Tamil Nadu

Ariyalur

CC/9/2022

Ramalingam s/o Ramasamy, No.47A, South Street,New Colony, Udayarpalayam Taluk, - Complainant(s)

Versus

DHFL General Insurance Limited - Opp.Party(s)

R.Anbalagan

17 Mar 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 22-04-2022

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 17-03-2023  

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண்:  09/2022.

 

            அரியலூர் மாவட்டம், புதிய காலனி, தெற்கு தெரு, இலக்கம் 47 ஏ -ல் வசிக்கும் ராமசாமி மகன் ராமலிங்கம்                                   -முறையீட்டாளர்

 

1.         M/S. Navi General Insurance Company Ltd., (Previously DHFL General Insurance Ltd), Rep.by its Managing Director, No: 402, 403 & 404, A&B Wing, 4th Floor, Fulcrum, Sahar road, Next to Hyatt Regency, Andheri(E), Mumbai – 400 099..

 

2.         தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகர், லட்சுமி விலாஸ் தெரு, இலக்கம் 2 & 3 -ல் உள்ள ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் அதன் கிளை மேலாளர் மூலம்                                                                                   -எதிர் தரப்பினர்கள்

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திரு ஆர் அன்பழகன் வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு எஸ் அருணன் வழக்கறிஞர் முன்னிலையாகியும் இரண்டாம் எதிர் தரப்பினர் தோன்றா தரப்பினராக   முடிவு செய்யட்டும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      15-03-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், எதிர்தரப்பினர்களின் பதில் உரை,    முறையீட்டாளரின் நிரூபண  வாக்குமூலம் அவரது சான்று ஆவணங்கள்-14, முதலாம் எதிர் தரப்பினரின் நிரூபண  வாக்குமூலம் இரு தரப்பினரின் வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, காப்பீட்டு ஆவணப்படி எதிர்தரப்பினர்கள் தமக்கு ரூ 8 லட்சம் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ஒரு லட்சம் இழப்பீடு எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்த்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தமது மனைவி தமிழரசி இரண்டாம் எதிர் தரப்பினரிடம் வீடு கட்டுவதற்காக அணுகி கடன் பெற்றார் என்றும் அப்போது இரண்டாம் எதிர் தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரின் முகவராக செயல்பட்டு தமக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு பரிந்துரைத்ததன் அடிப்படையில் தாமும் ஏற்றுக்கொண்டு பிரீமியம் செலுத்தினேன் என்றும் இவ்வாறு தாம் முதலாம் எதிர் தரப்பினரின் நிறுவனத்தில் காப்பீட்டு ஆவணத்தை பெற்றேன் என்றும் இந்த ஆவணத்தின் மூலம் தமக்கு 28-02-2019 ஆம் தேதி முதல் 27-02-2024 ஆம் தேதி வரை முதலாம் எதிர் தரப்பினர் காப்பீடு வழங்கினார்கள் என்றும் (Master Policy No: 27100000002, Policy holder Id: C000240374) முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       தாம் பணி புரிவதற்காக கேரளா சென்றிருந்தேன் என்றும் அங்கு 04-07-2021 ஆம் தேதியில் பெரும்பாவூர் பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு விட்டது என்றும்  பின்பு எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தமது மனைவிக்கும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கும் தகவல் வழங்கப்பட்டது என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் மூலமாக முதலாம் எதிர் தரப்பினருக்கு   இழப்பீட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றும் தமது இழப்பீட்டு கோரிக்கை நிராகரித்து முதலாம் எதிர் தரப்பினர் இரண்டாம் தரப்பினருக்கு 27-12-2021 ஆம் தேதியில் தகவல் அளித்தார் என்றும் அவ்வாறு அளிக்கப்பட்ட மின்னஞ்சல் நகலை தமக்கு   இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கினார் என்றும் மேற்படி விபத்தில் தமது ஒரு கை முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது என்றும் தமக்கு வழங்கப்பட்ட காப்பீட்டு ஆவண விதிகளின்படி முற்றிலுமாக ஒரு கை அகற்றப்பட்டு விட்டால் 8 லட்சம் இழப்பீடு தமக்கு வழங்குவதற்கு முதலாம் எதிர்தரப்பினர் கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு அதனை பெற்றுத்தர பகர பொறுப்பு உண்டு என்றும் இதுகுறித்து வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே, காப்பீட்டு ஆவணப்படி எதிர்தரப்பினர்கள் தமக்கு ரூ 8 லட்சம் வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு ஒரு லட்சம் இழப்பீடு எதிர்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை எதிர்த்தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும்தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

