Tamil Nadu

Namakkal

CC/24/2016

RATHA - Complainant(s)

Versus

MANAGER,HDFC BANK - Opp.Party(s)

A.GUNASEKARAN

17 Nov 2022

ORDER

DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION
NAMAKKAL
TAMILNADU
 
Complaint Case No. CC/24/2016
( Date of Filing : 17 May 2016 )
 
1. RATHA
W/O YUVARAJA,1/123A,NADU THERU,KONDANAYAKAMPATTI VILLAGE,SENDAMANGALAM,NAMAKKAL
2. MINOR RIYASRI
D/O YUVARAJA,1/123A,NADU THERU,KONANAYAKAPATTI VILLAGE,SENDAMANGALAM,NAMAKKAL
3. MINOR RITHEES
S/O YUVARAJA,1/123A,NADU THERU,KONANAYAKAPATTI VILLAGE,SENDAMANGALAM,NAMAKKAL
...........Complainant(s)
Versus
1. MANAGER,HDFC BANK
127,PSK TOWER,SALEM ROAD,NAMAKKAL
2. MANAGER,HDFC ERGO GENERAL INSURANCE CO LTD
6TH FLOOR,LEELA BUSINESS PARK,ANDHERI-KURLA ROAD,ANDHERI(EAST),MUMBAI 400059
............Opp.Party(s)
 
BEFORE: 
  TMT.S.TAMILSELVI.,B.A.,B.L., PRESIDENT
  THIRU P.M.MUTHUKUMAR.,M.A., MEMBER
 
PRESENT:
 
Dated : 17 Nov 2022
Final Order / Judgement

மனு கோப்பிற்கு எடுக்கப்பட்ட நாள்

06.05.2016

உத்தரவு பகிரப்பட்ட நாள்

17.11.2022

 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாமக்கல்.

 

முன்னிலை:

திருமதி. எஸ். தமிழ்ச்செல்வி, பிஏ. பிஎல்.,  தலைவர்

திரு . பி.எம். முத்துக்குமார்எம்..,      உறுப்பினர்  - 

 

 

C.C.NO. 24/2016

2022ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 17 -ம் நாள் வியாழன் கிழமை

ராதா க. பெ. யுவராஜா,

மைனர் ரியாஸ்ரீ ,

த. பெ . யுவராஜா,

மைனர் ரித்தேஸ்,

த. பெ. யுவராஜா,

(2,3 மைனர் மனுதாரர்கள் பை

கார்டியன் 1ம் மனுதாரர் தாயார் ராதா).

1/123A, நடுத்தெரு, குட்டம்மன் நாயக்கன்பட்டி கிராமம்,

 சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.

…..மனுதாரர்

/ எதிராக /

 

  1. மேலாளர்,
  2. வங்கி

127, P.S K. டவர்,

  • ரோடு ,நாமக்கல்.

                             
 

  1. மண்டல பொது மேலாளர்,

HDFC ERGO பொது காப்பீட்டு நிறுவனம்,

ஆறாவது மாடி ,லீலா பிசினஸ் பார்க்,

அந்தேரி ,குர்லா ரோடு, மும்பை - 400 059.                 ….. எதிர் மனுதாரர்கள்

 

ஆய்ந்த கருத்துக் உத்தரவு பிறப்பிப்பவர்

திரு. பி.எம். முத்துக்குமார், உறுப்பினர் -1:

இம்முறையீட்டு 06.05.2016 -லிருந்து நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு 31.10.2022 அன்று எங்கள் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தபோது, இம்முறையீட்டு மனுவில் மனுதாரர்  சார்பாக A. குணசேகரன், B.A., B.L., முன்னிலை ஆஜராகியும், 1ஆம்  எதிர் மனுதாரர் தரப்பின் சார்பாக S. சுகந்தி, M.A., B.L., முன்னிலை ஆகியும் மற்றும் 2ஆம் எதிர்மனுதாரர் தரப்பின் சார்பாக V.S. சுரேஷ், B.A., B.L., மனுதாரர் தரப்பு & எதிர்மனுதாரர்கள் தரப்பின் வாதங்களைக்கேட்டும்,  ஆவணங்களை பரிசீலனை செய்தும் இதுநாள் வரை எங்கள் ஆய்வில் இருந்து இன்று இவ்வாணையம் பிறப்பிக்கப்படும் உத்தரவு.

உத்தரவு

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 12 இன் படி தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையீடு.

