மனு கோப்பிற்கு எடுக்கப்பட்ட நாள்:06.08.2018
உத்தரவு பகரப்பட்ட நாள்: 14.07.2022
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், காஞ்சிபுரம் மாவட்டம் (இ) செங்கல்பட்டு
முன்னிலை : திரு.உ.காசிபாண்டியன், பி.ஏ., எம்.எல்., ….. தலைவர்
திரு.மு.ஜவஹர், பி.ஏ., எல்.எல்.எம்., …… உறுப்பினர்-I
C.C.No.82/2018
2022-ம் ஆண்டு ஜீலை திங்கள் 14-ம் நாள் வியாழக்கிழமை
குப்புசாமி,
த/பெ.பொன்னு செட்டியார்,
கடப்பாக்கம் கிராமம் மற்றும் அஞ்சல்,
செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். ….. மனுதாரர்
// எதிர் //
- திரு.கௌதம்,
கிளை மேலாளர் அவர்கள்,
இந்தியன் வங்கி,
இடைக்கழிநாடு கிளை,
கடப்பாக்கம்.
- திரு.கிருஷ்ணமூர்த்தி, (A.G.M.)
துணை பொது மேலாளர்,
மண்டல வங்கி (Zonal Office),
இந்தியன் வங்கி,
காஞ்சிபுரம். ….. எதிர்மனுதாரர்கள்/
புகார் நாள் : 06.08.2018
மனுதாரர் வழக்கறிஞர் : M/S.இராஜன்காந்தி, வழக்கறிஞர்கள்.
எதிர்மனுதாரர்களுக்காக : திரு.எஸ்.ராஜேந்திரன், வழக்கறிஞர்.
இம்மனு 05.09.2018-லிருந்து வழக்கு நடந்துவருகிறது. இவ்வழக்கு 01.07.2022 அன்று எங்கள் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்காக M/S.இராஜன்காந்தி, வழக்கறிஞர்கள் இன்று முன்னிலையாகாமலும், எதிர்மனுதாரர்களுக்காக திரு.எஸ்.ராஜேந்திரன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர்தரப்பினர் வாதுரைகளை கேட்டும், இருதரப்பு ஆவணங்களை பரிசீலனை செய்தும், இதுநாள் வரை எங்கள் ஆய்விலிருந்து, இன்று இவ்வாணையம் பிறப்பிக்கும்
உத்தரவு
திரு.உ.காசிபாண்டியன், ….. தலைவர்
நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 1986 பிரிவு 12-ன்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடு.
1. எதிர்மனுதாரர்கள் மனுதாரருக்கு ஏற்படுத்திள்ள அதிகப்படியான வட்டி இழப்பு ரூ.3,09,000/- மும், மனுதாரருக்கு ஏற்படுத்தப்பட்ட ஈடு செய்ய முடியாத மனஉளைச்சலுக்காக ரூ.2,00,000/- மும் இழப்பீடாக வழங்க வேண்டுமென்று மனுதாரர் பரிகாரம் கேட்டு இம்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.