முதலாம் எதிர் தரப்பினர்  தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

06.       முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர்  தமது உரையில் தெரிவித்துள்ளார்.

 

07.       முறையீட்டாளர் தங்களிடம் காப்பீட்டு பாலிசி பெற்றுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒப்புக்கொள்ளப்படுகிறது என்றும்  முறையீட்டாளருக்கு விபத்து ஏற்பட்டு இழப்பீட்டு கோரிக்கையை அவர் கடந்த 23-12-2021 ஆம் தேதியில் பதிவு செய்தார் என்றும் காப்பீட்டு ஆவண விதிமுறைகளின்படி இடது கை சேதம் ஏற்பட்டதற்கு எவ்வித இழப்பீடும் வழங்க இயலாது என்றும் இதுகுறித்து இரண்டாம் எதிர் தரப்பினருக்கு 27-12-2021 ஆம் தேதியில் தாங்கள் முறைப்படி தெரிவித்து விட்டோம் என்றும் இந்நிலையில் முறையீட்டாளரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடு ஏற்படவில்லை என்றும் இதன் காரணமாக முறையீட்டாளருக்கு சிரமம் ஏற்பட்டு அதனால் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் தீய நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்    முதலாம் எதிர் தரப்பினர்  தங்கள் பதில் உரையில் தெரிவித்து புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .

 

8.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர் தரப்பினர்கள்     சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

2)         எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

3)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

 

 

 

எழு வினா எண் – 1

 

09.       இரண்டாம் எதிர் தரப்பினர் மூலமாக பிரிமியம் பெற்று முறையீட்டாளருக்கு அவர் புகாரில் கூறியுள்ள காலத்திற்கு தங்களால் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று முதலாம் எதிர் தரப்பினர் தங்கள் பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார்.   இதன் மூலம் முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார் என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

10.       முறையீட்டாளருக்கு கடந்த 04-07-2021 ஆம் தேதியில் விபத்து ஏற்பட்டு இழப்பீட்டு   கோரிக்கை கடந்த 23-12-2021 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினரிடம் பதிவு செய்யப்பட்டது என்று முதலாம் எதிர்த்தரப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதோடு இந்த இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்து 27-12-2021 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார் என்பதும் சாட்சியங்கள் மூலம் தெரிய வருகிறது. 

 

11.        முறையீட்டாளருக்கு விபத்து நடந்தது என்பதும் அதன் மூலம் அவரது உடலுக்கு சேதம் ஏற்பட்டது என்பதும் அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை, மருத்துவச் சான்றுகள் ஆகிய மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள ஆவணமான புகைப்படத்தின் மூலம் அவர் தமது இடது கையை முற்றிலும் இழந்து அந்த கை அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது என்பதையும் அறிய முடிகிறது. மேலும் இந்த ஆணையத்தின் முன்பு விசாரணைக்காக முறையீட்டாளர் தோன்றியபோது அவரது இடது கை இல்லை என்பதையும் இந்த ஆணையம் நேரடியாக அறிய முடிகிறது.

