து கொண்டுள்ளார் என்று எதிர்முறையீட்டாளரே தனது பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக்கொள்கிறார். ஆதலால் எதிர்முறையீட்டாளருக்கு முறையீட்டாளர் மற்றும் அதில் வயிற்றில் வளரும் குழந்தையின் முழு உடல் தகுதி, குழந்தையின் வளர்ச்சி நிலை, பிரசவத்தின் போது ஏற்படப் போகும் இடர்பாடுகள் மற்றும் நிலைமைகளை நன்கு பரிசோதனை செய்து கொண்டு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கையில் திடீர் என்று குழந்தையின் தொப்புள் கொடி உரிய நீளம் சற்று குறைவாக இருந்ததால் குழந்தை கீழே இறங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அப்படி தடுத்துக்கொண்டிருந்த தொப்புள் கொடியின் இருக்கும் சக்திகளை Placentaவின் கருப்பையில் இருந்து பிரிந்து Arbruptio Placenta என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்முறையீட்டாளர் கூறுகிறார்.

 எனவே முறையீட்டாளருக்கு தொடர்ந்து எதிர்முறையீட்டாளரியிடம் மட்டுமே சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனவும் முறையீட்டாளர் எதிர்முறையீட்டாளரிடம் பெற்ற சேவையை எதிர்முறையீட்டாளர் திருப்திகரமாக செய்யாமலும் முழுமையான முறையீட்டாளரின் பிரசவ பிரச்சனை மற்றும் அதன் உள்ள குழந்தையின் முழுவதுமான பிரச்சனைகளை ஆராயமலும் எதிர்முறையீட்டாளர் சிகிச்சை முறை கொடுத்து சேவை குறைபாடு புரிந்துள்ளார்.

எதிர்முறையீட்டாளரின் மருத்துவ சிகிச்சை முறையில் முழுமையான குறைபாடு இல்லாவிட்டாலும் எதிர்முறையீட்டாளர் சேவையில் கவனக் குறைபாடு மற்றும் சேவை குறைபாடு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

முறையீட்டாளரின் முறையிட்டில் எதிர்முறையீட்டாளரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி கையெழுத்து பெற்றார் என்றும், எதற்காக அறுவை சிகிச்சை என்பது குறித்து எதுவும் சொல்லாமல் கையெழுத்து பெற்றார். அவரது மனைவியின் கருப்பையை எடுக்கத்தான் அறுவை சிகிச்சை என்று கூறியிருந்தால் கண்டிப்பாக கையெழுத்து போட்டிருக்கமாட்டேன் என்று முறையீட்டாளரின் கணவர் புகாரில் கூறியுள்ளார்.

இப்புகாரை இவ்வாணையம் முறையீட்டாளர் மற்றும்                                 எதிர்முறையீட்டாளரின் பிரதான உறுதி ஆவணத்தில் அதாவது எதிர்முறையீட்டாளர் தனது உறுதி சான்றாவணத்தில் முறையீட்டாளருக்கு தேவைப்பட்டால் கருப்பையை எடுத்துக் கொள்ள சம்மதம் என்று கோடிட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த ஒப்புதல் கடிதத்தில் முறையீட்டாளரின் கணவரும் கையொப்பமும் முறையீட்டாளரின் Ex.A1 மருத்துவ ஆவணம் (Case Sheet ன் முதல் பக்கத்தில் கடைசியில்  signature (Relationship with the Patient) Senthil Kumar கணவர் கையொப்பம், மற்றும் AMA Discharge on 27/03/2016 at 3.15PM. மருத்துவரின் அறிவுரையின்றி எனது சொந்த விருப்பத்தின் பேரில் எனது மனைவியை வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறேன் என்று முறையீட்டாளரின் கணவர் கையொப்பம் பெற்றுள்ளார் . இந்த இரு கையப்பங்களும் வேறுபடுகிறது.

