Dharmarasu, S/o. Govindarasu,Vadukapaalaiyam Village, KeeZhakolathur post, filed a consumer case on 14 Mar 2023 against 1). The District collector, The District Collector office, Ariyalur. 2) The Tahsildar, Taluk office, in the Ariyalur Consumer Court. The case no is CC/15/2022 and the judgment uploaded on 16 Mar 2023.
புகார் கோப்புக்கு எடுக்கப்பட்ட நாள்: 23-06-2022
உத்தரவு பிறப்பித்த நாள் : 14-03-2023
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், அரியலூர்.
முன்னிலை : திரு டாக்டர் வீ.ராமராஜ்,.எம்.எல்.,பி.எச்.டி. தலைவர்.
திரு என்.பாலு.பி..ஏ.பி.எல்., உறுப்பினர். I
திருமதி. வி.லாவண்யா.,பி.ஏ.,பி.எல்., உறுப்பினர் –II
நுகர்வோர் புகார் எண்: 15/2022.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழகொளத்தூர் அஞ்சல், வடுகபாளையம் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராசு மகன் தர்மராசு
-முறையீட்டாளர்
1. மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்,
2. வருவாய் வட்டாட்சியர், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்
3. கிராம நிர்வாக அலுவலர், வடுகபாளையம் வருவாய் கிராமம், அரியலூர் வட்டம் ,அரியலூர் மாவட்டம் - எதிர் தரப்பினர்கள்
01 இந்த புகாரில் முறையீட்டாளருக்கு திருவாளர்கள் பி. தங்கதுரை சி ஜெயபால் வழக்கறிஞர்கள் முன்னிலையாகியும் எதிர்தரப்பினர்களுக்கு திரு ஏ. கதிரவன் அரசு வழக்கறிஞர் முன்னிலையாகியும் இருந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன்பாக 13-03-2023 அன்று இறுதியாக விசாரணை ஏற்பட்டு இது நாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வந்து, அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலும் முறையீட்டாளரின் புகார், எதிர்தரப்பினர்களின் பதில் உரை, முறையீட்டாளரின் நிரூபண வாக்குமூலம் அவரது சான்று ஆவணங்கள்-7 எதிர் தரப்பினரின் நிரூபண வாக்குமூலம் அவரது சான்று ஆவணங்கள்-3 ஆகியவற்றிலுள்ள சங்கதிகளின் அடிப்படையிலும் இன்று இவ்வாணையம் வழங்கும்
உறுப்பினர்களின் ஒப்புதலோடு ஆணைய தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையுரை
02 நுகர்வோர்பாதுகாப்புசட்டம் 2019, பிரிவு 35-ன்படிமுறையீட்டாளர் எதிர்தரப்பினர்கள் மீது புகார் தாக்கல் செய்து, தமது சொத்துக்கு எதிர் தரப்பினர்கள் பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்எதிர் தரப்பினர்கள் புரிந்துள்ள சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 50,000/- வழங்க வேண்டும் என்றும் தமது நிலத்தை எதிர் தரப்பினர்கள் அளந்து காட்டி உட்பிரிவு செய்து தரவேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் முறையீட்டாளர் இந்த ஆணையத்தை அணுகியுள்ளார்.
முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரின் சுருக்கம் பின்வருமாறு:
03. தாம் கடந்த 02-12-2021 ஆம் தேதியில் அரியலூர் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் வசிக்கும் ஐயப்பன் மனைவி சுகன்யா என்பவரிடம் அவரது சொத்தை கிரயம் பெற்று பதிவு செய்து அந்த சொத்தின் சுவாதீனம் பெற்று அனுபவித்து வந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக பட்டா மாற்றம் செய்வதற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் தமக்கு பட்டா மாற்றம் செய்யப்படும் என்று காத்திருந்தேன் என்றும் அவ்வாறு செய்யப்படாததால் அரசு இ சேவை மையம் மூலம் கடந்த 23-03-2022 ஆம் தேதியில் ரூ 60 சேவை கட்டணம் செலுத்தி பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பத்தை இரண்டாம் எதிர் தரப்பினருக்கு சமர்ப்பித்தேன் என்றும் அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பின்பும் தமது பெயரில் தாம் கிரையம் பெற்ற சொத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும் இதுகுறித்து வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும் எதிர் தரப்பினரின் இத்தகைய செய்கை சேவை குறைபாடு என்றும் இதனால் தமக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் பல சங்கதிகளை முறையீட்டாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
04. எனவே, தமது சொத்துக்கு எதிர் தரப்பினர்கள் பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்எதிர் தரப்பினர்கள் புரிந்துள்ள சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக தமக்கு எதிர் தரப்பினர்கள் ரூ 50,000/- வழங்க வேண்டும் என்றும் தமது நிலத்தை எதிர் தரப்பினர்கள் அளந்து காட்டி உட்பிரிவு செய்து தரவேண்டும் என்றும் இன்னும் இந்த ஆணையம் தக்கது என கருதும் பரிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் தமது புகாரில் முறையீட்டாளர் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பினர்கள் தாக்கல் செய்துள்ள பதில் உரையின் சுருக்கம் பின்வருமாறு:
05. இரண்டாம் எதிர்தரப்பினர் தங்களது பதில் உரையை தாக்கல் செய்து அதனை முதலாம் மற்றும் மூன்றாம் எதிர் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள புகாரில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் இங்கு வெளிப்படையாக தங்களால் ஒப்புக்கொள்ளப்படும் சங்கதிகளை தவிர மற்றவற்றை முறையீட்டாளர் நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் எதிர் தரப்பினர்கள் தமது உரையில் தெரிவித்துள்ளார்கள்.
06. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள சொத்து குறித்து அரியலூர் மாவட்ட கூடுதல் உரிமை இயல் நீதிமன்றத்தில் O.S.No: 02/2022 என்ற எண்ணில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் அந்த வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிர் தரப்பினர்களும் முறையீட்டாளரின் தாய் மற்றும் தந்தை ஆகியோரும் தரப்பினர்கள் என்றும் முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ள பிரச்சனையில் உள்ள பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு கடந்த 05-08-2022 ஆம் தேதியில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் பட்டா மாற்றம் செய்ய இயலாது என்று பதில் தரப்பட்டுள்ளது என்றும் தாங்கள் சேவை வழங்குபவர்கள் அல்ல என்றும் தங்களுக்கு முறையீட்டாளர் நுகர்வோர் அல்ல என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி புகாரில் கூறியுள்ள பிரச்சனை வரக்கூடியது அல்ல என்றும் இதனால் புகார் நிலைநிற்க தக்கது அல்ல என்றும் எவ்வாறு இருப்பினும் முறையீட்டாளர் சமர்ப்பித்த விண்ணப்பம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தங்கள் தரப்பு சங்கதிகளுக்கு ஆதாரமாக 3 ஆவணங்கள் இத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் எதிர் தரப்பினர்கள் தங்கள் பதில் உரையில் தெரிவித்து புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
07. தீர்மானிக்க வேண்டிய எழு வினாகள்:
1) புகாரில் கூறப்பட்டுள்ள பிரச்சனை நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நிலைநிற்க தக்கதா?
2) முறையீட்டாளர் கூறுவது போல் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்து உள்ளாரா?
3) எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளார் எனில் முறையீட்டாளர் கேட்கும் பரிகாரம் வழங்கப்பட வேண்டுமா? முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா? ஆம் எனில் எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும்?
4) இம் முறையீட்டாளர் பெற தக்க இதர பரிகாரங்கள் என்ன?
