Tamil Nadu

Ariyalur

CC/8/2021

Krishnaswaran - Complainant(s)

Versus

Branch Manager, Industand Bank - Opp.Party(s)

S.SenthilKumar

15 Mar 2023

ORDER

Heading1
Heading2
 
Complaint Case No. CC/8/2021
( Date of Filing : 27 Jul 2021 )
 
1. Krishnaswaran
s/o Samundeswaran, Vattakulathu North Street, Udaiyarpalayam Post, Ariyalur.
...........Complainant(s)
Versus
1. Branch Manager, Industand Bank
Opp State bank, sangapttai, perambalur. 2)Branch Manager, Chola M.S. Public insurance ltd,.Trichy. 3)Probrietor,trichy. 4)Rigional Transport Officer, Ariyalur.
............Opp.Party(s)
 
BEFORE: 
 HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D., PRESIDENT
 
PRESENT:
 
Dated : 15 Mar 2023
Final Order / Judgement

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 24-03-2021

                     உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 15-03-2023  

 

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம், அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண்:  08/2021.

 

            அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், உடையார்பாளையம் கிராமத்தில் வட்ட குலத்து அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் சாமுண்டீஸ்வரன் மகன் கிருஷ்ணேஸ்வரன்                                                                                                                      -முறையீட்டாளர்

1.         பெரம்பலூர், சங்குப்பேட்டை, ஸ்டேட் பாங்க் எதிரில் உள்ள இன்டஸ்டண்ட் வங்கியின் கிளை மேலாளர்,

 

2.         திருச்சி நகர், கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, டாப் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், இலக்கம் 41 -ல் அலுவலகம் வைத்துள்ள சோலா எம் எஸ் பொது இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், கிளை மேலாளர்                                    

3.         திருச்சி நகர், அரியமங்கலம், செந்தண்ணீர்புரம், சென்னை புறவழிச்சாலை, இலக்கம் 113/2 -ல் உள்ள குன் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர்                     

 

4.         அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்                                                                            - எதிர் தரப்பினர்கள்

 

 

 

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திரு  ச. செந்தில்குமார் வழக்கறிஞர் முன்னிலையாகியும் முதலாம் எதிர் தரப்பினருக்கு திரு ஏஜே தமிழ் முருகன் வழக்கறிஞர், இரண்டாம் எதிர் தரப்பினருக்கு திரு ஆர். ஹரி பாஸ்கர் வழக்கறிஞர் முன்னிலையாகியும் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்கள் ஆணையத்தின் முன்பு தோன்றாமலும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      14-03-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், முதலாம் எதிர்தரப்பினர் பதில் உரை,   இரண்டாம் எதிர்தரப்பினர் பதில் உரை,     முறையீட்டாளரின் நிரூபண  வாக்குமூலம், அவரது சான்று ஆவணங்கள்-10 முதலாம் எதிர் தரப்பினரின் நிரூபண  வாக்குமூலம் அவரது சான்று ஆவணங்கள்-11  மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, இரண்டாம் எதிர் தரப்பினர் முதலாம் எதிர்தரப்பினருக்கு செலுத்திய பாலிசி இழப்பீட்டுத் தொகை ரூ 90 ஆயிரத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றும் வாகனம் இயங்காததால்  தமக்கு ஏற்பட்ட வருமான இழப்பு ரூ.4,20,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.4,20,000/- தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ பத்தாயிரத்தை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் வாகனத்தின் அசல் பதிவை சான்றை முதலாம் எதிர்  தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாம் முதலாம் எதிர் தரப்பினரிடம் வாகன கடன் தருமாறு விண்ணப்பித்து 16-02-2018 ஆம் தேதியில் தமக்கு முதலாம் எதிர் தரப்பினர் வாகனத்தை விலைக்கு வாங்க ரூ 5,50,000/- கடன் வழங்கினார் என்றும் தான் TN 61 M 8689 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தை வாங்கினேன் என்றும் முதலாம் எதிர்த்தரப்பினர் தமது வாகனத்திற்கு அவரே காப்பீட்டு பணம் செலுத்திக் கொள்வதாக கூறி தமக்கு வழங்கப்பட்ட கடன் கணக்கில் ரூ.40,000/- சேர்த்துக் கொண்டார் என்றும் இந்நிலையில் முதலாம் ஆண்டில் காப்பீட்டு ஆவணத்தை முதலாம் எதிர் தரப்பினர் பணம் செலுத்தி பெற தவறியதால் அதனை தாமே பணம் செலுத்தி பெற்றுக் கொண்டேன் என்றும் 30-11-2019 ஆம் தேதி வரை முதலாம் எதிர் தரப்பினரிடம் ரூ 3,48,990/-  செலுத்தியுள்ளேன் என்றும் இரண்டாம் ஆண்டுக்கான காப்பீட்டு ஆவணத்தை முதலாம் எதிர் தரப்பினர் எடுத்துக் கொள்வதாக கூறியதால் தாம் ஒப்புக் கொண்டு முதலாம் எதிர் தரப்பினர் தமது கணக்கில் ரூ 22,268/- மட்டும் சேர்த்து இரண்டாம் எதிர் தரப்பினர் மூலமாக காப்பீட்டு ஆவணத்தை ஆவணம் பெறப்பட்டது என்றும் விபத்து ஏற்பட்டால் முழு சேத தொகையும் பெற்றுக் கொள்ளும் வகையில்   வாகனம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக முதலாம் எதிர் தரப்பினர் கூறினார் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