அதாவது (Case Sheet) Ex.A1 ஆவணம் முதல் பக்க கையெழுத்தும் எதிர்முறையிட்டாளரின் உறுதி ஆவணத்தில் முறையீட்டாளரின் கணவர் தனது மனைவிக்கு கருப்பை எடுக்க ஒப்புதல் கொடுத்தாக கையொப்பமிட்ட ஆவணங்களில் முறையீட்டாளரின் கையொப்பம் ஒரே மாதிரியாகவும் முறையீட்டாளர் ஆவண உறுதிச்சான்று (Case Sheet) ஒப்புதல் விவரம் குழந்தையின் இறந்த உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டேன் மற்றும் AMA Discharge on 27/03/2016 ஆவணங்களில் முறையீட்டாளரின் கையொப்பம் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே முறையீட்டாளரின் புகாரில் உள்ள முறையிட்டில் எதிர்முறையீட்டாளர் முறையீட்டாளரின் கணவரின் ஒப்புதல் இல்லாமல் முறையீட்டாளரின்  கருப்பை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார். எதிர்முறையீட்டாளரே இந்த ஆவணங்கள் உண்மை என்று ஒப்புக் கொள்கிறார் என்பதையும் இந்திய சாட்சிய சட்டம் 1872 த்தின் படி   நிரூபணம் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

In Malay Kumar Ganguly vs. Dr. Sukumar Mukharjee and others 2009)  9 SCC 221, Honble Supreme Court has observed thus :

Patients, by and large are ignorant about disease or side of adverse effect of a medicine. Ordinarily patients are to be informed about admitted risk, if any. If some medicine has some adverse effect or some reaction is anticipated, he should be informed thereabout. It was not done in the instant case. Law on medical negligence also has to keep up with advances in medical science as to treatment as also diagnostics. Doctors increasingly must engage with patients during treatment especially when line of treatment is a contested one, and hazards are involved. Standard of care in such cases will involve duty to disclose to patients about risk of serious side effects or about alternative treatments. In the times to come, litigation may be based on theory of lack of informed consent. A significant number of jurisdictions determine existence and scope of doctors duty to inform based on information a reasonable patient would find material in deciding whether or not to undergo proposed therapy. In this respect, the only reasonable guarantee of a patients right of bodily integrity and self determination is for the courts to apply a stringent standard of disclosure in conjunction with a presumption of proximate cause. At the same time, a reasonable measure of autonomy for doctor is also pertinent to be safeguarded from unnecessary interference

AND

Indian Medical Council, (Professional Conduct, Etiquette And Ethics) Regulations, 2002 ,Published By Medical Council of India .

B. Duties and responsibilities of the Physician in general: 1.1.2 .The prime object of the medical profession is to render service to humanity; reward or financial gain is a subordinate consideration. Who so ever chooses his profession, assumes the obligation to conduct himself in accordance with its ideals. A physician should be an upright man, instructed in the art of healings. He shall keep himself pure in character and be diligent in caring for the sick; he should be modest, sober, patient, prompt in discharging his duty without anxiety; conducting himself with propriety in his profession and in all the actions of his life.

Highest Quality Assurance in patient care: 1.6 Highest Quality Assurance in patient care: Every physician should aid in safeguarding the profession against admission to it of those who are deficient in moral character or education. Physician shall not employ in connection with his professional practice any attendant who is neither registered nor enlisted under the Medical Acts in force and shall not permit such persons to attend, treat or perform operations upon patients wherever professional discretion or skill is required.

2.3 Prognosis: The physician should neither exaggerate nor minimize the gravity of a patient‟s condition. He should ensure himself that the patient, his relatives or his responsible friends have such knowledge of the patient‟s condition as will serve the best interests of the patient and the family.

Consumer Protection Act, 1986:

Sect .2 (1) (g) Deficiency means any fault, imperfection, shortcoming or inadequacy in the quality, nature and manner of performance which is required to be maintained by or under any law for the time being in force or has been undertaken to be performed by a person in pursuance of a contract or otherwise in relation to any service;

Sec.14. Finding of the District Forum.