- மனுவின் சுருக்கம் வருமாறு :-
மனுதாரர் கடப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீமணிகண்ட பிரபு என்ற பெயரில் மீன் வலை தயாரிக்கும் ஒரு சிறு தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த கம்பெனிக்காக நடப்பு கணக்கு ஒன்றினை Current Account No.584397931 என்ற எண்ணில் செய்யூர் வட்டம், இடைக்கழிகாடு கிராமம் இந்தியன் வங்கிக்கிளையில் வைத்துள்ளார். மனுதாரர் அவருடைய சிறு தொழில் நிறுவனத்திற்காக மேற்படி வங்கியில் மேற்குறிப்பிட்ட நடப்பு கணக்கின் மூலம் தொழிலுக்கான கடன் பெறுதல் மற்றும் தொழில் சார்ந்த கணக்கு வழக்குகளை அதே கணக்கில் பராமரித்து வந்துள்ளார். மனுதாரர் நடப்பு கணக்கின் மூலம் தொழில் அபிவிருத்திக்காக Over Draft என்ற வகையில் கடன்பெற்று, அதனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சரியான முறையில் வட்டியோடு அசலையும் செலுத்தி வந்துள்ளதாகவும், 01.11.2011 அன்று மனுதாரர் தொழிலுக்காக 1வது எதிர்மனுதாரர் வங்கியில் கோரியிருந்த கடனுக்காக 2 வது எதிர்மனுதாரர் வங்கி Ref.No.ZOK:CRE:276:2011-12 –ன்படி 17.11.2011 ம் தேதியிட்ட Sanction ticket No.14 -ன்படி ஒப்புதல் வழங்கப்பட்டு, மனுதாரருக்கு ரூ.15 இலட்சத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 13.25-லிருந்து அதிகபட்சமாக 13.75 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்பெறும் என்கிற அளவில் கடன் வழங்கப்பட்டது. அதேபோன்று 2012 ம் ஆண்டு ஜீலை மாதத்தில் மனுதாரர் கோரியிருந்த கடனையும் Ref.No.ZOK:CRE:2012:13 –ன்படி 03.08.2012 ம் தேதி Sanction Ticket No.6 –ன்படி ஒப்புதல் வழங்கப்பட்டு, ரூ.15 இலட்சத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 13.00-லிருந்து அதிகபட்சமாக 13.50 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்பெறும் என்கிற அளவில் கடன் ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது. மேற்படி கடன் ஒப்புதல் சீட்டு நகல் எண்.14 (17.11.2011), கடன் ஒப்புதல் சீட்டு நகல் எண்.6 (03.08.2011) ஆகியவை ஆகும். மனுதாரர் Over Draft ன்படி பெற்ற கடனுக்கு பொதுவாக காலக்கெடு இருப்பதில்லை. ஆனாலும் சரியான காலத்திற்குள் கடனை வட்டியும் அசலுமாக திருப்பி செலுத்திவிடுவது வழக்கம். மேலும் மனுதாரர் கடனாக பெற்ற கடன் தொகை எதுவும் மனுதாரருக்கு ரொக்கமாக வழங்கப்படமாட்டாது. மாறாக, மனுதாரர் அவருடைய தொழிலுக்காக பொருட்களை வாங்க அல்லது வாங்கும் பொருட்களுக்கு உரிய நபர்களுக்கு வங்கியின் மூலமாகவே வங்கி பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக மனுதாரர் 2011 மற்றும் 2012 ல் பெற்ற Over Draft கடன்கள் ரூ.30 இலட்சத்திற்கு தொடர்ந்து அசலும் வட்டியும் செலுத்தி வந்த நிலையில், 22.08.2016 அன்று அவர் வாங்கிய கடன்களுக்கான Statement ஐ பார்த்ததில் வட்டி விகிதம் தவறாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி, மனுதாரர் அவருடைய பட்டய கணக்காளரிடம் கொடுத்து சரிபார்த்ததில், 2வது எதிர்மனுதாரரால் வழங்கப்பட்ட Over Draft Loan Sanction டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த வட்டி விகிதத்திலிருந்து மாறுபட்டிருந்ததால், மனுதாரர் 2012 முதல் 31.03.2016 வரை மனுதாரரின் வங்கி நடப்பு கணக்கு எண்.584397931 –ன் அனைத்து வங்கி பரிவர்த்தனை கணக்குகளையும் Over Draft கடன்களுக்கான Statement ஐ வாங்கி பார்வையிட்டபோது, 1வது எதிர்தரப்பினர் வங்கி, மனுதாரருக்கு லோன் Sanction டிக்கெட்டில் குறிப்பிட்ட வட்டி விகிதங்களுக்கு மாறாக ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் 14.5 சதவிகிதம் முதல் 15.75, 16.50, 20.75 சதவிகிதம் என மிக