Tamil Nadu

Ariyalur

CC/19/2019

N.Sugumar, Ariyalur - Complainant(s)

Versus

1.The Branch Manager, State Bank of India, Jayamkondam - Opp.Party(s)

T.Kannan., B.Sc.,B.L.,

03 Feb 2023

ORDER

                      புகார்  கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 18-07-2019

                      உத்தரவு  பிறப்பித்த  நாள்   : 03-02-2023  

மாவட்ட  நுகர்வோர்  குறைதீர்  ஆணையம்,அரியலூர்.

முன்னிலை  : திரு   டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி.  தலைவர்.

திரு  என்.பாலு.பி..ஏ.பி.எல்.,      உறுப்பினர்.  I 

திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II

 

நுகர்வோர் புகார்  எண்:  19/2019.

 

            அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்ட சோழபுரம் அஞ்சல், 3வது குறுக்கு தெரு,  சீனிவாசன் நகர், இலக்கம் 107 -ல் வசிக்கும் நடு சாமி நாயினார் மகன்   சுகுமார்                    -முறையீட்டாளர்

 

1.         அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்ட சோழபுரம், சன்னதி தெரு, இலக்கம் 34 -ல் உள்ள பாரத மாநில வங்கி,   ஜெயங்கொண்ட சோழபுரம் கிளை, அதன் கிளை மேலாளர்

 

2.         அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்ட சோழபுரம், சன்னதி தெரு, இலக்கம் 34 -ல் உள்ள பாரத மாநில வங்கி,   ஜெயங்கொண்ட சோழபுரம் கிளை, அதன் தலைமை மேலாளர்                  

                                                                                                - எதிர் தரப்பினர்கள்

01        இந்த  புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் டி. செல்வம் மற்றும் டி.  கண்ணன், வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும்   எதிர் தரப்பினர்களுக்கு திரு  டி ஏ பி செந்தில்குமார், வழக்கறிஞர்  முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின்  முன்பாக      25-01-2023 அன்று இறுதியாக  விசாரணை  ஏற்பட்டு இது நாள்  வரையில்   இந்த ஆணையத்தின்    பரிசீலனையில்  இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், அவரது சாட்சியம்-1, சான்றாவணங்கள் – 15,  எதிர் தரப்பினரின் பதிலுரை, அவரது சாட்சியம் -1 மற்றும் இரு தரப்பு வாதங்கள் ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும்  இன்று  இவ்வாணையம்   வழங்கும் 

உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை

02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 1986, பிரிவு 12-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமக்கு எதிர்  தரப்பினர்கள் இழப்பீடாக ரூ 4,80,000/- மற்றும் வழக்கின் செலவு தொகை ரூ 10,000 வழங்க வேண்டும் என்றும் முடக்கப்பட்ட தமது வங்கி கணக்கு இயக்க எதிர்தரப்பினர் அனுமதிக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களை எதிர்  தரப்பினர்கள் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் தமது கடன் தீர்ந்துவிட்டது என்று அறிவிக்க எதிர் தரப்பினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முறையீட்டாளர்   இந்த   ஆணையத்தை அணுகியுள்ளார்.

 

  • தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:

 

03.       தாம்  கடந்த ஆம் தேதியில் வீட்டு மனையை அடகுவைத்து வீடு கட்டுவதற்கு எதிர் தரப்பினரிடம் ரூ 6 லட்சம் கடன் பெற்றேன் என்றும் இதனை 120 மாத தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமக்கு எதிர்  தரப்பினர்கள் வழங்கினார்கள் என்றும் தாம் பல்வேறு தேதிகளில் தவணைத் தொகையை செலுத்தி உள்ளேன் என்றும் இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை போக 05-07-2013 ஆம் தேதியில் ரூ 9,367/- தொகை தாம் செலுத்த வேண்டியிருந்தது என்றும் இந்நிலையில் தமக்கு தெரிவிக்காமல் debit adjustment, possession charges என்ற  பெயரிலும் வேறு வகைகளிலும் சேர்த்து ரூ 76,570/- செலுத்த வேண்டுமென 31-10-2017ஆம் தேதியில் எதிர்  தரப்பினர்கள் அறிவிப்பு அனுப்பினார்கள் என்றும் கடனை செலுத்த 120 மாத கால அவகாசம் இருந்த போதிலும் அதற்கு முன்பாகவே கையகப்படுத்தும் அறிவிப்பை நாளிதலில் வெளியிட்டு தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி கூடுதலாக பணத்தை கேட்டு எதிர்  தரப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும் மேலும் தனது சேமிப்பு கணக்கை முடக்கி வைத்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்க இயலாத நிலையை எதிர்த் தரப்பினர்கள் ஏற்படுத்தி விட்டார்கள் என்றும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