 

(1) If, after the proceeding conducted under section 13, the District Forum is satisfied that the goods complained against suffer from any of the defects specified in the complaint or that any of the allegations contained in the complaint about the services are proved, it shall issue an order to the opposite party directing him to do one or more of the following things, namely:

 

 (d) to pay such amount as may be awarded by it as compensation to the consumer for any loss or injury suffered by the consumer due to the negligence of the opposite party: 

Provided that the District Forum shall have the power to grant punitive damages in such circumstances as it deems fit;

 

             மேற்கண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், (தொழில்முறை நடத்தை, ஆசாரம் மற்றும் நெறிமுறைகள்) விதிமுறைகள், 2002 , மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விதியின் படியும். இவ்வாணையம் 2 ம் எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த முறையிட்டில் மருத்துவ சேவை குறைபாடு என்பது முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஆங்காங்கே மருத்துவராகிய எதிர்முறையிட்டாளரின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விதியின்படி  சேவை குறைபாடு நிருபனமாகியுள்ளது. ஆகவே, முறையீட்டாளருக்கு இந்த முறையிட்டிலும் எதிர்முறையீட்டாளர் சேவை குறைபாடு புரிந்ததாக புலப்படுகிறது.  எனவே இவ்வாணையம் இந்த முறையீட்டில் இரு தரப்பு சான்றாவணங்கள், சூழ்நிலைகள், நிகழ்ந்தவைகள், முறையீட்டாளரின் வாதுரைகள் ஆராய்ந்ததில் எதிர்முறையீட்டாளர் சேவை குறைபாடு செய்துள்ளார்  உறுதிப்படுத்துகிறது.

 

பிரச்சினை  எண் : 2.     

பிரச்சனை எண் 1ன் முடிவுக்கு இணங்க எதிர்முறையீட்டாளர் சேவை  குறைபாடு புரிந்ததற்காக, எதிர்முறையீட்டாளரால்  முறையீட்டாளர் மற்றும் அவரது கணவர் மிகவும் துயரம், மன வேதனையைக்கு அடைந்ததற்காக நஷ்ட ஈடாக ரூபாய்.10,00,000/மும் வழக்கு செலவுத் தொகை ரூபாய்.10,000/மும்,  வழங்க வேண்டும்மென்றும் பிரச்சனை எண் 2 .க்கு முடிவு செய்யப்படுகிறது.

                  முடிவாக, இந்த மனு  அனுமதிக்கப்பட்டு எதிர்முறையீட்டாளரால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்கு நஷ்ட ஈடாக ரூபாய்.10,00,000/மும் வழக்கு செலவுத் தொகை ரூபாய்.10,000/மும், வழங்க வேண்டும்மென்று எதிர்முறையீட்டாளருக்கு உத்தரவிடப்படுகிறதுஉத்தரவை நிறைவேற்ற கால அவகாசம் இரண்டு மாதங்கள் தவறும்பட்சத்தில் வருடத்திற்கு 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்மென்றும்  உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவு உறுப்பினர் 1ஆல் சுருக்கெழுத்தில் எழுதப்பட்டு,  அவரால் கணணியில் தட்டச்சு செய்யப்பட்டு, அவரால் சரி செய்யப்பட்டு இன்று 2022ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் எங்களால் அவையறிய உத்தரவு பகரப்பட்டது.  

                               ஒம்/                                                                               ஒம்/

உறுப்பினர் – 1                                                   தலைவர்

 

PW 2

முறையீட்டாளர் தரப்பு சாட்சி அவரது கணவர் N. செந்தில்குமார் முதல் விசாரணை பிரமாணம்

 

 

முறையீட்டாளரின் தரப்புச் சான்று ஆவணங்கள் :

மு.சா. ஆ.01.

 

Case Sheet

Xerox

மு.சா. ஆ.02.

10.05.2016

Legal Notice sent by the complainant

Office copy

மு.சா. ஆ.03.

11.05.2016

Acknowledgement card signed by the opposite party

Original

மு.சா. ஆ.04.

23.06.2016

Reply notice sent to by the opposite party

Served copy Xerox

 

 

 

எதிர்முறையீட்டாளரின் தரப்புச் சான்று ஆவணங்கள் :   இல்லை

                        ஒம்/                                                                              ஒம்/       உறுப்பினர்  1                 தலைவர்

 
 
[ TMT.S.TAMILSELVI.,B.A.,B.L.,]
PRESIDENT
 
 
[ THIRU P.M.MUTHUKUMAR.,M.A.,]
MEMBER
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.