முறையீட்டின் சுருக்கம் வருமாறு :

1-ம் மனுதாரரின் கணவரும்  2 மற்றும் 3  மைனர்  மனுதாரர்களின் தகப்பனருமான யுவராஜ்   Individual Personal Accident Policyயை பாலிசி எண். 33171000031957900000 என்ற எண்ணுள்ள பாலிசியை 1-ம் எதிர்மனுதாரர் மூலம் 1-ம் மனுதாரர் நிறுவனத்தில் ரூபாய்.10,00,000/-க்கான பாலிசியை 1-ம் எதிர்மனுதாரர் வங்கியில் ரூபாய்.1098/- செலுத்தி 6.01.2015 முதல் 05.01.2016 வரையிலான காலகட்டத்திற்கு எடுத்துயிருந்தார். 1-ம் மனுதாரரின் கணவர் எடுத்த பாலிசி 1-ம் எதிர்மனுதாரர் வங்கியில் பணம் செலுத்தி  1-ம் எதிர்மனுதாரர்  மூலம் தான் பாலிசி பெற்றுள்ளார். அதனால் 1-ம் எதிர்மனுதாரரை இந்த மனுவில் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது.

  

இந்நிலையில் 1-ம் மனுதாரரின் கணவர் 26.11.2015ஆம் தேதியன்று 7.00 மணியளவில் வீட்டு தண்ணீர் மோட்டார் வேலை செய்யாததால்  எலக்ட்ரீசியன் ரகுபதியை அழைத்து வர முத்துக்காப்புப்பட்டி செல்ல வேண்டி TN 28 AR-3 இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் (Royal Enfield Motor) சைக்கிளில் சென்று ரகுபதியை அழைத்துக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கு வர வேண்டி சேந்தமங்கலம் முதல் நாமக்கல் சாலையில் உள்ள முத்துக்காப்புப்பட்டி முருகேசன் பெட்டிக்கடை அருகில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது Hero Splendor Pro என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் அஜாரதையாகவும் கவனக்குறைவாகவும் ஒட்டி வந்து 1-ம் மனுதாரரின் கணவரின் வாகனத்தின் மீது மோதியதில் 1-ம் மனுதாரரின் கணவருக்கும் அவருடன் வந்த எலெக்ட்ரிசியன் ரகுபதிக்கும் பலத்த அடிப்பட்டு விட்டது. உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் 1-ம் மனுதாரரின் கணவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்ததில் 1-ம் மனுதாரரின் கணவர் பரிசோதித்த மருத்துவர் மனுதாரரின் கணவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் 1-ம் மனுதாரரின் கணவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேற்படி விபத்து குறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் குற்ற எண் :236/ 2015 u/s. 279, 338, 304(A) IPC - ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

மேற்படி விபத்து குறித்து காப்பீட்டுத் தொகை வழங்க கோரி 1-ம் மனுதாரர் 1-ம் எதிர்மனுதாரர் மூலம் 2-ம் எதிர்மனுதாரருக்கு claim form மற்றும் அனைத்து ஆவணங்களுடன் காப்பீடு தொகை வழங்குமாறு அனுப்பப்பட்டது. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட 2-ம் எதிர்மனுதாரர் 1-ம் மனுதாரர் அனுப்பிய Claim Formக்கு No .C3317150002418pa/15-16/2210 கொடுக்கப்பட்டது. 2-ம் எதிர்மனுதாரர் மனதாரர்களுக்கு சேர வேண்டிய காப்பீடு தொகையை வழங்காமல் காலங்கடத்தி வந்ததால் 1-ம் மனுதாரர் எதிர்மனுதாரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது 1ம் மனுதாரரின் கணவர் 350CC கொண்ட வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டதால் 1-ம் மனுதாரரின் கணவர் எடுத்த பாலிசிக்கு காப்பீடு வழங்க முடியாது என்று 2-ம் எதிர்மனுதாரர் தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து 2-ம் எதிர் மனுதாரர் 1-ம் மனுதாரருக்கு               10 .02.2016-ல் Claim Reputation என்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்தக் கடிதத்தில் 1-ம் மனுதாரரின் கணவர் ஓட்டிய வாகனம் 350CC வாகனத்தை யுவராஜ் ஒட்டியதால் தான் காப்பீடு வழங்கவில்லை என்றும் 150CC க்கு மேல் உள்ள வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் 350CCக்கு மேல் வாகனத்தை ஓட்டியதால் காப்பீடு வழங்கவில்லை என்றும் கூறிவிட்டனர். 1-ம் எதிர் மனுதாரரின் செயல் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு மீரிய செயலாகும். 1-ம் மனுதாரரின் கணவர் பாலிசி எடுக்கும் போது எந்த விதமான நிபந்தனையும் குறிப்பிட்டு காப்பீடு வழங்காமல் இருந்துவிட்டு தற்பொழுது காப்பீடு வழங்கக் கூடாது என்ற எண்ணத்தில் நியாயமற்ற காரணத்தை கூறுவது சரியல்ல, இருப்பினும் 2-ம் எதிர்மனுதாரர் கூறுவது போல் 350CC வாகனத்தை ஓட்டி யுவராஜ் கவனக்குறைவால் விபத்து ஏற்படவில்லை. யுவராஜிற்கு முறையான ஓட்டுநர் உரிமம் உள்ளது. மேற்படி விபத்திற்கு முழு காரணம் Hero Splendor pro வாகனத்தின் ஓட்டுனரின் கவன குறைபாடும் அஜக்கிரதையாலும் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் காப்பீடு வழங்க முடியாது என்பது சட்டப்படி சரியானது அல்ல.  1-ம் மனுதாரரின் கணவர் பாலிசிக்கு எதிர்மனுதாரர்கள் மனுதாரர்களுக்கு காப்பீடு தொகை வழங்க  சட்டப்படி கடமைப்பட்டுள்ளவர்கள் .