04.       இந்நிலையில் கடந்த 20-08-2019 ஆம் தேதியில் தனது வாகனம் விபத்துக்கு உள்ளாகி வாகனத்தை இயக்க இயலாத அளவிற்கு சேதம் அடைந்து விட்டது என்றும் இதுகுறித்து முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களுக்கு தகவல் அளித்ததில் இரண்டாம் எதிர் தரப்பினர் வாகனத்தை பழுது நீக்க மூன்றாம் எதிர் தரப்பினரிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டதன் காரணமாக தான் ரூ.40,000/- செலவு செய்து வாகனத்தை எடுத்து வந்து மூன்றாம் எதிர் தரப்பினரிடம் பழுது பார்க்க வழங்கினேன் என்றும் வாகனத்தை பரிசோதித்த மூன்றாம் எதிர் தரப்பினர் வாகனத்தை சரி செய்ய ரூ 5,50,000/- செலவு ஏற்படும் என தெரிவித்தார் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர் இழப்பீட்டுத் தொகையின் முதல் தவணையாக ரூ 90 ஆயிரத்தை முதலாம் எதிர் தரப்பினருக்கு 29-11-2019 ஆம் தேதியில் வழங்கியுள்ளார் என்றும் இது பற்றி முதலாம் எதிர்த்தரப்பினரிடம் கேட்டபோது கடன் தொகையில் வரவு வைத்துக் கொண்டதாக தெரிவித்தார் என்றும் மேலும் வாகனத்தை சரி செய்ய அசல் பதிவு சான்றை மூன்றாம் எதிர் தரப்பினர் கேட்டார் என்றும் அசல் பதிவு சான்றானது முதலாம் எதிர் தரப்பினர் வசம் இருந்ததால் அதனை கேட்டபோது முழு தவணைத் தொகையும் செலுத்தினால் மட்டுமே அசல் பதிவு சான்றை கொடுக்க முடியும் என தெரிவித்துவிட்டார் என்றும் முதலாம் எதிர் தரப்பினர் முறைகேடாக நான்காம் எதிர் தரப்பினரிடம் அசல் பதிவு சான்றை பெற்றுக் கொண்டுள்ளார் என்றும் இதனால் தமது வாகனம் இயக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் தமக்கு வருமான இழப்பு காரணமாக ரூ 4 லட்சத்து 20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் எதிர் தரப்பினர்களின் செய்கைகள் காரணமாக தமக்கு மன உளைச்சலும் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றும் இத்தகைய இழப்புகளுக்கு எதிர் தரப்பினர்கள் காரணம் என்றும் இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே, இரண்டாம் எதிர் தரப்பினர் முதலாம் எதிர்தரப்பினருக்கு செலுத்திய பாலிசி இழப்பீட்டுத் தொகை ரூ 90 ஆயிரத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றும் வாகனம் இயங்காததால்  தமக்கு ஏற்பட்ட வருமான இழப்பு ரூ.4,20,000/- எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்களின் சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.4,20,000/- தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ பத்தாயிரத்தை எதிர் தரப்பினர்கள் தமக்கு வழங்க வேண்டும் என்றும் வாகனத்தின் அசல் பதிவை சான்றை முதலாம் எதிர்  தரப்பினர் தமக்கு வழங்க வேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.

