Tamil Nadu

Ariyalur

CC/232/2022

Arul doss, S/o. Godhandaraman, Udayarpalaiyam, Ariyalur - Complainant(s)

Versus

Equitas small finance Bank, No. 106, Sarangapani road,Kumbakonam- 612001. - Opp.Party(s)

28 Feb 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 06-10-2022

                      உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 28-02-2023  

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம்,அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண்:  232/2022.

 

            அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தெற்கு ஆயுதக்களம் கிராமம், நடு தெருவில் வசிக்கும் கோதண்டராமன் மகன் அருள்தாஸ்                                                                                             -முறையீட்டாளர்

 

            கும்பகோணம் நகர், சாரங்கபாணி  கிழக்குத்தெரு இலக்கம் 106 -ல் உள்ள Equitas Small Finance Bank-ன் மேலாளர் அவர்கள்    - எதிர் தரப்பினர்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திரு  ஏ.ஜே. தமிழ் முருகன், வழக்கறிஞர்  முன்னிலையாகியும்   எதிர் தரப்பினருக்கு இந்த ஆணையத்தில் இருந்து அறிவிப்பு அனுப்பியதில் அதனைப் பெற்றுக்கொண்டு ஆணையத்தில் தோன்றி தமது  தரப்பு வாதத்தை எடுத்துரைக்க தவறியதால் அவர்மீது ஒருதலைப் பட்ச ஆணை பிறப்பிக்கப்பட்டு   இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக           31-01-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, சான்றாவணங்கள் – 14,  அவரது தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்  மீது புகார் தாக்கல் செய்து, தான் எதிர் தரப்பினரிடம் செலுத்திய ரூ 57, 105/-ஐ   வட்டியுடன் தமக்கு எதிர்தரப்பினர் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தம்மால் எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து அடமான  ஆவணத்தை எதிர்தரப்பினர் ரத்துசெய்து தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்ட இழப்பு மன உளைச்சல் போன்றவற்றிற்கு இழப்பீடாக ரூ 2 லட்சம் எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர்   இந்த   ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

  • தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

03.       தமது மனைவி ஜெயக்கொடி கடந்த 16-10-2020 ஆம் தேதியில் எதிர் தரப்பினரிடம் ரூ 7,50,000/- மட்டும் வீட்டு கடன் பெற்றார் என்றும் இவ்வாறு கடன் பெறும்போது தமது மனைவியின் பெயரில்   காப்பீடு செய்யப்பட்டு அதற்கான பிரிமியம் எதிர்தரப்பினர் மூலம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தான ஆவணத்தின் மூலம் தமக்கு பாத்தியப்பட்ட சொத்தை எதிர் தரப்பினருக்கு அடமானம் எழுதி கொடுத்துள்ளேன் என்றும் தமது மனைவி கடந்த 17-07-2021 ஆம் தேதியில் இறந்து விட்டார் என்றும் தமது மனைவி இறந்து விவரத்தை எதிர் தரப்பினருக்கு தெரிவித்தும் அவர்கள் தம்மை தொடர்ந்து தொகையை செலுத்த வலியுறுத்தினார்கள் என்றும் இந்த வகையில் தாம் ரூ 57, 105/-செலுத்தினேன் என்றும் அதற்குப் பின்பு செலுத்த மறுத்துவிட்டு காப்பீடு மூலம் கடனை சரிசெய்துகொண்டு அடமான ஆவணத்தை ரத்து செய்து தருமாறு கேட்டேன் என்றும் ஆனால் அதற்கு மாறாக எதிர்தரப்பினர் செயல்பட்டார்கள் என்றும் இது குறித்து வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இறந்தபோன தனது மனைவிக்கு  தனது வழக்கறிஞர் அறிவிப்பின் மூலம் தெரிந்து கொண்ட பின்னர் அறிவிப்பு அனுப்பியுள்ளார்கள் என்றும் இத்தகைய எதிர்தரப்பினர் செயல் சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற விவரங்களை இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

04.       எனவே, தான் எதிர் தரப்பினரிடம் செலுத்திய ரூ 57, 105/-ஐ   வட்டியுடன் தமக்கு எதிர்தரப்பினர் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தம்மால் எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்து அடமான  ஆவணத்தை எதிர்தரப்பினர் ரத்துசெய்து தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினரின் செய்கையால் ஏற்பட்ட இழப்பு மன உளைச்சல் போன்றவற்றிற்கு இழப்பீடாக ரூ 2 லட்சம் எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

05.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்    சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

            2)         எதிர்தரப்பினர்  சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

  

            3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

எழு வினா எண் – 1

 

06.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல எதிர்தரப்பினர்களின் வங்கியில் கணக்கு வைத்துள்ளதும் கடன் பெற்றுள்ளதும் எதிர்தரப்பினர்   அறிவிப்புகள் மூலம் தெரிய வருவதால் முறையீட்டாளர் எதிர் தரப்பினரின் நுகர்வோர் ஆவார்.