 

எதிர்மனுதாரர்களின் செயலால் மனுதாரருக்கு மிகுந்த மன உளைச்சல் மனவேதனை ஏற்பட்டுள்ளது. எனவே 1-ம் மனுதாரரின் கணவர் எதிர்மனுதாரர்கள் நிறுவனத்தில் எடுத்த Individual Personal Accident Policy க்கு உண்டான காப்பீட்டுத் தொகை ரூபாய்.10,00,00/- மேற்படி தொகைக்கு மனு தாக்கல் செய்த தேதியிருந்து சமூக மன்றத்திற்கு எதிர்மனுதாரர் வைப்பீடு செய்யும் தேதி வரை 12% சதவீத வட்டியும் எதிர்மனுதாரர்களால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்கு நஷ்ட ஈடாக ரூபாய் .70,000/-மும் உரிய காலத்தில் காப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்ததற்காக நஷ்ட ஈடாக ரூபாய்.20,000/- மும் வழக்கு செலவுத் தொகை ரூபாய்.10,000/-மும், ஆக மொத்தம் ருபாய்.11,00,000/-ஐ மனுதாரருக்கு எதிர்மனுதாரர்கள் செலுத்த உத்தரவிட வேண்டியது அவசியம் உள்ளது.

 

1ம் எதிர்மனுதாரர் சுருக்கம் வருமாறு :

          முறையீட்டு மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு சில சங்கதிகளை 1ம் எதிர் மனுதாரர் ஏற்றுக்கொள்கிறார். மற்றவை 1-ம் எதிர்மனுதாரர்கள் தரப்பில் மறுக்கப்படுகிறது. அதை மனுதாரரை நிரூபிக்க கடமைப்பட்டவர் ஆவார். மனுதாரர் மனுவில் ஒன்று முதல் இரண்டு வரை பத்தியில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் வழக்கமான நடைமுறை என்பதால் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. மனுதாரர் மனுவில் மூன்றாம் பத்தியில் கூறியுள்ளவாறு 2-ம் எதிர்மனுதாரர் நிறுவனம் 1-ம் எதிர்மனுதாரரின் சார்பு நிறுவனம் என்பதை இந்த எதிர்மனுதாரரால் மறுக்கப்படுகிறது. 1-ம் எதிர்மனுதாரர் நிறுவனம் வங்கிப் பரிவர்த்தனைகளை மட்டும் செய்யும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வங்கியாகும். இரண்டாம் எதிர்மனுதாரர் பெயரளவில் ஒரே நிறுவனமாக அதாவது ஹெச்.டி.எஃப்.சி என்று அழைக்கப்பட்டாலும் இரு எதிர்தரப்பினர்களின் சேவை வேறுபட்டதாகும்.  இரு எதிர்தரப்பு நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட சட்டதிட்டங்களை மூலம் உருவாக்கப்பட்டதாகும். 2-ம் எதிர்மனுதார நிறுவனம் IRDA (INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA) பதிவு செய்யப்பட்டு இயங்கும் நிறுவனம் ஆகும். 1-ம் மற்றும் 2-ம் எதிர்தரப்பினர்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்த நிறுவனம் அல்ல. மனுதாரர் மனுவில் 4-ம் பத்தியில் கூறப்பட்டுள்ள சங்கதிகளில் மனுதாரரின் கணவர் 4-ம் எதிர்மனுதார வங்கியின் மூலம் 1-ம் எதிர்மனுதாரரின் தரப்பு நிறுவனத்தில் மூலம் 2-ம் எதிர்மனுதாரரின் தரப்பு நிறுவனத்தின் மூலம் Individual Personal Accident Policy Personal Accident Policy Number. 331710031957900000 ஆகும்.

