Devaraj T/P Jayaraman filed a consumer case on 06 Feb 2023 against Ajeeth kumar, VGN Gold Testing,Ariyalur Branch Manager, Ariyalur in the Ariyalur Consumer Court. The case no is CC/1/2023 and the judgment uploaded on 09 Feb 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 04-01-2023
முதல் விசாரணை நாள்: 02-02-2023
உத்தரவு பிறப்பித்த நாள் : 07-02-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 01/2023.
அரியலூர் வட்டம், குரும்பஞ்சாவடி, செந்துறை பிரதான சாலை, யூனிக் மொபைல் ஷோரூம் நடத்தி வரும் ஜெயராமன் மகன் தேவராஜ் (35) -முறையீட்டாளர்
1. அரியலூர் நகர், பங்களா ரோடு, யூனியன் ஆபீஸ் எதிர்புறம் உள்ள என்ற VGN Gold Testing நிறுவனத்தின் மேலாளர் கோவிந்தசாமி மகன் அஜித்குமார் (25)
2. மதுரை நகர், சின்னக்கடை வீதி, சீனி ஆசாரி சந்து, ஸ்ரீ தேவி காம்ப்ளக்ஸ் இலக்கம் 12 ஏ-ல் உள்ள நிறுவனத்தின் VGN Gold Testing உரிமையாளர் மணி மகன் நாராயணன் (40) - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு சி. செந்தில், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு கே. பாண்டித்துரை, வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, பிரிவு 76 -ன் படி சமரசர் நியமனம் செய்யப்பட்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, எதிர் தரப்பினர்கள் செய்த சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ 16 லட்சத்தில் எதிர் தரப்பினர்கள் தமக்கு நகை அடமானமாக கடனாக கொடுத்த ரூ 12,07,546/-போக மீதி இழப்பு தொகை ரூ 3,92,454/-ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் அல்லது தாம் பெற்ற கடனை வட்டியுடன் பெற்றுக்கொண்டு தாம் அடமானம் வைத்த 288.54 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரண நகைகளை தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் செய்த சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 5 லட்சம் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் சரி என கருதும் இதர பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. இரண்டாம் எதிர்தரப்பினர் தங்க நகைகளை அடமானம் பெற்றுக் கொண்டு கடன் வழங்கும் VGN Gold Testing நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் முதலாம் எதிர்தரப்பினர் அரியலூரில் உள்ள VGN Gold Testing கிளையில் மேலாளர் என்றும் கடந்த 02-08-2022 ஆம் தேதியில் இரண்டாம் எதிர் தரப்பினரிடம் தமக்குச் சொந்தமான 288.54 கிராம் (கேடிஎம்) தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ 12,07,546/-கடன் பெற்றேன் என்றும் மூன்று மாத காலத்திற்குள் அசல் தொகையும் வட்டி தொகையையும் செலுத்தி நகையை மீட்டு கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இருந்த காரணத்தால் மூன்று மாதம் முடிவதற்கு முன்பாகவே முதலாம் எதிர் தரப்பினரை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டு நகைகளை திரும்ப வழங்குமாறு கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை என்றும் இதன் பின்னர் இரண்டாம் எதிர் தரப்பினரை தொடர்பு கொண்டபோது நகைகளை உருக்கி விற்பனை செய்யப்பட்டடு விட்டது என்பது தமக்கு தெரியவந்தது என்றும் இத்தகைய எதிர் தரப்பினரின் செயல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தவறு என்றும் இது குறித்து காவல் துறையில் 16-11-2022 ஆம் தேதியில் புகார் அளித்தேன் என்றும் பின்னர் வழக்கறிஞர் மூலம் 23-11-2022 ஆம் தேதியில் அறிவிப்பு அனுப்பினேன் என்றும் முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. தமது வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக்கொண்ட எதிர்த் தரப்பினர்கள் 05-12-2022 ஆம் தேதியில் பதில் அறிவிப்பு கொடுத்தார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தாங்கள் நகைகளை அடமானம் பெறவில்லை என்றும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ 10 லட்சம் பெற்றுக் கொண்டு அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்க உதவி செய்தோம் என்று இவ்வாறு நகை கடனை செலுத்தி நகையை மீட்டு விற்பனை செய்து ரூ 2 லட்சம் வழங்கிவிட்டு நகைகளை தாங்கள் எடுத்துக் கொண்டோம் என்றும் இதனால் தாங்கள் சேவை குறைபாடு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள் என்றும் இந்தப் பதில் தவறானது என்றும் தமக்கு நகை அடமான ரசீது வழங்கியுள்ளார்கள் என்றும் அந்த ரசீதை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளேன் என்றும் வழக்கிற்காக தவறான பதிலை அனுப்பி உள்ளார்கள் என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கைகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தவறானவை என்றும் இத்தகைய குறைபாடு காரணமாக பெருத்த இழப்பு சிரமமும் தமக்கு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, எதிர் தரப்பினர்கள் செய்த சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட இழப்பு ரூ 16 லட்சத்தில் எதிர் தரப்பினர்கள் தமக்கு நகை அடமானமாக கடனாக கொடுத்த ரூ 12,07,546/-போக மீதி இழப்பு தொகை ரூ 3,92,454/-ஐ தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் அல்லது தாம் பெற்ற கடனை வட்டியுடன் பெற்றுக்கொண்டு தாம் அடமானம் வைத்த 288.54 கிராம் மதிப்புள்ள தங்க ஆபரண நகைகளை தமக்கு எதிர் தரப்பினர்கள் திரும்ப வழங்க வேண்டும் என்றும் எதிர் தரப்பினர்கள் செய்த சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ 5 லட்சம் தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த வழக்கின் செலவு தொகையை தமக்கு எதிர் தரப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் சரி என கருதும் இதர பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 76 -ன்படி சமரசர் நியமனமும் அதன் தொடர் நடவடிக்கை விவரங்களும்:
05. கடந்த 02-02-2023 ஆம் தேதியில் முதலாவது விசாரணை நாளில் அறிவிப்பை பெற்றுக்கொண்ட முதலாம் எதிர் தரப்பினர் நேரில் ஆணையத்தின் முன்பு வருகை புரிந்தார். இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்த அடிப்படையில் திரு மோகன், சமரசர் இந்த வழக்கில் சமரச பணிக்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 76 -ன்படி ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 79, 80 -ன்படி கடந்த 06-02-2023 ஆம் தேதியில் ஆணைய அலுவலகத்தில் சமரசர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்பட்டதன் அடிப்படையில் சமரச அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஒப்பந்தத்தில் முறையீட்டாளர் மற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்கள் கையொப்பம் செய்துள்ளார்கள்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 81 -ன்படி சமரசர் அறிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளர் எதிர் தரப்பினர்களிடம் பெற்ற அசல் தொகை ரூ 12,07,546/- மற்றும் வட்டி ரூ 1,20,754/- ஆக மொத்தம் ரூ 13,28,300/- ஐ 15-02-2023 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டவுடன் எதிர் தரப்பினர்கள் 288.54 கிராம் (916 கேடிஎம்) ஆபரண தங்க நகைகளை முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.
02. இந்த வழக்கின் செலவுத் தொகையாக எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு 15-02-2023 ஆம் தேதிக்குள் ரூ 5,000/- வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 07-02-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.