 

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல எதிர்    தரப்பினரிடம் முறையீட்டாளரின் மனைவி   கடன் பெற்ற போது தமது கடனுக்கு காப்பீடு செய்து உள்ளார் என்பதை முறையீட்டாளர் சான்றாவணம்   மூன்றின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதில் காப்பீட்டுக்கான கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.    இவ்வாறு கடன் பெற்றவர் இறந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தில்   எதிர் தரப்பினர் இழப்பீட்டைப் பெற்று எதிர் தரப்பினர் கடன் பெற்றவரின் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது சட்டபூர்வமான எதிர்பார்ப்பாகும்.  அத்தகைய பணியை எதிர்தரப்பினர் செய்ய இயலாது என நினைக்கும் போது நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தின் பாலிசியை பெற்று கடன் பெற்றவருக்கு வழங்கியிருக்க வேண்டும். இதனை எதிர் தரப்பினர் செய்ய தவறிவிட்டனர். இந்நிலையில் காப்பீட்டு நிறுவனம் மூலம் கடன்  பெற்றவரின் கடன் தொகையை பெற்று முடித்துக் கொள்ள வேண்டியது எதிர் தரப்பினரின் பணியாகும்.  இந்நிலையில் எதிர்தரப்பினர் இறந்துபோன முறையீட்டாளரின் மனைவி ஜெயக்கொடி வழங்கிய   கடனை   கேட்பது சட்டப்படி சரியல்ல என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

07.       முறையீட்டாளரின் மனைவி ஜெயக்கொடி இறந்த பின்னர் முறையீட்டாளரிடம் கடனுக்காக வசூலித்த தொகை எதனையும் வசூலிக்க எதிர் தரப்பினருக்கு உரிமை இல்லை. முறையீட்டாளரின் மனைவி ஜெயக்கொடி இறந்த பின்பு முறையீட்டாளரிடம் வசூலித்த தொகையை திரும்ப வழங்க வேண்டியது எதிர்தரப்பினரின் கடமை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

08.       முறையீட்டாளரின் மனைவி ஜெயக்கொடி இறந்துவிட்டார் என்பதை முறையீட்டாளர் எதிர் தரப்பினரிடம் நேரிலும் வழக்கறிஞர் அறிவிப்பு மூலமும் தெரிவித்த பின்னர் தொகை வசூலித்தது, இறந்துபோன நபருக்கு அறிவிப்பு அனுப்பியது போன்றவை சேவை குறைபாடு என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

 

 

எழு வினா எண் – 2

 

09.       எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும்   தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கின் தன்மையை கருதி முறையீட்டாளரின் மனைவி ஜெயக்கொடி இறந்த பின்னர் முறையீட்டாளரிடம் கடனுக்காக வசூலித்த தொகை ரூ 57, 105/-ஐ   மற்றும்  முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு   இழப்பீடு ரூ 1,00,000/- எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 28-02-2023  தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 12 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 1, 57, 105/-தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

10.       எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும்   தீர்மானிக்கப்பட்ட நிலையில் முறையீட்டாளருக்கு 06-02-2019 ஆம் தேதியே தான ஆவணம் மூலம் பாத்தியப்பட்டு எதிர் தரப்பினருக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ள அடமான ஆவணத்தை எதிர்  தரப்பினர்   ரத்து செய்து அசல் ஆவணங்களை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 .

எழு வினா எண் – 3

 

11.       இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முறையீட்டாளரிடம்   வசூலித்த தொகை ரூ 57, 105/-ஐ   மற்றும்  முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு   இழப்பீடு ரூ 1,00,000/- எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 28-02-2023  தேதி முதல் ரூ 100க்கு ஆண்டொன்றுக்கு 12 சதவீத வட்டி கணக்கிட்டு ரூ 1, 57, 105/-தொகையுடன் முறையீட்டாளருக்கு எதிர்தரப்பினர் வழங்க வேண்டும்.

 

02.       முறையீட்டாளருக்கு 06-02-2019 ஆம் தேதியே தான ஆவணம் மூலம் பாத்தியப்பட்டு எதிர் தரப்பினருக்கு எழுதி கொடுக்கப்பட்டுள்ள அடமான ஆவணத்தை எதிர்  தரப்பினர்   ரத்து செய்து அசல் ஆவணங்களை இந்த ஆணை கிடைக்கப்பெற்ற நான்கு வார காலத்திற்குள் முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.

 

03.       இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  28-02-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

 

 

                                                                                    தலைவர்.    

                       

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II

 

 

 

 

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

20-10-2020

Welcome letter

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

02-08-2019

Document Acknowledgment letter

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

-

Loan account statement

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

07-11-2020

Amortization Schedule Report

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

-

Pass book

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

09-08-2021

Death Certificate

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

20-09-2021

Receipt

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

20-11-2021

Receipt

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

28-12-2021

Receipt

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

08-02-2022

Letter from opposite party

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

04-04-2022

Foreclosue lettter

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.12

11-05-2022

Legal notice

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.13

28-06-2022

Notice from opposite party

ஜெராக்ஸ்

ம.சா.ஆ1.4

22-07-2022

Legal notice

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு அருள்தாஸ்

எதிர்தரப்பினர்கள் சாட்சி: இல்லை

 

                                                                       

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.