 

                    இந்த பாலிசி 1-ம் மனுதாரரின் கணவர் 2-ம் எதிர்மனுதாரரின் பாலிசியை 06.01.2015 தேதியன்று 1-ம் எதிர்மனுதாரரின் மூலம் வாங்கி உள்ளார். 1-ம் எதிர்தரப்பினர் வங்கியில் எந்த வாடிக்கையாளரும் எந்த நிறுவனத்தின் பாலிஸையும் வாங்க முடியும். 2-ம் எதிர்மனுதாரர் நிறுவனத்தின் பாலிசியை 1-ம் எதிர்தரப்பின் மூலம் மனுதாரர் கணவர் பெற்றுள்ளார். அதனால்தான் மனுதாரரை 1-ம் எதிர்மனுதாரரை இந்தப் புகாரில் சேர்த்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.  மனுதாரரின் மனுவில் ஐந்து மற்றும் ஆறில் பத்தியில் கொடுக்கப்பட்டுள்ள சங்கரிகளை பொருத்தி இந்த 1-ம் எதிரி மனுதாரருக்கு எதுவும் தெரியாது. மனுதாரர் மனுவில் ஏழாம் பத்தியில் கூறியுள்ளவாறு மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து மனுதாரரின் Claim Formயினை 1-எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்டு என்பதனை மனுதாரரை ஒப்புக்கொண்டு உள்ளார். இதில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் அனைத்தும் மனுதாரருக்கும் 2-ம் எதிர்மனுதாரருக்கும் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகும். 1-ம் எதிர்மனுதாரர் பல காப்பீட்டு நிறுவங்களுக்கு முகவராகவும் செயல்படுவதுண்டு. அப்படி மனுதாரரின் கணவர் எடுத்த பாலிசி 2-ம் எதிர்மனுதாரரின் நிறுவனத்திற்கு கட்டுப்பட்டது ஆகும். ஆகவே மனுதாரர் கூறும் பரிகாரங்கள் கொடுக்க 1-ம் எதிர்மனுதாரர் கடமைப்பட்டவர் அல்ல.

 

மனுதாரரின் மனைவி எட்டாம் பத்தில் கூறியுள்ளது 1-ம் எதிர்மனுதாரர்கள் வன்மையாக மறுக்கப்படுகிறது. புகார் மனுவில் 1-ம் எதிர்மனுதாரரின் மேல் எந்த சேவை குறைபாடும் சொல்லாமல் வேண்டுமென்றே வழக்கிற்காக 1-ம் எதிர்மனுதாரரியிடம் கூறியுள்ள பரிகாரங்கள் கொடுக்க இந்த எதிர்மனுதாரர் கடமைப்பட்டவர் அல்ல. மனுதாரர்களுக்கு இந்த எதிர்மனுதாரர் எந்த நேரத்திலும் சேவை குறைபாடு செய்யவில்லை. எனவே இந்த புகார் மனுவில் இருந்து 1-ம் எதிர்மனுதாரரின் ஆதாரத்தை விடுவித்து தக்க செலவுடன் தள்ளுபடி செய்ய வேண்டப்படுகிறது.

 

2-ம் எதிர்மனுதாரர் சுருக்கம் வருமாறு :

 

          புகாரில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை அல்லது சரியானவை அல்ல. புகார்தாரருக்கு இந்த எதிர்தரப்பினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை, மேலும் புகார் சட்டத்திலோ அல்லது உண்மைகளிலோ ஏற்றுக்கொள்ள முடியாதது. புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் இங்கு ஒப்புக்கொள்ளப்படாதவை என மறுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சட்டத்தின் பிரிவு 2(d) இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, புகார் நுகர்வோர் அல்ல என்றும், அந்தச் சட்டத்தின் பிரிவு (e) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, புகார் மூலம் தாக்கல் செய்யப்பட்ட புகார் நுகர்வோர் சர்ச்சையின் கீழ் வராது என்றும் எதிர்தரப்பு புகார்தாரர் சமர்ப்பிக்கிறார். எனவே புகாரை விசாரிக்க எந்த மூலம் இல்லை. 2-ம் எதிர்மனுதாரரின் சேவையில் எந்த குறைபாடும் இல்லை என்று. பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்தொடர்வது, உரிமைகோரலின் ஒப்புதலைத் தீர்மானிப்பதற்கான நிபந்தனையாக இருக்கும். புகார் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை, எனவே புகார்தாரரின் கோரிக்கை சரியாக நிராகரிக்கப்பட்டது, மேலும் அது புகார்தாரருக்கு தெரிவிக்கப்பட்டது. 2-ம் எதிர்மனுதாரர் நிறுவனத்தின் பாலிசியை எண் : 33171003195790000 மனுதாரர் கணவர் பெற்றுள்ளார்.  இந்த 2-ம் எதிர்மனுதாரர்  நிறுவனத்திடமிருந்து தனிப்பட்ட விபத்துப் பாலிசியைப்  (Personal Accident Policy ) பெற்றுள்ளார் .