மோசடியான அளவில் மாநில ரிசர்வ் வங்கியின் அனைத்து விதமுறைகளுக்கும் முரணாக 1 வது எதிர்தரப்பினர் வங்கி மனுதாரரிடமிருந்து மோசடியான வகையில் கடன் தொகையை வசூலித்துள்ளனர். இந்நிலையில் 11.04.2016 ல் மனுதாரர் தன்னுடைய தொழிலுக்கான இயந்திரங்கள் வாங்குவதற்காக மீண்டும் கடன் பெற்றபோது, அந்த கடனுக்காக வழங்கப்பட்ட ஒப்புதல் ரசீதில் (Sanction Ticket) ஒரு வருடத்திற்கு 15.50 சதவீதம் வட்டி என்று குறிப்பிட்டுள்ளதை பற்றி எதிர்தரப்பினர்களிடம் கேட்டதற்கு தாங்கள் ஏதும் செய்யமுடியாது என்று கூறிவிட்டு, மீறி ஏதாவது கேட்டால் வங்கியில் தகராறு செய்ததாக போலிசில் ஒப்படைப்போம் என மிரட்டியுள்ளனர். இதனால் சென்னையிலுள்ள தலைமை இந்தியன் வங்கி மேலாளரை சந்தித்து 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் பெற்ற கடன்கள் பற்றியும் அதற்கான வட்டி சதவிகிதம் குறித்தும் அதிகப்படியான வசூலிக்கப்பட்ட வட்டி குறித்தும் மேலும் 11.04.2016 ல் மிஷினரி லோனுக்கான வட்டிவிகிதம் 15.25 என்றும், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து தலைமை மேலாளரை கேட்டதற்கு, அவர் தன் கைப்பட 11.65 சதவிகிதம் மட்டுமே ஒர் ஆண்டிற்கான வட்டியாக வசூலிக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டு சொல்லியுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து எதிர்தரப்பினர்களிடம் தெரிவித்ததற்கு எதிர்தரப்பினர்கள் மனுதாரரை அவதூறாக பேசி அனுப்பிவிட்டனர். இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் அறிவுறுத்திய பிறகும், எதிர்தரப்பினர்கள் தொடர்ந்து மனுதாரரிடமிருந்து அதிப்படியாக வசூல் செய்யப்பட்ட அதிகப்படியான பணத்தை திருப்பித்தராததால், 27.04.2017 மனுதாரர் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம், எதிர்தரப்பினர்கள் 1 மற்றும் 2 ஆகியோர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு, அதனை அனைவரும் பெற்றுக்கொண்டுள்ளனர். 1 வது எதிர்தரப்பினர் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 2 வது வாரத்தில் மனுதாரரை அழைத்து மனுதாரரின் வங்கி கணக்கில் ரூ.43,229/- ஐ திருப்பி செலுத்திவிட்டதாகவும், அந்த தொகை மனுதாரரிடமிருந்து அதிகப்படியாக வசூல் செய்யப்பட்ட வட்டி என்றும் மேலும் 01.04.2015, 31.5.2015, 01,07,2015 முதல் 31.10.2015 வரை, 01.01.2016 முதல் 14.03.2016 வரையில் வசூலிக்கப்பட்ட 20.75 சதவிகிதம் என்கிற அதிகப்படியான வட்டியில் இருந்து கணக்கீடு சரி செய்யப்பட்டு, அதாவது வட்டிவிகிதம் 14.25 சதவிகிதம் வட்டி மட்டுமே வசூல் செய்திருக்க வேண்டுமென்று 01.04.2017 தேதிய்டட 1வது எதிர்தரப்பினரின் கடிதத்தின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். மனுதாரர் கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வாங்கிய Over Draft கடனுக்கான வட்டிவிகிதங்கள் தவறாக குறிப்பிட்டுள்ளது குறித்து தன்னுடைய Auditor மூலம் 1 வது எதிர்தரப்பினர் வங்கிக்கு மனுதாரர் உண்மையில் செலுத்த வேண்டிய கடனுக்கும் உள்ள வட்டிவிகித வித்தியாசங்களை அவருடைய Auditor மூலம் பெற்று பார்த்ததில் 01.04.2011 தேதி முதல் 31.03.2016 வரை 1 வது எதிர்மனுதாரர் வங்கி மனுதாரரிடமிருந்து ரூ.3,09,000/- வரை அதிகப்படியான வட்டி வசூல் செய்துள்ளார் என்று தெரிய வருகிறது. எனவே 1 மற்றும் 2 எதிர்மனுதாரர்கள் மனுதாரரிடம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு முரணாக அதிகப்படியான வட்டியை வசூல் செய்துள்ளார்கள்,. ஆகவே எதிர்தரப்பினர்கள் ஏற்படுத்தியுள்ள அதிகப்படியான வட்டி இழப்பு ரூ.3,09,000./- மும் மற்றும் மனஉளைச்சலுக்காக ரூ.2,00,000/- வழங்கவேண்டுமென்று மனுதாரர் பரிகாரம் கேட்டுள்ளார்.