04.       எதிர் தரப்பினர்கள் அனுப்பிய அறிவிப்பிற்கு வழக்கறிஞர் மூலம் பதில் அறிவிப்பு அனுப்பியும் தமக்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து எதிர் தரப்பினர்களுக்கும் அவர்களது உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என்றும் தகவல் உரிமை சட்டம் மூலம் தகவல்களை கேட்டு விண்ணப்பம் செய்து அவற்றை எதிர் தரப்பினர்கள் தரவில்லை என்றும் ஜெயங்கொண்ட சோழபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு முன்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரச்சினையை முடிக்க எதிர்த் தரப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் இதனிடையே ஜெயங்கொண்டத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு அசல் வழக்கு எண் 82/2018 என்ற எண்ணில் உள்ளது என்றும் எதிர் தரப்பினர்களின் இத்தகைய செய்கைகள் சேவை குறைபாடு என்றும் எதிர் தரப்பினர்களின் செய்கையால் பெருத்த இழப்பு ஏற்பட்டது என்றும் இன்னும் பல சங்கதிகளையும் முறையீட்டாளர் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

05.       எனவே, தமக்கு எதிர்  தரப்பினர்கள் இழப்பீடாக ரூ 4,80,000/- மற்றும் வழக்கின் செலவு தொகை ரூ 10,000 வழங்க வேண்டும் என்றும் முடக்கப்பட்ட தமது வங்கி கணக்கை இயக்க எதிர்தரப்பினர் அனுமதிக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களை எதிர்  தரப்பினர்கள் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் தமது கடன் தீர்ந்துவிட்டது என்று அறிவிக்க எதிர் தரப்பினருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

எதிர்  தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:

 

06.       புகாரில் உள்ள குற்றச்சாட்டுக்கள் தங்களால் மறுக்கப்படுகின்றன என்றும் இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் வழக்கு நிலைநிற்க தக்கதல்ல என்றும் எதிர்  தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்துள்ளார்கள்.

07.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல தங்களிடம் வீட்டுக்கடன் பெற்றது உண்மை என்றும் 120 தவணைகளில் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்   என்பது உண்மை என்றும் ஆனால் முறையீட்டாளர் சரிவர தவணை காலத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் வராக்கடன் என்று முடிவு செய்யப்பட்டது என்றும் பணத்தை வசூலிப்பதற்காக SARFESEI சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சொத்து கையகப்படுத்தப்பட்டது என்றும் சரியான காலத்தில் தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டு முறையீட்டாளர் கையொப்பம் செய்து தங்களுடன் கடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார் என்றும் புகாரில் கூறியுள்ளது போல பணத்தை வசூலிக்க தாங்கள் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கடந்த ஆம் தேதியில் மீதமிருந்த தொகையை அவர் செலுத்திய அடிப்படையில் நீதிமன்றத்திற்கு வெளியில் வழக்கு முடிக்கப்பட்டு விட்டது என்றும் இதனால் புகார் தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் இன்னும் பிற விவரங்களை தெரிவித்தும் எதிர்  தரப்பினர்கள் தங்கள் பதில்உரையை தாக்கல் செய்துள்ளார்கள்.

 

 08.  தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:

 

            1)         முறையீட்டாளர்  கூறுவது  போல்  எதிர்தரப்பினர்கள்   சேவை   குறைபாடு   புரிந்து உள்ளாரா?

           

            2)         தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களை வழங்க உத்தரவிட இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா?   

 

            3)         எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா?  ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?

  

            4)         இம் முறையீட்டாளர்  பெற தக்க இதர பரிகாரங்கள்  என்ன?

எழு வினா எண் – 1

 

09.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளது போல எதிர்தரப்பினர்களின் வங்கியில் கணக்கு வைத்துள்ளதும் கடன் பெற்றுள்ளதும் எதிர்தரப்பினர்கள் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதால் முறையீட்டாளர் எதிர்தரப்பினர்களின் நுகர்வோர் ஆவார்.