 

எப்.ஐ.ஆரின் படி, அந்த விபத்தில் பாலிசிதாரர் தனது ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக மனுதாரர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது இறந்தவர் தனது ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளை (Royal Enfield Motor) பயன்படுத்தியதாகவும், பைக்கின் கன அளவு 350CC ஆக இருந்ததாகவும் தெளிவாகக் காட்டுகிறது. காப்பீட்டாளருக்கும் காப்பீடு செய்தவருக்கும் இடையே உள்ள காப்பீட்டுக் கொள்கையானது, விபத்தில் காப்பீட்டாளருக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு காப்பீடு மேற்கொள்வதால், காப்பீட்டாளரின் பொறுப்பின் அளவை தீர்மானிக்க காப்பீட்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்யப்பட்டவர் காப்பீட்டு பாலிசியில் உள்ளதை விட அதிகமாக எதையும் கோர முடியாது.

 

பாலிசிதாரர் 26.11.2015 அன்று தனது ராயல் என்ஃபீல்டு மோட்டாரை ஓட்டிக்கொண்டு மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதியதில் விபத்தில் இறந்துவிட்டார் என்று குற்றம் சாட்டி காப்பீட்டு நிறுவனம் உரிமைகோரலைப் பெற்றதாக இந்த எதிர்தரப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இறந்த பாலிசிதாரர் 350CC பைக்கைப் பயன்படுத்திய விபத்து, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிரானது என்று இந்த எதிர் தரப்பு சமர்பிக்கிறது . நூற்றி ஐம்பதுக்கு மேல் (150CC) மோட்டார் சைக்கிள் அல்லது மோட்டார் ஸ்கூட்டரை ஓட்டும்போது ஏற்படும் விபத்திற்கு காப்பீடு இழப்பு வழங்க முடியாது.

 

புகார் சங்கதிகள் இன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் பின்வருமாறு

  1. எதிர்மனுதாரர்கள் மனுதாரருக்கு  சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது உண்மையா?     

 

  1. முறையீட்டாளருக்கு கிடைக்கக்கூடிய இதர பரிகாரங்கள் என்ன?

 

பிரச்சினை  எண் : 1.    

இந்த மனதில் இருதரப்பு சான்றாவணங்கள், எதிர் உரைகள், வாதுரைகள்  மற்றும் முதன்மை சாட்சிய பிரதான வாக்குமூலங்களையும் ஆய்வு செய்ததில் 1-ம் மனுதாரரின் கணவர் யுவராஜ் 1-ம் எதிர்மனுதாரர் மூலமாக இரண்டாம் எதிர்மனுதாரரின் காப்பீடு நிறுவனத்தில் ரூபாய் பத்து லட்சத்திற்கான பாலிசியை 1-ம் எதிர்மனுதாரர் வங்கியில் இருந்து ரூபாய்.1098/-யை செலுத்தி 06.01.2015 முதல் 05.01.2016 வரையிலான காலகட்டத்திற்கு எடுத்துள்ளார் என்பதும் அந்த பாலிசியில் ஒன்றாம் மனுதாரரை நாமினியாகவும் உள்ளார் என்பது 1-ம் மனுதாரரின் ஆவணச் சான்று Ex.A.1 உறுதி செய்கிறது. இதை 1-ம் ம் எதிர்மனுதாரர் மூலமாகத்தான் 1-ம் மனுதாரரின் கணவர் காப்பீடு செய்துள்ளார் என்பதை ஒ1-ம் எதிர்மனுதாரர் தனது எழுத்துறையிலும் மற்றும் வாதுரையில் ஒப்புக்கொண்டு உள்ளார்.

              இந்நிலையில் 1-ம் மனுதாரரின் கணவர் 26.11.2015ஆம் தேதியன்று 7.00 மணியளவில் வீட்டு தண்ணீர் மோட்டார் வேலை செய்யாததால்  எலக்ட்ரீசியன் ரகுபதியை அழைத்து வர முத்துக்காப்புப்பட்டி செல்ல வேண்டி TN 28 AR-3 இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் (Royal Enfield Motor) சைக்கிளில் சென்று ரகுபதியை அழைத்துக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கு வர வேண்டி சேந்தமங்கலம் முதல் நாமக்கல் சாலையில் உள்ள முத்துக்காப்புப்பட்டி முருகேசன் பெட்டிக்கடை அருகில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது Hero Splendor Pro என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் அஜாரதையாகவும் கவனக்குறைவாகவும் ஒட்டி வந்து 1-ம் மனுதாரரின் கணவரின் வாகனத்தின் மீது மோதியதில் 1-ம் மனுதாரரின் கணவருக்கும் அவருடன் வந்த எலெக்ட்ரிசியன் ரகுபதிக்கும் பலத்த அடிப்பட்டு விட்டது. உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் 1-ம் மனுதாரரின் கணவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்ததில் 1-ம் மனுதாரரின் கணவர் பரிசோதித்த மருத்துவர் மனுதாரரின் கணவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் 1-ம் மனுதாரரின் கணவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பதை Ex.A3. இறப்புச் சான்றிதழ் மற்றும் Ex.A4 பிரேத பரிசோதனை அறிக்கை சான்றாவணம் உறுதி செய்கிறது.

