Kayalvizhi, Ariyalur filed a consumer case on 15 Feb 2023 against Dr.A.K.Senthil Kumar M.B.B.S., Prasath Surgical care, Ariyalur in the Ariyalur Consumer Court. The case no is CC/21/2019 and the judgment uploaded on 17 Feb 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 18-07-2019
உத்தரவு பிறப்பித்த நாள் : 15-02-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 21/2019.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், முத்து சேர்வமடம், வெள்ளாழ தெருவில் வசிக்கும் சரவணன் மனைவி கயல்விழி
-முறையீட்டாளர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் மேற்கு வெள்ளாழ தெரு, இலக்கம் 34 ஏ - ல்உள்ள பிரசாத் சர்ஜிகல் கேர் மருத்துவர் ஏ கே செந்தில் குமார்
- எதிர் தரப்பினர்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் எஸ் மகேந்திரன் மற்றும் இ செந்தில் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர் தரப்பினருக்கு அவர்ரே முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 30-01-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-2, சான்றாவணங்கள் – 9, எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம் -1 ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினரால் ஏற்பட்ட சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 2,90,000/- , தாம் செய்த மருத்துவச் செலவுகள் ரூ 2,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்று முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
03. தாம் கடந்த 14-05-2018 ஆம் தேதியில் எதிர் தரப்பினரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் தமக்கு பெண் குழந்தை பிறந்தது என்றும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு வந்த சில நாட்களில் எதிர் தரப்பினர் தமக்கு அளித்த மருந்துகள் காரணமாக பக்க விளைவு ஏற்பட்டு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் இதுகுறித்து எதிர் தரப்பினரை சந்தித்து கேட்டபோது அவர் உடல் நிலையை சரிசெய்ய அளித்த மருந்து மீண்டும் உடல் நிலையை மிக மோசமான நிலைக்கு உள்ளாக்கியது என்றும் இதன் காரணமாக மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 10 நாட்கள் உள்நோயாளியாக தங்கி 22 லட்சம் செலவு செய்து சிகிச்சை பெற்றேன் என்றும் தமக்கு எதிர் தரப்பினர் அஜாக்கிரதையாக சிகிச்சை அளித்துள்ளார் என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கைகள் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் பெருத்த இழப்பு ஏற்பட்டது என்றும் இது குறித்து வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, எதிர் தரப்பினரால் ஏற்பட்ட சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ 2,90,000/- , தாம் செய்த மருத்துவச் செலவுகள் ரூ 2,00,000/- மற்றும் இந்த வழக்கின் செலவு தொகை ஆகியவற்றை எதிர்தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்று தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம்
04. புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர் தரப்பினர் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார் .
05. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல தமது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறப்பிற்குப் பின்பு நல்ல முறையில் நல்ல உடல் நிலையுடன் விடுவிக்கப்பட்டார் என்றும் தமது மருந்துகளால் எவ்வித பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும் அவருக்கு இடுப்பின் இரண்டு பக்கத்திலும் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது என்றும் ஆனால் ஒரு பக்கத்தில் மட்டும் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் என்றும் ஒரே வகையான மருந்து இடுப்பின் இரண்டு பகுதியிலும் செலுத்தப்பட்ட நிலையில் ஒரு பக்கத்தில் மட்டும் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது என்று கூறுவது தவறானது என்றும் ஒரு பகுதியில் இடுப்பில் பிரச்சனை என்று வந்து சந்தித்தபோது அதனை ஆய்வு செய்ததில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை அவரது தோளில் உள்ள வேறு பிரச்சினை காரணமாக ஏற்பட்டது என்று அவருக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும் தமது மருத்துவத்திற்கும் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு மயிலாடுதுறையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக சொல்லப்படுவதில் முரண்பாடுகள் உள்ளது என்றும் தமது தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் இல்லை என்றும் மருத்துவ அலட்சியம் என்பது தமது தரப்பில் முற்றிலும் இல்லை என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.
06. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
2) எதிர்தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
3) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
07. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல எதிர் தரப்பினர் அலட்சியமாக அவருக்கு சிகிச்சை அளித்து சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பதை நிரூபிக்க முறையீட்டாளர் தரப்பில் போதிய சாட்சியங்களும் ஆவணங்களும் இல்லை என்றும் எதிர் தரப்பினர் அளித்த சிகிச்சையின் காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது என்பதற்கு மருத்துவ நிபுணர் ஒருவரின் சான்று எதுவும் முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 2 & 3
08. முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 15-02-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 14-05-2018 | மருத்துவ பரிசோதனை அறிக்கை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 18-05-2018 | மருத்துவமனை விடுவிப்பு சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 07-07-2018 | மருத்துவமனை விடுவிப்பு சான்று | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | - | ரசீதுகள் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 13-10-2018 | வழக்கறிஞர் அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | - | எதிர்தரப்பினர் பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | 22-10-2018 | எதிர்தரப்பினர் பதில் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.8 | - | புகைப்படம் | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.9 | - | இரண்டாம் சாட்சியின் அடையாள அட்டை | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திருமதி கயல்விழி, திருமதி மலர்விழி
எதிர்தரப்பினர்கள் சாட்சி: ஏ கே செந்தில் குமார்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.