J.Ravi,S/o.Jothilingam filed a consumer case on 15 Feb 2023 against 1)The Managing Director,M/S. Honda Motor Cycle and Scooter, India private ltd, commercial Complex 2, in the Ariyalur Consumer Court. The case no is CC/11/2021 and the judgment uploaded on 17 Feb 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 06-08-2021
உத்தரவு பிறப்பித்த நாள் : 15-02-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 11/2021.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வரியன்காவல் கிராமம் நடுத்தெரு, இலக்கம் 1/132 இ - ல் வசிக்கும் ஜோதிலிங்கம் மகன் ரவி -முறையீட்டாளர்
1. ஹரியானா மாநிலம், குருகிராம், கோர்ஸ் எக்ஸ்டென்ஷன் சாலை, இரண்டாம் கமர்சியல் காம்ப்ளக்சில் உள்ள M/s. Honda Motor Cycle & Scotter India Private Ltd.,
2. சென்னை, சிஐடி நகர், முதலாம் பிரதான சாலை, சிஜே காம்ப்ளக்ஸ், இலக்கம் 10 - ல் உள்ள M/s. Honda Motor Cycle & Scotter India Private Ltd., அதன் மண்டல மேலாளர்
3. அரியலூர் நகர், வாலாஜாநகரம், ஜெயங்கொண்டம் பிரதான சாலை, ராஜீவ் நகர், இலக்கம் 10 - ல் உள்ள ரெயின்போ மோட்டார்ஸ்
3. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அஞ்சல், சிதம்பரம் சாலை, இலக்கம் 3/d4 - ல் உள்ள ரெயின்போ மோட்டார்ஸ், அதன் விற்பனை மேலாளர்
- எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திரு எஸ். திருமலை சோழன், வழக்கறிஞர் முன்னிலையாகியும் எதிர் தரப்பினர்களுக்கு திரு டி ஏ கதிரவன் மற்றும் ஆர் செல்வராஜ் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் இருந்த நிலையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, பிரிவு 76 -ன் படி சமரசர் நியமனம் செய்யப்பட்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, பிரிவு 35-ன்படி முறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் தாக்கல் செய்த புகாரில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 76 -ன்படி சமரசர் நியமனமும் அதன் தொடர் நடவடிக்கை விவரங்களும்: இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்த அடிப்படையில் திரு மோகன், சமரசர் இந்த வழக்கில் சமரச பணிக்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 76 -ன்படி ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 79, 80 -ன்படி கடந்த 14-02-2023 ஆம் தேதியில் ஆணைய அலுவலகத்தில் சமரசர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்பட்டதன் அடிப்படையில் சமரச அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஒப்பந்தத்தில் முறையீட்டாளர் மற்றும் மூன்றாம், நான்காம் எதிர் தரப்பினர்கள் கையொப்பம் செய்துள்ளார்கள்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019, பிரிவு 81 -ன்படி சமரசர் அறிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளருக்கு சொந்தமான TN 61 U 1746 என்ற பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் சமரச ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள 13 பாகங்களை மூன்றாம், நான்காம் எதிர் தரப்பினர்கள் புதிதாக மாற்றி தர வேண்டும். இந்த பணிக்கு முறையீட்டாளர் தனது இருசக்கர வாகனத்தை மூன்றாம் மற்றும் நான்காம் எதிர் தரப்பினர்களிடம் இன்று முதல் ஒரு வார காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். இதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பாகங்களை மாற்றும் பணி முறையீட்டாளர் முன்னிலையில் நடைபெற வேண்டும். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 28-02-2023 ஆம் தேதிக்குள் பழுது நீக்கி வாகனத்தை மூன்றாம் மற்றும் நான்காம் எதிர்த் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு ஒப்படைக்க வேண்டும்
02. இந்த வழக்கின் செலவுத் தொகையாக மூன்றாம், நான்காம் எதிர் தரப்பினர்கள் முறையீட்டாளருக்கு 28-02-2023 ஆம் தேதிக்குள் 2,500/- வழங்க வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 15-02-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.