விபத்து குறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் குற்ற எண் :236/ 2015 u/s. 279, 338, 304(A) IPC -ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் Ex.A2 என்பதை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை சான்றாவணம் உறுதி செய்கிறது. விபத்து குறித்து காப்பீட்டுத் தொகை வழங்க கோரி 1-ம் மனுதாரர் 1-ம் எதிர்மனுதாரர் மூலம் 2-ம் எதிர்மனுதாரருக்கு Claim Form மற்றும் அனைத்து ஆவணங்களுடன் காப்பீடு தொகை வழங்குமாறு அனுப்பப்பட்டது. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட 2-ம் எதிர்மனுதாரர் 1-ம் மனுதாரர் அனுப்பிய Claim Formக்கு                                                   No .C3317150002418pa/15-16/2210 கொடுக்கப்பட்டது. 2-ம் எதிர்மனுதாரர் மனதாரர்களுக்கு சேர வேண்டிய காப்பீடு தொகையை வழங்காமல் காலங்கடத்தி வந்ததால் 1-ம் மனுதாரர் எதிர்மனுதாரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது 1ம் மனுதாரரின் கணவர் 350CC கொண்ட வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டதால் 1-ம் மனுதாரரின் கணவர் எடுத்த பாலிசிக்கு காப்பீடு வழங்க முடியாது என்று 2-ம் எதிர்மனுதாரர் தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார். அதை தொடர்ந்து 2-ம் எதிர் மனுதாரர் 1-ம் மனுதாரருக்கு               10 .02.2016-ல் Claim Reputation என்று ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். இந்தக் கடிதத்தில் 1-ம் மனுதாரரின் கணவர் ஓட்டிய வாகனம் 350CC வாகனத்தை யுவராஜ் ஒட்டியதால் தான் காப்பீடு வழங்கவில்லை என்றும் 150CC க்கு மேல் உள்ள வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் 350CCக்கு மேல் வாகனத்தை ஓட்டியதால் காப்பீடு வழங்கவில்லை என்றும் கூறிவிட்டனர் என்பதை 2-ம் எதிர்மனுதாரர் அனுப்பிய கடிதம் Ex.5  சான்றாவணம் உறுதி செய்கிறது.

 

             1-ம் மனுதாரரின் புகார் மனுவில் உள்ள 1-ம்   எதிர்தரப்பு எழுத்துறையில்   1-ம் எதிர்மனுதாரர் மூலமாகத்தான் இறந்து போன யுவராஜ் காப்பீடு செய்தார் என்பதை ஒப்புக்கொண்டு அவர் இறந்த பிறகு அதற்கான Claim Form 1-ம் மனுதாரரிடயிருந்து 2-ம் எதிர்மனுதாரருக்கு முறையாக கொடுத்து உள்ளார் என்பதை 1-ம் மனுதாரர் தனது தரப்பு வாதங்களில் ஒப்புக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் 1-ம் எதிர் மனுதாரர் தனது எழுத்துறை மற்றும் வாதுரையில்  1-ம் எதிர்மனுதாரர் மற்றும் 2-ம் எதிர்மனுதாரர் இரு வேறு கொள்கை செயல்பாடுகள் வெவ்வேறு என தெளிவாகவும் உறுதிப்படுத்தும் விதமாகவும் நிருபித்துள்ளார். எனவே இவ்வாணையம் 1-ம் எதிர்மனுதாரர் 1-ம் மனுதாரருக்கு எந்தவித சேவை குறைபாடு செய்யவில்லை என்பது உறுதிப்படுத்துகிறது எனவே 1-ம் எதிர்மனுதாரரை இப்புகாரில் இருந்து விடுவிக்கிறது.