- எதிர்மனுதாரர்களின் எதிருரையின் சுருக்கம்:-
இந்த புகார் தவறான நோக்கத்தில் போடப்பட்டுள்ளது. ஒரு வணிக மற்றும் வணிக பரிவர்த்தனை என்ற வகையில் ஃபிஷ்நெட் உற்பத்தியில் புகார்தாரர் வியாபாரம் செய்து வருகிறார் என்றும், எனவே, புகார்தாரர் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986 -ன்படி மனுதாரர் ஒரு நுகர்வோர் அல்ல. மனுதாரர் வணிக பரிவர்த்தனை தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த புகாரும் செய்ய முடியாது என்றும் முதல் எதிர்தரப்பினரால் சமர்ப்பிக்கப்படுகிறது. மனுதாரர் மிகைப்பற்றுக் கடன் (Overdraft) ரூ.6,00,000/- த்திற்கு வட்டி சதவீதம் @ 13.25 சதவிகிதம் மாதந்தோறும் அதிகரித்து வந்துள்ளது என்றும், கட்டணமாக வசூலிக்கப்பட்ட வட்டி விகிதம் அவ்வப்போது இந்திய வங்கியின் கார்ப்பரேட் அலுவலகம் வழங்கிய விகிதம் மற்றும் உத்தரவுகளின்படி மாறுபாட்டிற்கு உட்பட்டது என்றும், புகார்தாரர் எதிர் தரப்பினரால் தேவைக்கேற்ப அறிக்கையை வழங்கவில்லை என்றும் எதிருரையில் தெரிவித்துள்ளார்.. எனவே புகார்தாரரால் மிகைப்பற்றுக் கடன் (Overdraft) ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளின்படி, சந்தையில் நிலவும் மாற்றத்திற்கேற்ப வட்டி சதவீதம் உயரவும் மற்றும் அதற்கு மேலும் 2 சதவிகிதம் தண்டனை வட்டி வசூலிக்கப்படலாம். இந்த முதல் எதிர்தரப்பினருக்கு (மாதந்தோறும்) நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்க புகார்தாரர் தவறிவிட்டார் மற்றும் புறக்கணித்துள்ளார் என்பதால், முதல் எதிர்தரப்பினர், புகார்தாரரால் பெறப்பட்ட மிகைப்பற்றுக் (Overdraft) கடனுக்கு நிலவும் வட்டி விகிதத்திற்கு மேல் மற்றும் அதற்கு மேல் 2 சதவிகிதம் தண்டனை வட்டி வசூலித்ததாக தெவிக்கப்பட்டுள்ளது. புகார்தாரர் மாதாந்திர அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்க புறக்கணித்தார் அல்லது தவறவிட்டார் என்றால், வட்டி விகிதம் 20.75 சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது, இது வங்கியால் வசூலிக்கப்படும் அதிகபட்ச வட்டி வீதமாகும். எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் 20.75 சதவிகிதம் வட்டிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட பிறகும் புகார்தாரர் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தார். பத்தி எண் 14 இல் 17.11.2011 தேதியிட்ட அனுமதி டிக்கெட்டில் புகார்தாரர், வங்கியின் எந்தவொரு மாற்றத்திற்கும், மாற்றுத் திருத்தம் மற்றும் வங்கியின் வட்டி வீதத்தை வேறுபடுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், புகாரின் பாரா 5 இல் உள்ள குற்றச்சாட்டு, புகார்தாரர் ரூ .15,00,000/- அனுமதி டிக்கெட்டின் கீழ் வரைவு பண கடன் கடனைப் பெற்றது dt.17.11.2011 என்பது தவறானது. ஒப்புதல் டிக்கெட்டின் கீழ் ஓவர் டிராஃப்ட் பணக் கடன் கடனை நோக்கி