 

முதலாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

05.       முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் முதலாம் எதிர் தரப்பினர்  தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

06.       முறையீட்டாளருக்கும் ஏற்பட்ட கடன் ஒப்பந்தப்படி தங்களுக்கும் அவருக்கும் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஆர்பிட்ரேசன் மூலமாக தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதனால் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரை விசாரிக்க நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் முறையீட்டாளர் வணிக ரீதியில் வாகனத்தை வாங்கி பயன்படுத்துவதால் இந்த ஆணையத்தில் இந்த பிரச்சினையை விசாரிக்க இயலாது என்றும் முதலாம் எதிர் தரப்பினர்  தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள படி தங்களிடம் கடன் பெற்றது உண்மை என்றும் இவ்வாறு கடன் பெற்று புகாரில் கூறியுள்ள வாகனத்தை விலைக்கு வாங்கும் போது அந்த வாகனத்தை விற்ற விநியோகத்திடம் முறையீட்டாளர் காப்பீட்டு ஆவணத்தை பணம் செலுத்தி பெற்றுள்ளார் என்றும் இரண்டாம் ஆண்டு முதல் வாகன காப்பீட்டு பதிவை புதுப்பிக்க தங்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் தவணை  தொகையில் சேர்த்து செலுத்தி வந்தார் என்றும் முதலாம் ஆண்டு முடிந்த போது அவர் செலுத்தி இருந்த ரூ.12,000/-   தங்களிடம் இருந்த நிலையில் மேலும் ரு 10,268/-  தாங்கள் சேர்த்து இரண்டாம் ஆண்டுகாண காப்பீட்டு பாலிசி பெற்று தந்ததாகவும் இவ்வாறு தங்கள் தரப்பில் செலுத்தப்பட்ட மேற்படி தொகையை தற்போது வரை முறையீட்டாளர் தங்களுக்கு செலுத்தவில்லை என்றும் முதலாம் எதிர் தரப்பினர்  தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

 

08.       முறையீட்டாளர் தங்களிடம் பெற்ற கடனை குறித்த தேதியில் செலுத்துவதில் பலமுறை தவறி உள்ளார் என்றும் தங்களால் கடன் வழங்கப்பட்டு வாங்கப்பட்ட வாகனம் விபத்து ஏற்பட்ட பின்னர் அதனை மூன்றாம் எதிர் தரப்பினிடம் விட்டுவிட்டு அதனை சரி செய்ய எவ்வித ஒத்துழைப்பையும் முறையீட்டாளர் மூன்றாம் எதிர் தரப்பினருக்கு வழங்கவில்லை என்றும் மேலும் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் இழப்பீட்டுத் தொகை பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் இந்நிலையில் இரண்டாம் தரப்பினர் தங்களுக்கு ரூ 90 ஆயிரத்தை மூன்று மாதங்கள் கழித்து செலுத்தி வைத்தனர் என்றும் அதனை தாங்கள் முறையீட்டாளரின் கடன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டோம் என்றும் முதலாம் எதிர் தரப்பினர்  தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

09.       வாகனத்தின் பதிவு சான்றிதழை தாங்கள் நான்காம் எதிர் தரப்பினரிடம் பெற்று வாகனம் வணிக பயன்பாட்டிற்கு உள்ளது என்பதால் எப்போதும் வானத்தை   ஓட்டுபவர் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 18-09-2018 ஆம் தேதியில் முறையீட்டாளரிடம் வாகன அசல் பதிவு சான்றிதழை வழங்கி விட்டோம் என்றும் தங்கள் செயல்களால் தமக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதர சிரமங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் முறையீட்டாளர் கூறுவது சரியல்ல என்றும்  இன்னும் பிற சங்கதிகளையும்   முதலாம் எதிர் தரப்பினர்      தங்கள் பதில் உரையில் தெரிவித்து புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

10.       மேலும் முதலாம் எதிர்த்தரப்பினர் தாக்கல் செய்துள்ள நிரூபண  வாக்குமூலத்தில் தாங்கள்   ஆர்பிட்ரேசன் நடவடிக்கைகள் மூலம் கடனை தங்களது கடன் தொகையை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொண்டு மூன்றாம் எதிர் தரப்பினருக்கு தகவல் அளித்து சட்டப்படி அவரிடம் இருந்து தங்கள் கடன் மூலம் வாங்கப்பட்ட முறையீட்டாளரின் பெயரில் உள்ள வாகனத்தை கைப்பற்றி ஏலம் மூலம்   விற்று விட்டோம் என்றும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை முறையீட்டாளரின் கடன் கணக்கில் ரவு வைத்துள்ளோம் என்றும் இருப்பினும் இன்னும் முறையீட்டாளர் தங்களுக்கு தொகை செலுத்த வேண்டியது உள்ளது என்றும் அதனைப் பெற சட்டப்படி நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

 

இரண்டாம் எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

11.       முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்  தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார்.