1-ம் மனுதாரரின் விபத்து காப்பீடு இழப்பு கோரிக்கைக்கு 2-ம் எதிர்மனுதாரர் தனது எழுத்துரை மற்றும் வாதுரையில்  1-ம் மனுதாரர் கணவர் அதாவது காப்பீடு பெற்றவர் 350 சிசி (350CC) கொண்ட ராயல் என்ஃபீல்டு  (Royal Enfield Motor) வாகனத்தில் சென்று விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார் எனவும் அவர் காப்பீடு நிறுவன கொள்கையின்படி 150சிசிக்கு (350CC)  குறைவான வாகனத்தில் செல்ல வேண்டும் என்பது 2-ம் என்று தீர்ப்பு மனுதாரரின் விதி என்பதை 2-ம் எதிர்மனுதாரர் தரப்பு ஆவணச் சான்று Ex.B1 குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முரண்பாட்டை ஆணையம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படியும் காப்பீட்டு நிறுவன நிபந்தனைகள் உரிய முறையில் முழுமையாக நுகர்வோருக்கு அதாவது பாலிசிதாரருக்கு விளக்கப்பட்டுள்ளதா? என்பதில் ஐயம் ஏற்படுகிறது. 1-ம் மனுதாரரின் கணவர் 2-ம் எதிர்மனுதாரிடம் காப்பீடு பெற்றவராவார். அவருக்கு இந்த காப்பீடு எடுத்தால் 150சிசிக்கு கீழ் உள்ள வாகனங்கள் மட்டும்தான் இயக்க வேண்டும் அப்போதுதான் இந்த விபத்து காப்பீடு இழப்பீடு வழங்க முடியும் என்று 1-ம் எதிர்மனுதாரர் சொல்லியிருந்தால் 1-ம் மனுதாரர் அதிகப்படியான 350சிசி வாகனத்தை பயன்படுத்த கூடுமா என்ற கேள்வியும் 1-ம் எதிர்மனுதாரர் தரப்பிலிருந்து எழுப்பப்படுகிறது? 1-ம் மனுதாரரின் கணவர் Individual Personal Accident Policy யை தனக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு 2-ம் எதிர்மனுதாரருக்கு காப்பீடு செய்த தொகையிலிருந்து இழப்பீடு கிடைக்கும் என்ற நோக்கத்தில் எடுத்துள்ளார். 2-ம் எதிர்மனுதாரரின் காப்பீடு நிபந்தனைகள் 1-ம் எதிர்மனுதாரரின் மூலமாக 1-ம் மனுதாரரின் கணவர் எடுத்துள்ளார். அப்போது 1-ம் எதிர்மனுதாரர் தெளிவாக காப்பீடு நிபந்தனைகள் காப்பீடு பெற்ற யுவராஜ்க்கு கூறியதாகவும் அதற்கு எல்லாம் ஒப்புக்கொண்டு தான் பாலிசி எடுத்தார் என்பதை 1-ம் எதிர்மனுதாரரும் மற்றும் 2-ம் எதிர்மனுதாரரும் நிரூபிக்கவில்லை.

அதை உறுதிப்படுத்தும் விதமாக 1-ம் எதிர்மனுதாரர் தனது எழுத்துரையில் 1-ம் மனுதாரரின் கணவர் இறப்புக்குப் பிறகு மனுதாரரின் கோரிக்கையையேற்று சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து மனுதாரரின் Claim Form –னை  2-ம் எதிர் தரப்பினர் அதாவது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார். அப்படி இருக்கையில் 1-ம் மனுதாரரின்   Claim Form 2-ம் மனுதாரரின் நிபந்தனைப்படி இல்லை என்றால் எப்படி 2-ம் எதிர்மனுதாரருக்கு அனுப்ப முடியும். எனவே         2-ம் எதிர்மனுதாரரின் காப்பீடு ஏஜென்ட் 1-ம் எதிர்மனுதாரரும் பாலிசிதாரர் யுவராஜ்க்கு காப்பீடு நிபந்தனைகள் விலக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

                   1-ம் மனுதாரரின் கணவர் காப்பீடு செய்த ஆவணம் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகள் 1-ம் எதிர்மனுதாரர் வழங்கிய காப்பீடு இழப்புக்கான நிபந்தனை ஆவணத்தில் 1-ம் எதிர்மனுதாரரின் கணவர் யுவராஜ் ஒப்புக்கொண்டு கையொப்பம் இடவில்லை என்பதை 1-ம் மனுதாரரின் ஆவணச் சான்று Ex.B1 உறுதி செய்கிறது.

A similar view is taken in

Hon’ble Supreme Court of India

Modern Insulators Ltd. v. Oriental Insurance Co. Ltd. (2000) 2 SCC 734,

“(8) It is the fundamental principle of insurance law that utmost good faith must be observed by the contracting parties and good faith forbids either party from non-disclosure of the facts which the parties know. The insured has a duty to disclose and similarly it is the duty of the insurance company and its agents to disclose all material facts in their knowledge since the obligation of good faith applies to both equally.”

AND

Consumer Protection Act, 1986 :

Sec.2. (r) (1) the practice of making any statement, whether orally or in writing or by visible representation which,-

Sec. 2 (29) Having noted the provision governing unfair trade practice, it is rather crystal clear that it takes in its sweep all forms of unfair trade practice. One cannot give a restrictive or narrow interpretation to this provision which starts from an invitation, preceded by an offer, followed by an acceptance, conduct, and execution of the contract. Court’s finding against one of the parties qua the existence of unfair trade practice has to be transformed into an adequate relief in favour of the other, particularly in light of Section 14 of the 1986 Act.