ரூ.6,00,000/- மட்டுமே புகார்தாரர் பெற்றுள்ளார். புகார்தாரர் ரூ.15,00,000/- அந்த அனுமதி டிக்கெட்டின் கீழ் 13.75 சதவிகிதம் வட்டி செலுத்தும் காலக் கடனாக 17.11.2011 அன்று பெற்றார். புகார்தாரர் ரூ .6,00,000/- முதல் ரூ.15,00,000/- வரை மேம்பட்ட ஓவர் டிராஃப்ட் பணக் கடன் பெற்றார். புகார்தாரர் ரூ.30,00,000/- ஓவர் டிராஃப்ட் கடன் கிடைத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது. ரூ.15,00,000/- இன் மேம்பட்ட கடனுக்காக, இந்திய வங்கியின் கார்ப்பரேட் அலுவலகத்தின் விகிதங்கள் மற்றும் உத்தரவுகளின்படி வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டது. புகார்தாரர் குற்றம் சாட்டியபடி 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வட்டி விகிதம் அதிக விகிதத்தில் வசூலிக்கப்படவில்லை என்று 1 வது எதிர்தரப்பினரால் சமர்ப்பிக்கப்படுகிறது. வட்டி விகிதம் 11.40 சதவிகிதம் வீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று புகாரில் புகார்தாரர் குற்றம் சாட்டியது ஏற்றுக்கொள்ள முடியாதது. வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 21 ஏ படி, வங்கி நிறுவனம் வசூலிக்கும் வட்டி குறித்து எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, வங்கி நிறுவனத்திற்கு கூட்டு வட்டி விகிதத்தை வசூலிக்க உரிமை உண்டு, எந்தவொரு நீதிமன்றத்திலும் புகார்தாரரால் விசாரிக்க முடியாது. இங்குள்ள முதல் எதிர் கட்சி, கூறப்பட்ட ஓவர் டிராஃப்ட் பணக் கடன் தொடர்பாக அறிக்கை கணக்கை சமர்ப்பிக்கிறது. 1 வது எதிர்தரப்பினரின் கணக்குகளின் அறிக்கையை எடுத்துக் கொள்ளும்போது புகார்தாரர் அந்தக் காலக்கட்டத்தில், நிலவும் வட்டி வீதத்தை பற்றி அறிவார் என்றும், ஸ்ரீ மணிகண்டபிரபு மீன் வலைகளின் ஒரே உரிமையாளராக புகார்தாரர் மேற்கூறிய அனைத்து கடன்களையும் பெற்றார் என்று 1 வது எதிர்தரப்பினர் சார்பில் சமர்ப்பிக்கப்படுகிறது. எனவே அவர் தனிப்பட்ட முறையில் புகாரை தாக்கல் செய்ய முடியாது என்றும், புகார்தாரர் சிறிய அளவில் ஃபிஷ்நெட் உற்பத்தியை நடத்தி வருவதாக புகாரின் பாரா 3 இல் உள்ள குற்றச்சாட்டு அவர் ஒரு வணிக நிறுவனம் நடத்துகிறார் என்பதைத் தெளிவாக கூறியிருப்பதால், மேலும் அவர் அந்த வணிகத்திற்கான கடனைப் பெற்றார் அவை வணிக பரிவர்த்தனைகள் என்பதால், நுகர்வோர் மன்ற வரம்பிற்குள் வராது என்றும், புகார்தாரர் ஒரு நுகர்வோர் அல்ல என்பதால் செலவுத் தொகையுடன் புகாரை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென்றும் எதிர்தரப்பினர்கள் சார்பாக வேண்டப்படுகிறது.
- இருதரப்பிலும் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டு, சாண்றாவணங்கள் முறையே ம.சா.ஆ.1 முதல் மு.சா.ஆ.9 வரையும் மற்றும் எ.ம.சா.ஆ.1 முதல் 6 வரை குறியீடு செய்யப்பட்டும், மற்றும் எழுத்துபூர்வ வாதுரை தாக்கல் செய்யப்பட்டு, இருதரப்பிலும் வாதுரை கேட்கப்பட்டது.