 

12.       புகாரியில் கூறியுள்ள வாகனத்திற்கு காப்பீடு பெற முதலாம் எதிர்  தரப்பினர் தங்களுக்கு பிரிமிய தொகை செலுத்திய அடிப்படையில் காப்பீட்டு ஆவணம் வழங்கப்பட்டது என்றும் இவ்வாறு தங்களிடம் காப்பீடு பெறப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது என்று தங்களுக்கு முறையீட்டாளர் தரப்பில் கடிதம் மூலம் தகவல் அளிக்கப்பட்டது என்றும் தாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு தேவையான ஆவணங்களையும் விபத்துக்குள்ளான வாகனத்தின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்குமாறு முறையீட்டாளருக்கு பலமுறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம் என்றும் ஆனால் இழப்பீட்டு படிவம் மற்றும்   தேவையான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் இதன் காரணமாக முதலாவது எதிர் தரப்பினரிடம் தாங்கள் ரூ 90 ஆயிரத்தை செலுத்தி வைத்தோம் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் ஏற்படவில்லை என்றும் தங்களது சேவை குறைவாட்டால் தமக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என முறையீட்டாளர் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் இன்னும் பிற சங்கதிகளையும்   இரண்டாம் எதிர் தரப்பினர்      தங்கள் பதில் உரையில் தெரிவித்து புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

 

13.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         புகாரில் கூறப்பட்டுள்ள பிரச்சனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நிலைநிற்க தக்கதா?

 

            2)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர் தரப்பினர்கள்     சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

 

            3)         எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

 

            4)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

 

 

எழு வினா எண் – 1

 

14.       முறையீட்டாளருக்கும் ஏற்பட்ட கடன் ஒப்பந்தப்படி தங்களுக்கும் அவருக்கும் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஆர்பிட்ரேசன் மூலமாக தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதனால் முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரை விசாரிக்க நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகார வரம்பு இல்லை என்றும் முறையீட்டாளர் வணிக ரீதியில் வாகனத்தை வாங்கி பயன்படுத்துவதால் இந்த ஆணையத்தில் இந்த பிரச்சினையை விசாரிக்க இயலாது என்றும் முதலாம் எதிர் தரப்பினர்  தமது பதில் உரையில் தெரிவித்துள்ளார். வழக்கின் சங்கதிகள் குறித்த கேள்விகளை (questions of facts) முடிவு செய்வதற்கு முன்பாக மேற்படி சட்டம் தொடர்பான கேள்விக்கு (question of law) தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது.

 

 

15.       Section 4(1) of Consumer of Protection Act, 1986 states that “Save as otherwise expressly provided by the Central Government, by notification, this Act shall apply all goods and services”.  Hence, this Complaint is maintainable.  மேலும் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு வாகனம் வாங்கப்பட்டு இருந்தாலும் சுய தொழில் செய்வதற்கு வாங்கப்பட்டிருப்பதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி பரிகாரம் பெற முறையீட்டாளருக்கு உரிமை உண்டு என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

எழு வினா எண் – 2

 

16.       முறையீட்டாளர் புகாரில் முதலாம் எதிர் தரப்பினர் மீது கூறியுள்ள முதலாம் குற்றச்சாட்டு  என்னவென்றால், தாம் வாகன கடன் முதலாம் எதிர் தரப்பினரிடம் பெற்றபோது முதல் நான்கு ஆண்டு காலத்திற்கு வாகனத்திற்கு காப்பீடு செய்வதற்கு தாமே தொகையை செலுத்தி கொள்வதாக கூறி தமது கணக்கில் ரூ 40 ஆயிரத்தை கடந்த கடன் சேர்த்துக் கொண்டுள்ளார் என்பதாகும். இதனை நிரூபிக்க தேவையான கணக்கு அறிக்கையை முறையீட்டாளர் தமது தரப்பில் தாக்கல் செய்யவில்லை மேலும் முதலாவது எதிர் தரப்பினர் தாக்கல் செய்துள்ள   மூன்றாவது சான்றாவணமான கணக்கு அறிக்கையிலும் ரூ.40,000 செலுத்தப்பட்ட அதற்கான சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கான எந்த விவரங்களும் இல்லை. இந்நிலையில் முறையீட்டாளர் தரப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