 

10.       முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள  சங்கதிகளின் உண்மை தன்மையை அறியவும் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட வேண்டுமா? என்பதை ஆய்வு செய்யவும் எதிர்தரப்பினர்களின் வங்கியில் முறையீட்டாளர் பராமரித்த கணக்கின் அறிக்கை நகல் மிக அவசியமான ஒன்றாகும்.  ஆனால் மேற்படி கணக்கின் அறிக்கை நகலை முறையீட்டாளர் இந்த ஆணையத்தின் முன்பாக சமர்ப்பிக்கவில்லை.  இந்த நகல் தமக்கு வழங்கப்படவில்லை என்று எந்த குற்றச்சாட்டையும் புகாரில் முறையீட்டாளர் முன்வைக்கவில்லை.  சேமிப்பு கணக்கு மற்றும் வீட்டு கடன் கணக்கு ஆகியன தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை வரவு செலவு அறிக்கை இருந்தால் மட்டுமே புகாரில் உள்ள பிரச்சனையை ஆய்வு செய்ய இயலும்.  இதனால் எதிர்  தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார்கள் என்ற முடிவை எடுக்க இயலாது என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.  அவ்வாறு சேவை குறைபாடு புரிந்தார்கள் என்பதை நிரூபிக்க போதுமான சாட்சியங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது

 

எழு வினா எண் – 2

 

12.       முறையீட்டாளர் புகாரில்   தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களை எதிர்  தரப்பினர்கள் வழங்க உத்தரவிடவேண்டும் என பரிகாரத்தை   கேட்டுள்ளார்.  அவர் தகவல் உரிமைச் சட்டப்படி செய்த விண்ணப்பம் மற்றும் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஆகியவற்றின் நகல்கள் முறையீட்டாளர் தரப்பில் சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் மேல்முறையீட்டு மனுவில் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி அமைக்கப்பட்ட தகவல் ஆணையத்தை   அணுக வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கோரிய தகவல்களை எதிர்  தரப்பினர்கள் வழங்க உத்தரவிட இந்த ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது.

 

எழு வினா எண் – 3 & 4

10.       முதலாவது எழு வினாவை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்   இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.

 

இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.

01.       முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.

 

02.       புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

03.       வேறு எந்த பரிகாரங்களும் இல்லை

 

            இவ்வாணை    சுருக்கெழுத்தாளருக்கு  சொல்ல அவரால்  கணினியில்  தட்டச்சு   செய்து திருத்தப்பட்டு  இந்த  ஆணையத்தில்  இன்று  03-02-2023   ஆம்  நாளன்று பகரப்பட்டது.

                                                                                    தலைவர்.    

                       

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II

 

முறையீட்டாளர்  தரப்பு சான்றாவணங்கள்:

S.No

Date

Description

Note

ம.சா.ஆ.1

-

வங்கி புத்தக முதல் பக்கம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.2

15-11-2017

வழக்கறிஞர் அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.3

-

நாளிதழில் வங்கியின் அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.4

20-02-2019

சட்டப் பணிக்குழு அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.5

-

சுவாதீன அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.6

06-07-2013

முறையீட்டாளர் கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.7

01-03-2014

முறையீட்டாளர் கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.8

10-12-2015

முறையீட்டாளர் கடிதம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.9

30-10-2017

வங்கியின் அறிவிப்பு

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.10

03-01-2018

தகவல் கோரும் விண்ணப்பம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.11

24-10-2018

தகவல் கோரும் விண்ணப்பம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.12

22-10-2018

நீதிமன்ற பிராது

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.13

-

ஆதார் அட்டை

ஜெராக்ஸ்

ம.சா.ஆ1.4

24-01-2018

கடன் விண்ணப்பம்

ஜெராக்ஸ்

ம.சா.ஆ.15

06-07-2013

கணக்கு அறிக்கை

ஜெராக்ஸ்

 

எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்: இல்லை

முறையீட்டாளர்   தரப்பு  சாட்சி:  திரு சுகுமார்

எதிர்தரப்பினர்கள் சாட்சி:  1                                                                           

                                                                                    தலைவர்.

           

                                                                                    உறுப்பினர் – I

 

                                                                                    உறுப்பினர்-II.

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.