 

12.       முறையீட்டாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காப்பீட்டு ஆவண விதிமுறைகளின்படி ஒரு கை முற்றிலும் உடலை விட்டு துண்டிக்கப்பட்டு நிரந்தர ஊனம் ஏற்படும்போது அவருக்கு ரூ 8 லட்சம் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று உள்ளது. இந்நிலையில் முதலாம் எதிர்த்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 8 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்க கடமைப்பட்டவர்  என்றும் குழு காப்பீடு மூலமாக காப்பீடு பெறப்பட்டுள்ளதால்   காப்பீட்டை செய்து கொடுத்துள்ள இரண்டாம்   எதிர் தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரிடம் இருந்து காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர கடமைப்பட்டவர் என்றும்   முதலாம் எதிர் தரப்பினர் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நான்கு நாட்களில் அதனை நிராகரித்து இருப்பதும் வியப்பாக உள்ளது என்று இந்த ஆணையம் கருதுகிறது இந்த நிலையில் முதலாம் எதிர் தரப்பினர் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்து இருப்பதன் மூலம் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இழப்பீட்டைப் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் மூலம் இரண்டாம் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 2  

 

13.       முதலாம் எதிர் தரப்பினர் இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்து இருப்பதன் மூலம் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் இழப்பீட்டைப் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் மூலம் இரண்டாம் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்றும் முடிவு காணப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தன்மையை கருதி முறையீட்டாளருக்கு தக்க பரிகாரங்கள் வழங்குவது அவசியம் என்று இந்த ஆணையம் கருதுகிறது.

 

14.       இந்நிலையில் முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 8 லட்சம் காப்பீட்டு தொகையாக இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள்  வழங்க வேண்டும். தவறினால்   இழப்பீட்டுக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட  23-12-2021 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ரூ 8  லட்சத்துக்கு   ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு  முதலாம் எதிர் தரப்பினர் செலுத்த  வேண்டும்   என்று  இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

15.          இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதில் ஏற்பட்ட சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ ஐம்பதாயிரத்தை இரண்டாம் தரப்பினர் இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள்  வழங்க வேண்டும். தவறினால் இழப்பீட்டுக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட  23-12-2021 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ரூ ஐம்பதாயிரத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு  இரண்டாம் எதிர் தரப்பினர் செலுத்த  வேண்டும் என்று  இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

எழு வினா எண் – 3

 

16.       இந்த புகாரில் உள்ள பிரச்சனையில் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்    வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முதலாம் எதிர்தரப்பினர் முறையீட்டாளருக்கு ரூ 8 லட்சம் காப்பீட்டு தொகையாக இந்த ஆணை கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள்  வழங்க வேண்டும். தவறினால்   இழப்பீட்டுக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட  23-12-2021 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ரூ 8  லட்சத்துக்கு   ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு  முதலாம் எதிர் தரப்பினர் செலுத்த  வேண்டும்.

 

02.       இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதில் ஏற்பட்ட சேவை குறைபாட்டால் முறையீட்டாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ ஐம்பதாயிரத்தை இரண்டாம் தரப்பினர் இந்த ஆணை   கிடைக்கப்பெற்ற ஒரு மாத காலத்திற்குள்  வழங்க வேண்டும். தவறினால் இழப்பீட்டுக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட  23-12-2021 ஆம் தேதி முதல் தொகை செலுத்தப்படும் வரை ரூ ஐம்பதாயிரத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ.100-க்கு 6% வட்டி சேர்த்து முறையீட்டாளருக்கு  இரண்டாம் எதிர் தரப்பினர் செலுத்த  வேண்டும்.  

 

03.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு எந்த பரிகாரங்களும் இல்லை      

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  17-03-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                                தலைவர்.

           

                                                                                                உறுப்பினர் – I

 

                                                                                                உறுப்பினர்-II.

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

27-02-2019

Letter of offer

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

-

Policy document

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

-

FIR

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

16-07-2021

Medical Certificate

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

22-07-2021

Discharge card

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

15-09-2021

Discharge card

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

27-12-2021

Mail to second OP from first OP

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

22-01-2022

Legal notice

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

24-01-2022

Acknowledgment

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

02-02-2022

Reply notice

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

-

Returnedd cover

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.12

-

Aadhaar card

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.13

-

Injury photo

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.14

-

Personal Accident policy

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு ராமலிங்கம்

எதிர்தரப்பினர்கள் சாட்சி:  திரு பகவத்

 

                                                                                                தலைவர்.

 

                                                                                                உறுப்பினர் – I

 

                                                                                                உறுப்பினர்-II.

 

 

                                                                                   

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.