17.       முறையீட்டாளர் புகாரில் முதலாம் எதிர் தரப்பினர் மீது கூறியுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு  என்னவென்றால், இரண்டாம் எதிர் தரப்பினரிடம் தம்மால் காப்பீடு செய்யப்பட்ட தமது வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து காரணமான இழப்பீட்டுத் தொகை எதனையும் தன்னிடம் வழங்காமல் இரண்டாம் எதிர் தரப்பினர் முதலாம் எதிர் தரப்பினரிடம் ரூ 90 ஆயிரம் வழங்கிய நிலையில் அதனை தமது கடன் தவணைத் தொகையில் கழித்துக் கொண்டதாக முதலாம் எதிர் தரப்பினர் கூறுவது  ஏற்புடையது அல்ல என்பதாகும்.  முதலாம் எதிர்தரப்பினர் தங்களிடம் இழப்பீட்டுத் தொகை வழங்குமாறு கோரிக்கை இரண்டாம் எதிர் தரப்பினரிடம் கோரிக்கை வைத்ததாக எவ்வித சாட்சியங்களும் இல்லை. இரண்டாம் எதிர்ர் தரப்பினர் எதிர் தரப்பினர் வழங்கிய ரூபாய் 90 ஆயிரத்தை முதலாம் எதிர்த்தரப்பினர் முறையீட்டாளரின் கடன் கணக்கில்   வரவு வைத்துள்ளனர் என முறையீட்டாளர் ஒப்புக் கொள்ளும் நிலையில் அந்த தொகையை முதலாம் எதிர் தரப்பினர் தாங்களே அபகரித்துக் கொண்டார்கள் என்று கூற இயலாது என்றும் அந்தத் தொகை முறையீட்டாளருக்கு அவரது கணக்கில் வந்து சேர்ந்து உள்ளது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது. 

 

18.       முறையீட்டாளர் புகாரில் முதலாம் எதிர் தரப்பினர் மீது கூறியுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு  என்னவென்றால், வாகனத்தின் அசல் பதிவு புத்தகத்தை முதலாம் எதிர்த்தரப்பினர் வழங்க மறுத்து விட்டார் என்பதாகும் ஆனால் 18-09-2018 ஆம் தேதியில் முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளருக்கு வழங்கியதாக பதில் உரையில் கூறப்படுவதை முறையீட்டாளர் தமது சாட்சியத்தில் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் மேற்படி குற்றச்சாட்டு முறையீட்டாளர் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

19.       16,17,18 ஆம் பத்திகளில் சொல்லப்பட்டுள்ள காரணங்களால் முறையீட்டாளர் முதலாம் எதிர்த்தரப்பினர் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் போதுமான சாட்சியங்கள் மூலம் அவரால் நிரூபிக்கப்படவில்லை என்றும் இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதலாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என கூற இயலாது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

20.       தமது வாகனம் விபத்து ஏற்பட்டது குறித்து தமது காப்பீட்டு நிறுவனமான இரண்டாம் எதிர் தரப்பினருக்கு தம்மால் தகவல் வழங்கப்பட்டது என்றும் அவரது தரப்பில் வானத்தை பழுது நீக்க மூன்றாம் எதிர் தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது என்றும் அவ்வாறு ஒப்படைத்த பின்னரும் பழுது நீக்க தேவையான தொகையை இரண்டாம் எதிர் தரப்பினர் வழங்கவில்லை என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.  விபத்து குறித்து தங்களுக்கு முறையீட்டாளர் தகவல் அளித்தார் என்று இரண்டாம் எதிர் தரப்பினர் ஒப்புக் கொள்ளும் நிலையில் தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களையும் விபத்துக்குள்ளான வாகனத்தின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்குமாறு தங்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று இரண்டாம் தரப்பினர் தங்கள் பதில்கள் கூறியுள்ளார்.  இரண்டாம் எதிர் தரப்பினர் விபத்துக்குள்ளான வாகனத்தை மூன்றாம் எதிர் தரப்பினிடம் பழுது நீக்க வழங்குமாறு தெரிவித்தார் என்பதற்கு எவ்வித சாட்சியங்களும் முறையீட்டாளர் தரப்பில் முன்வைக்கப்படவில்லை.  இரண்டாம் எதிர் தரப்பினர் கேட்ட இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான ஆவணங்களையும் புகைப்படங்களையும் முறையீட்டாளரிடம் சமர்ப்பித்ததற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. இது குறித்து எந்த விவரங்களும் தமது புகாரிலும் நிரூபணம் வாக்குமூலத்திலும் முறையீட்டாளர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முறையான இழப்பீட்டு கோரிக்கை தக்க ஆவணங்களுடன் இரண்டாம் எதிர்   தரப்பினரிடம் முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றே   கருத இயலும்.  முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும் மூன்றாம் எதிர் தரப்பினர் வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு குறித்து எவ்வித ரசீது தராத நிலையிலும் இரண்டாம் எதிர் தரப்பினர் ரூபாய் 90 ஆயிரத்தை முதலாம் எதிர்த்தரப்பினரிடம் வழங்கிய நிலையில் இரண்டாம் எதிர் தரப்பினர் சேவை குறைபாடு செய்துள்ளதாக முடிவு செய்ய இயலாது என இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