5. புகார் சங்கதிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய எழுவினாக்கள் பின்வருமாறு:
1) மனுதாரர் ஒரு நுகர்வோரா?
2) மனு குறித்த காலவரையறைக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
3) மனுவில் கோரியுள்ள நிவாரணம், இந்நீதிமன்ற வரம்பிற்குட்பட்டதா?
4) எதிர்மனுதாரர்களின் சேவையில் குறைபாடோ அல்லது நியாயமற்ற தன்மையோ உள்ளதா?
5) மனுதாரர் கோரிய நிவாரணம் வழங்கத்தக்கதா?
6) மனுதாரரருக்கு இன்னபிற நிவாரணங்கள் வழங்க வழிவகை உள்ளதா?
6. எழுவினா எண்.1 முதல் 6 வரை:-
இருதரப்பினர் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட புகார், எதிருரை, பிரமாண வாக்குமூலம் மற்றும் சாண்றாவணங்களை ஆய்வு செய்து கூர்நோக்கியபோது, புகார்தாரர் ஒரு வணிக நிறுவனம் நடத்துகிறார் என்பதும், அந்த நிறுவனத்தின் வியாபார வளர்ச்சிக்காக அவ்வபோது எதிர்மனுதாரர் வங்கிக் கிளையில் கூடுதல் கடன் வசதி பெற்று வந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
7. எதிர்மனுதாரர் தனது பிரமாணவாக்குமூலம், பத்தி 2 – ல் The complainant was doing business in manufacturing of fishnet which is a business and the commercial transaction. Hence the complainant is not a consumer within the purview of Consumer Protection Act, 1986. In respect of commercial transaction no complaint can be entertained under Consumer Protection Act.
8. புகார்தாரரின் மனுவை உற்றுநோக்கும்போது, மனுதாரர் வணிக நோக்கில் வங்கியுடன் தொடர்பிலிருந்து வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. புகார்தாரரின் சான்றாவணம் 3 இதனை உறுதிபடுத்துகிறது. மேலும் எதிர்மனுதாரர் 30.11.2018 அன்று தாக்கல் செய்த பதிலுரைக்குப்பின்னர் மனுதாரர் 18.12.2018 அன்று தாக்கல் செய்த பிரமாணவாக்குமூலத்தில் கூட தான் எதிர்மனுதாரர் வங்கியில் கடன் பெற்று சுயதொழில் செய்து, அதில்வரும் வருமானத்தில்தான் பிழைப்பு நடத்திவருகிறேன் என்று கூறவில்லை.
In these facts and circumstances, in the light of the Judgement rendered by the Honorable Supreme Court on 22.02.2022, in C.A.No.11397/2016 between Srikant Mantri Vs. Punjab National Bank, the complainant does not fall within Sec.2 (1) (d) of Consumer Protection Act, 1986, because the complainant is doing the business in a large scale manner for the purpose of earning profit. Complainant availed over draft facility to expand business profits. The relationship between complainant and opposite party is purely business to business relationship.
Therefore, the complainant is not a consumer under Sec.2 (1) (d) and hence not entitled to seek any relief under Consumer Protection Act. Accordingly, the point Nos.1 to 6 are decided against the complainant and the complaint is dismissed as not maintainable.
9. இதன்படி, இந்த வழக்கில் மனுதாரருக்கும் எதிர்மனுதாரர்களுக்கு உள்ள தொடர்பு என்பது வணிகம் / தொழில் சார்ந்ததாகவே உள்ளது. எனவே, மனுதாரர் வணிக நோக்கில் தொழில் புரிவதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், பிரிவு 2 (1) (ஈ) ன்படி, மனுதாரர் ஒரு நுகர்வோர் அல்ல என்று தீர்மானித்து, அவர் கேட்டுள்ள பரிகாரங்கள் எதுவும் கிடைக்கத்தக்கதல்ல என்று கருதி, இம்மனு செலவுத் தொகை ஏதுமின்றி தள்ளுபடி செய்யதக்கது என்று தீர்மானிக்கப்படுகிறது.
10. இறுதியாக, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. செலவுத் தொகை ஏதுமில்லை.