எழு வினா எண் – 1
08. Hon’ble State Consumer Disputes Redressal Commission, Chennai in F.A.No. 208/2018 declared that “even if the complainant has paid necessary fee for surveying and issuing patta for the land the same will not give rise to the cause of action to bring the matter within an ambit of the relationship of consumer and service provider between the complainant and the opposite party. Even assuming that if the title is clear and sufficient fees are paid, when the revenue authorities have not come forward to survey the land and issue patta, the complainant has to approach the appropriate legal forum in accordance with the law applicable to it by initiating a litigation impleading the concerned government official as a party but not before this consumer commission, Further, we are of the view that the litigation where the land dispute is involved can never be subject matter of the consumer commission” (Appeal against in C.C. No.21/2017 dated 24/08/207 on the file of the District commission Ariyalur on 26th day of October 2021 - MG Balasubramaniyan Vs Thasildar, Ariyalur). Hence, the present complaint is not maintainable as the litigation where the land dispute is involved can never be subject matter of the consumer commission.
.
எழு வினா எண் – 2
9. முறையீட்டாளர் புகாரில் கூறியுள்ளபடி அவர் 23-03-2022 ஆம் தேதியில் சேவை கட்டணம் செலுத்தி முதலாம் எதிர் தரப்பினரிடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எதிர் தரப்பினர்கள் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிவதால் எதிர் தரப்பினர்கள் சேவை குறைபாடு புரியவில்லை என்று இந்த ஆணையம் தீர்மானிக்கிறது
எழு வினா எண் – 3 & 4
10. முதலாம் மற்றும் இரண்டாம் எழு வினாக்களை தீர்மானிக்கும் போது முறையீட்டாளருக்கு எதிராக முடிவு மேற்கொள்ளப்பட்டதால் அதன் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட்டு எவ்வித இழப்பீடும் வழங்க வேண்டியதில்லை என்றும் இந்த ஆணையம் தக்கது என கருதும் இதர பரிகாரங்கள் எதுவும் இல்லை என்றும்வழக்கின் செலவு தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆணையம் தீர்மானிக்கிறது.
இறுதியாக கீழ்க்கண்ட ஆணைகளை இந்த ஆணையம் பிறப்பிக்கிறது.
01. முறையீட்டாளரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது.
02. புகாரில் உள்ள தரப்பினர்கள் அவரவர் வழக்கு செலவு தொகைகளை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
03. வேறு எந்த பரிகாரங்களும் இல்லை
இவ்வாணை சுருக்கெழுத்தாளருக்கு சொல்ல அவரால் கணினியில் தட்டச்சு செய்து திருத்தப்பட்டு இந்த ஆணையத்தில் இன்று 08-03-2023 ஆம் நாளன்று பகரப்பட்டது.
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
முறையீட்டாளர் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
ம.சா.ஆ.1 | 02-12-2021 | Sale deed | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.2 | 07-03-2022 | Patta transfer application | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.3 | 23-03-2022 | Fee receipt | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.4 | 04-04-2022 | Petition to the first o.p. | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.5 | 02-05-2022 | வழக்கு அறிவிப்பு | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.6 | 09-08-2021 | அடையாள அட்டை | ஜெராக்ஸ் |
ம.சா.ஆ.7 | - | ஒப்புகை அட்டை-3 | ஜெராக்ஸ் |
எதிர்தரப்பினர்கள் தரப்பு சான்றாவணங்கள்:
S.No | Date | Description | Note |
எம.சா.ஆ.1 | - | Plaint copy of the O.S No: 02/2021 | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.2 | - | O.S No: 02/2021 case status with details | ஜெராக்ஸ் |
எம.சா.ஆ.3 | 05-08-2022 | Order of second opposite party | ஜெராக்ஸ் |
முறையீட்டாளர் தரப்பு சாட்சி: திரு தர்மராசு
எதிர்தரப்பினர்கள் சாட்சி: திரு கண்ணன்
தலைவர்.
உறுப்பினர் – I
உறுப்பினர்-II.
Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes
Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.