21.       மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்தரப்பினர்கள் மீது புகாரில் குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள் கிடையாது என்றும் அவர்கள்   சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்பதை நிரூபிக்க போதுமான சாட்சிகள் முறையீட்டாளர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இதனால் மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு புரிந்ததாக முடிவு செய்ய இயலாது என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

22.       மேலும் முதலாம் எதிர் தரப்பினர் வேண்டுகோளின்படி Arbitrationand ConciliationAct, 1996 சட்டப்படி ஆர்பிட்ரேட்டர் நியமனம் செய்யப்பட்டு PA/ACPNo: 1045 OF 2020 என்ற எண்ணில் வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டு 19-04-2021 ஆம் தேதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை முதலாம் எதிர்தரப்பினரின் சான்றாவனம் 5 மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மேற்படி நடவடிக்கைகளுக்கான அறிவிப்பு வந்த பின்னரே இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. மேற்படி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாகனமானது முதலாம் எதிர் தரப்பினரால் கைப்பற்றப்பட்டு ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையை முதலாம் எதிர் தரப்பினர் முறையீட்டாளர் கணக்கில் வரவு வைத்து விட்டதாக கூறப்படும் நிலையில் தம்முடைய அனுமதி இல்லாமல் முதலாம் எதிர் தரப்பினர் மூன்றாம் எதிர் தரப்பினரிடம் இருந்து வாகனத்தை சட்டவிரோதமாக கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளார் என்று எழுத்துப்பூர்வமான முறையீட்டாளர் வாத உரையில் கூறுவது வியப்பாக உள்ளது  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்

 

எழு வினா எண் – 3 & 4

 

23.       இரண்டாம் எழு  வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்   இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

 

 

 

 

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

 

01.       முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

02.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

03.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

                        இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  15-03-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                                தலைவர்.

           

                                                                                                உறுப்பினர் – I

 

                                                                                                உறுப்பினர்-II.

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

21-02-2018

வாகன பதிவுச் சான்று

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

16-12-2019

கடன் செலுத்திய விபர ஆவணம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

12-01-2019

வாகன காப்பீட்டு சான்று விபத்து

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

31-12-2019

இரண்டாம் எதிர் தரப்பினர் கொடுத்த கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

20-08-2019

காவல் நிலையத்தில் கொடுத்த ரசீது

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

20-08-2019

வாகன சேத அறிக்கை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

-

ஓட்டுனர் உரிமம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

08-01-2019

வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் ஒப்புதல் அட்டைகள்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

-

ஆதார் அட்டை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

20-12-2018

காப்பீட்டு ஆவணம்

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

16-02-2018

கடன் விண்ணப்பம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

19-02-2018

கடன் ஒப்பந்தம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

18-01-2023

கணக்கு அறிக்கை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

08-02-2021

ஆர்பிட்ரேசன் உத்தரவு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

19-04-2021

ஆர்பிட்ரேசன் தீர்வு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

03-12-2021

அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

27-01-2021

அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

27-01-2021

காவல்துறை தகவல்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

04-02-2021

மதிப்பீடு அறிக்கை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

30-03-2021

உத்தேச விலை பட்டியல்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

05-02-2021

செய்தித்தாள் விளம்பரம்

ஜெராக்ஸ்

 

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு கிருஷ்ணேஸ்வரன்

முதலாம் எதிர்தரப்பினர்கள் சாட்சி:  Mr Mohand

 

                                                                                                தலைவர்.

 

                                                                                                உறுப்பினர் – I

 

                                                                                                உறுப்பினர்-II.

 

 

                                                                                   

 
 
[HON'BLE MR. DR.V.RAMARAJ M.L.,Ph.D.,]
PRESIDENT
 

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.