சுருக்கெழுத்து தட்டச்சருக்கு ஒலி வடிவில் சொல்லப்பட்டு அவரால் சுருக்கெழுத்தில் எழுதி கணினியில் தட்டச்சு செய்யப்பட்டதை தலைவரால் திருத்தம் செய்யப்பட்டு எங்களால் இன்று 2022 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 14-ஆம் நாள் திறந்த ஆணையத்தில் பகரப்படுகிறது.
ஒம்/- ஒம்/-
உறுப்பினர்-1 தலைவர்
மனுதாரர் தரப்பு சான்றாவணங்கள்:-
வ.எண். | ஆ.எண். | நாள் | விவரம் | குறிப்பு |
1. | ம.சா.ஆ.1 | 7.11.2011 | மனுதாரருக்கு 2011-ம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.15,00,000/- (Over Draft) கடனுக்கான Sanction Ticket No.14 | நகல் |
2. | ம.சா.ஆ.2 | 3.8.2012 | மனுதாரருக்கு 2011-ம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.15,00,000/- (Over Draft) கடனுக்கான Sanction Ticket No.6 | நகல் |
3. | ம.சா.ஆ.3 | 2012 - 2016 | மனுதாரரின் over draft கடனுக்கான 1வது எதிர்மனுதாரர் வங்கி அதிகப்படியான வட்டி வசூல் குறித்த வங்கி பரிவர்த்தனைக்கான பரிவர்த்தனை கணக்குகள் | நகல் |
4. | ம.சா.ஆ.4 | 11.4.2016 | மனுதாரரிடம் அதிகப்படியான வட்டி வசூல் செய்யப்பட்டது குறித்து இந்தியன் வங்கி மாநில தலைமை அலுவலகத்தின் மேலாளர் தன் கைப்பட11.65 சதவிகிதம் வட்டி தான் வசூல் செய்யப்படவேண்டும் என்பதை குறிப்பிட்டு எழுதி தந்த பிரதி | நகல் |
5. | ம.சா.ஆ.5 | 9.2.2017 | மனுதாரர் வங்கி நிர்வாகிகளுக்கு எழுதிய முறையீட்டு கடிதம் | நகல் |
6. | ம.சா.ஆ.6 | 27.4.2017 | எதிர்மனுதாரர்கள் 1 & 2 மற்றும் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்திற்கு வழக்கறிஞர் மூலம் அனுப்பிய அறிவிப்பு | நகல் |
7. | ம.சா.ஆ.7 | - | வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டை மற்றும் தபால் ரசீது. | நகல் |
8. | ம.சா.ஆ.8 | 1.4.2017 | 1வது எதிர்மனுதாரர் மனுதாரரிடம் அதிகப்படியான வட்டி வசூல் செய்ததை ஒப்புக்கொண்டு ரூ.43,229/- மனுதாரரின் வங்கி கணக்கில் செலுத்தியதற்கான ஆவணம் | நகல் |
9. | ம.சா.ஆ.9 | 1.4.2011 முதல் 01.4.2015 வரை | 1வது எதிர்மனுதாரர் அதிகப்படியான வட்டி வசூல் செய்த தொகைக்கான Chatted Accountant மூலம் கணக்கீடு செய்யப்பட்டதற்கான கணக்கீடு | நகல் |
எதிர்மனுதாரர் தரப்பு சான்றாவணங்கள்:-
வ.எண். | ஆ.எண். | நாள் | விவரம் | குறிப்பு |
1. | எ.ம.சா.ஆ.1 | 7.8.2012 | Letter of continuity | நகல் |
2. | எ.ம.சா.ஆ.2 | 7.8.2012 | Agreement of hypothecation of movables | நகல் |
3. | எ.ம.சா.ஆ.3 | 3.8.2012 | Sanction ticket | நகல் |
4. | எ.ம.சா.ஆ.4 | 17.11.2011 | Sanction ticket | நகல் |
5. | எ.ம.சா.ஆ.5 | | Statement of account in respect of overdraft cash credit | நகல் |
6. | எ.ம,சா.ஆ.6 | 10.6.2016 | Sanction ticket | நகல் |
ஒம்/- ஒம்/-
உறுப்பினர்-1 தலைவர்