 

 

Consumer Protection Act, 2019 :

Sec. 2 (v) makes a false or misleading representation concerning the need for, or the usefulness of, any goods or services.”

(v) permitting or has the effect of permitting one party to assign the contract to the detriment of the other party who is a consumer, without his consent; or

(vi) imposing on the consumer any unreasonable charge, obligation or condition which puts such consumer to disadvantage;

 

 

             மேற்கண்ட மாண்புமிகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் விதியின் படியும் இவ்வாணையம் 2-ம் எதிர்மனுதாரர் நேர்மையற்ற வணிகம் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

பிரச்சினை  எண் : 1.    

பிரச்சனை எண் 1-ன் முடிவுக்கு இணங்க 2-ம் எதிர்மனுதாரர் நேர்மையற்ற வணிக  முறை புரிந்ததற்காக,  1-ம் மனுதாரரின் கணவர் 2-ம்  எதிர்மனுதாரர் நிறுவனத்தில் எடுத்த Individual Personal Accident Policyக்கு உண்டான காப்பீட்டுத்தொகை ரூபாய்.10,00,000/-மும்,                                                              2-ம்  எதிர்மனுதாரர்களால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்கு நஷ்ட ஈடாக ரூபாய்.70,000/-மும் உரிய காலத்தில் காப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்ததற்காக நஷ்ட ஈடாக ரூபாய்.20,000/- மும் வழக்கு செலவுத் தொகை ரூபாய்.10,000/-மும்,  வழங்க வேண்டும்மென்றும் பிரச்சனை எண் 2 .க்கு முடிவு செய்யப்படுகிறது.

                  முடிவாக, இந்த மனு  அனுமதிக்கப்பட்டு 1-ம் மனுதாரரின் கணவர் 2-ம்  எதிர்மனுதாரர் நிறுவனத்தில் எடுத்த Individual Personal Accident Policy க்கு உண்டான காப்பீட்டுத் தொகை ரூபாய்.10,00,000/- மும், 2-ம்  எதிர்மனுதாரர்களால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்கு நஷ்ட ஈடாக ரூபாய்.70,000/-மும் உரிய காலத்தில் காப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்ததற்காக நஷ்ட ஈடாக ரூபாய்.20,000/- மும் வழக்கு செலவுத் தொகை ரூபாய்.10,000/-மும், வழங்க வேண்டும்மென்று எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடப்படுகிறதுஉத்தரவை நிறைவேற்ற கால அவகாசம் இரண்டு மாதங்கள் தவறும்பட்சத்தில் வருடத்திற்கு 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்மென்றும்  உத்தரவிடப்படுகிறது.

 

 

இந்த உத்தரவு உறுப்பினர்-1ஆல் சுருக்கெழுத்தில் எழுதப்பட்டு,  அவரால் கணணியில் தட்டச்சு செய்யப்பட்டு, அவரால் சரி செய்யப்பட்டு இன்று 2022ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் எங்களால் அவையறிய உத்தரவு பகரப்பட்டது.  

                        ஓம்                                                                                         ஓம்

உறுப்பினர் – 1                                                                  தலைவர்

மனுதாரரின் தரப்புச் சான்று ஆவணங்கள் : -

மு.சா. ஆ.01.

06.01.2015

1-ம் மனுதாரரின் கணவர் ஒன்னாம் எதிர்மனிதாரரின் மூலம் இரண்டாம் எதிர்மனுதாரர் நிறுவனத்தில் எடுத்த Individual Personal Accident Policy

நகல்

மு.சா. ஆ.02.

26.01.2016

முதல் தகவல் அறிக்கை

நகல்

மு.சா. ஆ.03.

26.01.2015

1-ம் மனுதாரரின் கணவரின் இறப்புச் சான்றிதழ்

நகல்

மு.சா. ஆ.04.

27.11.2015

 பிரேத பரிசோதனை அறிக்கை

நகல்

மு.சா. ஆ.05.

27.11.2016

2-ம் எதிர்மனுதாரர் ஒண்ணாம் மனுதாரருக்கு அனுப்பிய கடிதம்

நகல்

மு.சா. ஆ.06.

06.01.2015

1-ம் எதிர்மனுதாரர் வழங்கிய காப்பீடுத் தொகை காண விவரம்

நகல்

 

 

2-ம் எதிர்தரப்பினரின் தரப்புச் சான்று ஆவணங்கள் : - 

எ.சா. ஆ.01.

06.01.2015

1-ம்மனுதாரரின் கணவர் காப்பீடு செய்த ஆவணம் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகள்

நகல்

 

            

                                                            ஓம்/-                                                                                   ஓம்/-

உறுப்பினர் – 1                                                                  தலைவர்

 
 
[ TMT.S.TAMILSELVI.,B.A.,B.L.,]
PRESIDENT
 
 
[ THIRU P.M.MUTHUKUMAR.,M.A.,]
MEMBER
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.